நடிகர்களிலே, கொஞ்சம் முயற்சி செய்து கொடுக்கிற பணத்திற்கு ஈடு கொடுக்க முயற்சி செய்பவர் கமல். செம மசாலாத்தனமான இயக்குனர் ரவிக்குமார். இவங்க இரண்டு பேரும் சேர்ந்து, சோழர் காலத்து சைவ மத, வைணவ மத பின்னனியயை எடுத்தாண்டு இருக்கிறார்கள் என்பதுப் போல் தசாவதார படக் காட்சிகள் தெரிவிக்கின்றன. கமல் வீர வைனவராக காட்சியளிக்கிறார். வீர சைவர் கேள்விப்பட்டியிருக்கோம், வீர வைனவர். பின்னே, கமல் உடம்பை முறுக்கி காட்ட அப்படித் தானே வைக்கனும். (இந்தப்படத்தில்) கமலுக்கும் குடுமி உண்டு என்று சொல்லப்படுகிறது.
அதெல்லாம், சரி, கவுண்டர் புரணாம் பாடிய ரவிக்குமாரும், தேவர் புராணம் பாடிய கமலும் இனைந்து, ஒரு வரலாற்று பிழையயை படத்திலே காட்டுகிறார்கள். அது என்ன...சரியாக கண்டுப்பிடிப்பவர்களுக்கு ஒரு ஆச்சர்யமான பரிசு உண்டு. ( வேறன்ன, கைத் தட்டல் தான்... :) )
தசாவதாரம் : இந்தப் படத்திலே ஒரு பிழை இருக்கிறது...!!!!
Subscribe to:
Post Comments (Atom)

59 Comments:
படமே இன்னும் வெளிவராதபோது அதற்குள் உங்கள் வேலையை ஆரம்பித்து விட்டீர்களா ? படத்துக்கு இலவச விளம்பரமா? :)
www.behindwoods.com அந்தக் காலத்துல இல்லை. :)
சரியா சொல்லிட்டேனா?
ஆமா அந்த பாய்மரத்துல இருக்கிறபாய்ல படுக்கத்தான் முடியும்போல. ரெம்ப சின்னது.ஹீரோயினுக்கு மட்டுமே ஆடை குறைப்பதில்லை சினிமாவுல. :)
a
யோவ்,
லொள்ளுய்யா....பூணூல் தவிர வேறெதும் பிழை பளிச்சென்று தெரியவில்லை.
:)
கோவியாரே, உங்கள் பின்னுட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது... அதில் என்ன தவறு என்று சுட்டுங்களேன்..பிறர் அறிய... :P
வாங்க ரவி..காவல்துறையில் காணவில்லை என்று புகார் சொல்ல இருந்தேன்... பார்த்தவுடன் பளிச்சென்று பட்டது, போட்டுவிட்டேன்.
//
வசந்தம் ரவி said...
படமே இன்னும் வெளிவராதபோது அதற்குள் உங்கள் வேலையை ஆரம்பித்து விட்டீர்களா ? படத்துக்கு இலவச விளம்பரமா? :)
//
வேண்டுமென்று முயற்சிக்கவில்லை போலிருக்கு....வருகைக்கு நன்றி...
///
சிறில் அலெக்ஸ் said...
www.behindwoods.com அந்தக் காலத்துல இல்லை. :)
சரியா சொல்லிட்டேனா?
ஆமா அந்த பாய்மரத்துல இருக்கிறபாய்ல படுக்கத்தான் முடியும்போல. ரெம்ப சின்னது.ஹீரோயினுக்கு மட்டுமே ஆடை குறைப்பதில்லை சினிமாவுல. :)
///
புரியல்ல. தயவு செய்து விளக்கவும் :P
விடை சொல்லும் வரை பொறுத்திருங்க ரிஷான்... :)
//
எம்.ரிஷான் ஷெரீப் said...
புரியல்ல. தயவு செய்து விளக்கவும் :P
//
படம் இன்னும் வெளிவராவிட்டாலும்,இங்கே இப்போது தெரியும் தவறு இதுதான் -
"தசாவாதாரம்" அல்ல தசாவதாரம்தான்.
சுட்டியதற்கு நன்றி.
நான் காட்டியிருக்கும், நிழற்படத்திலே தெரியும் தவற்றைச் சுட்டச் சொன்னேன்..நழுவிட்டீங்களே... :P
படம் வெளி வரவில்லை என்ற அரிய தகவலை எல்லாரும் அள்ளி தர்றீங்களே..என்ன கொடுமை கமல் இது..
ஆனா, வராத படத்துக்கு விமர்சனமே எழுதிட்டாய்ங்க..தெரியும்மா...
http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-1/dasavatharam-trailer-review.html
//அறிவன்#11802717200764379909 said...
படம் இன்னும் வெளிவராவிட்டாலும்,இங்கே இப்போது தெரியும் தவறு இதுதான் -
"தசாவாதாரம்" அல்ல தசாவதாரம்தான்.
//
அக்காலத்தில் உழைக்கும் மக்களெல்லாம் சூத்திரர்களாக வகைப்படுத்தப்பட்டார்கள். ஆகவே அந்த பாய்மரத்தை தள்ளும் உழைக்கும் மக்கள் சூத்திரர்கள்தான். சூத்திரர்கள் (ஆசாரி போன்ற சில சாதியினரை தவிர்த்து) பூணுல் அணிவது என்பது சனாதான தர்மத்திற்கு எதிரானது.
இதுதான் இப்படத்தில் உள்ள வரலாற்றுத் தவறு என்று எனக்குப் படுகிறது. என்ன சரிதானே?
லெமூரியன், மிகச்சரியாக சொல்லியிருக்கீங்க...பார்ப்போம் இன்னும் எத்தனை பேர் சரியாகச் சொல்லுறாங்க என்று...
1. வலது பக்கத்துல ஓராள் பெல்ட்ட தப்பா போட்டிருக்காரோ?
2. ஆரியக் கலர விட திராவிடக் கலர் தூக்கல இருக்கோ?
ரிபிசிடி,
நா கண்டு பிடிச்சிட்டேன்ல... வலது பக்கத்துல தள்ளுவங்கள்ல ஒருத்தரு பூனூலை வலது பக்க தோள்ல போட்டிருக்கார். ஓகேவா?
இந்தியன்,மதுசூதனன் மெள. இருவரும் ஒரே மாதிரி சொல்லியிருக்கீங்க. அதுவும் ஒரு தவறு தான். ஆனால், நான் சுட்ட நினைத்தது அது இல்லை.
உங்களின் கூரிய பார்வை வியப்பளிக்கிறது.
வருகைக்கு நன்றி...விடைக்கு காத்திருக்கவும்...
ராஜாகளோட கொடி இல்லை; அதுவா?
__________________________
என்னை பொறுத்த வரையில் ஒரு புகைப்படத்தை வைத்து குறை சொல்லமுடியாது, காரணம் அது இப்போது குறையாக தெரிந்தாலும் நிச்சயம் கமல் திரைக்கதையில் அதற்கு ஒரு காரணம் வைத்திருப்பார்.
இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தவறு.. படத்தில் அல்ல.. உங்கள் பதிவின் தலைப்பில் ...
// தசாவாதாரம் : இந்தப் படத்திலே ஒரு பிழை இருக்கிறது...!!!! //
தசாவாதாரம் அல்ல தசாவதாரம்
அட, டிபிசிடி ஐயர்வாள்(உபயம்: கோவியார்) பூணூலு பைத்தியங்கள் எப்பத்திலருந்து இது போன்ற உடம்பு அசையும் வேலைகள் செய்ய ஆரம்பித்தனர்? கமலும் ரவியும் ரொம்ப ஓவராத் திங்க்க் பண்ணிட்டாகளோ?
-இறை நேசன்
///இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தவறு.. படத்தில் அல்ல.. உங்கள் பதிவின் தலைப்பில் ...
// தசாவாதாரம் : இந்தப் படத்திலே ஒரு பிழை இருக்கிறது...!!!! //
தசாவாதாரம் அல்ல தசாவதாரம்///
படத்தில் உள்ள கருத்துப் பிழையை விட்டுவிட்டு எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்டுகிறார்களே.
இவ்வளவுதானா நம்மவர்களின் சரித்திர, அரசியல், சமூக அறிவு?
டிபிசிடி ஐயர்வாள்,
கருப்பாக இருக்கும் திராவிடர்களில் ( அந்த படத்தில் இருப்பவர்களில்) பளிச்சென்று எனக்கு ஒன்று தெரிகிறது, அந்த காலத்தில் 'குறுக்கீட்டு' குறியிடல் இருந்திருக்கிறது.
:)
படத்தில் தவறு இருப்பது போல் தெரியலையே !
என்னோட கண்ணுக்கு ஒரு பூணூல் மட்டும் வலமிருந்து இடமாகத் தெரிகிறது.
லெமூரியனின் தூண்டுதலால் மேலும் சில கேள்விகள்.
1. படகின் பாயை திருப்பும் சுக்கான் எங்கேய்யா?
2. இரண்டு பாய்களும் சேர்ந்து இயங்குவது போல் தெரியலையே. எப்படி ஒத்திசைவுடன் திருப்புவார்கள்?
3. இத்தனை பேர் துடுப்பு போடும்போது பாய்கள் தேவையா?
1. பாயும், பாய்மரமும் இத்துணூண்டா இருக்கே?
//இவ்வளவுதானா நம்மவர்களின் சரித்திர, அரசியல், சமூக அறிவு?
//
என்ன செய்ய? குமுதம், விகடன் படித்து, விஜை, அஜீத் சினிமா பாத்து, சன் டீவி, ஜெயா டீவி சீரியல்களுக்கு அழுதிட்டிருந்தா வேறென்ன தெரியும்?
1. சின்ன நூல்கயிறு கொண்டு பாயைமரத்தைக் கட்டியிருக்கிறார்கள்.
2. சவுக்கு மரத்தைக் கொண்டு இரு படகினையும் இணைத்திருக்கிறார்கள்?
இருந்தாலும் கமல் மீது அசாத்திய நம்பிக்கை தான். கலை இயக்குனர்களின் பணியா, இயக்குனரின் பணியா தெரியவில்லை. ஆனால், பின்னனி விவகாரத்தில் , தமிழ் படங்களில் அவ்வளவாக மெச்சிக்கும் படியாக ரொம்ப படங்கள் வந்ததில்லை.
இங்க மட்டும் இல்லை, பிராட் பிட் நடித்த பழங்கால கதை டிராய் படத்திலே, மேலே விமானம் போவது காட்டப்பட்டது.
ஆனாலும்,படத்தில் கருத்துப் பிழை இருக்கு. கமலுக்கு அது தவறாக தோன்றாதது அதிசயமே.
அதுக்கு ஒரு சப்பைக் கட்டு இருந்தால் அறிய ஆவலாகவே இருக்கின்றேன்...
//
Raja has left a new comment on your post "தசாவாதாரம் : இந்தப் படத்திலே ஒரு பிழை இருக்கிறது.....":
"edited"
__________________________
என்னை பொறுத்த வரையில் ஒரு புகைப்படத்தை வைத்து குறை சொல்லமுடியாது, காரணம் அது இப்போது குறையாக தெரிந்தாலும் நிச்சயம் கமல் திரைக்கதையில் அதற்கு ஒரு காரணம் வைத்திருப்பார்.
//
இறை நேசன் ஐயங்கார்வாள் சரியா தான் சொல்லியிருக்கீங்க...
கோவியாரே, உள்குத்து உலகனாதன் பட்டம் கைவசமிருக்கு உங்களுக்கு தரவா...?
பதிலை தெரிந்துக் கொண்டே கலாய்க்கிறீர்களே..
கப்பலை தள்ளும் மாழுமிகள் பூநூல் போட்டுண்டு இருக்காள்... அது தானே தப்பு...
ஏதோ என் கண்ணுல பட்டது...
மத்தபடி எதுவும் புரியல்ல..தயவு செய்து விளக்கவும்.©
பொட்"டீ"....சூடா ஒரு தேயிலை தண்ணீர் சாப்பிடுங்க..சரியான பதில் கிடைக்கலாம்...
பெரிய தப்பை விட்டுட்டு, சின்ன தப்பை கண்டுப்பிடிச்சிட்டீங்க..
விக்னேஸ்வரன், உங்கள் பதில் சரியென்றாலும், இன்னும் விளக்கியிருக்கலாம்...நன்றி..
//லெமூரியனின் தூண்டுதலால் மேலும் சில கேள்விகள்.
1. படகின் பாயை திருப்பும் சுக்கான் எங்கேய்யா?
2. இரண்டு பாய்களும் சேர்ந்து இயங்குவது போல் தெரியலையே. எப்படி ஒத்திசைவுடன் திருப்புவார்கள்?
3. இத்தனை பேர் துடுப்பு போடும்போது பாய்கள் தேவையா?//
இந்தியன்,
நீங்கள் இதை அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறீர்கள். ஆனால் இந்தப் படத்தில் இருப்பதோ அப்பட்டமான வரலாற்றுப் பிழை. வர்ணாசிரமத்துடன் நேரடி தொடர்புடையது. படத்தை கவனமாக பாருங்கள் நிச்சயமாக புலப்படும்.
//இருந்தாலும் கமல் மீது அசாத்திய நம்பிக்கை தான். கலை இயக்குனர்களின் பணியா, இயக்குனரின் பணியா தெரியவில்லை. ஆனால், பின்னனி விவகாரத்தில் , தமிழ் படங்களில் அவ்வளவாக மெச்சிக்கும் படியாக ரொம்ப படங்கள் வந்ததில்லை.
இங்க மட்டும் இல்லை, பிராட் பிட் நடித்த பழங்கால கதை டிராய் படத்திலே, மேலே விமானம் போவது காட்டப்பட்டது.
ஆனாலும்,படத்தில் கருத்துப் பிழை இருக்கு. கமலுக்கு அது தவறாக தோன்றாதது அதிசயமே.
அதுக்கு ஒரு சப்பைக் கட்டு இருந்தால் அறிய ஆவலாகவே இருக்கின்றேன்...//
கமல் நிச்சயமாக இப்படி ஒரு தவறை அனுமதித்திருக்க மாட்டார். அவருடைய் ஹே ராம் படத்தின் நேர்த்தியை இதுவரை வேறு எந்த தமிழ் படத்திலும் நான் கண்டதில்லை. என் கருத்தில் வியாபரத்துக்காக சமரசம் செய்துக்கொள்ளாத தமிழ் திரைப்படங்களில் ஹே ராம் முதலிடத்தில் இருக்கிறது.இந்த பிழைக்கான உரிய காரணம் இருந்தால் அதை தெரிந்துக் கொள்ள எனக்கும் ஆர்வமே.
பூணூல்?
அபிமன்யூ...அதிலே என்ன சிக்கல் என்றுச் சொல்லுங்க...ஒரு சொல்லிலே பதில் சொன்னால் எப்படி... ஒரு பதிவு எல்லாம் போட்டு இருக்கோம்..பார்த்து கொஞ்சம் வாக்கியமாகவே சொல்லலாமே..
ரிபிசிடி,
நான் ஒரு பின்னூட்டம் போட்டேனே..கிடைக்கலியா?
அல்லது நான் போட்ட பின்னூட்டத்துக்கு என்னோட அண்ணன் பெயரான் மதுசூதனன் மௌ. வினை தப்பா போட்டு பதில் பின்னூட்டம் போடுட்டீங்களா?
இங்ஙனம்,
மதுவதனன் மௌ.
இது என்னோட மூன்றாவது பின்னூட்டம்...
ஏற்கனவே ஒரு பிழை சுட்டிக் காட்டியிருந்தேன். இதோ இரண்டாவது...
மகாவிட்டுணு பாம்பணையில் பள்ளிகொள்ளும் நிலை தவறானது. இவ்வாறு நீட்டி நிமிரந்து அந்தாள் பள்ளி கொள்ளுவதில்லை.
மேலும் அந்தாள் அதிகமாக ஐந்து தலை நாகத்திலேயே பள்ளிகொள்ளுவார் எனினும் ஏழுதலை நாகத்தில் சில சமயங்களில் பள்ளி கொள்வதுண்டு.
இதுக்குமேல...
முடியல..தயவுசெய்யது பதிலைப் போடவும்..
பெயர் குழப்பத்திற்கு வருந்துகிறேன்..
//மதுவதனன் மௌ. said...//
'அந்தணர்கள் எந்தக் காலத்தில் இதைப் போன்ற கடும் உடல் உழைப்புக்கு தங்களை ஆட்படுத்திக் கொண்டார்கள்?' என்ற கேள்வியைத்தானே பிழையென்று கருதுகிறீர்கள்.
ஆனாலும் அநியாத்துக்கு கண் பார்வை கூர்மை ஐயா உமக்கு :-))
ஆசிப் அண்ணாச்சி.....நீங்க சொல்வது சரி தான் என்றாலும், வேற கோணத்தில் நான் சொல்ல இருந்தேன்...
அது சரி தசாவதாரம் தமிழ் பெயரா?
விடைகள் வெளியிடப்பட்டுவிட்டது.
சரியாக சொன்னவர்களுக்கு எல்லாரும் சேர்ந்து ஜோரா ஒரு முறை கைத் தட்டுங்க....( பலத்த கையொலி :P )
சரியான விடை என்று நான் கருதியது... உழைக்கு வர்க்கம், சுத்திரர்களாக கருதப்பட்ட காலம். அவர்களுக்கு முப்புரிநூல் அனுமதி இல்லை. இங்கே உடல் உழைப்பைக் காட்டும், துடுப்பு போடுபவர்களுக்கு முப்புரிநூல் போட்டியிருப்பது வரலாற்றுப்பிழை என்று கருதுகிறேன்.
அவர்கள் வீர சைவர்கள் எனவே முப்புரிநூல் போடு இருக்காங்க என்றும் சிலர் உரையாடியில் தெரிவித்தார்கள். வீர் சைவர்கள் சூத்திரர்களில் இருந்தற்கு சான்றுகள் இல்லை.
//லெமூரியன் சைட்...
அக்காலத்தில் உழைக்கும் மக்களெல்லாம் சூத்திரர்களாக வகைப்படுத்தப்பட்டார்கள். ஆகவே அந்த பாய்மரத்தை தள்ளும் உழைக்கும் மக்கள் சூத்திரர்கள்தான். சூத்திரர்கள் (ஆசாரி போன்ற சில சாதியினரை தவிர்த்து) பூணுல் அணிவது என்பது சனாதான தர்மத்திற்கு எதிரானது.
//
ஏறக்குறைய நிறைய பேர் விடையருகே வந்தாலும், சரியாக கருத்தை முன் வைத்த லெமூரியனின் விடைக்கே என் ஆதரவு..
பளிச்சென்று தெரியும் இது பலருக்கும் உறுத்தாது ஏனோ தெரியவில்லை.. :))
விடையயை ஏறக்குறைய சொன்னவர்கள்...
//இறை நேசன் said...
அட, டிபிசிடி ஐயர்வாள்(உபயம்: கோவியார்) பூணூலு பைத்தியங்கள் எப்பத்திலருந்து இது போன்ற உடம்பு அசையும் வேலைகள் செய்ய ஆரம்பித்தனர்? //
//Blogger P.A.விக்னேஷ்வரன் said...
கப்பலை தள்ளும் மாழுமிகள் பூநூல் போட்டுண்டு இருக்காள்... அது தானே தப்பு...//
//
Blogger ஆசிப் மீரான் said...
'அந்தணர்கள் எந்தக் காலத்தில் இதைப் போன்ற கடும் உடல் உழைப்புக்கு தங்களை ஆட்படுத்திக் கொண்டார்கள்?' என்ற கேள்வியைத்தானே பிழையென்று கருதுகிறீர்கள்.
//
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..
விடை தெரிந்தும் ஒரு சிலர் அமுங்குனி ஆட்டம் ஆடியதாக தெரிகிறது...அவர்களுக்கு கண்டனங்கள்... :P
ரிபிடிசி சார்,
லெமூரியன் said...
அக்காலத்தில் உழைக்கும் மக்களெல்லாம் சூத்திரர்களாக வகைப்படுத்தப்பட்டார்கள். ஆகவே அந்த பாய்மரத்தை தள்ளும் உழைக்கும் மக்கள் சூத்திரர்கள்தான். சூத்திரர்கள் (ஆசாரி போன்ற சில சாதியினரை தவிர்த்து) பூணுல் அணிவது என்பது சனாதான தர்மத்திற்கு எதிரானது.
ஓஹோ...இதுவா அந்த வரலாற்றுத் தவறு. நானும் படத்துல ஏதாவது பிழை இருக்குமோ என்று உங்க பதிவோடயே 60 நிமிடம் செலவழிச்சுட்டேன்யா.
ஆனா, நீங்க சொல்றதும் சரிதான்யா.
விடை குடுக்காம் இன்னும் ஒரு நாள் பதிவ வச்சிருந்திருந்தீங்கன்னா படத்த அக்குவேற ஆணிவேறயா ஆராய்ஞ்சு எதிர்பாத்திருக்க முடியாத தவறுகளெல்லாம் வந்திருக்கும். :)))
Usually Vishnu in that pose has one Devi at the side of the head and one at the feet.This picture shows both on the side.This is an
error but there may be exceptions.
In many Vaishana temples brahmins and non-brahmins together carry the Lord on their shoulders during festivals.
As brahmins are also used to physical labor there is nothing wrong on that account.Ramanujar inducted many into his fold and was above caste.He even renounced his wife as she treated a true devotee badly on account of his caste.TBCDs should read his biography.Anyway the bloggers who know anything of Vaishnava or Saiva tradition are not many.
Many do not even know much about Periyar. Some know only to find fault with brahmins.I see all such
characters commenting here.
////////சரியான விடை என்று நான் கருதியது... உழைக்கு வர்க்கம், சுத்திரர்களாக கருதப்பட்ட காலம். அவர்களுக்கு முப்புரிநூல் அனுமதி இல்லை. இங்கே உடல் உழைப்பைக் காட்டும், துடுப்பு போடுபவர்களுக்கு முப்புரிநூல் போட்டியிருப்பது வரலாற்றுப்பிழை என்று கருதுகிறேன்./////////
இது உங்கள் கருத்தாக வேண்டுமானால் இருக்கலாம்.
படம் வைஷ்ணவ சமூகத்தைப் பற்றிப் பேசுகிறது,இந்த புகைப்படம் பெருமாள் அமர்ந்திருக்கும் அல்லது சயணித்திருக்கும் ஒரு படகோ,வாகனமோ துடுப்பு போடப்படுவதைக் காட்டுகிறது.
வைஷ்ணவ சம்பிரதாயத்தில்,நான் பார்த்தவரை,இறைவனின் வாகனத்தை வைஷ்ணவ சமூகத்தவர் மட்டுமே சுமப்பார்கள்;வெளியார்கள் சுமப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.
இந்த வழக்கம் இன்றுவரை இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
இது அவர்கள் பாஷையில் ஏளப் பண்ணுவது என்று அழைக்கப்படும்,எனவே பூணூல் தெரிவது-சொல்லப்போனால் அனைவருக்கும்- சரியே என நினைக்கிறேன்.
சைவ மரபுகளில் கூட இவ்வளவு சமய வெறித்தனம் கிடையாது;இறைவன் வெளியே எடுத்துச் செல்லப்படும் போது அனைத்து சமூகத்தவரும் வடம் பிடிக்கவும்,வாகனம் சுமக்கவும் இயலும்.
எனவே,முன் தீர்மானக் கருத்துக்களுடன் புகைப்படத்தைப் பார்த்தாலொழிய,இங்கு சுட்டப்பட்டிருக்கும் கருத்து ஏற்புடையதும்,சரியானதும் அல்ல.
இரண்டாவது பிராமணர்கள் கரிய நிறத்துடன் இருக்க மாட்டார்கள் என்பதும் ஏற்புடையதல்ல,பெருவாரியான தென் தமிழகப் பகுதிகளில் பிராமணர்கள் கரிய நிறத்துடன் இருப்பது சாதாரணம்.
ஒரு முக்கிய பின்குறிப்பு:புகைப்படம் பற்றி,இப்பதிவு சுட்டிய விதயம் மட்டுமே இங்கு பேசப்படுகிறதேயொழிய,அதன் நியாய,அநியாயங்கள் பற்றிய என் தனிப்பட்ட கருத்து இங்கு எழுதப்படவில்லை.
இது முற்றிலும் என்னுடைய பார்வையில் தென்பட்டதை சுட்டியதே..படம் பார்க்கும் போது உங்களுக்கும் தெளிவாகும்..
//
அறிவன்#11802717200764379909 said...
இது உங்கள் கருத்தாக வேண்டுமானால் இருக்கலாம்.
//
கமல் கையாண்டியிருப்பது, குலோத்துங்க சோழன் காலத்தில், சிதம்பர சிவாலாய விரிவாக்கத்திற்கு தடையாக இருக்கிறது என்று அமைச்சர்கள் பரிந்துரைக்க, மன்னன் ஆணைப்படி, கடலுக்குள் இட கோவிந்த ராஜ பெருமாள் சிலையயை தூக்கிச் சொல்லும் காட்சி. அதில் நம்பி என்னும் வைனவர், ரங்கன் இருக்கும் இடம் தான் நானும் இருப்பேன் என்றுச் சொல்லியதால், சிலையுடன் கட்டுண்டு, அவரும் கடலுக்குள் போனார். அந்த சிலை பின்னாளில், மீண்டும் எப்படி நிறுவப்பட்டது என்ற சரியான குறிப்புகள் இல்லை. திருமலையில் இருப்பதும் அந்த பெருமாளின் சிலை என்றும் சொல்கிறார்கள்.
///
படம் வைஷ்ணவ சமூகத்தைப் பற்றிப் பேசுகிறது,இந்த புகைப்படம் பெருமாள் அமர்ந்திருக்கும் அல்லது சயணித்திருக்கும் ஒரு படகோ,வாகனமோ துடுப்பு போடப்படுவதைக் காட்டுகிறது.
///
வைஷனவர்கள் சம்பிரதாயத்தைப் பற்றி நீங்கள் சரியான தகவல்களுடன் சொன்னால் கேட்டுக் கொள்ள ஆயுத்தமாகவே இருக்கிறேன்.. :)
///
வைஷ்ணவ சம்பிரதாயத்தில்,நான் பார்த்தவரை,இறைவனின் வாகனத்தை வைஷ்ணவ சமூகத்தவர் மட்டுமே சுமப்பார்கள்;வெளியார்கள் சுமப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.
இந்த வழக்கம் இன்றுவரை இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
///
கதைப் பின்னனியயை சற்றே பொருத்தி பாருங்க அறிவன் ஐயா....
///
இது அவர்கள் பாஷையில் ஏளப் பண்ணுவது என்று அழைக்கப்படும்,எனவே பூணூல் தெரிவது-சொல்லப்போனால் அனைவருக்கும்- சரியே என நினைக்கிறேன்.
///
படம் வரட்டும், உங்களுக்கும் விளங்கும்...கமல் அந்தளவிற்கு மோசம் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்...
கருப்பு பிராமனர்கள் படகு வலிப்பார்கள் என்பதை நீங்கள் சொன்னால் கேட்டுக்கொள்கிறேன் ஐயா....
///
எனவே,முன் தீர்மானக் ருத்துக்களுடன் புகைப்படத்தைப் பார்த்தாலொழிய,இங்கு சுட்டப்பட்டிருக்கும் கருத்து ஏற்புடையதும்,சரியானதும் அல்ல.
இரண்டாவது பிராமணர்கள் கரிய நிறத்துடன் இருக்க மாட்டார்கள் என்பதும் ஏற்புடையதல்ல,பெருவாரியான தென் தமிழகப் பகுதிகளில் பிராமணர்கள் கரிய நிறத்துடன் இருப்பது சாதாரணம்.
///
எழுத வேண்டாம் என்று உங்கள் கையயை நான் கட்டவில்லை என்பதை நானும் சொல்லிக் கொள்கிறேன்..
///
ஒரு முக்கிய பின்குறிப்பு:புகைப்படம் பற்றி,இப்பதிவு சுட்டிய விதயம் மட்டுமே இங்கு பேசப்படுகிறதேயொழிய,அதன் நியாய,அநியாயங்கள் பற்றிய என் தனிப்பட்ட கருத்து இங்கு எழுதப்படவில்லை.
///
திருநாவுக்கரசர் என்ற சைவரைத்தான் கல்லில் கட்டி கடலில் போட்டார்கள். வெறும் கல்லில்தான் கட்டினார்கள். இது போல் விக்கிரகத்தில் இல்லை. இங்கே சைவருக்கு நிகழ்ந்தது வைனவருக்கு நிகழ்ந்ததாகக் காட்டப்படுகிறது.
Thank u for u r comments
by
www.lightink.wordpress.com
இது புது தகவல் எனக்கு.
ஆனால், படத்தில் காட்டப்படும் கோவிந்தராஜ பெருமாள் சிலை கடலில் போட்டது நிகழ்ந்த ஒன்று.
//
விஜய்கோபால்சாமி said...
திருநாவுக்கரசர் என்ற சைவரைத்தான் கல்லில் கட்டி கடலில் போட்டார்கள். வெறும் கல்லில்தான் கட்டினார்கள். இது போல் விக்கிரகத்தில் இல்லை. இங்கே சைவருக்கு நிகழ்ந்தது வைனவருக்கு நிகழ்ந்ததாகக் காட்டப்படுகிறது.
//
திருநாவுகரசர் வரலாறு தெரிந்தவர்கள் விளக்கலாம்...
:)..
என்ன சொல்ல...பின்னுட்டத்திற்கு ஒரு பதில் பின்னுட்டமா... :)
//shakthi said...
Thank u for u r comments
by
www.lightink.wordpress.com
//
முந்தைய பதிலை அழித்து விடவும்.
//
வைஷ்ணவ சம்பிரதாயத்தில்,நான் பார்த்தவரை,இறைவனின் வாகனத்தை வைஷ்ணவ சமூகத்தவர் மட்டுமே சுமப்பார்கள்;வெளியார்கள் சுமப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.
//
படத்தில் விக்கிரகம் ஊர்வலத்திற்காகவோ, வேறு விதமான எழுந்தருளலுக்காகவோ எடுத்துச் செல்லப்படவில்லை. கடலில் போடுவதற்காக, அதாவது திருமாலை தூஷிப்பதற்காக. உன்மையான ஸ்ரீவைஷ்னவன் எப்படி பெருமாளை தூஷிப்பதற்காக எடுத்துச் செல்வான். சைவர்களாக இருப்பார்கள் என்று சொல்லலாம். அதற்கும் வாய்ப்பில்லை. ராமானுஜர் ஒருவர்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தீட்சை அளித்து ஸ்ரீவைஷ்னவர்களாக ஆக்கினார். சைவத்தில் யாரும் அப்படி செய்ததாக தெரியவில்லையே. ஆக கருப்பாக இருக்கும் இவர்கள் சைவர்களாக இருக்கவும் நியாயமில்லை.
எதற்கும் படம் வந்துவிடட்டும். அதுவரை நாம் சும்மாயிருந்தால் அவரவர் தலைமுடி தப்பும்.
மன்னிச்சுக்கோங்கண்ணா. ஹிஸ்ட்ரி தெரியாம பேசிட்டேன்.
புதசெவி..
எதை தப்பாக சொன்னீங்கன்னு விளக்கின்னா, எங்களுக்கும் புரியுமே..
நன்றி...
///
விஜய்கோபால்சாமி said...
மன்னிச்சுக்கோங்கண்ணா. ஹிஸ்ட்ரி தெரியாம பேசிட்டேன்.
///
கூடுதல் தகவல்...
திருநாவுக்கரசர் சமணர்களை அறிய சமண மதத்தில் சில காலம் சேர்ந்திருந்ததாகவும், (விவாதம் செய்ய சமண கருத்துக்கள் அறிய வேண்டுமே என்பதற்காகவே), அதைக் கண்டுப்பிடித்தப் பின், கல்லில் கட்டி கடலில் எறிந்ததாகவும் கூறப்படுகிறது.
கல் மிதந்ததா, அல்லது நாவுக்கரசர் திறமையால் தப்பினாரா என்பது அவரவர் பகுத்தறிவிற்கு ஏற்ப புரிந்துக் கொள்ளலாம்.
//
உதாரணமாக, திருநாவுக்கரசரைச் சமணர்கள் கல்லில் கட்டிக் கடலில் வீசியபோது அவர் 'சொற்றுணை வேதியன்' என்று பதிகம் பாடி கல் தெப்பமாக மிதந்ததென்பது பெரிய புராணம்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
என்பது தேவாரம்.
இந்தப் பாடலை மனத்திற் கொண்ட சில அறிஞர்கள், 'கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்' என்கிற தொடரைச் சுட்டிக்காட்டி, ஒரு வேளை கல்லில் கட்டிக் கடலில் பாய்ச்சினாலும் நல்ல துணையாவது நமச்சிவாயம் என்றுதான் திருநாவுக்கரசர் பாடினார். இதை வைத்துக் கொண்டு அவரைக் கல்லில் கட்டிக் கடலில் பூட்டியதாக ஒரு கதையை உருவாக்கி விட்டார்கள் என்று சொல்வதுண்டு.
ஆனால், தம்மைச் சமணர்கள் கல்லினில் கட்டிக் கடலிடை விடுத்ததையும் நமசிவாய மந்திரத்தை ஓதி உயிர் பிழைத்ததையும் திருநாவுக்கரசர் தெளிவாகவே குறிப்பிடுகிறார்.
கல்லி னால்எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்க விடுக்கையில்
நெல்லு நீள்வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேனன்றே,
///
விஜய்கோபால்சாமி said...
முந்தைய பதிலை அழித்து விடவும்.
//
வைஷ்ணவ சம்பிரதாயத்தில்,நான் பார்த்தவரை,இறைவனின் வாகனத்தை வைஷ்ணவ சமூகத்தவர் மட்டுமே சுமப்பார்கள்;வெளியார்கள் சுமப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.
//
குலோத்துங்க சோழனுக்கு முன் சோழ மணடலம் செக்கூயூலராக இருந்தது. குலோந்துங்கன் தீவிர சைவன். அவன் மூலமாக கோவிலை விரிவுப்படுத்த சைவ தலைவர்கள் செய்த வேலை.
வைனவம் கட்டிக் காத்த ராமனுஞ்சர் மறைவுக்குப் பின், வைனவத்தை அடக்க செய்த செயல் என்று அறிகிறேன்.
நிந்தனை செய்வதற்கு கடலில் ஏன் எறிவானேன். அதற்கும் ஏதோ ஒரு பின்பொருள் இருக்கு. ]
பூசிக்கப்பட்ட சிலை பிறர் கால் படும் படி, உடைத்துப் போட்டால் வைனவவர்கள், மணம் நோகும், பாற்கடலில் தானே பள்ளி கொண்டான், உண்மையான கடலில் சேர்ப்பது தான் சரியான தீர்வு என்று முடிவு கட்டியதாகவும் கேள்வி. (இதனால் மணம் வருந்த மாட்டார்களா என்று கேட்கப்பிடாது..)
//
விஜய்கோபால்சாமி said...
படத்தில் விக்கிரகம் ஊர்வலத்திற்காகவோ, வேறு விதமான எழுந்தருளலுக்காகவோ எடுத்துச் செல்லப்படவில்லை. கடலில் போடுவதற்காக, அதாவது திருமாலை தூஷிப்பதற்காக. //
சரியான கேள்வி, சரியான விளக்கம்..
//
உன்மையான ஸ்ரீவைஷ்னவன் எப்படி பெருமாளை தூஷிப்பதற்காக எடுத்துச் செல்வான்.
சைவர்களாக இருப்பார்கள் என்று சொல்லலாம். அதற்கும் வாய்ப்பில்லை. ராமானுஜர் ஒருவர்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தீட்சை அளித்து ஸ்ரீவைஷ்னவர்களாக ஆக்கினார்.
சைவத்தில் யாரும் அப்படி செய்ததாக தெரியவில்லையே. ஆக கருப்பாக இருக்கும் இவர்கள் சைவர்களாக இருக்கவும் நியாயமில்லை.
///
ஆக நடந்த உரையாடலில் முன்முடிவுடன் யார் வந்து உரையாடியது என்று எனக்கு இப்போ லேசாக துலுங்குகிறது... :P
ஹிஹி!
பிழை நல்லாவே காட்டி இருக்கீங்க!
பிழை-ச்சிப் போங்க டிபிசிடி அண்ணாச்சி! :-))))
//கோவியாரே, உள்குத்து உலகனாதன் பட்டம் கைவசமிருக்கு உங்களுக்கு தரவா...?//
அச்சோ!
தாங்க! தாங்க! ஒடனே தாங்க!
எங்க கோவி அண்ணாவுக்கு ஒரு பட்டம்-னா எனக்கு எம்புட்டு சந்தோசம்! :-))
க.ர.ச,
சரிங்கண்ணோவ்...
///
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஹிஹி!
பிழை நல்லாவே காட்டி இருக்கீங்க!
பிழை-ச்சிப் போங்க டிபிசிடி அண்ணாச்சி! :-))))
///
கோவியாரை கும்முவதில் எல்லாரூக்கும் ஒரு ஆனந்தம் இருக்கும் போலிருக்கே... :P
///
அச்சோ!
தாங்க! தாங்க! ஒடனே தாங்க!
எங்க கோவி அண்ணாவுக்கு ஒரு பட்டம்-னா எனக்கு எம்புட்டு சந்தோசம்! :-))
///
Late comment but I think this is most relevant.
In earlier days day, the caste system was not present like now and even it was not rigid. A person was defined as belonging to a varna based on their lifestyle and not as a birthright.
Every Hindu is entitled to wear the Poonal after Upanayanam. When caste became rigid and based on birth, discrimination increased and the Brahmins were in the forefront.
Therefore there is nothing wrong in the wearing of Poonal by those in the picture.
Even I come from a community described as shudra but wear the poonal and follow all Hindu customs. I see nothing wrong in this and Im proud of my tradition.
Hinduism doesnt really prescribe all these ills like casteism attributed to it. People have misinterpreted Hinduism for enforcing the authority of their community/descendents.
It is also now being proved that the Aryan theory is a hoax propagated by missionaries and their hoodlums to break up and destroy Hinduism. This is not something being done by so called hindutva people but by european researchers.
Only in TN is the debunked Aryan theory still being followed by 'Dravidian' parties for their own devious purposes.
இது கப்சா...
//Anonymous said...
In earlier days day, the caste system was not present like now and even it was not rigid. A person was defined as belonging to a varna based on their lifestyle and not as a birthright.//
யோவ் இந்து என்று வந்ததே நூறு வருடங்களாகத் தான்...இந்தக் கதை செல்லாது செல்லாது...
/// Every Hindu is entitled to wear the Poonal after Upanayanam. When caste became rigid and based on birth, discrimination increased and the Brahmins were in the forefront.///
நான் நம்பிட்டேன்...நீர் சொல்வதை..
/// Even I come from a community described as shudra but wear the poonal and follow all Hindu customs. I see nothing wrong in this and Im proud of my tradition.
///
வர்னாசிரம தருமம் என்று இருக்காமே அதுப் பற்றி என்ன சொல்லுறீங்க..
///
Hinduism doesnt really prescribe all these ills like casteism attributed to it. People have misinterpreted Hinduism for enforcing the authority of their community/descendents.
///
இதுக்கு என் பதிவிலேயே மறுப்பு இருக்கு...எதன் அடிப்படையில் இதை மறுக்கின்றீர்கள் என்று சொன்னால் பேச வசதியாக இருக்கும்...

Post a Comment