சமீபத்திய புதசெவி

மலேசியத் தமிழர்கள் தடுத்து நிறுத்திய ஒரு தேசிய முன்னனியின் ரோல்லர் கோஸ்ட்டர்

முந்தைய பதிவில் குறிப்பிட்டபடி, தமிழர்களும், இதர மலேசியர்களும், வரலாறு காணாத தேர்தல் முடிவை மலேசியாவிற்கு தந்திருக்கிறார்கள்.

சுதந்திரம் பெற்றூ 50 வருடங்களாக, தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பிலிருக்கும், தேசிய முன்னனி, இம்முறை தங்களூடைய பெரும்பான்மையயை இழந்திருக்கிறது. இது வரை நடந்த தேர்தல்களில், ஆட்சியமைத்த அரசுகளிலேயே, இந்த அரசு தான் குறைந்தப்பட்ச உறுப்பினர்களைக் கொண்டியிருக்கும். (61.7%). 2004ல் நடந்த தேர்தலில், இதே கூட்டனி 90.4% சதவிகத உறூப்பினர்களைக் கொண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் எழுச்சிப் போராட்டத்தின் போதிருந்து, தமிழர்களின் வெறூப்பைச் சம்பாதித்திருந்த, மலேசிய இந்திய காங்கிரசு கட்சியினர், பெருந்தோல்வியயைத் தழுவியிருக்கிறார்கள். ம.இ.க.வின் பெரும் தலைகள் அனேக பேர் தேர்தலில் தோற்றியிருக்கீறார்கள். ம.இ.க.வின் தலைவரான சாமிவேலு இம்முறை தோற்கடிக்கப்பட்டார்.

முன்னதாக, தமிழர்களின் வளர்ச்சிக் குறித்து, மகாதீர் முகமது, பேசும் போது, இதுவரை சாமிவேலு, தமிழர்களின் பிரச்சனையயை பாராளுமன்றத்தில் விவாதித்தது இல்லை என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், தமிழர்களின் நிலைக்கு, சாமிவேலுவே காரணம் என்பதுப் போலவும், பேசியது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகளைப் பற்றி பேசும் போது, தவறுதலாக அப்துல் அகமது படாவியயைத் அரசியல் வாரிசாக தேர்ந்தெடுத்தவிட்டதாக கவலைத் தெரிவித்தார். தற்பொழு துனனப் பிரதமராக இருக்கும் நஜிப் பிரதமர் பதவிக்கு வரத் தகுதியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தல் பல விடயங்களுக்காக மக்களின் மனதில் நிலைப் பெறப் போகிறது. வழக்கமாக, ஒவ்வொரு இனத்திற்கும், குறிப்பிட்ட இனத்தை ஆதரிக்கும் கட்சியே பிரசாரம் செய்து வெற்றிப்பெறும், இம்முறை எதிர்கட்சிகள், அனைத்து இன மக்களை அரவனைக்கும் போக்கிலே இனைந்தது முதல் முறையாக நடந்தது.

2004ல், 13 மாநிலங்களில், 12ல் தேதிய முன்னனி ஆட்சியமைத்தது. கிலாந்தான் என்ற மாநிலம், தொடர்ந்து 18 வருடங்களாக, இசுலாமியக் கட்சி ஆட்சிப் பொறுப்பிலிருக்கிறது. தேசிய முன்னனி, பெரும் முயற்சியுடன், அந்த சாதனையயை முறியடிக்க முயற்சித்து, தங்களுடைய கைவசமிருந்த பினாங்க், கெடா, பெராக், செலாங்கூரையும் இழந்திருக்கிறது.
இந்நிலையில், பிரதமரின் சொந்த மாநிலம் பினாங்க் என்பது குறிப்படத்தக்கது.

இந்தத் தேர்தலில், 2/3 பெரும்பான்மையயை மறுப்பது என்றக் குறிக்கோளுடன் களமிறங்கியிருந்தாலும், இந்த வெற்றி அவர்களே எதிர்ப்பார்க்காதது என்றுக் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில், பெரும்பான்மைப் பெறாவிட்டால், மலேசியாவின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் பங்கம் வருமென்று பிராச்சாரம் செய்து வந்தது தேசிய முன்னனி. அரசாங்க இயந்திரம் தேர்தல் வேலைகளுக்கு முடுக்கி விடப்பட்டியிருந்தது. தொகுதிகள் வெற்றி வாய்ப்பிருக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது. இன்னும் பல மாற்றங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது நடைப்பெற்று வந்தது.

இந்த தேர்தல் முடிவில், நினைத்தப் பொழுது, சட்டவடிவை மாற்றியமைக்கும் சக்தியயை இழந்திருக்கிறது தேசிய முன்னனி அரசு. மாற்றங்களுக்காக , பாராளுமன்றத்தில் ஒப்பதல் வேண்டினால், எதிர்கட்சிகள் ஆதரவிருந்தாலே அதை இனி நிறைவேற்ற முடியும்.

இந்த அதிரடியான தேர்தல் மாற்றங்களுக்கு, தமிழர்களின் எழுச்சி நாள் வித்திட்டது என்றேக் கூறவேண்டும். தமிழர்கள் வேண்டுக்கோளை ஏற்று, அப்போதே, நடவடிக்கைகளை முடுக்கிவிட்டியிருந்தால்,. இம்முறை கண்டிப்பாக இந்தளவிற்கு மாற்றங்கள் வந்திருக்காது என்றேத் தோன்றுகிறது.

தமிழர்கள் 8% தேசிய அளவிலிருந்தாலும், குறிப்பிட்ட சில தொகுதிகளி, அவர்களின் வாக்கு, வெற்றியயை நிர்ணயிக்கும், வாக்குகளாக ஆனதால், இந்த மாற்றத்திற்கு தமிழர்கள் ஒரு பெரிய காரணி என்பதில் அனைவரும் உடன்படுவார்கள்.

ம.இ.க தோற்றால, தேசிய அரசில், தமிழர்கள்/இந்தியர்கள், பிரதிநிதித்துவம் இழப்பார்கள் என்று பயம் காட்டிய ம.இ.க தலைவரின் அச்சுறுத்தலை புறம் தள்ளி, அரசு என்பது, வாக்களித்தவர்களுக்கு மட்டுமன்றி, அனைத்து மக்களுக்கும் செயல்பட வேண்டும் என்று பாடம் புகட்டியுள்ளார்கள்.

"ஓம் சக்தி" என்ற ம.இ.க வின் தேர்தல் மந்திரத்திற்கு எதிர்ப்பாக "மக்கள் சக்தி" என்று முழங்கிய தமிழர்கள், தங்களது எதிர்ப்பை சனநாயக முறைப்படி காட்டியிருக்கிறார்கள். மலேசிய அரசு, இன்னமும், தமிழர்களை எடுப்பார் கைப்பிள்ளையாக கருத முடியாது. தமிழர்களைப் பார்த்து, சீனர்களும் இந்த முறை மாற்றம் வேண்டும், என்பதோட, வலுவான எதிர்க்கட்சி இல்லாத அரசு, மக்களுக்கு நல்லது செய்யாத என்று முடிவுக்கு வந்து வாக்களித்து, மாநிலங்களவையிலும், பாராளு மன்றத்திலும், தேசிய முன்னனியின் தலையெழுத்தை மாற்றியெழுதியிருக்கிறார்கள்.

இந்த தேர்தலில், பணம் வாங்கி வாக்குச் செலுத்தாமல், தன்மானப் பிரச்சனையாகவும் கருதி, மாற்றம் வேண்டி வாக்களித்த தமிழர்களின் அரசியல் கருத்தியல் பாராட்டப்பட வேண்டியது.

அப்துல அகமது படாவி, தார்மீகப் பொறுப்பேற்று, பதவி விலகுவாரா, அமைச்சரவையில் தமிழர்கள் இடம் பெறுவார்களா என்பதை நாம் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

தொடர்புடைய பதிவுகள் :

மலேசியத் தேர்தல் வெற்றி இந்துக்களின் வெற்றியா..

1. மலேசிய மக்களின் போராட்டம்
2. மலேசிய மக்களின் பேரணி , கோரிக்கைகள்
3. மலேசிய தேர்தல் பார்வை
4. பார்ப்பனீயம்

15 Comments:

பொன்வண்டு said...

நல்ல பதிவு

பொன்வண்டு said...

சாமிவேலு வாராவாரம் ஒரு கருப்பு ஆட்டை முனீஸ்வரருக்கு பலி கொடுத்து வந்ததாக ஒரு ஆங்கிலத் தளத்தில் படித்தேன். முனீஸ்வரர் தமிழர்களைக் காப்பாற்றியுள்ளார். :)

பொன்வண்டு said...

இந்துராப் அமைப்பின் தலைவர் மனோகரன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதை சொல்லவே இல்லை???

பொன்வண்டு said...

அவர் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்திருக்கிறார். எம் ஜி யார் மாதிரி??

பொன்வண்டு said...

உங்க தளத்த்தில் ஏகப்பட்ட பாப் அப் விண்டோ (விளம்பரம்?) திறக்குது. சரி செய்யுங்கள்

விக்னேஸ்வரன் அடைக்கலம் said...

மலேசிய வரலாற்றில் இது ஒரு மாபெரும் மாற்றம்... எமது பேராக் மாநிலத்தில்(சுல்தால் உள்ள மாநிலம், பினாங்கை காட்டினும் மாறூபட்டது) முதல் முறையாக ஒரு இஸ்லாம் அல்லாதவர் முதல் அமைச்சராகிறார். இந்த தேர்தல் உண்மையிலேயே அனைவருக்கும் மகிழ்ச்சியழிக்கும் ஒரு விசயமாய் அமைந்திருக்கிறது.... நாடாலும் மன்றத்தில் முன்பு 2004லில் 6 தேசிய முன்னனி இந்திய(ம.இ.கா) அமைச்சர்களும் 1 எதிர்கட்சி அமைச்சரும் இரூந்தார்கள். இப்பொழுது 36 அமைச்சர்கள் பதவி ஏற்கப்போகிறார்கள். ம.இ.காவிற்கு ஓட்டு போடவிட்டால் தமிழர்கள் மண்ணைத் தான் தின்ன வேண்டும் என்றார்... ம.இ.காவை நம்பி இந்தியர்கள் வயிறு வளர்க்கவில்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

நொந்தவன் said...

யொவ் , என்னையா இது ? கமெண்ட் போட கிளிக் பன்னா ரெண்டு விளம்பரம் தொரக்குது? அட கஞ்சபிசினாறியே , இதுல கூட காசு பாக்கணுமா உனக்கு.

TBCD said...

ஐயா நொந்தவரே,

அதுக்குப் பேரு பாப் அப்ஸ்..பொன் வண்டும் சொல்லியிருக்கார்..

என் பதிவில் ஏகப்பட்ட மூன்றாம் வட்ட மென்பொருள் நிறைய இருக்கும் (விளம்பரமும் சேர்த்து ) அதுலே எதுனாலே, இது வருதுன்னு கண்டுப்பிடிக்கனும். அது வரை கொஞ்சம் பொறுங்க.

நீக்கிடுறேன் கூடிய சீக்கிரம்..உங்களுக்கு சிரமம் ஏற்பட்டமைக்கு வருந்துகிறேன்..

///
நொந்தவன் said...

யொவ் , என்னையா இது ? கமெண்ட் போட கிளிக் பன்னா ரெண்டு விளம்பரம் தொரக்குது? அட கஞ்சபிசினாறியே , இதுல கூட காசு பாக்கணுமா உனக்கு
///

salem thiagu said...

mega arumayaga oru araseyal maatrathai alagana pathivagaa pottu erukkeereergal...

menmelum valara valthukkal.. ennum ethu pondra nalla pathivugalai ethirnokkeee.........erukkum

thiagu

TBCD said...

ஐயா நொந்தவரே,

பாப் அப் வர வைச்ச, அலெக்சா ரேங்கிக் விட்ஜெட்டை தூக்கிட்டேன்...

தங்கள் அக்கறைக்கு நன்றி..

இதமாகவும், பதமாகவும் சொன்ன, பொன் வண்டு...நன்றிகள் உங்களுக்கும்...

TBCD said...

:) :D B)
/// பொன்வண்டு said...
நல்ல பதிவு
///

சாமி சாமியிடம் கேட்டியிருக்கலாம், ஆடு கறுப்பு வேண்டுமா, வெள்ளை வேண்டுமா என்று.. :P
///
வாரம் ஒரு கருப்பு ஆட்டை முனீஸ்வரருக்கு பலி கொடுத்து வந்ததாக ஒரு ஆங்கிலத் தளத்தில் படித்தேன். முனீஸ்வரர் தமிழர்களைக் காப்பாற்றியுள்ளார். :)
///

அட ஆமாம் விட்டுப் போச்சு, சேர்த்துவிடுகிறேன்.
///
இந்துராப் அமைப்பின் தலைவர் மனோகரன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதை சொல்லவே இல்லை???

அவர் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்திருக்கிறார். எம் ஜி யார் மாதிரி??
///

சரி பண்ணியாச்சு..தங்கள் கனிவான அறிவுறுத்தலுக்கு நன்றி.. :D
///
உங்க தளத்த்தில் ஏகப்பட்ட பாப் அப் விண்டோ (விளம்பரம்?) திறக்குது. சரி செய்யுங்கள்
///

TBCD said...

வாழ்த்துக்கள் விக்னேஸ்வரன்..

உடன்படுகிறேன் உங்கள் கருத்துக்களுடன்.

///
விக்னேஸ்வரன் அடைக்கலம் said...
மலேசிய வரலாற்றில் இது ஒரு மாபெரும் மாற்றம்... எமது பேராக் மாநிலத்தில்(சுல்தால் உள்ள மாநிலம், பினாங்கை காட்டினும் மாறூபட்டது) முதல் முறையாக ஒரு இஸ்லாம் அல்லாதவர் முதல் அமைச்சராகிறார். இந்த தேர்தல் உண்மையிலேயே அனைவருக்கும் மகிழ்ச்சியழிக்கும் ஒரு விசயமாய் அமைந்திருக்கிறது.... நாடாலும் மன்றத்தில் முன்பு 2004லில் 6 தேசிய முன்னனி இந்திய(ம.இ.கா) அமைச்சர்களும் 1 எதிர்கட்சி அமைச்சரும் இரூந்தார்கள். இப்பொழுது 36 அமைச்சர்கள் பதவி ஏற்கப்போகிறார்கள். ம.இ.காவிற்கு ஓட்டு போடவிட்டால் தமிழர்கள் மண்ணைத் தான் தின்ன வேண்டும் என்றார்... ம.இ.காவை நம்பி இந்தியர்கள் வயிறு வளர்க்கவில்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
///

TBCD said...

நன்றி தியாகு..

தொடர்ந்து படிங்க. :P .சிக்கிரம் எழுதுங்க... B)
///
salem thiagu said...
mega arumayaga oru araseyal maatrathai alagana pathivagaa pottu erukkeereergal...

menmelum valara valthukkal.. ennum ethu pondra nalla pathivugalai ethirnokkeee.........erukkum

thiagu
///

Boston Bala said...

அலசலுக்கு நன்றி. பயனுள்ள தொகுப்பு & பதிவு. தொடரும் மாற்றங்களை அவ்வப்போது இதேபோல் கொடுத்து வந்தால், என்னைப் போன்றவர்களுக்கு தெளிவு பிறக்கும்.

மீண்டும்... நன்றி!

TBCD said...

கருத்துக்கும் & வருகைக்கும் நன்றி பாலா.

முயற்சிக்கிறேன்.. :)
///
Boston Bala said...
அலசலுக்கு நன்றி. பயனுள்ள தொகுப்பு & பதிவு. தொடரும் மாற்றங்களை அவ்வப்போது இதேபோல் கொடுத்து வந்தால், என்னைப் போன்றவர்களுக்கு தெளிவு பிறக்கும்.

மீண்டும்... நன்றி!
///

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்