இந்தியாவில் இருந்தவரை, உயிர்க்கு மதிப்பு என்றால் என்ன என்று தெரியாமல் இருந்துவிட்டேனோ என்று ஒரு எண்ணம் வருகிறது.
மலேசியாவில் ஒரு சிறுமி, ஷெர்லின் (3 வயது) காணமல் போனால், மொத்தம் நாடே கலங்கிறது. விதிமுறைகள் சரி பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இத்தனை செய்தும் அந்தச் சிறுமி இன்னும் கிடைக்கவில்லை என்பதை விட்டுவிட்டு, இப்படி நடந்த ஒரு நிகழ்விற்கு அரசாங்கம், என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை மட்டும் பார்த்தால், அரசாங்கம் விழித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இரவு பேருந்தென்று ஏரியில் விழுந்து 20 பலியானார்கள். உடனே, இரவு பேருந்துகளில் இரண்டு வண்டியோட்டிகள் இருப்பது அவசியம் என்று சட்டம் வலுவாக்கப்பட்டது. வண்டி ஓட்டுனர்களின், உரிமம் சோதனை செய்யப்பட்டது. தகுதியற்ற ஓட்டுனர்கள் நீக்கப்பட்டார்கள். இது எல்லாமே, நிகழ்ந்தப் பின் நடந்தது என்றாலும், மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் இருக்கிறது. இதைக் கண்டால், இங்கே, மக்களின் உயிருக்கு ஒரு மதிப்பிருப்பது போல் தெரிகின்றது.
தமிழகத்தில் 2007ல் மட்டும், நெடுச்சாலைகளில் மட்டும் சுமார் 14000 உயிரிழப்பு ஏற்பட்ட விபத்துக்கள் நடந்திருக்கின்றது.இது வரை அரசாங்கம், ஒரு துரும்பை கிள்ளி அந்தப்பக்கம் போட்டதாக நினைவில் இல்லை. மரணம் என்றால் மரத்துப் போயிவிட்டதா அனைவருக்கும்மே. ஒரு விபத்திற்கு இந்தளவிற்கு வினையாற்றும் அரசாங்கமும், நமது அரசாங்கமும் ஏனி வைத்தாலும் ஒன்றாகுமா. உடனே, இது திமுக ஆட்சிய்ல் தான் இப்படி என்று கட்சி சாயம் பூச முடியாது. அதிமுக ஆட்சியிலும் இதற்கு குறையாமல் நடந்திருக்கிறது. கேள்வி யார் ஆட்சில் என்பதல்ல. எந்த அரசாங்கமும் பொது மக்களின் உயிரை மதிப்பதில்லை அல்லது துச்சமாகவே மதிக்கிறது. என்பதே.
செய்வன திருந்தச் செய் என்பதற்கும் இந்திய அரசுகளுக்கும் சம்பந்தமே இருந்ததில்லை. கிழக்கு கடற்கரைச் சாலை என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரு சாலை இருக்கிறது. அங்கே அதி வேகமாகவே வாகனங்கள் செல்லும். ஏன் என்றால் அது நெடுச்சாலை. ஆனால், என்ன நடக்கிறது இங்கே, நெடுஞ்சாலையின் இருமருங்கிலும், நிலம் ஏகபோகமாக விற்றுத் தீர்ந்தது. நினைத்த இடத்தில் திருப்பம். நினைத்த இடத்தில், மக்கள் சாலையயை கடக்கிறார்கள். விளைவு, சாலை விபத்துக்கள். என் பணியிடத்த நண்பரொவர் பயணம் செய்த வண்டியில், சாலையயைக் கடக்க முயன்ற இரு சிறுமிகள் விபத்துக்குள்ளாகி அந்த இடத்திலே மரணித்தனர். பெங்களூர்-ஓசூர் நெடுஞ்சாலை என்று தான் பெயர், அங்கங்கே, வண்டிகள் சாலையின் மேலேறி, அடுத்தப்பக்கம் வரும் வண்டிகளை கூட முட்டியதுண்டு.
உதாரணத்திற்கு கீழே இரண்டு சாலைகள். இதில் எந்த சாலையில் விபத்துக்கள் அதிகமாக நடக்க வாய்பிருக்கிறது என்றுச் சொல்லுங்கள்.
ஒன்று சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, மற்றொன்று மலேசிய வடக்கு-தெற்கு நெடுச்சாலை.

சாலை என்று ஒன்றை போட்டுவிட்டாலே, அகமகிழ்ந்துப் போகும் நிலையில் நாம் இருப்பது பரிதாபமே. வல்லரசு, வெங்காய அரசு என்பதிற்கு பணம் செலவழிக்கும் அரசு, எதைச் செய்தாலும், மக்களின் பாதுகாப்பை கவனித்தில் எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும். சாலைகளின் அமைப்பைப் பொறுத்த வரை, உண்மையில் தேவைகளை கவனிக்கத் தவறுகிறோமா, இல்லை, தெரிந்தே தவறுகிறோமா என்று புரியவில்லை. பதிவர்களிலோ, அல்லது, வாசகர்களிலோ,யாராவது நெடுச்சாலைத்துறையினர் இருந்தால் விளங்குங்களேன். நாடு நாடாக சுற்றும் அமைச்சர்களின் கண்களில் ஏன் இவை தெரிவதில்லை. வடுவூர் குமார், சுட்டிக் காட்டிய தோள் என்ற ஒன்று ஒரு அம்சமே. ஒரு சாலையில் பாதுகாப்பிற்கு இதுப் போன்று எண்ணற்றவைகளை மற்ற நாடுகள் செய்து வருகின்றன.
எடுத்துக்காட்டாக.
-பெருவழிச்சாலை என்றால், சாலையயை நேரடியாக கடக்கும் இடம் ஒன்றுக் கூட இருக்காது. இடதுப்புறம் வெளியேறி, ஓவர் பிரிட்ஜின் மூலம் மட்டுமே அந்தப்புறம் செல்லலாம்.அதுவும் 25 கீமி ஒரு ஊர் வரும், அப்போது மட்டுமெ.
-சாலையில், எதிரே வரும், வண்டியின் வெளிச்சம் கூட உங்கள் கண்ணில் படாத வண்னம், சாலையயை பிரித்து, பாதுகாப்பாக அமைத்திருக்கிறார்கள்.
-மகிழ்வுந்துகளின் அதிகப்பட்ச வேகத்திற்கு அளவு வைத்து ( 110 கிமி), அதை மீறினால், வீட்டிற்கு ஓலை வருகிறது ( 300 வெள்ளி தண்டம் கட்டச் சொல்லி. நான் ஒரு முறை கட்டினேன் )
-மற்ற பொதுவாக, பேருந்துகள், சரக்கூர்திகள் அனைத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்ட வேக அளவு மட்டுமே அனுமதி. உதாரணமாக பேருந்துகள் பெருவழிச்சாலையில் 90கிமி வேகத்திற்கு மேல் போகக்கூடாது. சரக்கு வண்டிகள் சாலையின் இடதுப்புறம் மட்டுமே போகவேண்டும்.
-சாலையில் இளைப்பாற, பெட்ரொல் போட, கழிவறை செல்ல என்று வசதிகள்
- ஓவ்வோரு சாலைப்பிரிவிற்கும் 2 கிமி முன்னர் இருந்தே, ஒவ்வோரு 500 மீக்கு ஒரு அறிவிப்பு பலகை.
-சாலையில் வேலை நடக்கீறது என்றால் கண்ணைப் பறிக்கும் ஆடை அணிந்த, சாலை தடுப்பான்களை வைத்து, போதிய மட்டும் ,எச்சரிக்கை.
***
என்னுடம் பணி புரிந்த நண்பொருவரின், மாமனார், மாமியார், மனைவி பெரம்பலூர் அருகே, நேற்றைக்கு முன் தினம், டேங்கர் லாரியில் மோதி உயிரிழந்துவிட்டார்கள். அந்த நண்பனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மறைந்தவர்களுக்கு என் அஞ்சலிகள்.
அந்தக் குடும்பம் செய்த தவறென்ன...? அரசாங்கத்தின் பொறுப்பென்ன....?
இப்படி விபத்துக்கள் நடக்க நடக்க, பட்டியிலிட்டு, அந்த தகவலை வைத்து அழகுப் பார்ப்பதா..?
ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பது என்று நமக்காக தெரியாவிட்டாலும், சாலை விபத்துக்கள் குறைவாக உள்ள நாட்டைப் பார்த்து சரி செய்யக் கூட நமக்கு தோன்றாதா..?
ஏற்கனவே அமைந்த சாலைகளை மேம்படுத்தக் கூடாதா...?
போட்ட சாலையயை மீண்டும் மீண்டும் தோண்டி ஒப்பந்தக்காரருக்கு லாபம் சம்பாத்திக்குக் கொடுப்பதில் மட்டுமே நெடுச்சாலைத்துறை இயங்குகிறதா..?
கேள்விகள் ஆயிரம்...விடைகள் யாரிடம் என்று தான் தெரியவில்லை.
பாதுகாப்பற்ற சாலைகள் : மக்களின் உயிருக்கு இது தான் மதிப்பா..?
Subscribe to:
Post Comments (Atom)




14 Comments:
நல்ல விடயம் சொல்லி இருகிங்க... மகிழ்ச்சி, நன்றி...
மலேசியாவிலும் விபத்துகள் இன்னும் நடந்த வண்ணம் உள்ளன. இதற்கு சாலைகளில் இருக்கு காத்து கருப்பு தான் காரணம்... :-)))))
இதே கேள்வி, நான் முதன் முதலில் ஐரோப்பாவில் கால்வைத்த போது எனக்கும் எழுந்தது.
விடை இதோ...
ஒரு கப்பலில் ஒரு அமேரிக்கன், ஒரு ஜப்பானியர், ஒரு இந்தியன் பயணம் செய்தனர். கப்பல் கோளாறு காரணமாக எதையெல்லாம் கப்பலிருந்த அகற்ற முடியுமோ அகற்றுமாறு கேப்டன் உத்தரவிட, ஜப்பானியர் உள்ளே சென்று விலை உயர்ந்த மின்னனு எந்திரங்கள் அடங்கிய பெட்டியை எடுத்து வந்து கடலுக்குள் வீசிவிட்டு "இது எங்கள் ஊரில் நிறையகிடைக்கும்" என்றார்.
அமேரிக்கரும் தன் பங்குக்கு டாலர்கள் நிறம்பிய பெரிய பெட்டியை எடுத்து கடலில் வீசிவிட்டு இது எங்கள் ஊரில் நிறைய கிடைக்கும் என்றார்.
இந்தியர் தன் பங்குக்கு அருகில் இருந்த சிறுவனை கடலில் தூக்கி வீசிவிட்டு இது எங்கள் ஊரில் அதிகம் கிடைக்கும் என்றார்!!
நெடுஞ்சாலை என்றில்லை. கிட்டத் தட்ட எல்லா சாலைகளிலும் நிறைய விபத்துகள் நடக்கின்றன. ஹெல்மெட் போடச் சொல்லி வற்புறுத்தும் அரசாங்க / நீதித் துறை / மீடியாக்களின் கவனம் அந்த அளவிற்குச் சாலைகளை மேம்படுத்துவதில் இல்லை என்பது கசப்பான உண்மையே.
இதற்கு வசதி மட்டுமே காரணமாக இருக்க முடியுமென நினைக்கவில்லை (அப்போ ராணுவத்திற்குச் செய்யும் செலவுகள்.?). மனித உயிருக்கு மதிப்பற்று போனது தான் காரணமாக இருக்க முடியும்.
//ஓவ்வோரு சாலைப்பிரிவிற்கும் 2 கிமி முன்னர் இருந்தே, ஒவ்வோரு 500 மீக்கு ஒரு அறிவிப்பு பலகை.//
இது மாதிரி சாலைகள் பிரியும் முன்னரே அறிவிப்பு பலகை எல்லா சாலைகளுக்கும் வைக்க வேண்டும். சாலை/தெரு அறிவிப்புகள் ஒரே வண்ணத்தில் அமைத்தால் சட்டென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். நிறைய அறிவிப்பு பலகைகளில், சாலைகளின் பெயர்களை விட உபயதாரர்களின் பெயர்கள்தான் பெரிதாக தெரிகின்றன.
இதெல்லாம் நான் வந்துதான் நிறைவேறும்போல இருக்கு :)
பெங்களூர்-ஓசூர் நெடுஞ்சாலை என்று தான் பெயர், அங்கங்கே, வண்டிகள் சாலையின் மேலேறி, அடுத்தப்பக்கம் வரும் வண்டிகளை கூட முட்டியதுண்டு.
இது பரவலாக, நம்மூரில் நிகழக்கூடிய சாத்தியங்கள் பெருகிவருகிறது.நான் எழுதிய "தோள்" பகுதி இல்லாத கத்திப்பாரா பாலம் நடுவில் கூட தடுப்புச்சுவர் இல்லை.
குறை கண்டால் அதில் கூட அரசியல் பார்க்கும் எண்ணம் தான் அதிகரித்துவருகிறது.
சமீபத்தில் காட்டாங்குளத்தூர் போக வேண்டியிருந்தது.அங்குள்ள SRM கல்லூரிக்கு ரயில் நிலையத்தில் இருந்து போக வழியே கிடையாது.எல்லோரும் சாலையை தான் கடக்கவேண்டும்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பிவிட்டு வீட்டில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கத்தான் வேண்டும்.பொது மக்களுக்கு அவசிய தேவை என்ன அதை எவ்வளவு விரைவாக செய்யவேண்டும் என்பதை யாராவது புரியும் படி சொல்லிக்கொடுத்தால் சரி.இல்லாவிட்டால் நீங்கள் சொல்லியுள்ள மாதிரி "புரியவில்லை விளக்கவும் " என்று தான் கேட்கவேண்டியிருக்கும். :-))
காட்டாங்குளத்தூர் சாலையில் தோள் பகுதி இருந்தாலும் அதில் எதிர் திசையில் இருந்து வரும் வாகனம் நம்மூரில் மட்டுமே காணக்கிடைக்கும் காட்சி.
சொல்ல நிறைய இருந்தும்... கோர்வையாக சொல்ல முடியாததால்,எழுதுவதில்லை. :-)
நம்மூர் வண்டிகளுக்கு தேவையில்லாதது
Rear View Mirror.
தேவையானது,செவிப்பறையையே கிழிக்கக்கூடிய அளவுக்கு "HORN"- கொடுமையிலும் கொடுமை.
பதிவிற்கு தொடர்பில்லாத பின்னூட்டம்..
//என்ன பத்தி நானே சொன்னா நல்லா இருக்குமா, அதுனால வேண்டாம்//
அண்ணே இதில் இருக்கும் பிழைகளை முதலில் சரி செய்யுங்கள். இப்படி எழுதி வைத்து விட்டு.. சும்மா தமிழ் தமிழ் என்று புலம்பி தமிழ் பற்றாளர் போல் காட்டிக் கொள்வதில் பயனொன்றும் இல்லை. உங்கள் தமிழ் பற்றுக்கு இது இழுக்கு... :))
//போட்ட சாலையயை மீண்டும் மீண்டும் தோண்டி ஒப்பந்தக்காரருக்கு லாபம் சம்பாத்திக்குக் கொடுப்பதில் மட்டுமே நெடுச்சாலைத்துறை இயங்குகிறதா..?
கேள்விகள் ஆயிரம்...விடைகள் யாரிடம் என்று தான் தெரியவில்லை.//
மாம்ஸ் எனக்கும்தான் தெரியலை..யாராவது பதில் சொல்லறாங்களான்னு பாப்போம்:)
இதை நீங்க நகைச்சுவையாக சொன்னாலும் , காத்து கருப்பு விவகாரங்களில் மலேசிய தமிழர்களின் அசாத்திய நம்பிக்கையயை வெளிப்படுத்தியதாக நான் நினைத்துக்கொள்கிறேன்.. :)
///
P.A.விக்னேஷ்வரன் said...
நல்ல விடயம் சொல்லி இருகிங்க... மகிழ்ச்சி, நன்றி...
மலேசியாவிலும் விபத்துகள் இன்னும் நடந்த வண்ணம் உள்ளன. இதற்கு சாலைகளில் இருக்கு காத்து கருப்பு தான் காரணம்... :-)))))
///
சீனாவில் நம்மை விட மக்கள் தொகை அதிகம்.
அங்கே இதுப் போன்ற பிரச்சனைக்கு, நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தான் தெரிகிறது.
எ.கா. http://www.china.org.cn/english/travel/118003.htm
பழைய செய்தி என்றாலும், அதுக்குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நிறைய மக்கள் இருப்பதால், அப்படியே விட்டுவிடுவதில்லை.
///
கருப்பன்/Karuppan said...
இதே கேள்வி, நான் முதன் முதலில் ஐரோப்பாவில் கால்வைத்த போது எனக்கும் எழுந்தது.
///
கேள்வி என்னவென்றால், வெளி நாடுகளுக்கு சுற்றும் அமைச்சர்கள் கண்ணில், இது பட்டும், ஏன், சிந்திக்க மறுக்கிறார்கள் என்பதே....?
உண்மை தான் சுந்தர், இந்தியாவின் வெட்டி ஜம்பத்திற்கு அரசாங்கம் செய்யும் செலவுகளில் சில சதவிகிதமேனும் இவற்றிற்கு செலவழிக்கலாம்.
///
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இதற்கு வசதி மட்டுமே காரணமாக இருக்க முடியுமென நினைக்கவில்லை (அப்போ ராணுவத்திற்குச் செய்யும் செலவுகள்.?). மனித உயிருக்கு மதிப்பற்று போனது தான் காரணமாக இருக்க முடியும்.
///
வருங்கால நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தஞ்சாவூரான் வாழ்க, வாழ்க :)
//
தஞ்சாவூரான் said...
இது மாதிரி சாலைகள் பிரியும் முன்னரே அறிவிப்பு பலகை எல்லா சாலைகளுக்கும் வைக்க வேண்டும். சாலை/தெரு அறிவிப்புகள் ஒரே வண்ணத்தில் அமைத்தால் சட்டென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். நிறைய அறிவிப்பு பலகைகளில், சாலைகளின் பெயர்களை விட உபயதாரர்களின் பெயர்கள்தான் பெரிதாக தெரிகின்றன.
இதெல்லாம் நான் வந்துதான் நிறைவேறும்போல இருக்கு :)
//
கருத்தை எதிரோலித்ததற்கு நன்றி.
///
வடுவூர் குமார் said...
குறை கண்டால் அதில் கூட அரசியல் பார்க்கும் எண்ணம் தான் அதிகரித்துவருகிறது.
///
உண்மை..கழுத்தை திருப்பாமலே, இங்கே என்னால், வண்டியயை ஒட்ட முடியும். பெங்களூரில், இடப்பக்க கன்னாடியயை நீட்டி வைத்தால் இருசக்கர வாகனங்களோ, அல்லது மகிழ்வுந்துகளோ, கன்னாடியயையே காலி செய்துவிடுவார்கள்.
///
நம்மூர் வண்டிகளுக்கு தேவையில்லாதது
Rear View Mirror.
தேவையானது,செவிப்பறையையே கிழிக்கக்கூடிய அளவுக்கு "HORN"- கொடுமையிலும் கொடுமை.
///
முடிஞ்சா நானே ஒரு நெடுஞ்சாலைத்துறை ஊழியரை பேட்டி காணப்போகிறேன்...விடை தெரிஞ்சா சொல்லுறேன்..
:)
//
ரசிகன் said...
மாம்ஸ் எனக்கும்தான் தெரியலை..யாராவது பதில் சொல்லறாங்களான்னு பாப்போம்:)
//
நல்ல பதிவு! இங்கே இதுபோன்ற பதிவு எழுதினால் உடனே ஜெயலலிதா ஆட்சியில் கேட்டயா? அவன் ஆட்சியில் கேட்டயான்னு சொல்லத்தான் ஆள் வரும் :( இவர்களை சொல்லி என்ன செய்ய அரசும், முதல்வரும் கூட ஜெயலலிதா ஆட்சியை ஒப்பீட்டே பதில் சொல்வார், இங்கே மக்களை நினைக்கும் அரசியல்வாதிகள் இல்லை என்பதே நம் தலைஎழுத்து :(
Post a Comment