
கொஞ்சம் தாமதமாகவே வந்திருக்கும் பதிவு என்றாலும், எனக்கென்னவோ, இது வரை பேசியவர்கள் அனைவருமே, இந்தப் படத்தை ஐடி பற்றிய விமர்சனமாகவே கொண்டதாலே தான் இந்தப் பதிவு...
குறிப்பிட்டுச் சொல்ல இந்தப் படத்திலே நிறையவே இருக்கிறது....ஆனால், பலர் குறிப்பிடாமல் சென்றதற்கு, இந்தப் படம் எடுக்கப்பட்ட விதமும் ஒன்றாக இருக்கிறது..நான் வீடியோவிலே பார்த்ததாலே ( ஆசியவிலே சிறந்த ஐந்தில் ஒன்றாக வரும் தகுதி உள்ளது என்று பாலு மகேந்திரா சொன்ன பிறகு, திருட்டு வீடியோவிலே பார்க்ககூடாது என்று முடிவு கட்டி, வீடியோ ரிலீஸ் ஆன பிறகு பார்த்தேன்...தீயேட்டரில் போய் பார்க்கமுடியாமல் செய்த எங்க வீட்டு குட்டிக்கு இங்கே நன்றி சொல்லிக் கொள்கிறேன்..) பல முறை ரீவைன்ட செய்து பார்த்து புரிந்துக் கொண்டேன்...வசனம் பல இடங்களிலே தெளிவில்லாமல், சத்தம் ரொம்ப கம்மியாகவே கேட்கிறது....
ஆனால், எனக்கென்னவோ, இயக்குனர் இதை விரும்பியே செய்திருப்பார் என்று எண்ணத்தோன்றுகிறது...காட்சிப் படுத்துதலிலே அவர் தெளிவுப்பட செய்து விட்டதாக எண்ணுகிறார் போலும்...
சிறு சிறு தவறுகள், தப்புகள் ஆங்காங்கே காணப்பட்டாலும், கதையின் ஓட்டத்தை அவை பெரிதாக பாதிக்கவில்லை...உதாரணமாக அச்சங்கோயில் எனப்படு இடத்திலே,பால பருவத்திலே, பிரபாகரும், ஆனந்தியும் பேசும் இடங்களிலே, தமிழை விட ஆங்கிலம், கலந்தே பேசுகிறார்கள்..அச்சங்கோயில் கேரளா மாநிலம், மலையாளம் சிறு துளி கூடக் கலக்காமல் பேசுகிறார்கள்..இது மட்டுமல்ல, கற்றது தமிழ் என்றாலும், ஆங்கிலத்திலே பேசினால் தான் கருத்தை தெளிவுபட சொல்ல முயற்சிக்கிறார் நாயகன்..அது வேண்டியே செய்தததா..இல்லை...இயக்குனர் தவறா என்று தெரியவில்லை...தன்னை முனுசாமி ஆக்கியதற்காக, வருத்தப்படும் நாயகன், ஆங்கிலத்திலேயே பேச வேண்டிய கட்டயாம் தான் என்ன...
தந்தை தனக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்று தெரியமலே தட்டமாலை சுற்றுவார் என்று சொல்லும் போது வாழ்க்கை மிக அருகிலே சென்ற உணர்வு...
ஆனால், இப்போதெல்லாம், திரைப்படத்திலே, காதல் வயப்பட பால்ய வயது சினேகம் தான் காரணமாகயிருக்கிறது... அது தான் இடிக்கிறது...வர வர எல்.கே.ஜியிலே காதல் வரும் போலிருக்கே...எத்தனை பேருக்கு சிறுவயது நட்பு ஞாயபகம் இருக்கும் என்று புரியவில்லை...ஆனால், நம் கதாநாயகர்கள் எல்லாம், ஏதோ, ஃப்ராய்டுக்கு வேலை கொடுக்கும் வண்னம், சிறு வயது நட்புக்குள்ளே, கட்டுண்டு கிடக்கிறார்கள்...பிரபாகர் மட்டுமென்ன விதிவிலக்கா..
ஆனால், தமிழ் அய்யா நர்சரி ரைம் பாடியதும் அவர் மேல் பிடிப்பு வருதாம்ய்யா..என்ன கதை அய்யா இது...ஒரு அதீத பிரேமை வர ஒரு நொடி போதுமா...கொஞ்சம் கொஞ்சமாக வளர வேண்டிய நட்பு..ஒரு வேளை நேரமின்மையால் இப்படி ஆச்சோ என்னமோ தெரியவில்லை...அப்பாவை சுலபத்திலே மறக்கக்கூடிய பிள்ளைகள் இருக்கிறார்களா....ஒரு வேளை அவர் ராணுவத்திலே பணிபுரிவதாலே, மகனுடன் ஒட்டாமலே இருந்திருக்கலாம்...ஆனால், பிள்ளையயைப் பார்க்காமலே காலம் கடத்துவாரா என்ன...பெரிய ஓட்டையிருக்குங்க...நம்ம நாயகன் தமிழ் படிக்க வேண்டும் என்று, இத்தாம் பெரிய ஓட்டையயை வச்சிட்டாரு...
பையன் 1100 மதிப்பெண் வாங்குகிறான்...கலைத்துறையிலே சேர்கிறான்..இங்க தான் இயக்குனர் முழிச்சிக்கிட்டார்...வகுப்பு முழுவதும் திட்டம் ஏதும் இல்லாமல், மக்குகள் தான் கலைத்துறையிலே இருக்கிற மாதிரி காட்டி..நாயகம் மட்டும் தான், துணிந்து வழியிருந்தும் இதில் விழுகிற மாதிரி காட்டுகிறார்...அய்யா, தமிழ் படிச்சிட்டு நீங்க அதிகப் பட்சம் என்ன ஆகலாமய்யா...ஐ.ஏ.எஸ் கலெக்டர் ஆகாலாம், அதுக்கூட எத்தனை பேரு ஆக முடியும்...வாழ்க்கைக்கு மொழி தேவை தான்..மொழியயை மட்டும் வைத்து நீங்கள் கோடிசுவரார் ஆக முடியும்மா...
விடுதியிலே, கூடத் தங்கும் மாணவரை நாமம் போட்டவராகக் காட்டி என்ன சொல்லவருகிறார் என்று தெரியவில்ல...வேறென்னா..நம்ம தமிழ்மணத்திலே கிழியாத வேட்டி ஏதோ அவர் படத்திலே கிழிப்பார்ன்னு பார்த்தா...ஏதும் செய்யாமலே விட்டுவிடுகிறார்...
இடையிலே, அவருக்கு தாடி வளர்கிறது...அது ஏன்..எதுக்கு, அப்படி பாராரியா அலையுறார்ன்னு தெரியவில்லை...எனக்குத் தெரிந்து, எனக்கு வந்த தமிழ் வாத்தியாருங்க எல்லாம் ரொம்ப நல்ல உடை உடுத்துவாங்க...ஆனா, இவர் தமிழ் படிக்க ஆரம்பிச்சவுடனே, தாடி வச்சிக்கிறார்..
அப்பறம்...விஸ்பர் வாங்கிக் கொடுத்து ஒரு வேலை வாங்குகிறார்....விஸ்பர் வாங்கிக் கொடுத்தா வேலை என்றால், நாட்டிலே, விஸ்பர் விற்பனை பிச்சிக்குமய்யா...இழிந்து வேலை வாங்கினான் என்று சொல்ல, இந்தியனிலே காமெடியாக காட்டப்பட்ட காட்சி,,இதிலே, இரவிலே பரிதாபமாக காட்டப்படுகிறது...கற்பனை வறட்சி...அஜிஸ்டன்டுகளா...ஜாக்கிரதை..
இதற்கிடையிலே, 2000 சம்பளம் வாங்கி 1200 சுடிதார் வாங்குகிறார்...இங்கே சாமனியனாகவே காட்டப்படுகிறார்..அதாவது தமிழ் கற்றதாலே, தாவனி வாங்கலாம் என்று திமிருத்தனாமக எண்ணாமல், அவரும், சுடிதாரிலே டூயட் பாடினால, போதும் என்று எண்ணி..வாங்குகிறார்..
அங்கே அவரின், அறைத் தோழனைக் கானுகிறார்..எப்படி...டிப் டாப்பாக...ஆனால் அதே நாமத்தோடு...அவர் கலாச்சரத்தை விட முடியுமா என்றவாரே, அவரி வருங்கால் துனைவியை அறிமுகப்படுத்துகிறார்...அந்தமமா..இறுக்கமாக ஆடை அணிந்து இவரை விசனப்பார்வைப் பார்க்கிறார்...
நன்பரின் அழைப்பை ஏற்று, ஐடி அலுவலகத்துக்குச் செல்கிறார்...அங்கே அவர் பார்க்கும் எல்லாமே அதிக்கப்படியான ஆடம்பரமாகத் தோணுகிறது...நன்பரி சம்பளத்தை கேட்டு திகைப்புறுகிறார்...என்னமோ இது நாள் வரை உள்ளெ இருந்து விட்டு வந்தது போல...அதுக்காக 2லட்சம் சம்பளம்,..3 வருடங்களிலே என்று சொல்வது சும்மா படம் பாக்கிறவன் வயிறு எரியட்டும்மா என்று புரியவில்லை...
அங்கே ஆபாசமாக பனியன் அனிந்திருக்கும் பெண்னைக் கண்டதும் அத்து மீறுகிறார்...அய்யா என்ன சொல்ல வரீங்க...சம்பளம் கம்மியான என்ன சுயக்கட்டுப்பாட்டை இழந்துவிடுவார்கள் என்று சொல்கிறீர்களா...படிப்பு மனிதனை பண் படுத்தும்...ஆனா, தமிழ் படித்தவன் தன் வசம் இழந்து சுற்றுவான் என்று தமிழைப் பழிக்கின்றீர்களா...புரியவில்லை..தயவு செய்து விளக்கவும்..இங்க தான் இவர் வசனம் பேசுகிறார்...சற்றே மணம் பிறழுகிறாரா...இல்லை...ஏற்கனவே பிறழ்ந்தவரா...
கதையிலே முன்னரே அகால மரணத்திலே தாயயைப் பறிக் கொடுக்கும் நாயகன், தனது ஆசானையும் பறி கொடுக்கிறார்..இதனால், ஒருவன் மணம் பிறழலாம்..ஆனால், அப்பறம் எப்படி, முதல் வகுப்பிலே மதிப்பெண் பெற்று படிக்கப் போகிறார்..இது நடந்ததுக்கப்பறம்...
தேவையே இல்லாமல். நீங்கள் அலைக்கழிக்கப்படலாம்...காவல் துறையினரால்..என்று சமுகத்தை இப்போது மீண்டும் தொட்டுப் பார்க்கிறார்...ஒரு புகைகுச்சு (சிகெரெட்க்கு தமிழ் பதம்... :)) ) பிடிக்கப் போயி, ஒரு காவலரின், விரச்ப்பார்வையில் மாட்டும் ஒரு சேச்சியின் கையில் சில்லறை வாங்கியதால், ஜட்டிய கழட்டிய நிலையிலே காவல் நிலையத்தில் மாடுகிறார்...பின்னர், மீண்டும் தன் வாயினாலே கெட்டு, கஞ்சா கேசில் மாட்டுகிறார்...
இதிலே, சுட்ட வேண்டிய விசயம், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் , சமுதாயம் உங்களைப் பற்றிய மதிப்பீடுகள் செய்துக் கொண்டேயிருக்கும்...
- தமிழ் படிக்க வந்ததாலே,,இவன் முனுசாமி என்றும்..
- தாடி வைத்து திரு திரு என்று முழித்தால்..ஆள் இல்லாதவன்..இளைத்தவன்...என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்..என்றும்...
- ஒரு சிகெரெட் குடித்தல், 100 ரு சாதரணமாக் தண்டம் கட்டுவீர்கள் ..( பெட்டிக் கடையிலே ஒரு முறை, ஓடும் புகைவண்டியிலே ஒரு முறை...இதுக்காக தண்டம் கட்டச் சொல்கிறார்கள்..)..அதாவது...தவறு எல்லோரும் செய்வார்கள்..ஆனால். பணமிருந்தால்,,நீங்கள் இதில் மீளலாம்..பணம் வைத்து இருக்கும் சிலரால், எல்லோரிடமும் பணம் பறிக்கிறார்கள் காவல் துறையினர்..என்று...
இந்த கொடுமையிலேயிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்...வறுமை..(திடிரென்று...5 ரூ மட்டும் மிச்சமிருக்கின்ற அளவுக்கு )...விரட்டுகிறது...கோபத்திலே வன்முறையிலே இறங்குகிறார்..படிப்படியாக கொலை செய்வது ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் ஒரு செயல் ஆக ஆகுகிறது...
எங்கெங்கோ சுற்றித் திரிந்து...கஞ்சா குடித்து, சிவதாண்டவம் ஆடி...முடிவில்..தன் காதலிய்யை விபச்சாரியாய் பார்க்கிறார்..அவரைக் கண்டதும் அவருக்கு தன் இளமை பருவத்திற்கு திரும்பியதாக ஒரு எண்ணம்...அப்படியே வாழ்க்கையயைத் தொடரலாம் என்ற எண்ணம் வரும் வேளையிலே...மேற்க்கூறிய அனைத்தையும் பதிய முற்படுகிறார்..எப்படி..வீடியோவிலே..
அதைக் கைப்பட தொலைக்காட்சி அலுவலகத்திலே சேர்பித்து பயணத்தை ஆரம்பிக்கிறார்...பின்னர் காவல் துறையிடம் மாட்டவிரும்பாமல்.காதலியுடன் தற்கொலை செய்து கொள்கிறார்..
இடையிலே அவர் செவ்விய்யைப் பார்த்து, மக்கள் கொதிக்கிறார்கள்...இங்கன இரண்டு மூன்று பேர் கருத்து சொல்கிறார்கள்..அது எல்லாம் மத்த பதிவுலே பார்த்து தெரிஞ்சுக்கோங்க...
எனக்கென்னவோ..ஆசியவிலே சிறந்தப் படம் என்ற பட்டத்திற்கு தகுதியானதாக தோன்றவில்லை...ஆனால், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை எல்லாம்..திறம்பட செய்திருக்கிறார்கள்...அரசியல்வாதியயை, காவல் துறையயை மையப்படுத்தி வந்தப் படங்கள் போல, பட்டதாரிகளின் அவல நிலையைச் சொல்ல வந்த படம் போல எடுக்க நினைத்து..அதில் நாயகனின் தனிப்பிரச்சனைகளை குழப்பி...ஒரு குழப்பமான படமாக் எடுத்துவிட்டார்...
மீண்டும்..இவர் இதை ஒரு வர்க்க பிரச்சனையாக சொல்ல வந்ததை ஒரு குறிப்பிட்ட குழுவினர், தங்கள் குற்ற உணர்ச்சி தாளாமல், குதிக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்...ஆனால் அது ஒரு வகையிலே இயக்குனரின் வெற்றி என்றே நாம் கருத வேண்டும்...வாழ்க்கையின் வெகு அருகே சென்று...ஒரு விளைவை ஏற்ப்படுத்த முடிந்ததற்கு....!!!!!
கற்றது தமிழ் சொல்வது என்ன..?
Subscribe to:
Post Comments (Atom)




12 Comments:
இந்தப்படத்துல இவ்வளோ விஷயங்கள் ஒளிந்திருக்கா??
//படிப்பு மனிதனை பண் படுத்தும்...ஆனா, தமிழ் படித்தவன் தன் வசம் இழந்து சுற்றுவான் என்று தமிழைப் பழிக்கின்றீர்களா...புரியவில்லை..தயவு செய்து விளக்கவும்..இங்க தான் இவர் வசனம் பேசுகிறார்...//
அட.. அங்கே சுத்தி இங்கே சுத்தி.. கடைசியில உங்க லைனுக்கே வந்துட்டீங்களே? :-)
November 7, 2007 2:34 PM
.:: மை ஃபிரண்ட் ::. said...
//படிப்பு மனிதனை பண் படுத்தும்...ஆனா, தமிழ் படித்தவன் தன் வசம் இழந்து சுற்றுவான் என்று தமிழைப் பழிக்கின்றீர்களா...புரியவில்லை..தயவு செய்து விளக்கவும்..இங்க தான் இவர் வசனம் பேசுகிறார்...//
அட.. அங்கே சுத்தி இங்கே சுத்தி.. கடைசியில உங்க லைனுக்கே வந்துட்டீங்களே? :-)
அக்காவுக்காக ஒரு ரிப்பிட்டெய்ய்ய்...
எனக்கு ஒன்னுமே புரியல...
படம் பார்த்துட்டு வந்து கருத்து சொல்றேன்.
நான் இன்னும் படம் பாக்கல. ஆனா, நீங்க சொல்லுறத பாத்தா இவ்ளோ விஷயம் இருக்கா? ம்...
அருமையான அலசல்:)
அருமையான துவைத்தல்:)
அருமையான பிழிதல்:)
அருமையான காயபோடல்:)
பிரிச்சி மேஞ்சிட்டீங்க...
பாலுமகேந்திரா தன் அசிஸ்டன் டா இருந்தவர் படத்தை பத்தி வேறு எப்படி சொல்வார்..?
இது படம்...இதை வச்சி பின்னாடி நடக்கிறது எல்லாம் அரசியல்..
//*
.:: மை ஃபிரண்ட் ::. said...
இந்தப்படத்துல இவ்வளோ விஷயங்கள் ஒளிந்திருக்கா??*//
அட நிஜமாவே இந்த வாழ்க்கையிலே எனக்கு புரியாத விசயங்களிருக்கு..
நான் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பாரம் இல்லீங்கோ...
//*.:: மை ஃபிரண்ட் ::. said...
//படிப்பு மனிதனை பண் படுத்தும்...ஆனா, தமிழ் படித்தவன் தன் வசம் இழந்து சுற்றுவான் என்று தமிழைப் பழிக்கின்றீர்களா...புரியவில்லை..தயவு செய்து விளக்கவும்..இங்க தான் இவர் வசனம் பேசுகிறார்...//
அட.. அங்கே சுத்தி இங்கே சுத்தி.. கடைசியில உங்க லைனுக்கே வந்துட்டீங்களே? :-)*//
வளருகிற பிள்ளை அருமையா பின்னுட்டம் போட்டு வளரனும்..
இப்படி.ரிப்பிட்டெய்ய போட்டுக் கெட்டுப் போகக்கூடாது..
//*.:: மை ஃபிரண்ட் ::. said...
/
அக்காவுக்காக ஒரு ரிப்பிட்டெய்ய்ய்...*//
படம் பார்த்து பின்னரும் புரியாது...
//*J K said...
எனக்கு ஒன்னுமே புரியல...
படம் பார்த்துட்டு வந்து கருத்து சொல்றேன்.*//
இந்தப் படம் கட்டாயம் எல்லாரும் பாக்கனும்...
வித்தியாசமான முயற்சிகளை நாம் ஆதரிக்கனும்..இல்லையின்னா, ஜீவாவும், கொஞ்ச நாளிலே, காமிராவா பாத்து..
நீ எந்த ஊரு நான் எந்த ஊருன்னு பேச ஆரம்பிச்சிடுவார்..
//*சீனு said...
நான் இன்னும் படம் பாக்கல. ஆனா, நீங்க சொல்லுறத பாத்தா இவ்ளோ விஷயம் இருக்கா? ம்...*//
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தான்..
படம் அவ்வளவு மோசம் இல்லை..
ஆனா, அவர் புளகாங்கிதம் அடைகின்ற அளவிற்கு இல்லை என்பது தான் என் கருத்து.
//*குசும்பன் said...
அருமையான அலசல்:)
அருமையான துவைத்தல்:)
அருமையான பிழிதல்:)
அருமையான காயபோடல்:)
பிரிச்சி மேஞ்சிட்டீங்க...
பாலுமகேந்திரா தன் அசிஸ்டன் டா இருந்தவர் படத்தை பத்தி வேறு எப்படி சொல்வார்..?*/
Post a Comment