காலம்: இப்படிக்கு ரோஸ் - ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் ! என்ற கோவியாரின் பதிவுக்கு வினையாற்றியே இந்தப் பதிவு... (எதிர்வினையா, செயல்வினையா, செயப்பாட்டுவினையா என்று நீங்களே முடிவுக் கட்டிக்கோங்க)
முதலில் தலைப்பிலே தகராறு அது என்ன ஒருவனுக்கொருத்தி, ஏன் ஒருத்திக்கொருவன் இல்லை. சிக்கலே வேண்டாம் என்று தான் ஒருவருக்கொருவர் என்று நான் வைத்துள்ளேன். :)
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தப் போது,அவர்கள் ஏற்படுத்தியது தான் இந்திய பீனல் கோட்.அது தான் பல தார முறையயை தண்டனைக்குரியதாக சொல்லுகிறது. இந்த தண்டனை கனவனக்கு பெற்றுத் தர முதல் மனைவி விரும்பினால். 1800 இறுதிகளில் இவை இயற்றப்பட்டாலும், இன்று வரை அனைத்து மக்களும் இதனை பின்பற்றுவதில்லை என்பது நாம் அறீந்ததே. நம்ம முதல்வரே பல தார (எண்ணிக்கையயை வேண்டுமென்றே தவிர்க்கிறேன் :P ) மணம் புரிந்தவர். ஒருவனுக்கு கொருத்தி என்றுச் சொல்லிச் சென்ற,ஆங்கிலேயர்களின் சாயல் படியாமல் வளர்ந்தவர் என்றுச் சொல்ல முடியும்மா. முடியாது.
ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டத்தில் நிறைய கோமாளிக்கூத்துக்கள் உண்டு என்பதற்கு நம் வழக்குரைஞர்கள் இன்றும் அணியும் கருப்பு அங்கியே ஒரு உதாரணம் (வெயில் தேசத்தில் கருப்பு அங்கி.... !!!!). ஆங்கிலேயர்களும் சட்டத்தை அவர்களுக்காக இயற்றவில்லை. இத்தாலிய சட்டத்தை பின்பற்றி தான் சட்டத்தை இயற்றினார்கள். இத்தாலி, போப்பின் அதிகாரத்தை அங்கீகரிக்கும், தேசங்களில் ஒன்றாகவே இருந்தது வந்தது (Papal states). கத்தோலிகத்தின் முக்கிய நகரமான வாடிகன் நகரம் இத்திலியிலிருந்து தான் பிரித்தெடுக்கப்பட்டது. 90% கத்தோலிக்கர் இருக்கும் இத்தாலியின் சட்டத்தில் கத்தோலிக்கத்தின் ஆதிக்கம் அதிகம் இருப்பது அதிசயம் இல்லை. அது இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்றப் போது, அங்கேயும் அப்படியே தொடர்ந்திருக்கிறது.
கத்தோலிக்க சமூகத்தில் அதிகாரப்பூர்வமான பல தார மணம் என்பது அனுமதிக்கப்பட வில்லை. ( ஜோ : தவறு என்றால் சுட்டவும்) ஆனால், ரகசியமாக அதை அனுமதிக்கவும் செய்திருக்கிறார்கள். பல தார மணம் செய்வது தான் தடை செய்யப்பட்டதே ஒழிய. வைப்பாட்டிகள் சட்டத்திற்கு வெளியே/புறம்பாக எல்லா சமூகத்திலேயும் உண்டு. போப்களுக்கே குடும்பங்கள் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. ஆக சட்டம் இயற்றினாலும், அதை முழுமையாக அனைவரும் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. ஒருவனூக்கு ஒருத்தி என்பது சட்டத்தில் மட்டுமே இன்றும் வாழுவதாகக் கொள்ளலாம். (விவாகரத்து, பிறன் மனை நோக்குதல், வைப்பாட்டிகள் ...). ஆக, ஒருவருகொருவர் என்பது கிறித்துவர்களிடையே ஒரு கொள்கை அல்ல என்று சொல்லலாம். நிற்க.
ஆங்கிலேயர்கள் இந்திய சட்டத்தை, அவர்கள் சட்டத்தை வைத்து உருவாக்கியதால், பல கூறுகள் கத்தோலிக்கத்தை பிரதிபலிக்கக் கூடும். ஆனால், சட்டத்தினாலேயே, இவர்கள் மாறினார்கள் என்பது ஒப்புக்கொள்ளக் கூடிய வாதமில்லை. உங்கள் கூற்று சரியென்றால், முகலாயர்கள் ஆட்சியின் போது பல தார மணம் என்பது சர்வசாதரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், எலலாரும் அப்படியே இருந்ததாக சான்றுகள் இல்லை.
பணம் படைத்தவர்கள் இன்றும் பல தார மணம் புரிவதுப் போல், அன்றும் புரிந்தனர். தற்காலத்தில் பெண்கள் படிப்பறிவு பெற்றதால், சட்டப்பூர்வமான அனுமதியிருந்தும் இசுலாமியர்கள் ஒரு தார மணத்துடனே இருக்கிறார்கள். பல தார மணம் என்பது, சமூகத்தில் குறைந்தப் போனதற்கு சமகாலத்தில் ஏற்படுத்தப்பட்ட அதீத ஒழுக்க கற்பிதங்கள் ஒரு காரணமாகவும், பணம் ஒரு காரணமாகவும் இருக்கக்கூடும்.
தாத்தா காலத்தில் இரண்டு பொண்டாட்டி என்றுச் சொல்லுகிறவர்கள் ஆதிக்க சாதியிலோ, அல்லது பணக்கார குடும்பத்திலோ இருக்கவே வாய்ப்புகள் அதிகம். வெட்டி விடுவது என்பது தெற்கே சாதரணமாக நடப்பது. வெட்டி விட்ட பெண்கள் மறுமணம் செய்வதும் அலட்டாமல் நடந்தேறும் ஊர்கள் உண்டு. உலகத்திலே அதிகமாக விவாகரத்து கோரப்படுவது பிறன்மனை நோக்கிய பிரச்சனைகள் தானாம். அதுவும் அதிகமாக வெள்ளையர்கள் (கிறித்துவர்கள்) என்று புள்ளியில் விவரங்கள் சொல்லுக்கின்றது. தவறு செய்தவர், தவறு செய்ய வாய்பில்லாதவர் என்று இரண்டு வகைகள் மட்டுமே இந்த விடயத்தில் பொருந்தும். ஆக, ஒருவருக்கொருவர் என்று மனதளவில் வாழ்பவர்கள் மிக குறைவானவர்களாகவே இருக்க முடியும். இந்திய கலாச்சாரம், வெங்காயம், வெள்ளை பூண்டு என்பதெல்லாம், வெட்டிப் பேச்சு என்றே நான் கருதுகிறேன்.
ஒருவனுக்கு ஒருத்தி (அ) ஒருவருக்கொருவர் : கோவியார், ஆங்கிலேயர்,கிறீத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)




10 Comments:
ஓரிருவர் செய்யும் பலதார மணம் எப்படி ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தின் கலாச்சார பிரதிபலிப்பாக ஆக முடியும். இதை தனி மனிதர்களின் ஒழுக்கம் தொடர்புடைய விசயமாகத்தான் கருத வேண்டும். மேலும் இந்திய கலாச்சாரம் என்பதே பொய்யான புனைவுதான்
//இந்திய கலாச்சாரம், வெங்காயம், வெள்ளை பூண்டு என்பதெல்லாம், வெட்டிப் பேச்சு என்றே நான் கருதுகிறேன்//
//போப்களுக்கே குடும்பங்கள் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. ஆக சட்டம் இயற்றினாலும், அதை முழுமையாக அனைவரும் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. //
போப்புகளுக்கு ஒரு காலத்தில் மணம் புரிந்தவர்கள் தான் .ஆனால் அது அப்போதைய சட்டத்தை ஏமாற்றி செய்ததல்ல ..கத்தோலிக்க மதத்தில் பாதிரியார்கள் மணம் செய்யாது துறவியாக இருக்க வேண்டும் என்பது பாதியில் வந்த மாற்றம் தான் .
ஒரு காலத்தில் போப் என்பவர் ஒரு மதத்தலைவர் என்பதை விட ஒரு அரசர் போலவே இருந்து வந்திருக்கிறார் .எனவே அதற்குரிய அனைத்து ஆடம்பரங்களும் இருந்திருகின்றன.
ஜோ,
மரியோ பூசோவின் ( Mario Puzo) புதினம் "த பேமிலி" (The family), அலெக்சாண்டர் 6 (VI) என்ற போப்பின் வாழ்வை பின்னனியில் வைத்து எழுதப்பட்டுள்ளது. அது ஒரு புதினம் என்றாலும், மிகவும் சர்ச்சைக்குள்ளான போப் அவர் என்பதிலும், போப்புகளின் விதிமுறைகளை சராமாரியாக மீறியவர் என்றும் கூறப்படுவது உண்மை என்றே சொல்லப்படுகிறது. இவரின் காலம் கிபி 1490கள்.
பாதிரிகளுக்கு திருமணமும், உடலுறவும் மறுக்கப்பட்டது கிபி 600களில்.
நான் சொல்ல வந்தது இது தான்.
இன்றும் தமிழகத்தில் பல பாதிரிகளின் லீலை வெளியாகிக்கொண்டு தான் உள்ளது. (அவர்கள் கத்தோலிக்கர்களா என்று நான் அறியேன் )
பதம் ஒரு சோறு என்ற விகிதம் இல்லையென்றாலும், அதிகாரமும், பணமும் இனைகின்ற இடத்தில் இவை நடப்பது அதிசயமில்லை.
நிற்க.
///
ஜோ / Joe said...
போப்புகளுக்கு ஒரு காலத்தில் மணம் புரிந்தவர்கள் தான் .ஆனால் அது அப்போதைய சட்டத்தை ஏமாற்றி செய்ததல்ல ..கத்தோலிக்க மதத்தில் பாதிரியார்கள் மணம் செய்யாது துறவியாக இருக்க வேண்டும் என்பது பாதியில் வந்த மாற்றம் தான் .
///
உடன்படுகிறேன்.....
///
ஒரு காலத்தில் போப் என்பவர் ஒரு மதத்தலைவர் என்பதை விட ஒரு அரசர் போலவே இருந்து வந்திருக்கிறார் .எனவே அதற்குரிய அனைத்து ஆடம்பரங்களும் இருந்திருகின்றன.
///
//நான் சொல்ல வந்தது இது தான்.
இன்றும் தமிழகத்தில் பல பாதிரிகளின் லீலை வெளியாகிக்கொண்டு தான் உள்ளது. (அவர்கள் கத்தோலிக்கர்களா என்று நான் அறியேன் )//
தமிழகத்தில் வெளியான லீலைகள் பெரும் பாலும் கத்தோலிக்கரல்லாத ,சில சபைகளில் தங்களே தங்களை போதகர்களாக (pastor) அறிவித்துக் கொண்டவர்கள் சம்பந்தப்பட்டே வந்திருந்தாலும் ,கத்தோலிக்க பாதிரியார்கள் சிலரும் சாமார்த்தியமாக லீலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
நலன் விசாரிப்பிற்கு நன்றி பாலசந்தர்.
//
Balachandar has left a new comment on your post "ஒருவனுக்கு ஒருத்தி (அ) ஒருவருக்கொருவர் : கோவியார்,...":
hello tbcd.How are you
//
பல தார மணம் என்பது முன்னாளில் இருந்திருக்க வேண்டும் ஆனால் அப்போதும், இப்போதும், எப்போதும் அது பணம் படைத்தவர்களிடையே தான் அதிகம் இருக்க முடியும்.
வருகைக்கு நன்றி..நெடுன்.
////
nedun said...
ஓரிருவர் செய்யும் பலதார மணம் எப்படி ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தின் கலாச்சார பிரதிபலிப்பாக ஆக முடியும். இதை தனி மனிதர்களின் ஒழுக்கம் தொடர்புடைய விசயமாகத்தான் கருத வேண்டும். மேலும் இந்திய கலாச்சாரம் என்பதே பொய்யான புனைவுதான்
//இந்திய கலாச்சாரம், வெங்காயம், வெள்ளை பூண்டு என்பதெல்லாம், வெட்டிப் பேச்சு என்றே நான் கருதுகிறேன்//
////
//இந்திய கலாச்சாரம், வெங்காயம், வெள்ளை பூண்டு என்பதெல்லாம், வெட்டிப் பேச்சு என்றே நான் கருதுகிறேன்.//
இந்திய கலாச்சாரம், வெங்காயம், வெள்ளை பூண்டு என்பதெல்லாம், வெட்டிப் பேச்சு என்றே நான் கருதுகிறேன்.........
:))
இது .... மறுக்காச் சொல்லு ...
வணக்கம்
நிச்சயம் இது தனி மனிதர்களின் ஒழுக்கம் தொடர்புடைய விசயம்
அதிகாரமும், பணமும் இனைகின்ற இடத்தில் இவை நடக்கின்றன இதில் மதவேறுபாடு இல்லாமல் எல்லா மதத்திலும்
\\ மேலும் இந்திய கலாச்சாரம் என்பதே பொய்யான புனைவுதான்\\
\\ மேலும் இந்திய கலாச்சாரம் என்பதே பொய்யான புனைவுதான்\\
//இந்திய கலாச்சாரம், வெங்காயம், வெள்ளை பூண்டு என்பதெல்லாம், வெட்டிப் பேச்சு என்றே நான் கருதுகிறேன்//
//இந்திய கலாச்சாரம், வெங்காயம், வெள்ளை பூண்டு என்பதெல்லாம், வெட்டிப் பேச்சு என்றே நான் கருதுகிறேன்//
தனி மனித ஒழுக்கமே முக்கியம்
நன்றி
இராஜராஜன்
ஒப்புதலுக்கு நன்றி ஜோ அவர்களே..
புனிதர்கள் யாரும் பிறக்கவில்லை. பிறக்கப் போவதுமில்லை.
தவறே செய்யாதவன் என்று ஒருவனும் இந்த உலகில் இல்லை என்பது எனது உறுதியான எண்ணம்.
நன்றி.
///
ஜோ / Joe said...
தமிழகத்தில் வெளியான லீலைகள் பெரும் பாலும் கத்தோலிக்கரல்லாத ,சில சபைகளில் தங்களே தங்களை போதகர்களாக (pastor) அறிவித்துக் கொண்டவர்கள் சம்பந்தப்பட்டே வந்திருந்தாலும் ,கத்தோலிக்க பாதிரியார்கள் சிலரும் சாமார்த்தியமாக லீலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
///
பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1
இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.
http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html
Post a Comment