கையில் தட்டுடன், சாப்பிட இடம் தேடி அலைந்ததைக் கண்டு, உணவக பணியாளர், இங்க உட்காருங்கள் என்றுக் கைக் காட்டினார்.அவர் கைக் காட்டிய இருக்கை, 3 மேசைகளை ஒன்றாக இனைத்து நீளவாக்கில் போடப்பட்டியிருந்தது. சாதரணமாக அந்த இருக்கையில் அமர மாட்டான், தனியாக மேசை இருந்தால் அதில் தான் அமருவான். தனிப்பட்ட காரணம் என்றுச் சொல்ல முடியாவிட்டாலும், தனி இடத்தில் மற்றவர்கள் உள்புகுவதுப் போல் இருப்பதனாலோ என்னவோ, அது அவனுக்குப் பிடிப்பதில்லை.
அவன் அமர வைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலே, தமிழர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டு சரி பரவாயில்லை, பேச்சு துணையாவது இருக்கும் என்று நினைத்து அமர்ந்தான். அவனுக்கு அருகே இரு தமிழர்கள், எதிரே ஒரு மலாய்க்காரர், அவருக்கருகே ஒரு தமிழர். அவருகள் அனைவருமே ஆங்கிலத்திலும்,மலாயிலும் பேசிக் கொண்டியிருந்தனர்.மலாய்க்காரருக்காக பேசுகிறார்கள் என்பதைப் அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
உணவை உண்டுக்கொண்டே, காதில் ஒரு புறம் அவர்களின் பேச்சு விழுந்துக்கொண்டிருப்பதை கவணித்தான். தனி மனித ஒழுக்கம் பற்றி பேச்சு ஆரம்பித்தது. மலாய்க்காரர் அருகே அமர்ந்திருந்த நபர், செந்தூரம் கீற்று வைத்து, பெரிதான சத்தத்துடன் பேசிக் கொண்டியிருந்தார். "நீ நல்லவனாக இருந்தால் ஏமாற்றப்படுவாய், அதற்கு பதிலாக நீ கெட்டவனாக இருந்தால், நீ
பிரச்சனையில்லாமல் இருக்கலாம். சட்டத்தை மீறலாம், தப்பிக்கலாம். நல்லவனாக இருந்தால்
மீறாமலே தண்டிக்கப்படுவாய்" என்று எல்லாம், எடுத்தியம்பிக்கொண்டியிருந்தார். ஆகா, மனிதரைப் பிடித்தால் சரியாக மொக்கைப் போடலாம் என்று அவன் நினைத்துக் கொண்டியிருக்கும் போது, நர்கீஸ் புயல் பற்றி பேச்சு வந்தது.
41000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று ஒருவர் சொல்ல, எல்லாரும், ஆமோதித்தும், அனுதாபம் காட்டியம் பேச ஆரம்பித்தனர். செந்தூரக் கீற்றுக்காரர், இதனைக் விட்டு, வேற தளத்தில் உரையாடலை ஆரம்பித்தார். "சென்னையயைத் தாக்கியிருக்க வேண்டியது, மியான்மார் மேலே போய் அடிச்சிடுச்சி, அங்கே அடிச்சியிருக்கனும்". என்றுச் சொன்னார். என்ன மனிதர்டா இவர், பர்மாவிற்கு பாவப்படாவிட்டாலும் பரவாயில்லை, சென்னை மக்கள் மீது இவருக்கு என்ன காண்டு என்று யோசிக்கத் தொடங்கினான்.
செந்தூரக்கார் எதிரே இருந்தவன், என்ன இப்படி சொல்லுறீங்க. அங்கே தான் போய் செட்டில் ஆகனும் என்று சொன்னீங்க. இப்ப இப்படி சொல்லுறீங்களே என்று வியந்துப் போய் கேட்டார். செந்தூரக்கார், இப்ப எல்லாம் அந்தப் பக்கம் போறதாயில்லை, எல்லாம் அக்கிரமக்காரர்கள் இருக்கிற ஊர் அது என்று பொத்தாம் பொதுவாக ஒரு குண்டைப் போட்டார்.அவனுக்கோ பல சிந்தனைகள். அந்தாள் தோற்றத்திற்கும், அவர் சொன்ன கருத்திற்கும் முடிச்சுப் போட்டு, முடிவா மண்டையில் ஒன்னு போட்டால் என்ன என்று நினைத்துக் கொண்டான்.
"அங்கே அநியாயம் பண்ணுறானுங்க. அங்கே நாம் போனா ஒன்னுத்துக்கும் உதவாது" என்று அவலை நினைத்தவாறு உரலை இடிக்கும் பெண் போல் கூறினார். நாம் நினைத்தது தானோ, என்று எண்ணியபடி, சாப்பாட்டை உள்ளே இறக்கினான். தமிழ் நாட்டில் செந்துராக்காரனுக்கு என்ன பிரச்சனை.என்று யோசித்தப் போது, தான் அவனுக்குத் தோன்றியது. "அவனா...இவன்"
அவர்களின் பேச்சு மீண்டும் வேறுப் புறம் திரும்பியது. நேற்று "நாங்க பேலஸ் ஆப் இண்டியா போனோம், நன்றாக இருந்தது" என்று செந்தூரம் மீண்டும் ஆரம்பித்தது. ஆமா, பருப்புஞ்சாதமும், நெய்யும் கொடுக்கிறார்கள் போல என்று அவன் நினைத்துக் கொண்டியிருக்கும் போதே, "தந்தூரி சிக்கன், நான், எல்லாம் சாப்பிட்டேம். நன்றாக இருந்தது" என்றார் செந்தூரம். சுவாரசியழந்து தட்டை மட்டும் பார்த்தபடி சாப்பிடத்தொடங்கினான். உணவகத்தில் இருந்த வானொலியில் "வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை " என்று பாடல் பாடத் தொடங்கியது.
வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை..
Subscribe to:
Post Comments (Atom)




14 Comments:
"கிழிஞ்சது போ"க்குப் போட்டியா?
:P
அது "கிளிஞ்சது போ" இல்லையா.. :P
அப்படி எல்லாம் இல்லைங்க ஜெகதீசன் ஐயர்.
//
ஜெகதீசன் said...
"கிழிஞ்சது போ"க்குப் போட்டியா?
:P
//
//"தந்தூரி சிக்கன், நான், எல்லாம் சாப்பிட்டேம். நன்றாக இருந்தது" என்றார் செந்தூரம்.//
டிபிசிடி ஐயர்,
அரிசி விலை ஏறியது போல் சிக்கன் விலை ஏறும் வாய்ப்பு உள்ளதா ?
ean avalellam chicken sapita mattangala ?
கோவி ஐயரே,
நிறைய பேர் சைவத்திலிருந்து அசைவத்திற்கு மாறி, கோழி தட்டுப்பாடு வந்தால் விலை ஏறும்
//
கோவி.கண்ணன் said...
டிபிசிடி ஐயர்,
அரிசி விலை ஏறியது போல் சிக்கன் விலை ஏறும் வாய்ப்பு உள்ளதா ?
//
தெரியலைங்களே...
ஆனா ஒன்னு தெரியும்..
பிழைப்பிற்கு காண்டாமிருகம் தின்ன வேண்டும் என்றாலும் தின்ன ஆள் இருக்கு..
///
nedun said...
ean avalellam chicken sapita mattangala ?
///
அனானி பின்னுட்டம் இல்லாதபடியால், என் சொந்த கணக்கிலே போட்டுக் கொல்கிறேன். :P
// TBCD said...
அனானி பின்னுட்டம் இல்லாதபடியால், என் சொந்த கணக்கிலே போட்டுக் கொல்கிறேன். :P
//
சொன்னால் கும்ம மாட்டோமா ?
:)
திரைத்துறை அரசியல்வாதிகள் .....
அடுத்த கட்டுரை எப்போது? ஆவலுடன் எதிர்பார்கிறேன்
jokes apart!!!!பயணம் எத்தனை இனியது.. எத்தனை வித மனிதர்கள்,மனிதங்கள்,எத்தனை வித வர்ணங்கள்,பேதங்கள் என்றாலும் செல்லும் ஒவ்வொரு இடத்த்திலும் ஒரு மனிதாபிமானமிக்க மனிதன் இருந்துகொண்டே இருக்கும் படைப்புகள்.. எல்லா வற்றையும் விட
அருவிகள் வைரத்தொங்கல்
அடர்கொடி பச்சைப் பட்டு
குருவிகள் தங்கக்கட்டி
குளிர்மல்ர் மணியின் குப்பை..
என்ற பாவேந்தரின் வரிகளை பார்பபதொல்லாம் பயணத்தில் தானே!!
//nedun said...
திரைத்துறை அரசியல்வாதிகள் .....
அடுத்த கட்டுரை எப்போது? ஆவலுடன் எதிர்பார்கிறேன்
//
ரிப்பிட்டே......
யோவ் டிபிசிடி ஐயர்,
சீக்கிரம் பதிவை போட்டுய்யா.
கோவியாரே,
ஊரே மாறி வருது நீங்க மட்டுமே மாற மாட்டேங்கிறீங்க...
பதிவு வரும்..எப்போ, எப்படி வருமென்று சொல்ல முடியாது.
கண்டிப்பாக வரும். :))))))))
///
கோவி.கண்ணன் said...
//nedun said...
திரைத்துறை அரசியல்வாதிகள் .....
அடுத்த கட்டுரை எப்போது? ஆவலுடன் எதிர்பார்கிறேன்
//
ரிப்பிட்டே......
யோவ் டிபிசிடி ஐயர்,
சீக்கிரம் பதிவை போட்டுய்யா.
///
வெளியிட்டாச்சுங்கண்ணா...
//
nedun said...
திரைத்துறை அரசியல்வாதிகள் .....
அடுத்த கட்டுரை எப்போது? ஆவலுடன் எதிர்பார்கிறேன்
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நர்சிம்.
/// narsim said...
jokes apart!!!!பயணம் எத்தனை இனியது.. எத்தனை வித மனிதர்கள்,மனிதங்கள்,எத்தனை வித வர்ணங்கள்,பேதங்கள் என்றாலும் செல்லும் ஒவ்வொரு இடத்த்திலும் ஒரு மனிதாபிமானமிக்க மனிதன் இருந்துகொண்டே இருக்கும் படைப்புகள்.. எல்லா வற்றையும் விட
அருவிகள் வைரத்தொங்கல்
அடர்கொடி பச்சைப் பட்டு
குருவிகள் தங்கக்கட்டி
குளிர்மல்ர் மணியின் குப்பை..
என்ற பாவேந்தரின் வரிகளை பார்பபதொல்லாம் பயணத்தில் தானே!!
///
Post a Comment