சமீபத்திய புதசெவி

சேரியில் இருப்பவன் என்றால் கேவலமா...?

ஒரு ஆங்கிலப்பதிவில், தசவதாரம் பற்றிய பேச்சில், நடிகர் விஜய் குறித்து ஒரு வெ.வெ. இப்படி கருத்து சொல்லுறார்.

"Vijay is a poor guy - he has started to live with this target audience - the slum dwellers and no wonder he bathes once a month and brushes his teeth once a week and never combs or shaves.....

Rajni coming might have made it a kamal rajni affair and the legends might have decided to not interfere with each other."

இதில் மேலோட்டமாக பார்த்தால் விஜய் என்ற ஒரு நடிகரின் மேல் உள்ள விமர்சனமாக கருதலாம். கொஞ்சம் கருத்தை ஆழ்ந்து நோக்கினால், சேரி வாழ் மக்களை இழிவுப்படுத்தும் வரிகள் இவை என்று நமக்கு விளங்கும். சேரி என்றவுடன், சேரி மக்களுக்கு ஒரு இலக்கணம் கொடுக்கிறார். தினமும் குளிப்பதில்லை, பல் விளக்குவதில்லை, தலை சீவுவதில்லை, சவரம் செய்வதில்லை என்று ஒரு கட்டமைப்பு செய்து, இதன் மூலம் அவர்கள் இழிவானவர்கள் என்று பொருள் வருமாறு சொல்கிறார். விஜயும் இழிவானவர்களுக்காக நடிக்க ஆரம்பித்து, இழிவானவராக ஆகிவிட்டார் என்று சொல்லுவதாக கொள்ளலாம்.

சேரிகளில் இருப்பதற்கு மக்கள் கேவலமாக நினைக்கத் தேவையில்லை. ஆனால், சேரிகள் உருவாகவிட்டதற்கு இந்த சமூகம் தான் தலை குணிய வேண்டும். சேரி மக்கள் சேரிகளிலே இருக்க வைப்பதிலும் ஓர் அரசியல் இருக்கின்றது. அரசியல்வாதி நகரங்களில் வாக்கு சேகரிக்க வந்தால், அவர்கள் நாடுவது, நடுத்தர மக்களையோ, மேட்டுக்குடியினரையோ அல்ல. அவர்களுக்கு அரசியல்வாதி தினசரி வாழ்வியலுக்கு தேவையில்லை. ஆனால், விளிம்பு நிலை மனிதர்களாக இருக்கும் சேரி வாழ் மக்களுக்கு அரசியல்வாதிகள் மூலம் விடியல் பிறக்கும் என்று ஒரு நம்பிக்கை விதைத்தால், வாக்குகள் அள்ளலாம் என்று அங்கே கவனம் செலுத்துகிறார்கள். பணம் வாங்கியோ, வாங்கமலோ, சேரியில் உள்ள மக்கள் வாக்கு செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் கவர்ச்சியான நலத்திட்டங்கள் இவர்களை குறிவைத்தே வெளியிடப்படுகின்றது. வண்ண தொலைக்காட்சிப் பெட்டி, கொடுக்கிறோம், அரிசி கிலோ.2.ரூ என்று எல்லாம் சொல்வதெல்லாம், இந்த விளிம்பு நிலை மனிதர்களை குறிவைத்தே தான். தலைவர்களை உருவாக்குவதிலும், நடிகர்களை உருவாக்குதிலும், இந்த விளிம்பு நிலை மனிதர்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது.

சேரிகளில் மக்கள் இன்னும் இருப்பதால் தான் இந்த வாங்குகின்ற சம்பளத்திற்கு வேலைக்கு ஆள் வைக்கும் அளவிற்கு பலரால் இருக்க முடிகின்றது. இந்த சேரி மக்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என்று போராட்டம் ஆரம்பித்தால், டங்கு வார் அந்துவிடும். சேரியில் உள்ள மக்களை குறிவைக்கிறார் விஜய் என்று மேம்போக்காச் சொன்னாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை. திரைப்படங்களை திரையரங்குகளில் கண்டு களிப்பவர்களில் இந்த விளிம்பு நிலை மனிதர்கள் பெரும்பாலனோர். இவர்களை குறி வைக்காமல் எந்த நடிகரும் நடிப்பதில்லை. மேட்டுக்குடி மக்கள் ரசிக்க வேண்டும் என்றா கமல் ஆழ்வார் பேட்டை ஆண்டவா, உலக நாயகனே என்று பாடல் வைக்ககிறார் (அனுமதிக்கிறார்). எந்த ஒரு நடிகருக்கும் அடித்தட்டு மக்களின் ஆதரவு இல்லை என்றால், படம் ஓடாது. பேரங்காடிகளுடன் கூடிய திரையரங்குகளை வைத்து மட்டும், ஒரு படத்தின் முதலீட்டை திருப்ப முடியாது.

இவர்களிடம் பணம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம், ஆனால், சக மனிதனைப் போல் ஆசையும், பாசமும் உள்ள மனிதர்களே. இவர்களை குளிக்காதவர்கள், பல் விளக்காதவர்கள் என்று குறுக்கிப் பார்ப்பவர்களின் பார்வை விசாலம் கடுகை விடச் சிறியது.

தினமும் குளிப்பது மட்டுமே, ஒருவனை நல்லவனாக மாற்ற முடியும்மா..? அல்லது தினமும் குளிப்பவர்கள் எல்லாம் நல்லவர்களா. பட்டையயைப் போட்டுக்கிட்டு, கொட்டையயை மாட்டிக்கிட்டு, ஸ்கெட் போடும் சாமியார்களே நல்லவர்கள் எனும் போது, தான் உண்டு, தன் வேலை உண்டு என்று திரியும் இந்த மனிதர்களை மனிதர்களாக ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம். காலையில் எழுந்த நேரம் முதல் படுக்கைக்கு செல்லும் வரை, கூடிய மட்டும், குற்றங்களை சர்வ சாதரணமாக புரியும் மனிதர்களை விட (பினாமி, வரி ஏய்ப்பு, கருப்பு பணம், தீண்டாமை, லஞ்சம், ஏமாற்றுதல், exploitation) சேரி மக்கள் எந்த விதத்தில் குறைந்தவர்கள்.

இன்றே பாதுக்காபான இடத்தில் இருக்கும் இவர்களை வேலையயைப் பிடுங்கி, சாலையோரத்தில், கஞ்சிக்கு வழியில்லாமல் ஒரு வருடம் அமர வைத்தால் தெரியும் இவர்களின் வலி, வேதனை, ருசி. புளி ஏப்பம் விடுகிறவனுக்கும், பசி ஏப்பம் விடுகிறவனுக்கும் ருசியில் வித்தியாசம் கண்டிப்பாக உண்டு. வாழ்க்கையயை அவர்கள் அனுபவிக்கும் விதம் வேறு விதமாக இருப்பதற்காக அவர்கள் கேவலமானவர்களாக சித்தரிப்பது நியாயமில்லை. உடன் வேலை செய்பவன், உதவி என்று வந்தால், ஒதுங்கி ஓடும் மக்களிடையே, உதவ மனம் கொண்ட மக்கள் இவர்களே. இவர்களின் ரசனையயை கேலி செய்வதன் மூலம் மீண்டும், தங்களது கோர பற்களை வெளிக் காட்டிக்கொள்கிறார்கள். பிறப்பினால், வரும் மேன்மையயை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஃஃஃ

சுத்தமானவன்
ஃஃஃஃஃஃ

தினமும் மூன்று முறை குளித்தாலும்
போகவில்லை
"மனதில் உள்ள உன் அழுக்கு"

தொடர்புடைய பதிவு :

18 Comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

காத்திரமான கட்டுரைக்கு நன்றி.

இந்தச் ‘சுத்தம்' என்பதற்குப் பின்னாலுள்ள அரசியலை இன்னும் உரித்துக் காட்டியிருக்கலாம்.

முரளிகண்ணன் said...

\\காலையில் எழுந்த நேரம் முதல் படுக்கைக்கு செல்லும் வரை, கூடிய மட்டும், குற்றங்களை சர்வ சாதரணமாக புரியும் மனிதர்களை விட (பினாமி, வரி ஏய்ப்பு, கருப்பு பணம், தீண்டாமை, லஞ்சம், ஏமாற்றுதல், exploitation) சேரி மக்கள் எந்த விதத்தில் குறைந்தவர்கள்\\

பொன்னெழுத்துக்களால் எழுதவேண்டியது

முரளிகண்ணன் said...

அது என்ன த.மா.தா பின்னூட்டம்? புதசெவி

rapp said...

நேர்மையான பதிவு. இந்த மாதிரி பட்ட ஆட்கள்தான் இட ஒதுக்கீட்டுலேருந்து எல்லாத்துலேயும் கேனத்தனமான கருத்துக்களை உதிர்க்கறது.

TBCD said...

சுந்தர்,

சேரி மக்களும் இந்த சமூகத்தின் ஒர் அங்கம்.

சுத்தம், ஆச்சாரம் என்று சொல்லி மேட்டிமைத்தனத்தை நிறுவுவதை சொல்லச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் இதன் தொடர்ச்சியாக, அதைப் பற்றி எழுதினால் மகிழ்வேன் :)))

//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
காத்திரமான கட்டுரைக்கு நன்றி.

இந்தச் ‘சுத்தம்' என்பதற்குப் பின்னாலுள்ள அரசியலை இன்னும் உரித்துக் காட்டியிருக்கலாம்
//

nedun said...

தற்போது சுத்தம், ஆச்சாரம் என்று சொல்லி தீண்டாமையை நவீன வடிவத்தில் தூக்கி நிறுத்துகிறார்கள்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று குரல் கொடுத்தால், சுத்த பத்தமாக இருப்பவர்கள்தான் கருவறைக்குள் நுழைய வேண்டும் என்றும் பார்பனர்கள்தான் சுத்தத்தின் பிறப்பிடம் என்றும் கூறுவார்கள். இதுவும் பார்பனீயத்தின் வெளிபாடுதான்

TBCD said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி கண்ணன்

//
முரளிகண்ணன் said...
\\காலையில் எழுந்த நேரம் முதல் படுக்கைக்கு செல்லும் வரை, கூடிய மட்டும், குற்றங்களை சர்வ சாதரணமாக புரியும் மனிதர்களை விட (பினாமி, வரி ஏய்ப்பு, கருப்பு பணம், தீண்டாமை, லஞ்சம், ஏமாற்றுதல், exploitation) சேரி மக்கள் எந்த விதத்தில் குறைந்தவர்கள்\\

பொன்னெழுத்துக்களால் எழுதவேண்டியது
///

TBCD said...

அதாவது தனி மனித தாக்குதல் பின்னுட்டம்.

எ.கா. பாலசந்தர் என்று ஒரு வெ.வே இருக்கார்..அவர் அடிக்கடி நலம் விசாரிப்பார். அதை எல்லாம் அப்படியே வைச்சியிருந்து, தேவையானப்போ, வெளியிட்டு,பதிவை ரிப்ரெஷ் பண்ணிட்டு, நீக்கிட்டோமின்னா, பதிவு பின்னுட்டம் முகப்பில் வரும். மக்கள் பார்வையிலும் இருக்கும்.


//
முரளிகண்ணன் said...
அது என்ன த.மா.தா பின்னூட்டம்? புதசெவி
//

தமிழ்நெஞ்சம் said...

Avan Poraannnu vitturaadheenga boss.
Summa nethiyadi adiccheenga..

சுந்தரவடிவேல் said...

//சேரிகளில் இருப்பதற்கு மக்கள் கேவலமாக நினைக்கத் தேவையில்லை. ஆனால், சேரிகள் உருவாகவிட்டதற்கு இந்த சமூகம் தான் தலை குணிய வேண்டும்.//
சேரிகளை உருவாக்கியதற்கும், உள்ளும் புறமும் சுவர்களை எழுப்பி இன்னும் அவற்றை அப்படியே வைத்திருப்பதற்கும் இச்சமூகம் வெட்கப்பட வேண்டும்.

படம் எடுப்பவர்களும், பார்ப்பவர்களும், விமரிசனம் எழுதுபவர்களும் "சி" செண்டர் படம் என்று ஒரு முத்திரையைக் குத்துகிறார்கள். பெருநகரங்களில் இருக்கும் படித்த மேதாவிகள் "ஏ" என்றும், அதற்கடுத்த தாவிகள் "பி" என்றும், சேரிகள், குப்பங்கள், பட்டிக்காடுகள் "சி" என்றும் செய்துவைத்துக் காப்பாற்றும் ஏற்பாடு எவருடையது? நகரத்திலிருக்கும் படித்தவருடைய இரசனை மேலானதென்றும், கிராமத்து உழைப்பாளரின் இரசனை கீழானதென்றும் கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்கு பெரும்பான்மையானது. அதை நாமும் அப்படியே நம்பிக் கொள்கிறோம். திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஒன்றைப் பற்றி நாம் கேள்வி எழுப்புவதில்லை. அது சாதாரணமாகிவிடுகிறது. அப்படித்தான் இந்தச் சாதி ஏற்றத்தாழ்வுகளும் கட்டமைக்கப்பட்டுக் காக்கப் படுகின்றன.
ஜ்யோவ்ராம் சொன்னதுபோல சுத்தம் என்பது இப்படிக் கட்டமைக்கப்பட்டதுதான். மேற்கத்திய சமூக ஆய்வாளர்கள் சுத்தம் என்பது எப்படி ஒரு சமூகத்தில் சிலரை அடிமைகளாக்கப் பயன்பட்டது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நீரால் புறந்தூய்மை மட்டும்தான் அமையும். வாய்மைதான் அகத்தூய்மையைக் கொண்டு வரும். இதில் புறத்தை மட்டுமே காட்டி ஒருசாரரைப் பழிப்பது, அப்படிப் பழிப்பவரின் அகத்தூய்மையின்மையையே காட்டுகிறது. இவற்றைத் தோலுரிக்க வேண்டியது அவசியம்.
பதிவுக்கு நன்றி.

கயல்விழி முத்துலெட்சுமி said...

கடைசியில் இருக்கும் மூன்றுவரி உங்களுதா..

பதிவு நல்லாருக்கு..

params said...

But slum people also need to realize that they have to change themselves first. If you observe, it is them who are exploiting govt lands, properties. they make the public facilities ugly and unusable.

for eg., i am working in an MNC, where these people working as janitors are supposed to keep the toilets clean. it is only for officers, but these people stealthily use it. that can be tolerated. but they spoil the restrooms big time that sometimes we wonder what is the difference with animals.

Params

TBCD said...

வருகைக்கு நன்றி "ஆங்கில" நெஞ்சம் :)))

///
தமிழ்நெஞ்சம் said...
Avan Poraannnu vitturaadheenga boss.
Summa nethiyadi adiccheenga..
///

TBCD said...

வருகைக்கும் கருத்திற்கு நன்றி ராப்..

(பெயர் காரணம் என்னவோ...? )

///
rapp said...
நேர்மையான பதிவு. இந்த மாதிரி பட்ட ஆட்கள்தான் இட ஒதுக்கீட்டுலேருந்து எல்லாத்துலேயும் கேனத்தனமான கருத்துக்களை உதிர்க்கறது.
///

TBCD said...

சரியாகச் சொன்னீர்கள்....

நன்றி நெடுன்...!!!

///
nedun said...
தற்போது சுத்தம், ஆச்சாரம் என்று சொல்லி தீண்டாமையை நவீன வடிவத்தில் தூக்கி நிறுத்துகிறார்கள்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று குரல் கொடுத்தால், சுத்த பத்தமாக இருப்பவர்கள்தான் கருவறைக்குள் நுழைய வேண்டும் என்றும் பார்பனர்கள்தான் சுத்தத்தின் பிறப்பிடம் என்றும் கூறுவார்கள். இதுவும் பார்பனீயத்தின் வெளிபாடுதான்
///

TBCD said...

பூசை செய்தவன் உயர்ந்தவன், பூசை செய்ய பணம் கொடுப்பவன் இழிந்தவன் ஆனது இப்படித் தான் என்று புதிய கோணத்தை தருகின்றீர்கள்..

உடன் படுகிறேன்.

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சுந்தரவடிவேலர்.

///
சுந்தரவடிவேல் said...

நகரத்திலிருக்கும் படித்தவருடைய இரசனை மேலானதென்றும், கிராமத்து உழைப்பாளரின் இரசனை கீழானதென்றும் கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்கு பெரும்பான்மையானது. அதை நாமும் அப்படியே நம்பிக் கொள்கிறோம். திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஒன்றைப் பற்றி நாம் கேள்வி எழுப்புவதில்லை. அது சாதாரணமாகிவிடுகிறது. அப்படித்தான் இந்தச் சாதி ஏற்றத்தாழ்வுகளும் கட்டமைக்கப்பட்டுக் காக்கப் படுகின்றன.
///

TBCD said...

எல்லா வரியும் நானே எழுதியது தான்.

மண்டபத்தில் எழுதிக் கொடுத்து பதிவு போடுறதா கதை கட்டிட்டாய்ங்களா அதுக்குள்ளாற... :P

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி முத்தக்கா அவர்களே..!!!


///
கயல்விழி முத்துலெட்சுமி said...
கடைசியில் இருக்கும் மூன்றுவரி உங்களுதா..

பதிவு நல்லாருக்கு..
///

TBCD said...

ஐயா,

நீங்க உங்க துணியயை தோய்ச்சி போடுறீங்களா. மடிப்பு போட வெளியே தள்ளு வண்டியில் கொடுக்குறீங்களா.

5***** விடுதியில் அதே சேவைக்கு என்ன விலை தெரியும்மா. நீங்கள் அதில் 5% கூட கூலியாக கொடுப்பதில்லை என்று தெரியும்மா. சேவையயை விலைக்குறைத்து வாங்குவதும் வஞ்சனை தான்.

நீங்க மறைமுகமா, இந்த அடித்தட்டு மக்களை சுரண்டுறீங்க என்று தெரியும்மா.

அவசரத்திற்கு, கால் சட்டையயை தளர்த்தி, தெருவோரம் மூச்சா போகாதவர்கள் இந்நாட்டில் உண்டா. அவர்களை தனித்து பிரித்து குற்றம் சொல்ல வேண்டாம். (சாலை உள்பட) விதிகளை இன்றைய படித்த தலைமுறை மீறுவதுப் போல் எவரும் மீறுவதில்லை.

குற்றம் சமூகத்தில் யார் செய்தாலும் குற்றமே. ஒருவரின் குற்றத்தை கண்ணை மூடிக்கொண்டும், மற்றவரின் குற்றத்தை, அவருடைய பின் புலனை மட்டும் வைத்து எடைப் போட்டு, இட்டுக் கட்டி, கதை பேசுதல் நமக்கு அழகல்ல.

///
params said...
But slum people also need to realize that they have to change themselves first. If you observe, it is them who are exploiting govt lands, properties. they make the public facilities ugly and unusable.
///

இந்த கழிவறை இன்னர்க்கு மட்டும் என்று பிரித்து வைப்பதே கேவலம். ஏன்யா, ஆபீசர்கள் பீ மட்டும் மணக்கும்மோ. அனைவருக்கும்மான கழிவறை என்று வைத்தாலும், அதை நிர்வாகம் செய்ய சரியான திட்டமிடல் வேண்டும்.

வேலை நேரத்தில் பதிவு எழுதும், படிக்கும், உங்களை (என்னை) போன்றவர்கள் தான் அங்கே வேலை செய்யாதவர்களும். அவர் அவர் களத்தில் அவர்கள் அவர்கள் தவறிழைக்கிறார்கள். அடித்தட்டு மக்கள் என்றால் பூதக் கண்ணாடி கொண்டு பார்த்து "ஐய்ய்யோ, வேலை செய்யவில்லை" என்று கூவுவது ....வெட்கக்கேடு.

மிருகங்கள் என்று அவர்களை நீங்கள் சொல்வதை நான் கண்டிக்கிறேன்.

///
for eg., i am working in an MNC, where these people working as janitors are supposed to keep the toilets clean. it is only for officers, but these people stealthily use it. that can be tolerated. but they spoil the restrooms big time that sometimes we wonder what is the difference with animals.

Params
///

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்