மே 1 விடுமுறை என்றதும்மே, தென்கிழக்காசிய பதிவர்களின் குட்டி குழாம், குழம்ப ஆரம்பித்தது. பாரி, ஜெகதீசன், கோவி, டிபிசிடி ஆகியோர், ஒரு சுற்றுலா செல்வதாக முடிவு செய்து, லங்காவி தீவிற்கு போவதாக முடிவு செய்தோம். இதில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், பாரி. அரசு ஒவ்வோரு முறையும் ஆரம்பிப்பார், அங்கே போவோம், இங்கே போவோம் என்று கிள்ளிவிட்டு விட்டு, இறுதியில், குடும்பத்துடன் நீங்க வருவதால் நான் வரவில்லை என்று ஜகா வாங்கிவிடுவார்.
ஜெகதீசன் ஆமத்தூரில் அதி முக்கியமான ஒரு வேலைக் காரணமாக, அவசரமாக இந்தியா பயணிக்க திட்டமிட்டதால், முதல் விக்கெட்டாக அவர் வெளியேறினார். பின்னாடியே, வழக்கமான "குடும்பத்துடன்" பாட்டை பாடி பாரி.அரசும் வெளியேறினார். கோவியார், பிடி கொடுக்காமலே, கொஞ்சம் ஆட்டம் காட்டிவிட்டு, சரி, போகலாம் என்றார். கொடுமை என்னவென்றால், போகலாமா என்றுக் கேட்டது பாரி, கடைசியில் பயணத்தை முடிவு செய்து போய் வந்தது நாங்களிருவரும் தான்.
பினாங்கிலிருந்து, படகு மூலமாக லங்காவி செல்ல திட்டமிட்டு, மே2 ஆம் தேதி பயணிப்பதென்று முடிவு செய்தபடி, மே1 கோவியார் குடும்பத்துடன் வந்திறங்கினார். இம்முறையும் வழக்கம் போல் தாமதம் தான். எப்படியும் நேரத்துக்கு வர மாட்டார்கள் என்று நம்பி, நான் வழக்கமாக எழும் நேரத்திற்கு எழுந்து, மறுபடியும் ஒரு குட்டித் தூக்கம் போட்டேன். அசந்து ஒரு 2 மணி நேரம் தூங்கிய பின், கைப்பேசியில் "வந்துட்டேண்டா" என்று குரல் விட்டார், கோவியார். கிளம்பும் முன்னே, கோவியார், " பெண்டாரா மலைக்குச் செல்வோம் , சிற்றுண்டியயை வெளியே வைத்துக்கொள்வோம்" என்று கூறியிருந்தப்படியால், சமையல் செய்ய ஆர்வாமாக இருந்த மனைவியின் கைகளைக் கட்டிப் போட்டியிருந்தேன் (வார்த்தைகளால் தாங்க..). நடந்தது என்ன, தாமதமாக வந்ததினால், நாங்களும் 10.30 மணி வரை கொலைப் பட்டினி. பின்னார், நன்பகலில் சிற்றுண்டி முடித்தோம். பின்னர், ஆசுவாசப்படுத்திக்கொண்டு, கொஞ்ச நேரம் பதிவுகளின் மொக்கை போட்டு,படித்து, பின்னுட்டம் வெளியிட்டு (கோவியாருக்குத் தான் எவ்வளவு பொறுப்பு...!!!), பின் பயணத்தை ஆரம்பித்தோம்.
பினாங்க் மலைக்குச் சென்று, மலை மேலே செல்ல, அனுமதிச் சீட்டு வாங்கியதில், அந்தி சாயும் காலத்தில் 4.30 மணிக்குத் தான் கிட்டியது. சரி, அருகே உள்ள சிறு நகரத்தில் தமிழர்கள் உணவு விடுதி இருக்குமானால், அங்கே சென்று பசியாறுவோம் என்று கோவியார் வற்புறுத்தியதின் பேரில் (ஈ ஈ..அவர் சைவமாம்...கொடுமை பண்ணுறார்..), ஜியார்ஜ் டவுனுக்கு வந்தோம். அங்கே வுட்லாண்ட்ஸ் உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு, லங்காவி செல்லும் படகிற்கு முன் பதிவு செய்தோம். (105 வெள்ளி, போக வர ). அதன் பின் அரக்க பறக்க, பெண்டேரா மலைக்கு வந்தோம். நாங்கள் வரவும், இழுவை தொடர் வண்டி வந்து சேரவும் சரியாக இருந்தது. முண்டியடித்து ஏறி, மலையேறினோம்.
மேலே ஏறிய பின், வழக்கமான, நிழற்படம் எடுக்கும் சம்பிரதாயங்கள் முடிந்தப் பின், கடந்த முறை பதிவர்களுடன் சென்றப் போது, பார்க்காமல் விட்டுச் சென்ற, தொங்கு பாலம் இம்முறை பார்ப்போம் என்று முடிவு செய்து, அதற்கு ஒரு வண்டியயை அமர்த்தினோம். நாங்கள் எடுத்த வண்டி, ஒரு பிக்-அப் டிரக். மிட்சுபூசி வண்டி. 
நாண்கு சக்கரத்திலும் விசை கொடுக்கும் வசதி உள்ளது. வண்டியினுள் அமராமல், வண்டியில் பொருட்கள் வைக்கும் இடத்தில், அமர்ந்து பயணம் செய்ய அனைவரும் ஆர்மாக இரூக்கவே, வண்டி ஓட்டுனர், குரங்குகளைப் பார்ப்பதுப் போல் பார்த்து, பின்னர், ஏற்றிக்கொண்டார். (5 வெள்ளி வண்டிக்கு + 5 வெள்ளி தொங்கு பாலம் அனுமதி சீட்டிற்கு). 
வண்டியில் இயற்கையயை ரசித்தபடியும், வியந்தபடியும், பேசிக் கொண்டே, தொங்கு பாலம் ஆரம்பிக்கும் இடத்தை வந்தடைந்தோம். அதோ தெரிகிறதே, அங்கே முடியூம், அங்கே வந்து ஏற்றிக் கொள்கிறேன் என்றுச் சொல்லிவிட்டு போய்விட்டர் வண்டி ஓட்டுனர்.
தொங்கு பாலத்தின் நீளத்தை முதலில் நான் கேட்டுக் கொள்ளவில்லை. அங்கே சென்றப் பின், 220 மீட்டர் என்றுச் சொன்னார், அங்கேயிருந்த சீட்டு வழங்குபவர். எட்டிப் பார்த்தேன், ரொம்ப பக்கமாகவே தெரிந்தது. சரி, நீங்கள் முதலில் நடங்கள் என்றுச் சொல்லிவிட்டு, கோவியார் முதலில், பின், அவருடைய மகள், பின் அவர் மனைவி, அதன் பின்னே என் மகளை கையில் பிடித்தபடி நான். நடக்கும் போது 2மீட்டர் இடைவெளி விட்டு நடந்தால், நிலை தடுமாறாமல் நடக்கலாம். கோவியார் குடும்பம் விறு விறுவென்று நடந்து ஒரு கண்காணிக்கும் கூண்டு அருகே சென்று விட்டார்கள். நானோ, கையில் குழந்தை, ஒற்றைக் கை பிடிமானம், எனக்கும் என் முன்னே நடந்த என் மனைவிக்கும் இடைவெளி 2 மீட்டருக்கும் மேல் அதிகமானால், பாலம் லேசாக அசைந்து திகிலூட்டியது. உயரத்தைப் பார்த்தால் பயம் என்று இல்லாவிட்டாலும், மகளை கையில் வைத்திருந்தப்படியால், திகிலாகவே இருந்தது. முதல் பாலம் சுமார் 100 மீ இருந்திருக்கும். அது அறியாமல், அது தான் மொத்தமும் என்று நான் நினைத்துக் கொண்டேன்.
முதல் பாலத்தை கடக்கவும், குழந்தையயை கோவியார் வாங்கிக் கொண்டு நடந்தார். அதன் பின் தான் பார்த்தேன், இன்னும், இரண்டு பாலங்கள். முதல் பாலமாவது சமதளத்தினிடையே தொங்கியது.இதுவே, மேடு, பள்ளம் என்று மிகவும் சிரமமானதாகாவே இருந்தது. ஒரு வழியாக அதை நடந்து, கடந்து, வந்து நிழற்பட வேலைகளையும் முடித்தோம். .
அந்தப் பாலத்தில் ஆங்காங்கே, கால் வைக்கும் போது மர பலகைகள் கிறீச்சிட்டு, திகில் கிளப்பியதும், பலகைகளை மின் கம்பிகளால் கட்டப்பட்டியிருந்ததையும் கவனித்து திகிலூட்டியதையும் நினைவுக்கூர்ந்து அசைப் போட்டபடி, மீண்டும், கிளம்பிய இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கே ஆடை, விளையாட்டு சாமான்களை வாங்கிவிட்டு, குழந்தைக்கு உணவு கொடுக்க சற்று ஒய்வு எடுத்தோம்.
மலையின் மேலே எப்படி இந்த வாகனங்கள் வருகின்றது. அந்த வழியிலே இறங்கினால் நன்றாக இருக்கும்மே என்று தோன்றியது. சரி, கோவியார் வருமும் பதிவுக்கு ஏதாவது பெயருகிறதா என்று எங்கள் வண்டியோட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். பெண்டேரா மலையில் இருந்து பார்த்தால் பினாங்கி பெரும்பகுதியயை மேலிருந்து ரசிக்கலாம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 710 மீ உயரத்தில் இருக்கின்றது. வெள்ளையர்களின் கோடை விடுதிகளாகவே இது கட்டப்பட்டதாம். இங்கே சேவகம் செய்ய மலையேறிய குடும்பத்தினர்கள் மட்டும், சாலை வழியாக மேலே இறங்கவும், ஏறவும் அனுமதி உண்டு. மற்றவர்களுக்கு இழுவை வண்டி தான், என்று தகவல்கள் சொன்னார். 3000 பேர் வரை அந்த மலையிலே இருப்பதாகச் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. வனவிலங்குகள் வராதா என்றுக் கேட்டதற்கு அவ்வப்போது பாம்புகள் வரும். ஆனால், அவைகளுக்கு மனிதர்களை பார்க்கப் பிடிப்பதில்லை, அதனால் ஓடிவிடும் என்று வெகு சாதரணமாக சொன்னார். மலையின் கீழே வண்டியில் இறங்கினால் நன்றாக இருக்கும்மே என்று தோன்றியது. அதை
பேச்சோடு பேச்சாக, கேட்டேன். சற்று தயங்கி, பின்னர் 80 வெள்ளி ஆகும் என்று சொன்னார்.
கோவியார் வரவும், அவரிடம் விவரித்தவுடன், அவரும் அதை மகிழ்ச்சியுடன் ஆமோதித்து, போகலாமே என்றார். இரு குடும்பமும், வண்டியின் பின்னே, அமர்ந்துக் கொண்டும், நின்றுக் கொண்டும், வண்டியில் கலாட்டா செய்தபடி கீழே இறங்கினோம். 
வழியில் குரங்குகள் சில எங்களைப் பார்த்து எங்கள் வேலை நீங்கள் ஏன் செய்கிறிர்கள் என்று நலம் விசாரித்ததன.
இழுவை வண்டி நிலையத்தின் அருகே தான் வண்டியயை நிறுத்தி வைத்திருந்தோம். வண்டியில் கீழே இறங்கியதோ, மலைக்கு பின் புறம். மலையின் கீழே வந்தவுடன், வண்டியினுள் அமர்ந்து, கிளம்பிய இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அதன் பின், மீண்டும், ஜீயார்ஜ் டவுனுக்குச் சென்று உணவருந்திவிட்டு, வீடு நோக்கி விரைந்தோம்.
-தொடரும்.
பி.கு:-
குழப்பத்தை தவிர்க்க, அல்லது அதிகரிக்க, மே2 ஆம் தேதி பயணக்கட்டுரை அண்ணன் கோவியார் எழுதுவார். அதன் தொடர்ச்சியான மே3 ஆம் தேதி நான் எழுதுவேன்.
சூறாவளி பதிவர் சுற்றுலா : பெண்டேரா மலை
lables
அனுபவம்,
பதிவர் சதுரம்
Subscribe to:
Post Comments (Atom)




22 Comments:
:)
நான் தான் வரமுடியலை..... :(
நீங்க போன முக்கியமான பணி என்ன ஆச்சு...????
///
ஜெகதீசன் said...
:)
நான் தான் வரமுடியலை..... :(
///
கோவியாரின் படத்தை முதன் முதலாக வலையுலகம் அறியத்தந்திருக்கிறீர்கள். அவரிடம் சொல்லிவிட்டுத்தான் போட்டீர்களா?
அவருடைய விண்மீன் வாரத்தின் போது படம் போட்டார்.
இதற்கு முந்தைய சுற்றுலாக்களின் போதும் போட்டு இருக்கேன். இப்பவும் அவர் அனுமதியுடனே போட்டு இருக்கேன்.
கோவியாரின் நலன் மீது உங்களுக்கிருக்கும் அக்கறை தெரிகிறது வாத்தியார் ஐயா..
///
SP.VR. SUBBIAH said...
கோவியாரின் படத்தை முதன் முதலாக வலையுலகம் அறியத்தந்திருக்கிறீர்கள். அவரிடம் சொல்லிவிட்டுத்தான் போட்டீர்களா?
///
//////அவருடைய விண்மீன் வாரத்தின் போது படம் போட்டார்./////
நடுவில் ஒரு புத்தகப்பணி காரணமாக ஒரு மூன்று மாதகாலம் (நேரமினமையால்) நான் பதிவுகளுக்குள் எட்டிப் பார்க்கவில்லை. அதில் அவருடைய விண்மீன் வாரமும் அடங்கும். இப்போது தேடிப்பிடித்து அவருடைய அந்த வாரப்பதிவுகளைப் படிக்கிறேன்.
/////கோவியாரின் நலன் மீது உங்களுக்கிருக்கும் அக்கறை தெரிகிறது வாத்தியார் ஐயா.///
இரண்டாண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு படத்தை (ஏகப்பட்ட நிபந்தனைகளுடன்) மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அதனால்தான் கேட்டேன்:-))))
ஆஹா..கட்டுரையோடு ஹீரோக்கள் படங்கள் அசத்தல்..
(நான் கடைசிப் படத்தைச் சொல்லல :P )
//SP.VR. SUBBIAH said... இரண்டாண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு படத்தை (ஏகப்பட்ட நிபந்தனைகளுடன்) மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அதனால்தான் கேட்டேன்:-))))//
வாத்தியார் ஐயா,
நீங்கள் சொல்வது வடிகட்டின ... தூய்மையான பொய் ! :)
நான் உங்களுக்கு அனுப்பிய மின் அஞ்சல் இதோ, இதில் எங்கே நிபந்தனை இருக்கிறது ?
--------
கோவி.கண்ணன் to சுப்பையா.SP.VR
show details 11/20/06 Reply
சுப்பையா ஐயா !
தங்களுடன் உரையாடியது மிக்க மகிழ்வை அளிக்கிறது. இத்துடன் எனது படம் இணைத்துள்ளேன்.
கவியரசரின் பாடல் பிறந்த கதை பற்றி சுவைபட தொடராக எழுதுங்கள் !
--
அன்புடன்,
கோவி.கண்ணன்
அப்படியா ஐயா...!!!!
... என்ன நிபந்தனைகள்..?
///
SP.VR. SUBBIAH said...
இரண்டாண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு படத்தை (ஏகப்பட்ட நிபந்தனைகளுடன்) மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அதனால்தான் கேட்டேன்:-))))
///
பயணக்கட்டுரை அருமை.. (யான்/தான்) பெற்ற இன்பத்தை வையகத்துக்கு அளித்ததற்கு நன்றி..
////தங்களுடன் உரையாடியது மிக்க மகிழ்வை அளிக்கிறது. இத்துடன் எனது படம் இணைத்துள்ளேன்./////
உரையாடியதை நினைவு படுத்திப் பாருங்கள் கண்ணன்:-))))
அழகாக உள்ளது..லங்காவி பதிவு...????
நன்றி...(நரசிம்மன்..??)
///
narsim said...
பயணக்கட்டுரை அருமை.. (யான்/தான்) பெற்ற இன்பத்தை வையகத்துக்கு அளித்ததற்கு நன்றி..
///
கோவியாரின் உரையாடல்களைக் கூட அப்படியே நினைவில் வைத்திருக்கும் அளவிற்கு அவரின் பெரிய அபிமானியா நீங்க... :)))))))
அவருடைய ஞாபக மறதி ரொம்ப பிரசித்தம்..
ஜெகதீசனிடம் கேட்டால் சொல்லுவார்..
///
SP.VR. SUBBIAH said...
////தங்களுடன் உரையாடியது மிக்க மகிழ்வை அளிக்கிறது. இத்துடன் எனது படம் இணைத்துள்ளேன்./////
உரையாடியதை நினைவு படுத்திப் பாருங்கள் கண்ணன்:-))))
///
வெகு விரைவில் வெளி வரும்... :)))))
///
பேரரசன் said...
அழகாக உள்ளது..லங்காவி பதிவு...????
///
//TBCD said...
கோவியாரின் உரையாடல்களைக் கூட அப்படியே நினைவில் வைத்திருக்கும் அளவிற்கு அவரின் பெரிய அபிமானியா நீங்க... :)))))))
அவருடைய ஞாபக மறதி ரொம்ப பிரசித்தம்..
ஜெகதீசனிடம் கேட்டால் சொல்லுவார்..
//
அது ஞாபக மறதி இல்லைய்யா...எனது நினைவு திறன், ஒரு முறை பார்த்த KL புதுராயா பேருந்து நிலைய தோற்றம் சரியாகவே நினைவு வந்ததால் தான், இறங்கிய இடம் தெரியாமல், எல்லா நகரிலும் ஒன்றுபோலவே பேருந்து நிலையம் அமைத்திருப்பார்கள் போலும் என்று சொன்னேன்.
:)
//SP.VR. SUBBIAH said...
உரையாடியதை நினைவு படுத்திப் பாருங்கள் கண்ணன்:-))))
//
வாத்தியார் ஐயா,
உங்களிடம் யாரும் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் யார் பேசுவது, யாருக்கு தலையை மட்டும் ஆட்டும் வாய்ப்பு என்பது உங்களுக்கே தெரியும்.
:)
//
அது ஞாபக மறதி இல்லைய்யா...எனது நினைவு திறன், ஒரு முறை பார்த்த KL புதுராயா பேருந்து நிலைய தோற்றம் சரியாகவே நினைவு வந்ததால் தான், இறங்கிய இடம் தெரியாமல், எல்லா நகரிலும் ஒன்றுபோலவே பேருந்து நிலையம் அமைத்திருப்பார்கள் போலும் என்று சொன்னேன்.
:)
//
நம்ம பார்த்த JB பஸ்ட்டாண்ட் வேற மாதிரி இருந்ததே.... அதை ஒரு இரவுக்குள் மறந்து "மலேசியால எல்லா பஸ்ட்டாண்டும் ஒரே மாதிரி இருக்கும் போல"ன்னு நினைச்சது எப்படி
//
அது ஞாபக மறதி இல்லைய்யா...எனது நினைவு திறன், ஒரு முறை பார்த்த KL புதுராயா பேருந்து நிலைய தோற்றம் சரியாகவே நினைவு வந்ததால் தான், இறங்கிய இடம் தெரியாமல், எல்லா நகரிலும் ஒன்றுபோலவே பேருந்து நிலையம் அமைத்திருப்பார்கள் போலும் என்று சொன்னேன்.
:)
//
ஏனோ தெரியலை.. KL (பேருந்து நிலையம் மாதிரியே இருக்கும் பட்டர்வொர்த் பேருந்து நிலையம்ன்னு நீங்க நினைத்த) பேருந்து நிலையம் பக்கத்தில் ஒரு வாடகை வண்டி ஓட்டுனரிடம் நீங்கள் இந்தா இருக்குற பினாங் போறதுக்கு 500 வெள்ளியான்னு கேட்டதும், அவர் கேவலமா ஒரு பார்வை பார்த்து நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியுமான்னு கேட்டதும் தானா நினைவுக்கு வருகிறது....
//ஜெகதீசன் said... நம்ம பார்த்த JB பஸ்ட்டாண்ட் வேற மாதிரி இருந்ததே.... அதை ஒரு இரவுக்குள் மறந்து "மலேசியால எல்லா பஸ்ட்டாண்டும் ஒரே மாதிரி இருக்கும் போல"ன்னு நினைச்சது எப்படி//
வாங்க புன்னகை மன்னரே,
இதே கேள்வியை அங்கேயே கேட்டு இருந்தால் அதே பேருந்தில் நாம் சென்று இருக்க முடியுமே.
:)
//
கோவி.கண்ணன் said...
//ஜெகதீசன் said... நம்ம பார்த்த JB பஸ்ட்டாண்ட் வேற மாதிரி இருந்ததே.... அதை ஒரு இரவுக்குள் மறந்து "மலேசியால எல்லா பஸ்ட்டாண்டும் ஒரே மாதிரி இருக்கும் போல"ன்னு நினைச்சது எப்படி//
வாங்க புன்னகை மன்னரே,
இதே கேள்வியை அங்கேயே கேட்டு இருந்தால் அதே பேருந்தில் நாம் சென்று இருக்க முடியுமே.
:)
//
"மலேசியால எல்லாப் பேருந்து நிலையமும் ஒரே மாதிரி இருக்கும் போல"ன்னுற உண்மையையே நீங்க 4 மணி நேரம் கழித்து தான சொன்னீங்க.....(நல்லா யோசிச்சுப் பாருங்க... அந்த டாக்ஸி டிரைவர் யோவ் இது கோலாலம்பூர் ன்னு சொன்னப்புறம் தான இந்தப் பொன்மொழியையே உதிர்த்தீங்க........ )
கோவி & ஜெகதீசன், நாரதர் கலகம் நன்மையில் தான் முடியனும்.. ( யாருக்கு நாரதருக்குத் தான்...!!!!!)
அதனால், நான் கட்டைப் பஞ்சாயத்துப் பண்ணுறேன்..
ஒரு 10000 வெள்ளி தள்ளுங்க..
ஆனாலும் கோவியாரின் நினைவுத்திறனைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்...
அது KL புதுராயா பேருந்து நிலையம் தான் எனத் தெரிந்ததும்.."ஓ இது KLலா..., அப்படின்னா இங்க பக்கத்துல ஒரு முருகன் கோவில் இருக்கும்.. அதுக்குப் பக்கத்துல ஒரு நல்ல தமிழ் சாப்பாட்டுக் கடை இருக்கு"ன்னு சொல்லி ஒரு நல்ல கடைக்குக் கூட்டிப் போய் சாப்பாடு வாங்கித் தந்தார்....
(அவ்வளவு பெரிய பேருந்து நிலையம் நினைவில் இல்லாத அவருக்கு அந்த சாப்பாட்டுக் கடை மட்டும் நல்ல நினைவில் இருந்தது பற்றி நான் ஒன்னும் சொல்லப் போறதில்லை......)
:P :P :P
Post a Comment