சமீபத்திய புதசெவி

தனியே தன்னந்தனியே...நடப்பது..

கல்லூரியில் நாளை கொடுக்க வேண்டிய ஒரு ஒப்புடைப்புக்காக அவன் ஞாயிறு இரவே கிளம்பிவிட்டேன். வழக்கமாக, திங்கள் காலையிலே, நன்பர்கள் படை சூழ கிண்டலும் கேலியுமாகவே, போய் பழகிவிட்டேன். இந்த வாரம் ஊருக்குச் செல்வதாகவே திட்டமில்லை. எல்லாம், சகோதரியினால் வந்த வினை. அவளுக்கு ஏதோ, கொண்டு சென்று கொடுக்க வேண்டும் என்று அப்பா வரச் சொன்னார்.

ஊருக்குப் போய் விட்டு, சனிக்கிழமையயை மதுரையிலே கழித்துவிட்டு, சாயங்காலம், கிளம்பி, அருப்புக்கோட்டையிலே போய் அக்காவை சந்தித்து அவளுக்கு கொடுக்க வேண்டிய புது துணிகள், மற்றும் தின்பண்டங்களை கொடுத்துவிட்டு, அப்படியே, சிவகாசிக்கும், விருதுநகருக்கும், இடையிலே அத்துவானக் காட்டிலேயிருக்கும், எனது கல்லூரிக்கு வண்டியேறினேன். வழியிலே, மனது மாறி அந்த விடுதி உணவை உன்ன மனமில்லாமல், விருதுநகரிலே, சற்று இளைப்பாறிவிட்டு, கிளம்பினேன்.

கிளம்பும் போது கைக்கடிகாரத்தைப் பார்த்தேன், மணி, 9.30 என்றது. பக் என்றது. பேருந்து நிறுத்தத்திலேயிருந்து, 2 கீ.மி, இருட்டிலே தனியாக நடக்க வேண்டும். நடுவிலே, இருக்கும் காளீஸ்வரி ஃப்யர் ஒர்கஸை விட்டால், உயர்ந்த மதில்கள் தான் இருக்கும். வெளிச்சம் தர விளக்குகள் அந்த நிறுவனத்தின் வாசலில் மட்டுமேயிருக்கும். எப்போதாவது, இரவில், காற்று வேண்டி வெளியே வந்தமர்ந்துயிருக்கும் வயதான தம்பதியினர் தான் இப்படி இரவில் வரும் மாணவர்களுக்கு பயம் போக்கிகள். நிறுத்தத்திலேயிருந்து, அந்த விளக்குவரை இதோ வந்தது விட்டது விளக்கு என்று எண்ணிக்கொண்டேயும், அங்கிருந்து கல்லூரி விளக்கைப் பார்த்துக் கொண்டே, இதோ இதோ என்று சொல்லிக் கொண்டே போய் விடுவார்கள். இன்று நானும் அதே வழிகளை கடைப்பிடித்து கரை சேர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

விருதுநகரிலே வண்டியேறும் போது வேறு யாரவது, நம்ம பசங்க ஏறுகிறார்களா என்று பார்த்துக் கொண்டே ஏறினேன். யாரும் அந்த கல்லூரிக்கு பயணச்சீட்டு கேட்கவில்லை. அந்த நடத்துனரும், அதற்கு முந்தைய கிரமத்திலே தான் நிறுத்துவேன் என்று அடம் பிடித்தார். வேறு வழியில்லாமல், மத்தியசேனை என்ற அந்த கிராமத்துக்கு பயணச்சீட்டு எடுத்தேன்.

மணி 10.20 ஆகிவிட்டியிருந்து. புரோட்டா கடைகள் கூட மூடத் தொடங்கியிருந்தது. மத்தியசேனையில் இருந்து, கல்லூரி பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வரும் போது தான் அவனைப் பார்த்தேன். அவனது வகுப்பிலே படிக்கும் விஜய் நின்றியிருந்தான். அவன் 2 வாரங்களுக்கு முன் தான் ஒழுங்கு நடவடிக்கையில் 2 வார காலம், கல்லூரியிலேயிருந்து, தற்காலிக நீக்கம் செய்யப்படியிருந்தான். அதற்கு நான் சொல்லிய அல்லாது மிரட்டப்பட்டு வாங்கிய வாக்குமூலமும் ஒரு காரணம்.

என்னைப் பார்த்ததும், அவன் புன்னகைத்தான்.."டேய் என்னடா..இந்நேரத்திலே வரே."

"கொஞ்ச வேலையிருந்துச்சி...டேய் நான் வேனுமின்னு பன்னலைடா" என்று இழுத்தேன்.

"அவன் அதற்கு நம்ம கல்லூரியயைத் தான் நமக்குத் தெரியும்மே விடுடா.." என்றான்.

பின்னர் இருவரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தோம், பேசிக்கொண்டே, கல்லூரி வாயில் வரை வந்தோம். பேச்சு சுவரசியத்திலே, விளக்கே இல்லாமல் போனதும், இருட்டும், இருட்டிலே மிகைப்படுத்தப்படும் பூச்சிகளின் சத்தம் என்னை சஞ்சலப்படுத்தவில்லை.

பின்னர் அவன் திடுமென, "டேய் எனக்கு முக்கியமான ஒரு வேலையிருக்கு நான் வரேன்..நீ போ" என்று சொல்லிவிட்டு போய் விட்டான்.

நான் விடுதிக்கு வந்தேன். விடுதியே காலியாக இருந்தது.

என்ன விவரம் என்று கேட்க கூட அளில்லை. உணவு விடுதியினுள் எட்டிப் பார்த்தேன்.
அங்கே முருகேசன் தாத்தா இருந்தார்.

"என்ன தாத்தா..இன்னைக்கு விடுதியிலே யாரையுமே கானோம்." என்றேன்.

"உனக்கு விசயம் தெரியாதா...உன் கூடப் படிக்கிற விஜய் விபத்திலே செத்துப் போயிட்டானாம்..எல்லாப் பசங்களும்,அடக்கம் பண்ணுறதுக்கு முன்னாடிப் பாக்கனுமின்னு போயிருக்காங்க" என்றார்.

எனக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது...கை கால் சில்லிட்டது...என் நெஞ்சு அடிப்பது எனக்கு மட்டுமில்லை..முருகேசன் தாத்தவிற்கும் கேட்டது...என்னைப் பார்த்து அவர் பயந்தேப் போனார்..
" என்னய்யா ஆச்சு...என்ன ஆச்சு " என்று அவரு கேட்கும் போதே...

அடுக்களையின் பின் பக்கமிருந்து, விஜய் மெதுவாக வந்தான்.

முருகேசன் தாத்தாவிற்கு தெரியமாட்டானோ...

என் கண்களுக்கும் மட்டும் தான் தெரிகிறானோ....

பழி வாங்கவே இத்துனை தூரம் ஆவியாக வந்தானோ...

என்று ஆயிரம் எண்ணங்கள் ஓடும் போது, அவன் குரல்...அழுத்தமாக...

"வாடா உனக்காகத் தான் வந்தேன்" என்று ஒலித்தது...

நான் பேய் என்று அலற...முருகேசன் தாத்தா அதிர்ந்தார்..

பின்னால் திரும்பி பார்த்தார். விஜய் நின்றுக் கொண்டியிருந்தான்.

"என்னய்யா,சாப்பாடு எடுத்துக்கிட்டியா"..என்று கேட்டவாறு..."இவனுக்கு என்னமோ ஆச்சி..ஏதோ பேயின்னு கத்துறான் பாரு..." என்றார்.

என்னடா இவன் இவர் கண்ணுக்கும் தெரியுறான்...ஒரு வேளை இவரும் பேய் தானோ..

இல்லை..இவருக்கும் பழிவாங்க ஏதாவது காரணம் இருக்குமோ என்று நான் யோசித்துக் கொண்டியிருந்தேன்..

அப்போது விஜய்.."டேய் உனக்குத் தெரியுமா, சிவிலிலே படிக்கும் விஜய் பைக் ஆக்சிடென்ட்லே செத்துப் போயிட்டானாம்டா..அதான் .ஒருத்தனையும் கானோம்.." என்று சொல்லிக்க் கொண்டியிருந்தான்....

பி.கு: 1. இது சர்வேசனின் போட்டிக்காக எழுதப்பட்டது. Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: 'நச்சுனு ஒரு கதை' - போட்டியும், இதுவரை ஆட்டையில் உள்ள 14 பதிவர்களும்

43 Comments:

கோவி.கண்ணன் said...

சூப்பர் அப்பு...அசத்திட்டிங்க :)

விஜய் ஆவி said...

இருடி...என்னிய வச்சி கதையா எழுதுறே...அந்தபக்கம் பைக்கில தானே போவே...மோகினியாக வந்து லபக்குறேன்

முருகேசன் தாத்தா said...

எலே நான் செத்தே பத்துவருசம் ஆகுதுடா

பெண் பேய் said...

யப்பா...உன்னை இருட்டில் பார்த்துதான் நாங்க ஊரைக்காலிப்பண்ணிட்டு ஓடினோம்

SurveySan said...

ஆஹா. இது நச்சு! :)

பி.கு: முருகேசன் சொன்னதும், இவன் பயந்து காக்க வலிப்பு வந்து செத்திருக்கணும்.
விஜய் அப்பாலிக்கா வந்து, முருகேசன், நான் சொன்ன மாதிரியே சொல்லிட்டீங்கன்னு ஒருவில்லன் சிரிப்பு சிரிச்சிருந்தா, இன்னும் நச்சு கூடியிருக்குமோ? :)

சும்மாங்காட்டி சொன்னேன். இது நல்லாவேயிருந்தது, ரெண்டு ட்விஸ்டோட! :)

CVR said...

அட்ரா சக்கை!!
சும்மா நச் நச்னு கதையா அள்ளி வீசுறீங்க!!
வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :-)

ஜெகதீசன் said...

//
சூப்பர் அப்பு...அசத்திட்டிங்க :)
//
ரிப்பீட்டேய்ய்ய்
:)

துர்கா(போலி) said...

அண்ணா,
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்,
இருட்டுகுள் நடக்கும் போது ருத்ர வீணை வாசிக்கும் சத்தம் கேட்டதா ?

சைனீஸ் ஆவி said...

நாங்கெல்லாம் மஞ்சளாக இருப்போம்...பினாங்கு கிரேவ்யார்டுக்கு தைரியமாக உம்மால் வரமுடியுமா ?

துளசி கோபால் said...

ஐய்யய்யோ....

அந்த வீணை வாசிச்சது நம்ம துர்காவா? ;-))))


ச்சும்மா.....

பாதியிலேயே கொஞ்சம் முடிவு தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் அந்த ட்விஸ்ட்:-))))

சிவில் விஜய்!

கலக்கல் கதை.

சரவணன் said...

//முருகேசன் தாத்தா said...
எலே நான் செத்தே பத்துவருசம் ஆகுதுடா
//

முருகேச ... முருகேசா, நான் கேட்டேனா ?
எனக்கு சந்திரமுகி ஆவிதான் பிடிக்கும்

சந்திரமுகி said...

ர..ரா....சரசுக்கு ராரா....!

லக்க லக்க லக்க.....!

ஒத்து ஒத்து...வெள்தானுரா....

மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...
சூப்பர் ஆப்பு...அசத்திட்டிங்க :)
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

செந்தில் நாதன் said...

என்ன கொடுமை சரவணன்.

என் மனைவியை எப்படியாவது சந்திரமுகி ஆவிகிட்டேர்ந்து காப்பாந்துங்க சரவணன்.

பாச மலர் said...

யப்பா..பயமாருந்துச்சு படிக்கிறப்போ..நல்ல டபுள் ட்விஸ்ட்..

கோவி.கண்ணன் said...

//கோவி.கண்ணன் said...
சூப்பர் ஆப்பு...அசத்திட்டிங்க :)//

டிபிசிடி ஐயா,

சூப்பரப்பு ங்கிறத்துக்கு பதிலாக சூப்பர் அப்பு என்று தான் டைப் செய்தேன் அப்பு எப்போ ஆப்பாச்சுன்னு தெரியலை. புரிஞ்சிகுங்க அதற்காக அப்பு அப்பிடாதிங்க

குசும்பன் said...

"பி.கு: 1. இது சர்வேசனின் போட்டிக்காக எழுதப்பட்டது. 'நச்சுனு ஒரு கதை' - போட்டியும், இதுவரை ஆட்டையில் உள்ள 14 பதிவர்களும்"

மிகவும் அருமையான வரி!!!

எதிர் பாராத முடிவு

குசும்பன் said...

SurveySan said...
ஆஹா. இது நச்சு! :)///


ரிப்பீட்டேய்!!!

ஆமாம் இது நச்சுதான் படிச்சு இதுவரை மூன்று பேர் இறந்துவிட்டனர்:))))

குசும்பன் said...

அழகிய தமிழ் மகன் விஜய் இந்த கதையில் நடிக்க விருப்பம் தெரிவிச்சாலும் தெரிவிப்பார்:)) முயற்ச்சி செய்யவும் நல்ல எதிர்காலம் இருக்கிறது!

சீரியஸ் கமெண்ட் போடுபவன் said...

அப்போது விஜய்.."டேய் உனக்குத் தெரியுமா, TBCD பதிவை படித்த 4 பேர் செத்துப் போயிட்டாங்களாம்..அதான் .ஒருத்தனையும் கானோம்.."

மிகவும் அருமையான வரி

சமதர்மம் பேசுபவன் said...

கோவி.கண்ணன் said...
//கோவி.கண்ணன் said...
சூப்பர் ஆப்பு...அசத்திட்டிங்க :)//

கவலை பாடாதீங்க TBCD கோவி கதை எழுதாமலா போய் விடுவார் சொல்லுங்க போய் கும்மிடலாம்:)))

குசும்பன் said...

ஜெகதீசன் said...
//
சூப்பர் அப்பு...அசத்திட்டிங்க :)
//
ரிப்பீட்டேய்ய்ய்
:)///

உங்கள் பதிவில் கொலைவெறியோடு கும்மும் இவர் பதிவில் நீங்கள் கும்மாதது எங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது!!!

ஜெகதீசன் said...

//
குசும்பன் said...

ஜெகதீசன் said...
//
சூப்பர் அப்பு...அசத்திட்டிங்க :)
//
ரிப்பீட்டேய்ய்ய்
:)///

உங்கள் பதிவில் கொலைவெறியோடு கும்மும் இவர் பதிவில் நீங்கள் கும்மாதது எங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது!!!
//
:)))
நான் இனிமேல் எங்கும் கும்மி அடிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறேன்...

TBCD said...

கோவியாரே...நன்றி...


//*கோவி.கண்ணன் said...
சூப்பர் அப்பு...அசத்திட்டிங்க :)*//

TBCD said...

விளையாடி ஏமாத்துறதும், நிஜமாகவே பேய்யாக இருப்பதும் கிளிஷே என்று தவிர்த்து விட்டேன்.. :))))))

நன்றி..

//*SurveySan said...
ஆஹா. இது நச்சு! :)

பி.கு: முருகேசன் சொன்னதும், இவன் பயந்து காக்க வலிப்பு வந்து செத்திருக்கணும்.
விஜய் அப்பாலிக்கா வந்து, முருகேசன், நான் சொன்ன மாதிரியே சொல்லிட்டீங்கன்னு ஒருவில்லன் சிரிப்பு சிரிச்சிருந்தா, இன்னும் நச்சு கூடியிருக்குமோ? :)

சும்மாங்காட்டி சொன்னேன். இது நல்லாவேயிருந்தது, ரெண்டு ட்விஸ்டோட! :)*//

TBCD said...

நன்றி விசிஆர் ;)))))

//*CVR said...
அட்ரா சக்கை!!
சும்மா நச் நச்னு கதையா அள்ளி வீசுறீங்க!!
வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :-)*//

TBCD said...

ரொம்ப சோம்பேறியாகிடாதீங்க...ஜெகதீசரே...

வாங்க ஆட்டத்துக்கு..

நன்றி..

//*ஜெகதீசன் said...
//
சூப்பர் அப்பு...அசத்திட்டிங்க :)
//
ரிப்பீட்டேய்ய்ய்
:)*//

TBCD said...

நன்றிங்க..!!!!

//*துளசி கோபால் said...
ஐய்யய்யோ....

அந்த வீணை வாசிச்சது நம்ம துர்காவா? ;-))))


ச்சும்மா.....

பாதியிலேயே கொஞ்சம் முடிவு தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் அந்த ட்விஸ்ட்:-))))

சிவில் விஜய்!

கலக்கல் கதை.*//

TBCD said...

ஏம்ப்பா எல்லாரும் ஆப்புக்கு ரிப்பீட்டுப் போடுறீங்க.. :((((

//*மங்களூர் சிவா said...
//
கோவி.கண்ணன் said...
சூப்பர் ஆப்பு...அசத்திட்டிங்க :)
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்*//

நக்கீரன் said...

இப்படி பேய்க்கதை சொல்லி போட்டியாளர்களை வெரட்டீரலாம்னு பாக்கீரீங்களா?
நாங்க பயப்பட.......
ஐயோ யாரோ கூப்படறமாதிரி இருக்கு.........
அப்பீட்டு..........

புரட்ச்சி தமிழன் said...

//சூப்பர் அப்பு...அசத்திட்டிங்க :)//
ரிபீட்டே>>>>>>>>

டெம்ப்ளேட் உபயோகிப்பவன் said...

மே ஐ கம் இன் ?????

கோபிநாத் said...

வாழ்த்துக்கள்...கதை நன்றாக விறுவிறுப்பாக இருக்கு ;)

TBCD said...

இல்லிங்க...நான் யாரையும் விரட்டுவதில்லை..
பேய்க் கூட ஒரு மனசன் கதை எழுதுவேன்னு இங்கே தமிழ்மணத்திலே சுத்துவதா கேள்வி...பாத்து சூதானமா இருந்துக்கோங்க.... ;))))))))))))))

//*நக்கீரன் said...
இப்படி பேய்க்கதை சொல்லி போட்டியாளர்களை வெரட்டீரலாம்னு பாக்கீரீங்களா?
நாங்க பயப்பட.......
ஐயோ யாரோ கூப்படறமாதிரி இருக்கு.........
அப்பீட்டு..........*//

TBCD said...

நன்றி...பு.த.

ஒரு புரட்"ச்"சி அதிகமா போட்டுயிருப்பதற்கு ஏதாவது மேலான காரணம் இருக்குதுங்களா...

//*புரட்ச்சி தமிழன் said...
//சூப்பர் அப்பு...அசத்திட்டிங்க :)//
ரிபீட்டே>>>>>>>>*//

TBCD said...

நன்றி....!

//*கோபிநாத் said...
வாழ்த்துக்கள்...கதை நன்றாக விறுவிறுப்பாக இருக்கு ;)*//

incredible indian said...

அருமையான கற்பனை...ஆமாம் விருதுநகர் எப்படி தெரியும்? இந்தியாவில் இருப்பவர்களுக்கே தெரியாதே...

TBCD said...

யக்கோவ்..நான் படிச்சதே..அங்கன தானே...

ஏதோ வேலைக்காக வெளிநாட்டிலே இருக்கேன்...

///*incredible indian said...

அருமையான கற்பனை...ஆமாம் விருதுநகர் எப்படி தெரியும்? இந்தியாவில் இருப்பவர்களுக்கே
தெரியாதே...*///

.:: மை ஃபிரண்ட் ::. said...

இப்பத்தான் புரியுது.. நீங்க ரொம்ப படம் பார்க்குறீங்க போல.. அதான் சதா (நடிகையில்ல) படம் கதையும், ஹீரோ ஹீரோயின் பத்தியுமே நெனன்ச்சிட்டு இருக்கீங்க. ;-)

SurveySan said...

#40:)

கோவிக்கு போட்ட பின்னூட்டம் உங்களுக்கும் பொறுந்தும்.

தினம் (almost) ஒரு நச் கதை எழுதி, திக்கு முக்காட வச்சுட்டீங்க. அதுக்கே ஒரு பரிசு தனியா கொடுக்கலாம். :)

இந்த கதைய பரிசுக்காக அனுப்பினது ஏன்னு ஒரு தனி பதிவு போடுங்களேன் :)

btw,
ஈ.மெயில் வாக்கெடுப்பு நல்லா இருக்கா இல்ல நம்ம 'சாதா' கும்மாங்குத்து வாக்கு சிறந்ததா?

என்னோட தனிப்பட்ட கருத்து - போட்டி, பரிசுன்னு வர சர்வேக்களுக்கு ஈ.மெயில் உதவியுடன் கூடிய வாக்கெடுப்பும்; 'சாதா' கருத்துக் கணிப்புகளுக்கு 'சாதா' வாக்கெடுப்பும் சிறந்தது :)

உங்க கருத்த சொல்லுங்கோ ;)

TBCD said...

கோவியாருக்கு என்னை இனையாக பேசுவது பாவம்..அவர் தினம் ஒரு கதை போட்டார்..நான் ஏதோ..3 நாளைக்கு ஒரு கதை போட்டேன்... :)

//*SurveySan said...
#40:)

கோவிக்கு போட்ட பின்னூட்டம் உங்களுக்கும் பொறுந்தும்.

தினம் (almost) ஒரு நச் கதை எழுதி, திக்கு முக்காட வச்சுட்டீங்க. *//

சரி..இது மேட்டரு...ஆனா, கொடுக்கிறேன்னுல சொல்லியிருக்கனும்...லாமின்னு சொன்னா... ;)

//*அதுக்கே ஒரு பரிசு தனியா கொடுக்கலாம். :)*//
அஸ்கு புஸ்கு...என் தலைமை வாசகர் சொன்னதினாலே இதை நான் தேர்வு செய்தேன்..அம்புட்டுத் தான்..என்னைப் பொறுத்து வரை நான் என் எல்லா கதைகளையும் சிறந்தவைகளாகவே பார்க்கிறேன்.. (யப்பா டயலாக் விட எனக்கு ஒரு சந்தர்ப்பம்.... :P )


//*இந்த கதைய பரிசுக்காக அனுப்பினது ஏன்னு ஒரு தனி பதிவு போடுங்களேன் :)*//

//*btw,
ஈ.மெயில் வாக்கெடுப்பு நல்லா இருக்கா இல்ல நம்ம 'சாதா' கும்மாங்குத்து வாக்கு சிறந்ததா?*//

ஆமாம் பொல்லாத பரிசு..அதுக்காவா இம்புட்டு பேரும் கதை எழுதினதா நினைக்கிறீங்க...பரிசுத் தொகை ஒரு மேட்டரே இல்லை...இம்புட்டு காலாம் ஆகியும் இது தெரியவில்லையே.... அய்யோ அய்யோ.. :P

பங்குப் பெற்ற அனைவர் சார்பாக அவர் அவர்க்குள் இருந்த கதைத் திறனை வெளிகொணர வாய்ப்பளித்தமைக்கு சர்வேசனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்..

வெற்றி பெறப் போகும் கதையாசிரியருக்கு என் வாழ்த்துக்கள்..

அது நான் என்று நீங்கள் முடிவு கட்டி கும் கும் என்று கும்மினால்..அந்த முள் கிரிடத்தை ஏற்க என் தலை காத்துக் கொண்டியிருக்கிறது என்பதையும் இங்கே பணிவுடம் அறிவித்துக் கொள்கிறேன்..



//*என்னோட தனிப்பட்ட கருத்து - போட்டி, பரிசுன்னு வர சர்வேக்களுக்கு ஈ.மெயில் உதவியுடன் கூடிய வாக்கெடுப்பும்; 'சாதா' கருத்துக் கணிப்புகளுக்கு 'சாதா' வாக்கெடுப்பும் சிறந்தது :)

உங்க கருத்த சொல்லுங்கோ ;)*//

Nithya-A.C.Palayam said...

வாழ்த்துக்கள்...கதை நன்றாக விறுவிறுப்பாக இருக்குங்கொ

ஹாரி said...

நானெல்லாம் சிறுகதை படிக்கவே யோசிப்பேன். சரி படிக்கலாம்னா, நீங்க என்ன இப்படி
மிரட்டுறீங்க?

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்