யாரடி நீ மோகினி, படம் நேற்று தான் பார்த்தேன். ஏன் பார்த்தேன் என்று இப்போதும் நொந்துக்கொள்கிறேன். சுமார் 1 மணி நேரம் 45 நிமிடம் பார்த்திருப்பேன். அதற்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. என் நல்ல நேரம், நான் குறுந்தகடில் பார்த்தேன். அப்படியே நிறுத்திவிட்டு, கோபத்துடன் தூங்கப் போய்விட்டேன்.
புதுப்பேட்டைப் போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த செல்வராகவன், அந்தப் படம் போனியாகவில்லை என்ற வருத்தத்தில், மசாலா படம் எடுப்பேன் என்று சூளுரைத்து எடுத்தாரோ தெரியவில்லை. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதனை வெற்றி பெற்ற படம் என்றே குறிப்பிடுவது எனக்கு இன்னும் மன உளைச்சலைத் தருகிறது. இவ்வளவு தானா நமது மக்களின் ரசனை. படம் வருமுன், இது ஒரு குடும்பச் சித்திரம் என்பதுப் போல் பேசியதை நினைத்தால் காந்துகிறது. "டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" என்று விஜய் படத்தில் வருவதுப் போல் சத்தமிடத் தோனுகிறது.
படத்தை பார்க்கும் முன் விமர்சனத்தைக் கூட படிக்காமல் தவிர்த்து, முன் முடிவுகள் இல்லாமல் பார்க்க வேண்டும் என்று இந்தப் படத்திற்கா காத்திருந்தேன் என்று நொந்துக்கொண்டேன். இன்னும் எத்தனை முறை சிம்பு படம், தனுஷ் படம் பார்த்துட்டு, இனிமே இப்படி படம் பார்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்யப் போகிறீர்கள் என்று தங்கமணி கலாய்க்கும் போது, படம் பார்த்தால் தானே பவுசு தெரியுது என்று வரும்காலத்தில் பார்க்கப் போகும் அட்டுப் படத்திற்கு இப்பவே "தடுப்பாட்டம்" ஆடினேன்.
படம் எடுத்தால் ஒன்று சூப்பர் மேன், பேட் மேன் என்பதுப் போல் மாயக்கதை (fantasy) காட்டிவிடவேண்டும், இல்லாவிட்டால், வாழ்க்கைக்கு அருகே வருவதுப் போல் புனைவாக (Realistic Fiction) காட்டலாம். நடந்ததை (History,biography,true life incidents) கதைப்படுத்தினால் திசைதிருப்பல் இல்லாமல் உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும். தற்போதைய வேகமான இளைஞர்கள் படமெல்லாம், முதல் வகையும், இரண்டாவது வகையும் கலந்துக் கட்டி, கஞ்சி காய்ச்சுவதில் பிறக்கிறது. அதான்ல் தான் தனிப்பட வகையின் சுவடே இல்லாமல் ரசிப்பதற்கு ஒவ்வாமல் வந்து தொலைகிறது. சூப்பர் மேன்கள் பறப்பதை கேள்விக்குள்ளாக்குவதில்லை. ஏன் என்றால், அது அந்த கதாப்பாத்திரத்தின் சுபாவம். அதையே விஜய் ஒரு சாமனியனாக இருக்கும் போது நடந்தால் சிரிப்புத் தான் வருகிறது. தனுஷ் போன்ற ஒல்லிபிச்சான்கள் ஓங்கு தாங்கான ஆளை அடிப்பதைப் பார்த்தால், சி(ரி)ப்பு சி(ரி)ப்பாகத் தான் இழு(ரு)க்கு.
இரண்டாவது வகையறா படங்கள் தான் தமிழில் இறைந்துக் கிடக்கிறது. ஆனால், இதுப் போன்ற படங்களில், இது நடக்க சாத்தியம் இருக்கு, இவர்கள் சொல்வதுப் போல் நடக்கலாம் என்று படம் பார்ப்பவர்களுக்கு நம்பிக்கை வர வைத்தால் அது படத்திற்கு பலம். சும்மா கதை விடுறான் மச்சி, இதெப்படி நடக்கும். நம்மளை கேனையனாக நினைச்சிட்டானா என்ன என்று கோவம் வந்தால், அது திரைக்கதை அமைத்தவருக்கும், இயக்கியவர்க்கும் இழுக்கு. படம் எடுக்கின்றவர்களுக்கு இந்தப் படம் பல்வேறு தரப்பைச் சென்று அடையும் என்பதால் ஒரு குழப்பம் வருகிறது என்று நினைக்கிறேன். உள்ளதை உள்ளபடிச் சொன்னால் இந்த மட்டத்தில் இருப்பவர்களுக்கு புரியும்மா, என்று குழம்பிப் போய், ரொம்ப எளிமைபப்டுத்திவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், இவர்களின் செயல்களைப் பார்த்தால் பின் புலனே அறியாமல் படம் எடுக்க கிளம்பிவிடுகிறார்களோ என்று தான் தோன்றுகிறது.
"ஏங்க" என்று தனுஷ் வசனம் பேசுவதை விஜயின் "ங்கண்ணா"வுடன் ஒப்பிடலாம். விளங்காத ஒரே பானியில் நடிக்கிறார். வீட்டில் கஸ்தூரி ராஜவை திட்டி பழகினால், அவர் தூக்கில் தொங்கிவிடுவார். எரிச்சல், அப்பா மகன் உறவு கொச்சைப்படுத்தப் படுகிறது. நண்பர்கள் போல் பழகுகிறார்களாம். எனக்கென்னவோ அதைப் பார்த்தால் நண்பர்கள் போல் தெரியவில்லை. ரகுவரன் ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய கடைசி படமாக இது அமைந்தது நம்முடைய போதாத காலமே. ஏனோ, ரகுவரன் இதில் ரொம்ப சிரமப்பட்டு நடித்ததுப் போல் பட்டது. இன்னும் ஓய்வு பெறும் வயதை அடையாத ஒரு மனிதர், இப்படி கிழடு தட்ட சாத்தியமா தெரியவில்லை. ஏதோ 70 வயது தொண்டு கிழம் போல நடித்திருப்பது ஏனோ தெரியவில்லை. ரொம்ப வயசானவர் போல் காட்ட, திரைக்கதையிலும் ஏதோ காட்டவில்லை. எப்படியும் கதையில் சாகடிக்கப் போறோம், அதனால், ரொம்ப மெனக்கெட வேண்டாம் என்று விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.
வாசுவாக வரும் தனுஷ் விரக்தியுடன் இருக்கும் பொழுது, நயந்தாராவைக் கண்டதும் அப்படியே பொதக்கடில் என்று வீழ்கிறார். வேறென்ன...அந்த இழவுப் பிடித்த கண்டதும் காதல் தான். புரோஜெக்ட் மேனேஜர்க்கு (நயந்தாரா) டிரைவரோட கார் கொடுக்கிறாங்களாம். அது சரி, நயந்தாரா காரோட்டுவதுப் போல் காட்ட முடியாது, காட்டினால், மழை விழும் போது மழையயை ரசிப்பதுப் போல் காட்ட முடியாது. ரசித்தால் வண்டி எங்காயாச்சும் மோதிடும். இப்படி பல கோணத்தில் சிந்தித்து எடுத்திருப்பதை நினைத்தால் புல்லரிக்குது. இதெல்லாம் ஒரு பெரிய விடயமே இல்லை, இதை விட கொடுமை எல்லாம் பின்னாடி வருதுன்னு சொல்லாம சொல்லிட்டாய்ங்களோ...?
தனுஷ் வேலை வாங்குவது மகா கொடுமையான அனுபவம். நயந்தரா தனுஷிற்கு அக்கா போல் இருப்பதால், இப்படி மேலதிகாரியாக காட்டிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. ஆங்கிலம் தெரியாமல் தடுமாறுவது என்பது மூலமாக கதாப்பாத்திரத்தின் எந்த முகத்தை நிறுவுகிறார்கள். பரிதாபம் வரச் செய்யும் முயற்சியா...?
தனுஷ் என்ன சாவிக் கொடுத்தால் ஓடும் பொம்மையா. நயந்தாராவைப் பார்த்தால் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார். நயந்தாரா தான் தனுஷின் "நயா"க்ரா (நயந்தாரா+வயாக்ரா). வயாக்ரா எழுச்சி ஊட்டுவதுப் போல் நயனும் தனுஷிற்கு மனஎழுச்சி ஊட்டுகிறார். கொடுமை. தனுஷ் ஓநாய் மாதிரி முகத்தை கோபத்திற்கும், (அவர் முகம் எண் கோனலாய் நெளிவதை தான் சொல்லுகிறேன். அவரின் முகவடிவை அல்ல அல்ல அல்ல), அதையே, சோகத்திற்கும் மாற்றி மாற்றி செய்தால், எதிர் காலம் விஜய் போலவே அமைய பிராகசமான வாய்ப்பிருக்கிறது.
படத்தில் பாடல் தினிக்கப்படுவது, நமக்கு வாயில் பலாப்பழத்தை தோலுடன் சொருகியதுப் போல் இருக்கின்றது. பழம் ருசி தான் என்றால், கொடுக்கின்ற வகையில் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். "ஓ பேபி" பாடல் பண்பலையில் கேட்டு பிடித்த பாடல் வகையில் இருந்தது. அது படமாக்கப்பட்டியிருக்கும் விதம் பார்த்தால், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழ தோன்றுகிறது. அந்தப் பாட்டை பாடும் கூட்டம் யார், ஏன் தொடர் வண்டியில் ஆடுகிறார்கள். ஏன் வீதியில் ஆடுகிறார்கள். ஏன் தனுஷ் நயந்தாரா போகுமிடம் எல்லாம் போகிறார்கள். கேள்விகள்..கேள்விகள்..கேள்விகள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் "தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே" பாதிப்பில் படம் வந்திருக்கிறது. என்ன அந்தப் படத்தில் நாயகிக்கு நாயகன் மேல் காதல் ஏற்கனவே வந்து புத்து குலுங்கியிருக்கும். இந்தப் படத்தில் அப்படி இல்லை. அவ்வளவு தான் வித்தியாசம். நாயகனை ஒரு தலையாக காதலிக்கும் கதாப்பாத்திரம் முதற்க் கொண்டு எல்லாமே அப்படியே.
"நாங்கெல்லாம் எப்படியாப்பட்ட பேமிலி" என்று நயந்தாரா ஆரம்பிக்கும் போதே, இதை எங்கேயே கேட்டியிருக்கோமே என்று பட்டது. வேற ஒண்றுமில்லை கனவான்களே, அவர்கள் குடும்பம் ரொம்ப கட்டுப்பாடான குடும்பமாம். சட்டென்று அந்தக் குடும்பம் ஒரு பிராமனர் குடும்பம் என்று சொல்லிவிட்டால் நீங்கள் தமிழ் திரையுலகை நன்கு புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். ஆச்சரமான குடும்பம் என்றால் என்ன அர்த்தம் என்று யாராச்சும் சொல்லுங்கப்பா. ஏன் மற்ற தமிழர்கள் குடும்பம் எதுவும் அந்த வட்டத்தில் வரவே மாட்டேன் என்று இருக்கின்றது. கண்டதிற்கெல்லாம் வழக்குப் போடுவபவர்கள் இதற்கு ஒரு வழக்கு போட்டால் தான் என்ன.
படத்தில் முதலில் கதாப்பாத்திரங்கள் தோன்றி மறைவதற்கு ஒரு காரண காரியம் தேவை என்பது அடிப்படை. ஒன்றிற்கு மேற்பட்ட உதவி இயக்குனர்களை வைத்துக் கொண்டு, விவாதம் செய்து எடுக்கப்படும் படத்தில் இதுப் போன்ற விடயங்களை விவாதிப்பதில்லை என்றால் என்னாத்தை தான் விவாதிக்கிறார்கள். அந்தப் படம் எடுக்க அந்த 5* விடுதியில் அறை போட்டார்கள் என்று படிக்கும் போது, அப்படி என்னதாண்டா பேசினிங்க (!!??!!) என்று கேட்கத் தோனுகிறது. சகட்டு மேனிக்கு கதாப்பாத்திரங்கள் வருகிறார்கள் போகிறார்கள். குடும்ப படமென்றால் வீட்டில் 40 பேர் ஒன்றாக சுத்தி வருவது என்று யார் முடிவு செய்தார்கள். தமிழ் நாட்டில் எங்கே இத்தனைப் பேர் ஒன்றாக குடியிருக்கிறார்கள். கூட்டுக் குடும்ங்கள் கிராமங்களிலேயே வழக்கொழிந்து போய் விட்டது. சரி கூட்டுக் குடும்பம் என்றால், ஒரு பெண்ணிற்கு ஊட்ட ஒரு குடும்பமே வரிசையில் நிற்குமா. அதுவும் 25 வயசு பெண்ணிற்கு. வெள்ளையும் சொள்ளையுமாக பெருசு சுற்றி வருகிறாராம், எல்லாரும் அவர் சொல்லுவதுப் போல் மந்திரம் சொல்லி, "குசு" விடுகிறார்களாம். கொடுமை. கற்பனை வளம் அபரிமிதமாக பொங்கி வழிகிறது.
கோவனம் கட்டி, முற்றம் போல் உள்ள இடத்தில் நாயகனின் நண்பன் குளிப்பதன் பின்னனி, குளியலறை இல்லையாம் வீட்டில். பெண்கள் எப்படி குளிப்பார்கள் என்றுத் தெரியவில்லை. அதுவும் 40 பேர் இருக்கின்ற வீட்டில், எல்லரையும் விரட்டி விட்டுறுவாய்ங்களோ. தண்டோரோ போட்டு, பெண்கள் குளிக்கப் போகிறார்கள், எல்லாரும் ஓடுங்க, ஓடுங்க என்று. சேரியிலும்,குக்கிராமத்திலும், குச்சுக் குடிசை என்றாலும், தட்டிக் கட்டி குளிப்பாங்க. இவனுங்க, குளியலறை இல்லாத விட்டை,எங்கன பார்த்தானுங்க என்றுத் தெரியவில்லை. .
ரொம்ப தயவு பண்ணி, எல்லா சாதியயையும் சேர்த்திக்கீறாளாம், தனுஷ் வந்தவுடனே,
(சுகுமாரி..?!) கிழம் பழம் பெருமை பேசி தண்ணீர் தெளிக்குது. ஆனால், மற்றவர்கள் அப்படி இல்லை. அதாவது திருமணம் நிச்சயம் ஆன பெண்ணை இன்னோருவன் கட்டிக்கிட்ட ஆட்சேபம் வராமல் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் "நாங்க மாறிட்டோம்" என்றுச் சொல்லக் கூடிய வகையறாவாக இருக்க வேண்டும் என்று பலமாக விவாதித்து, ஏரணம் பார்த்து, செஞ்சிட்டாய்ங்க போலிருக்கு. நல்லா இருங்கய்யா..நல்லா இருங்க.
தனக்கு எது வரும், எது வரவில்லை என்று தனுஷிற்காவது தெரியும்மா என்றுத் தெரியவில்லை. பாம்பை புடலங்காய் என்று நினைத்து கழுத்தில் போடுகிறாராம். அந்தப் பாம்பைக் கண்டவுடன் எல்லாரும் அலறி ஓடுகிறார்களாம். தனுஷ் மயங்கிவிடுகிறாராம். அப்பறம் அந்த பெருசு சொல்லுமாம் " எங்காத்து குழந்தைகள் பாம்பை கையில் பிடிச்சி விளையாடும்" என்று. யோவ், அப்பறம் ஏன்யா, வயலில் எல்லாரும் அடிச்சிப் பிடிச்சி ஓடுறாப்ல காட்டினீங்க. முதல் காட்சியில் காட்டுவதை அடுத்தக் காட்சியிலே கவிழ்ப்பதில் என்ன அப்படி ஒரு ஆனந்தம்.
தில்வாலேயில் மந்திரா பேடி ஷாருக்கின் பின் சுற்றுவதுப் போல் இங்கேயும் ஒரு பெண் சுற்றுகிறார். கதாநாயகிகள் மட்டும் தான் லூசாக சுற்றனுமா, கதாநாயகிகள் தங்கைகள் அப்படிச் சுற்றக் கூடாதா என்று அவரும் லூசக சுற்றுகிறார். அவருக்கு தனுஷைக் கண்டதும் பிடித்துவிடுகிறதாம். மற்றொமொரு கண்டதும் காதல்.
தொடர்ச்சியாகவும் பார்க்க முடியவில்லை. கோவம் வரும், நிறுத்திவிடுவேன். பிறகு கொஞ்சம் தணிந்த பிறகு மீண்டும் பார்ப்பேன். இப்படியாக் 1 மணி நேரம், 45 நிமிடங்கள் பார்த்தேன். நாயகனின் நண்பன், தன்னுடைய வருங்கால மனைவியயை வர்ணித்து பாடும்படி சொல்லவும் படக்கென்று அனைத்துப் போட்டுவிட்டு தூங்குவதற்குப் போய் விட்டேன். என்ன எழுவு படம் இது. இது எப்படி வெற்றி பெற்ற படம் என்று சொல்லுகிறார்கள். இன்னும் ஓடுதாமே திரையரங்குகளில்.
இது தான் வெற்றி பெற்ற படமென்றால், எல்லா வெற்றி பெற்ற படங்களும் நாசமத்து போகட்டும். (நன்றி : அனாதை ஆனந்தன்)
இன்றைய கொத்துப் புரோட்டா : தமிழ்திரையுலகின் சாபக்கேடு யா.நீ.மோ
lables
TBCD,
ஒப்பாரி,
தனுஷ்,
நாசமத்து,
மகா குப்பை,
மச் (2+3+4+5+.....),
மொக்கை,
மோசம்
Subscribe to:
Post Comments (Atom)




26 Comments:
நன்றி!!... நாளைக்குப் பாக்கலாம்ன்னு நினைத்துக் கொண்டிருந்தேன்..... :)
//நாயகனின் நண்பன், தன்னுடைய வருங்கால மனைவியயை வர்ணித்து பாடும்படி சொல்லவும் படக்கென்று அனைத்துப் போட்டுவிட்டு தூங்குவதற்குப் போய் விட்டேன்.//
கேடு கெட்ட தனமாதான் இருக்கு... இந்த கட்டத்தை பார்க்கும் போது வாயில் கெட்ட கெட்ட வார்த்தையாக தான் வந்தது.
நல்ல வேளை நான் இன்னும் இந்த 'கர்'மத்தை பாக்கலை!
தப்பிச்சேன்
/
இது தான் வெற்றி பெற்ற படமென்றால், எல்லா வெற்றி பெற்ற படங்களும் நாசமத்து போகட்டும்.
/
உங்க சொல்லாடல் ரொம்ப நல்லா இருக்கு இந்த பதிவில்
/
தனுஷ் வேலை வாங்குவது மகா கொடுமையான அனுபவம். நயந்தரா தனுஷிற்கு அக்கா போல் இருப்பதால், இப்படி மேலதிகாரியாக காட்டிவிட்டார்களோ என்று தோன்றுகிறது.
/
தனுஷ்க்கு அத்தை மாதிரில்ல இருக்கா!!
//புதுப்பேட்டைப் போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த செல்வராகவன், அந்தப் படம் போனியாகவில்லை என்ற வருத்தத்தில், மசாலா படம் எடுப்பேன் என்று சூளுரைத்து எடுத்தாரோ தெரியவில்லை.//
கிழிஞ்சது போ ! இது செல்வராகவன் படம்ன்ணு யார் உமக்கு சொன்னது?
/
நயந்தாராவைப் பார்த்தால் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார். நயந்தாரா தான் தனுஷின் "நயா"க்ரா (நயந்தாரா+வயாக்ரா). வயாக்ரா எழுச்சி ஊட்டுவதுப் போல் நயனும் தனுஷிற்கு மனஎழுச்சி ஊட்டுகிறார்.
/
:))))))))
/
படம் எடுக்க அந்த 5* விடுதியில் அறை போட்டார்கள் என்று படிக்கும் போது, அப்படி என்னதாண்டா பேசினிங்க (!!??!!)
/
அங்க பேச்சு என்ன வேண்டி கிடக்கு!?!?!?!
/
படத்தில் பாடல் தினிக்கப்படுவது, நமக்கு வாயில் பலாப்பழத்தை தோலுடன் சொருகியதுப் போல் இருக்கின்றது.
/
:))))))))))
//சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் "தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே" பாதிப்பில் படம் வந்திருக்கிறது///
எதையும் எதையும் ஒப்பிடறீரு சாமி?
என் வன்மையான கண்டனங்கள்.
அது எங்க? இது எங்க? ஹ்ம்ம்..
ஆச்சாரமான குடும்பத்தில் குளியரை இல்லாதது, வியப்பு வியப்பு வியப்பு ;)
டிபிசிடி ஐயர்,
யப்ப்பா யப்பா.....ஒப்பிட்டுக்காகச் சொல்லவில்லை......எழுத்தில் லக்கியாருக்கு சரியான போட்டி (பாணி அல்ல).....
எங்கேயோ போய்டீக ....!
:)
அப்போ திருட்டு விசிடில கூடப் படம் பார்க்கக் கூடாதா?
அடடே நான் இன்னும் இரண்டு நாள் கழித்து போட்டியிருக்கலாமோ...
யான் பெற்ற இன்பம் நீங்கள் பெறாமல் போகலாமா...போய் பார்த்துடுங்க..ஜெகதீசன்
//
ஜெகதீசன் said...
நன்றி!!... நாளைக்குப் பாக்கலாம்ன்னு நினைத்துக் கொண்டிருந்தேன்..... :)
//
அந்த வார்த்தையில் நான் திட்டவில்லை என்ற வருத்தம் எனக்கு வந்துவிடும்...
என்ன வார்த்தை என்பதை சூசகமாக சொல்லியீருக்கலாம்..
//
VIKNESHWARAN said...
கேடு கெட்ட தனமாதான் இருக்கு... இந்த கட்டத்தை பார்க்கும் போது வாயில் கெட்ட கெட்ட வார்த்தையாக தான் வந்தது.
//
எங்கள் உள்ளக்குமுறலை எழுத்தில் கொண்டுவந்து விட்டீர்கள்
//த.ம.தா. பின்னுட்டம்// அப்படின்னா என்ன?
சென்ற பதிவு போலவே லேபல் சூப்பர்
//என்ன வார்த்தை என்பதை சூசகமாக சொல்லியீருக்கலாம்..//
சொன்னாதான் பின்னூட்டத்தை போட்டிருக்க மாட்டிங்களே...
//கிழிஞ்சது போ ! இது செல்வராகவன் படம்ன்ணு யார் உமக்கு சொன்னது?//
எனக்கும் கொஞ்சம் டவுட்டாதான் இருந்தது...
TBCD அதெல்லாம் விடுங்க, நயன்தாரா தங்கையாக வரும் பெண் நல்ல அழகா இருக்குங்க..(நமக்கு அது லூஸ் மாதிரி நடந்துக்குது அப்படிங்கற விசயத்தை மட்டும் மறந்துடுவோம் ;) )
/*படத்தை பார்க்கும் முன் விமர்சனத்தைக் கூட படிக்காமல் தவிர்த்து, முன் முடிவுகள் இல்லாமல் பார்க்க வேண்டும் என்று இந்தப் படத்திற்கா காத்திருந்தேன் என்று நொந்துக்கொண்டேன்.*/
நாங்க அனுபவிசுட்டு தானே சொல்றோம்......
PLEASE VISIT: NAIYAANDI NAINA
ரிபிசிடி
நான் முதலில் படம்பார்க்கும்போது சும்மா தான் பார்த்தேன் அதனால் தான் என் வலை விமர்சனத்தில் சுமாராக ஒரு விமர்சனம் வைத்தேன். காரணம் நயந்தாரா கண்ணை மறைத்துவிட்டார். ஆனால் இந்தப்படத்தில் இவ்வளவு நுண்ணரசியல் இருக்கும் என்பது இப்போதுதான் புரிகின்றது.
நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம். பல படங்களில் ஆச்சாரமான குடும்பம் என்றால் பிராமணக்குடும்பத்தையே காட்டுகின்றார்கள். ஏனையவர்கள் எல்லாம் கேடுகெட்டவர்களா? இதற்க்கு வழக்குபோட யாரும் இல்லையா?
அண்மையில் கூட ஜெயா டிவி காமெடி காலனி என்ற நகைச்சுவை மெஹா தொடரில் ஒரு பெண் தன் பெயருடன் ஐயங்கார் என்ற வார்த்தையை சேர்க்கின்றார் ஏன் என அவரின் தந்தை கேட்கும்போது ஐயங்கார் என்றால் தான் ஐஐடியிலும் ஐடி கம்பனிகளிலும் சேர்ப்பார்கள் என ஒருவிளக்கம் கொடுக்கின்றார். சீரியல் தயாரிப்பவர் கே.பாலசந்தர்.
நான் தானுங்க உங்க அதி தீவிர ஆதரவாளர் . பரிசு எங்கேங்க?
//நான், எனக்கு, வாக்கு போடும் முன்னே எனக்கு வாக்கு குத்திய என் அதி தீவிர ஆதரவாளர் யார்...? அறிமுகப்படுத்தி பரிசைப் பெற்றூக் கொள்ளவும்//
அட போங்கப்பா...
அந்த ஸ்கிரின் ஷாட்ட எப்படி உங்களுக்கு அனுப்புறதுன்னு தெரியல.
சொல்லுங்க அனுப்பி வைக்கிறேன்
ஏன் மின்னஞ்சல் முகவரி போட்டு இருக்கேன் பாருங்க..டூவிட்டரில்..அதற்கு அனுப்புங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்
நீங்க ரொம்ப நல்லவர் போல தெரியுது...
//nedun said...
அட போங்கப்பா...
அந்த ஸ்கிரின் ஷாட்ட எப்படி உங்களுக்கு அனுப்புறதுன்னு தெரியல.
சொல்லுங்க அனுப்பி வைக்கிறேன்
//
படத்துல இவ்வளவு குறை சொல்றியே முதல்ல திருட்டு சி.டி. ல பாத்தியே அது கேவலமா தெரியலையா. திருட்டு வீடியோ பாக்குறவனுக்கு இது போதும்.....
அனானி அண்ணாச்சி,
மலேசியாவில் விசிடி வெளியிட்டுவிடுவாங்க..
அதுலே தான் அண்ணாச்சி பார்த்தேன்..
///
Anonymous said...
படத்துல இவ்வளவு குறை சொல்றியே முதல்ல திருட்டு சி.டி. ல பாத்தியே அது கேவலமா தெரியலையா. திருட்டு வீடியோ பாக்குறவனுக்கு இது போதும்.....
///
பொதுவாக விவாதத்தில் அனைவரும் முதலில் (மற்றவர்கள்) கூறியதை முதலில் எழுதி (quote) தங்கள் கருத்து அடுத்து எழுதுவார்கள்
நீங்கள் ஏன் மாற்றி எழுதுகிறீகள்
Post a Comment