சமீபத்திய புதசெவி

ஆழகிரியின் தியாகம் மற்றும் ஒரு வேண்டுகோளும்

நம்ம கலைஞர் தொல்லைக்காட்சியில், தயாநிதிக்கு எப்படி சூரிய தொலைக்காட்சி நிறுவனம் முட்டுக்கொடுத்ததோ, அதேப் போல் அழகிரிக்கு செய்யலாம் என்று நினைக்கின்றார்கள் போலிருக்கு.

நேற்று ஏழை எளிய மக்களுக்காக மத்திய அமைச்சர் அழகிரி தன்னுடைய முதல் மாத ஊதியத்தை அளித்தார் என்று செய்தி போட்டாங்க.

செயலலிதா அம்மையாரும் முதலில் இதேப் போல் 1ரூ சம்பளம் மட்டும் முதலில் வாங்கிக்கொள்வதாக அறிவித்தார்.

அதைக் கண்டு எந்த சாமனியன் வீழ்ந்தான் என்று தெரியவில்லை...அப்படியே அவருடைய அடியொற்றி இப்போது அழகிரி.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. சமூக சேவையாற்ற(!!) வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு மட்டும் ஏன் ஊற்றாக பொங்குகிறது.

இம்முறை நாடாளுமன்றத்தில் 50% மேலானவர்கள் தங்களுடைய தொழிலாக கொடுத்திருப்பது என்ன தெரியும்மா...சமூக சேவை

இவர்களில் ராகுல், சோனியா ஆகியோரும் அடக்கம்.

என்ன ஒரு நாடகத்தனம்...!

என்ன ஒரு போலித்தனம்...!

இவர்கள் எல்லாம் நாட்டிற்கு சேவை செய்ய வந்தவர்களாம் !

போலவே அழகிரி அவர்களும் ஏழை எளிய மக்களுக்காக ஊதியத்தை தியாகம் செய்கிறாராம்..

ஒரு மாறுதலுக்கு..

எல்லா அரசியவியாதிகளும் உங்களுடைய கிம்பளத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுங்களேன்...!!

என்னாத்தைச் சொல்ல 3-7-2009

கலைஞருக்கு தொண்டர்கள் மீது அக்கறையில்லை போலிருக்கின்றது.

பல பாடுப்பட்டு, அவர் என்ன செய்தாலும் அதற்கு ஒரு நியாயம் சொல்லி, எதிர் நியாயம் சொல்லி, ஓய்ந்துப்போய்விட்டார்கள் உடன்பிறப்புகள்.

இந்த நிலையில் மீண்டும், கலைஞர் ஈழவிவகாரத்தில் விவகாரமான அறிவுரையயை கூறியிருக்கிறார்.

வேண்டாம் வலிக்கும் ! அழுதுடுவாங்க ! விட்டுருங்க ஐயா !

அவர் சொன்னதின் சாரத்தை நாம் எடுத்து, இப்படியும் சொல்லலாமோ !

கெட்டுப் போன பெண்ணின் வாழ்க்கை தான் முக்கியம் கெடுத்தவனுக்கே கட்டி வைப்பது தான் நியாயம். கெடுத்தவனை கைது செய்யனும் என்று சொல்பவர்கள், தங்கள் மனசாட்சியயை கழட்டி வைத்துவிட்டு தான் பேச வேண்டும். இனிமேல் கெடுக்கப்பட்ட பெண்ணுக்கு வேற வழியில்லை, எனவே சேர்ந்து வாழ்வது தான் ஒரே வழி !

அவ்வ்வ்வ்வ்

இப்ப எல்லாம், மைனர் குஞ்சுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை போன்ற தண்டனை தான் கொடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புறாங்க ஐயா !

செய்த தவற்றிற்கு தண்டனையில்லாமல் போனால் என்ன ஆகும் என்பதற்கு அரசியல்வியாதிகளே சரியான எடுத்துக்காட்டு.

ஒரு முறை தவறு செய்தவனுக்கு அடுத்த முறை தவறு செய்வதென்பது மிகவும் சுலபமான ஒன்று. அதுவும் அதிகாரம் மிகுந்த பதவிகளில் இருப்பவர்களுக்கு அது மிகவும் சுலபமான ஒன்று.

ராசபக்சே தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டாலும், சரியான அதிகாரப்பகிர்வு கொடுத்தாலும், இழக்கப்பட்ட, கொல்லப்பட்ட உயிர்களுக்காக அவர் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டே ஆகவேண்டும்.

அதை நிறைவேற்ற இறையாண்மை தேவையில்லை !

ஆண்மை தான் தேவை...உலக நாடுகளுக்கு !

வயக்ரா போட்டுக்கொண்டதுப் போல், அவ்வப்போது உலக நாடுகளின் ஆண்மை அவர்களுக்குத் தேவையான போது மட்டும் விழித்துக்கொள்வதால், தவறுகள் எல்லாம், தவறில்லாமல் போய் விடாது.

இரத்தம் தோய்ந்த பற்களுடன் சரித்திரத்தில் சாவா இடம் பெற்ற இராசபக்சே, அவருக்கு கிடைக்கப் போகும் காலம் கடந்த நீதிக்கும் சாவா இடம் பெற வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வழக்கமாக பெங்களூர் சிவாசி நகரில் நடக்கின்ற நிகழ்வு-" ஒரு குறிப்பிட்ட சமுகத்தினர்/மத்தினரின் கோவிலுக்குள் அவர்கள் வெறுக்கின்ற ஒரு மிருகத்தினை வெட்டி உள்ளே வீசி கலவரத்தை உண்டுக்குவது"

பல முறை வெற்றிகரமாக(???!!!) இது மதக்கலவரத்தையும், கலவரத்தையும், சங்கடத்தையும் பெங்களூரில் உருவாக்கியிருக்கின்றது. இன்று அதே சாத்திரமும், சூத்திரமும், மைசூரிலும் கையாளப்பட்டியிருக்கின்றது.

இந்த கலவரத்தில் எந்த வகையிலும் தொடர்பற்ற மூவர் காவல்துறையினரின் துவக்கிற்கு பலியாகியுள்ளார்கள்..!!

எப்ப தாண்டா திருந்துவீங்க..!

ஃஃஃஃஃஃஃஃ

ஒத்த கருத்துள்ளவர்களிடையே, ஒப்புதலுடன் நடக்கும் ஓரிணச்சேர்க்கை சட்டவிரோதமில்லை என்று உச்ச நீதி மன்றம் அறிவித்தள்ளது.

அடுத்த பதிவுலகத் (கேள்வி/பதில்) தொடரில், நீங்கள் ஓரிணச்சேர்க்கையில் ஈடுப்பட்டதுண்டா, அதில் ஆர்வமுண்டா என்று கேள்விகள் வருமோ..??

வந்தால் அவற்றை பதிவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்...??

கல்லூரி விடுதிகளில் இதை எதிர்கொண்டவர்கள், ஈடுப்படுத்தப்பட்டவர்கள் (விருப்பத்துடன்/அல்லது விருப்பமில்லாமல்) என்ற பலகதைகள் மறைந்தே/மறைத்தே வைக்கப்பட்டியிருகின்றது (அட நான் படித்த வரைக்கும்). இல்லை 18+ என்று போட்டு, பால் சார்ந்த நகைச்சுவைத் துணுக்குகள் பதிவாக வருவதுப் போல், இவையும் வருமா தெரியவில்லை. பதிவுலகம் மிகவும் முன்னேறிய சமுகமாக நடத்தும் பாவனை இந்த விவகாரத்தில் எப்படி பல்லிளிக்கும் என்று பார்க்க காத்திருக்கின்றேன்.

சட்டவிரோதமில்லை என்று சொன்னவுடன் , அதன் மீது இருக்கும், அழுக்கான ஒரு பாவனை, மக்கள் மனதில் மறைந்துவிடுமா என்ன. இது ஒரு துவக்கம் மட்டுமே. மனதளவில் நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கின்றது.

ஃஃஃஃஃஃஃ

பெங்களூரின் அரண்மனையும் ஒரு கேள்வியும் !

பெங்களூரில் மைசூர் அரச பரம்பரையினருக்கு ஒரு அரண்மனை இருக்குதுங்க. பெங்களூரில் இருந்துக்கொண்டே இந்த இடத்திற்கு இதுவரை நான் சென்றதில்லை. ஊரிலிருந்து வந்த அம்மா அப்பாவிற்கு ஊர் சுற்றிக் காட்ட இந்த இடத்தை தேர்ந்தெடுத்து கிளம்பினோம்.

உள்ளே நுழையும் முன்னே ஒரு காவல்தடுப்பு (தனியார் காவல்). எங்கே என்றக் கேள்வி, அநாவசியமான கேள்வி. சுற்றிப் பார்க்க திறந்தும் வைத்துவிட்டு, ஏன் எதற்கு என்ற கேள்வி கேட்பது ஏனோ தெரியவில்லை..புரியவில்லை..புதசெவி !

உள்ளே போனதும் இரண்டு மூன்று குதிரைகள் கண்ணில் பட்டது.

ஆகா அரண்மணையிலே குதிரை இருக்கனும் என்பது விதிப் போலிருக்கு என்று நினைத்துக்கொண்டேன். மைச்சூர் அரண்மனையில் ஒரு கோவாறு கழுதை தான் பார்த்ததாக நினைவு.

அரண்மனை என்றால் என்னவென்று யாராச்சும் ஒரு விதிமுறைகள் எழுதினால் தேவலைப் போலிருக்கு. இதெல்லாம் அரண்மனையா..? என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்று ஆள், அம்பு சேனை எல்லாம் நிறைய இருந்தாங்க. என்ன..அவங்க எல்லாம், வண்ணம் பூசுகிறவர்களாகவும், வெள்ளை சொக்கா போட்ட வழிகாட்டுபவர்களாக இருந்தார்கள்.

அரண்மனையயை இங்கிலாந்து சென்றுவிட்டு, அதன் பாதிப்பில் மைசூர் மகாராசா கட்டினாராம். இப்போதும் மைசூர் மகாராசா இங்கே வசிக்கின்றாராம். வெளியே இரண்டு வெளிநாட்டு மகிழ்வுந்துகள் அதற்கு கட்டியம் சொன்னது. உள்ளே சென்றால், தலைக்கு நுழைவு கட்டணம் 100 ரூ. வெளிநாட்டினர் என்றால்ம் 200ரூ.

தண்டமே என்று அதற்கும் அழுதுவிட்டு, உள்ளே நுழைந்தோம். வெளியே இருந்து பார்த்தால் மிகவும் சின்ன அரணமனை என்பதாக தோன்றியது. உள்ளே வந்துப் பார்த்தால், ரொம்ப சின்ன என்றளவு இல்லாவிட்டாலும், சின்ன அரண்மனை என்பதாக தோன்றியது. மகாராசா இங்கிலாந்துப் பார்த்தப் பொழுது அப்படியே பிரஞ்சு நாட்டையும் சுற்றியிருப்பார் போலிருக்கு, மனையெங்கும் அரைகுறை கோலத்தில் அம்மணிகள் காட்சியளிக்கின்றார்கள். நின்று ரசிக்கத் தான் வழியில்லை..:))

வழிகாட்டி வேண்டாம், அதற்கு வேற காசு அழுகனும் என்று எங்க நைனா சொல்லிவிட்டதால், நாங்களாக சுற்றிப் பார்க்க கிளம்பினோம். ஆனால், வழிகாட்டிக்கு பேச்சுதுணைக்கு ஆள் இல்லாததாலும், அசட்டையாக கேட்டுக்கொண்டியிருந்த ஒரு தெலுங்கு குடும்பத்தினராலும், எங்களிடம் கதையளந்துக்கொண்டு வந்தார்.

நம்ம, சோதிகா நடிச்ச சந்திரமுகி, படம் இங்கே தான் படமாக்கப்பட்டதாம். பெரிய சரித்திர நிகழ்வு போல் சொல்லிக்கொண்டே வந்தார்..உம் கொட்டிக்கொண்டே சுற்றிப் பார்த்தோம்.

நான் திருமணத்திற்கு முன் தனியாக வசித்தப் பொழுது வைத்திருந்ததை விட கேவலமாக வீட்டை மகாராசா வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்றதாம். ராசாக்களின் சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்ததல்லவா, அதில், இந்த வீட்டையும் அரசு எடுக்க முயற்சித்ததாம்..அதை எதிர்த்து வழக்கு நடக்கின்றதாம். சுமார் 500 ஏக்கர் நிலம். பெங்களூரின் மத்தியில். பெரிய சொத்து தான்..தனது வீடு என்று நிருபித்தால், தப்பும் என்று கணக்கு செய்து அங்கேயே வசிக்கிறார் போலிருக்கு.

மைசூர் அரச பரம்பரைக்கு இரண்டே பேரு தான் தெரியும் போலிருக்கு...ஒன்னு கிருட்டினராசா உடையார், சாமராச உடையார்..இதில் கொஞ்சம் மாற்றி போட்டு போட்டு 25 தலைமுறைக்கும் பேர் வைச்சியிருக்காய்ங்க..சிக்கனக்கார பசங்க..

எந்த ராசாவும் அதிக நாள் உயிர்வாழ்ந்ததில்லையாம்....நிரந்தர முதல்வருக்கு சிலர் ஆசைப்படுவதுப் போல், நிரந்தர மனிதனாக இருக்க முடியும்மா..பிறந்தால் இறக்கவும் வேண்டுமே...என்ன மைசூர் வாரிசுகள் கொஞ்சம் இளைமையிலே போய் சேர்ந்துவிடுவார்களாம்..அதுவும் அகால மரணத்தில்..

தலக்காடு என்ற ஊரில் நடந்த ஒரு அசம்பவத்தில், ஒரு பெண்மணி சாபத்தினாலாம்..நம்ப முடியவில்லை...என்று ஒரு முறை கூவிவிட்டு அப்படியே நகன்றுவிட்டேன்.

என்னடா கதை சொல்லிக்கிட்டே இருக்கான் ஒரு படம் கூட காட்டவில்லையே என்று நினைக்கிறீங்களா....இந்த அரண்மனை கெட்ட கேட்டிற்கு படம் எடுக்க 500 ரூபாயாம்...போங்கடா...என்று (மனதிற்குள் தான்) திட்டிவிட்டேன்...!


சுற்றி முடித்துவிட்டு, வெளியே வரும் பொழுது..அந்தக் காலத்தில் இராசாக்கள் இராசபோகமாகத் தான் வாழ்ந்திருக்கிறார்கள்..இல்லையா..என்று அப்பா கொக்கியயைப் போட்டார்..

ஆமாம்...அதைத் தான் அரசாங்கம் பிடுங்கியாச்சே என்றேன்

அவங்ககிட்டே பிடிங்கியாச்சி...இப்ப இருக்கின்ற அரசியல்வாதிகளிடம் குவிந்திருக்கின்றதே..அதை யாரு பிடுங்குவார்கள்...

அவர்களும் இப்பொழுது குறு நிலமன்னர்கள் தானே என்றார்...

அவர் சொன்னது நெடு நேரம் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது...

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்