சமீபத்திய புதசெவி

உயர உயர பறந்தாலும் ஊர் "குருவி" பருந்தாகுமா..? : (அ+ஆ)^2

விஜய்க்கும் நடிப்பிற்கும் என்ன சம்பந்தம்மோ, அதே அளவு சம்பந்தம் தான் படத்தின் தலைப்பிற்கும் படத்திற்கும். அட தலைப்பில் எல்லாமா, குறை கண்டுப்பிடிப்பீங்க என்று முனுங்குகிறவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் "கொல்ல" ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தில் நீங்கள் எங்கு கை வைத்தாலும் மாட்டுவது குறையன்றி, வேறில்லை.

இந்தப் படத்தைப் பற்றி, பத்தி பத்தியாக எழுதினால், உங்களுக்கும் பற்றிக் கொண்டு வரும் என்று தெரிந்ததால், தலைப்பிட்டு, சிறிய குறிப்புகளாக எழுதுகிறேன். கோவம் அளவை மீறிவிட்டால், தயவு செய்து, திரையயை உடைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

லட்சத்தில் ஒருவன்
திரைக்கதையில், தரணி கலக்குவார் என்று நம்பிப் போய் ஏமாந்த லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதால், நான் லட்சத்தில் ஒருவன் ஆகிவிட்டேன். இதற்காக இளைய தொளபதி விஜய்க்கு நன்றி.

கட்டுடைத்த காளை
படம் முழுக்க, விஜய், இயற்பியல் விதிகளை உடைத்தெறிகிறார். நீருக்குள் தூங்குகிறார். ஒரு இழுவை பந்துப் போல் தண்ணீர் மேல் நிற்கிறார். பறக்கிறார். ஒரு கிமி தூரத்திற்கு தாவுகிறார். 5 நிமிடத்திற்குள், 50 கிமியயை கடக்கீறார். இதுப் போன்ற பலவிதமான இயற்பியல் விதிகளை உடைத்தது, கட்டுடைத்தல் செய்ததால்,விஜய் இனிமேல் பிந விஜய் என்றழைக்கப்பட வேண்டும் என்பது என் அவா. (பிந பிநாயில் அல்ல.அல்ல...அல்ல). அவருக்கு மாறுவேடத் திலகம் என்று வேறு ஒரு பட்டம் கொடுக்கவும் திட்டமிருக்கிறது. முந்தைய படத்தில் மூன்று நாள் தாடி, இந்தப் படத்தில் இரண்டேமுக்கால் நாள் தாடி என்று பெரிய மாற்றம் செஞ்சதாலே, எனக்கே வித்தியாசம் தெரியமா, எப்போ, கதாநாயகன் எண்ட்ரி என்று டர்னா,டண்டனக்கா பாட்டின் போது கேட்டு, பின்னர், தெளிவுப் பெற்றேன். விஜயின் அறிவுரைகள் என்று ஒரு புத்தகம் போட நான் காத்துக்கிட்டு இருப்பது தெரிந்து, படத்தின் ஆரம்பத்திலே ஏகப்பட்ட அறிவுரைகள். நான் அதை எல்லாம், அப்படியே பொறுக்கி எடுத்து வைச்சியிருக்கேன். (குப்பையயை பொறுக்கத் தானே முடியும்)

திரைக்கதைச் செம்மல் தரணி
மோசடி வழக்கில் இவர் மீது வழக்கு பதிவு செய்ய வழியிருக்கிறதா என்று பலர் வழக்குரைஞ்ர்களிடம் கேட்பதாக செய்திகள் வருகிறதாம்.நல்ல திரைக்கதை அம்சமுள்ள படம் கொடுப்பார் என்று நம்பி ஏமாந்தவர்களின் செயல் இது என்று இன்னமும் நம்பாமல் தாடியயை சொறிகிறாராம் தரணி. அந்த கார் பந்தயம் (டப்பா வண்டியில் டர்போ வண்டிகளை முந்தி, சோழாவரம் போன்ற பந்தைய திடல்களை கேவலப்படுத்திய) போன்ற அருமையான காட்சிகளை சொன்னவர், விஜயின் அள்ளக்கையாக இருந்தாலும், சரி தரணியின் உதவியாளராக இருந்தாலும் சரி, அவர் வெகு விரைவில் ஒரு மசாலா திரைப்பட இயக்குனர் ஆகி நம்மை சோதிப்பார் என்பது மட்டும் இப்போதே சொல்லி வைக்கிறேன். கதாநாயகிக்கு ஒரு நல்ல அலுமினிய பாத்திரமாவது வாங்கி கொடுங்க தரணி ஐயா, படத்தில் தான் ஓட்டை உடைசலான பாத்திரமா தந்திட்டிங்க. ஒரு துண்டோட திரிஷாவை நிப்பாட்டினால், மக்கள் படம் பார்ப்பாங்க என்று நீங்களே நினைத்து அந்தக் காட்சியயை எடுத்திருந்தால், மன்னிக்கனும் தரணி, பொத்தென்று நீங்கள் எங்கள் மனதிலிருந்து விழுந்துவிட்டீர்கள். கில்லியுடன் ஒப்பிட்டு இந்தப் படத்தை டப்பா என்றுச் சொல்லவில்லை என்பதை யாரும் சொல்லாவிட்டாலும், நீங்களாகவே உணர்ந்தால் உங்களுக்கு இன்னும் சிந்திக்கும் மூளை இருக்கு என்று தட்டிக் கொடுத்துக்கொள்ளுங்கள்.

யாருங்க அது கலை இயக்குனர். வெப் கேமில், கடப்பாவையே, காட்டுறவரு. உலகம் எங்கெயோ போயிட்டுயிருகுதுங்கண்ணோவ். நீங்க இன்னும் வெப் கேமிலே உலகத்தை காட்டிக்கிட்டு இருக்கீங்க.

காமநெடி விவேக்
பெருச்சாளி வி(வ)காரங்களையும், டவுசர் காட்சிகளையும் விட்டு வெளியே வாங்க சின்னத்தனமான கலைவாணரே (கலைவாணர் எங்களை மன்னிக்கட்டும்). உங்களுக்கு எதிரி வடிவேலு அல்ல, நீங்களே தான் என்று எங்களுக்குத் தெரியும் உங்களுக்கு எப்போ புரியும்.

கிழிஞ்சுப் போன கிளிஷேக்கள்

-போட்டியில் நாயகன் வெற்றி பெறுகிறார். உடனே பாட்டு. "அத்தனைக்கும் மேல் நாம அண்ணன் தம்பிடா, நீ தான் என் தெய்வம் ".
-நாயகன் கதாநாயகியயை திட்டுகிறார். உடனே கற்பனை பாடல்.
-நாயகன் நாயகிக்கு அறிவுரை சொல்லுகிறார்
-அப்பா ரத்தம் பட்ட, கல்லிலே, குட்டி வில்லனை கொல்லுகிறார்.
-கதாநாயகனின் சேவையயை காவல் துறை ஏற்று, தண்டனைக் குறைப்பு செய்கிறது, பாராட்டுகிறது
-நாயகி நாயகனை அடையாளம் கண்டுப்பிடிப்பது இடையில் பிடிக்கும் போது மட்டுமே.

திரிஷா...லூசுஷா..
அஞ்சு நிமிடம் இடைவெளி கொடுத்தால், திரிஷா கணவு காணத் தொடங்குகிறார். அவுத்த வரை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று திரிஷாவும் கொஞ்ச நாளில் இறங்கிவிட்டார் போல் தெரிகிறது. நான் செத்துப் போவதுப் போல் நடிக்க மாட்டேன் என்று எல்லாம் வசனம் பேசும் பொண்ணு, இப்படி கேவலமா எல்லாம் நடிக்க மாட்டேன் என்று எப்போது சொல்லுமோ தெரியவில்லை. வழக்கம் போல அறிவுரைகளை கேட்டுக் கொண்டு லூசுத்தனமாக நடித்திருக்கிறார். ஓடுகிறார், ஓடுகிறார், கல்யாணியயை (பராசக்தி)விட அதிகமாக ஓடுகிறார். திரிஷா ஏன் ஒல்லியாக இருக்கிறார் என்பதன் ரகசியம் தெரிந்தது. விஜய் கூட இன்னும் இரண்டு படங்கள் நடித்தால், எலும்பு மட்டுமே மிஞ்சும்.

டவுசர் பாண்டி வில்லன்கள்
துள்ளாத மணம் துள்ளும் படத்தில் "பாரி" என்று ஒரு நடிகர் வருவார். ஆள் ஓமக்குச்சி போல் இருப்பார்,ஆனால் உதார் விடுவார். அதுப் போலத் தான் நம்ம குருவியயை எதிர்ப்பவர்களின் நிலை. என்ன, அவர்கள் ஓங்குதாங்காக இருந்தாலும், விஜயின் உத்வேகத்தின் முன் தூசியாகிவிடுகிறார்கள். விஜய் பேசாம ரங்க ராட்டினம் சுற்றலாம். எல்லரையும் காலைப் பிடித்து சுற்றி எறிகிறார். ஒலிபிக் தட்டெறிதல் போட்டிக்கு அனுப்பினா, எல்லா பதக்கமும் நமக்குத் தான். "ஒரு 100 பேர் சேர்ந்த அடிச்சா தான் இப்படி அடிப்படும்" என்று விஜய் கையால் அடிப்பட்ட சுமனைப் பார்க்கும் மருத்துவர் சொல்கிறார். ஏண்டா, 100 பேர் சேர்ந்தடிச்சா,செத்துப் போவாண்டா, பேக்குகளா என்று நாம் யாரும் அவங்களுக்கு சொல்ல முடியாது. அதனால், இன்னும் சில படங்களில் இதை நான் கேட்டுத் தான் ஆகனும்.
சுமன், ஆஷிஷ் வித்யார்த்தி, இன்னும் கொஞ்சம் சில்லறை தடியன்கள் என்று அத்தனை பேரும் விஜயின் ஆக்ரோஷ்த்தில் காலியாகிவிட்டனர். அடுத்தப்படத்தின் வில்லன்களையும் இப்பவே அடிச்சு சாய்ச்சிட்டார் விஜய், அடுத்தப் படத்திற்கு வில்லன் கிடைக்காமல் அல்லாடுறாங்களாம்.

கதை..வெந்த கதை

பழி வாங்கும் கதை என்று யாராச்சும் சொல்லியிருந்தா அது தவறு. மக்களுக்காக, விஜய் பிறந்த கதை என்பதே சரி.

இந்தப் படத்தை விமர்சிப்பதன் மூலம் , நான் எப்பேர்ப்பட்ட மொக்கைக்கும் விமர்சனம் எழுதத் தெரிந்தவன் என்ற நிலையயை அடைந்தவிட்டவன் என்று நீங்கள் அனைவரும் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.

ஊர் சுற்ற வந்த கோவியரை குடும்பத்துடன், நள்ளிரவு 12.00 மணிக் காட்சிக்கு இழுத்துச் சென்று இம்சித்ததற்கு, இந்தப் பதிவின் மூலம் என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

37 Comments:

தமிழ்நெஞ்சம் said...

என் மனசுல இருந்ததை அப்படியே கொட்டித் தீர்த்துட்டீங்க.. என்னால இவ்வளவு சீரான நடையில எழுத முடியாது.. ஆனால் உங்கள் பதிவைப் படித்ததும் புரிந்துகொண்டேன்.

இரத்தம் வர வர எவ்வளவு அறுத்தாலும் 'இந்தப்படத்தைப் பற்றி அறுத்தால்' தகும் எனத்தெரிந்துகொண்டேன்.

ஏன்யா இப்படிப் படம் எடுக்கிறீங்க.. டிவி. விளம்பரம் கொடுக்கிறாங்க. அதிலே 'சுளுக்கெடுக்கனும்னா குப்புறப் படுக்கணும்னு' சொல்லிக்கிறாங்க. உடனே '50+ வயது ஆயா - குப்புறப்படுக்குது' - இதுவாய்யா காமெடி.

இதைக் காமெடின்னு சொல்லிக்கிட்டு சிரிச்சா.. சிரிச்சவன் கண்டிப்பா 'நிம்ஹான்ஸ்' க்குதான் போகனும்.

தமிழ்நெஞ்சம் said...

(:-
-:)

(:-:)

(::--::)

(::::----::::)

குருவி படத்தை யார் யார் பார்த்தாங்களோ..அவங்களுக்காக இந்த 'ஸ்மைலீஸ்' ஐச் சமப்பிக்கிறேன்.

தமிழ்நெஞ்சம் said...

(:-
-:)

(:-:)

(::--::)

(::::----::::)

குருவி படத்தை யார் யார் பார்த்தாங்களோ..அவங்களுக்காக இந்த 'ஸ்மைலீஸ்' ஐச் சமப்பிக்கிறேன்.

Techno said...

Labels: TBCD, குருவி, கேவலம், தரணி, திரைப்படம், படுகேவலம், மகா குப்பை, மோசம், விஜய்

லேபில் போடுவதில் கூட இப்படி ஒரு கொலைவெறியா ?

சரி...இன்றைய சூடான இடுகைக்கு துண்டு போட்டுடீங்க...

கோவி.கண்ணன் said...

இந்த படத்தைப் பார்த்ததுமே உங்களிடம் சொல்லிவிட்டேன், "கு"-வில் ஆரம்பித்து மூன்றெழுத்தில் பெயர் வைக்க விரும்பி இருப்பார்கள் போல் இருக்கு, பேசாமல் "குப்பை" என்று வைத்திருக்கலாம்.

"விஜய் டிரேட் மார்க் படம்" என்ற வட்டத்துக்குள் சிக்கிவிட்டார் விஜய். இனி(யும்) இது போன்ற குப்பைகளை மட்டும் தான் அவரால் கொடுக்க முடியும்.

"நீ என்ன செய்தாலும் சனங்க பார்பாங்க !" - அப்பன்காரங்க ஏற்றிவிட்டு கெடுப்பதுதான். எஸ் ஏ சந்திரசேகர் வாழ்க !

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா ரசிச்சுப் படிச்சேன். labels டாப்.!

ஜே கே | J K said...

நீங்களும் பாத்துட்டீங்களா??

அடக்கொடுமையே.

இங்கயும் வந்துட்டு போங்க.

http://saralil.blogspot.com/2008/05/blog-post.html

நந்தா said...

டிபிசிடி. லேபிள்ஸ் இன்னும் டாப்பு...

நல்ல வேளை எனக்கும் சேர்த்து நீங்களே குமுறிட்டீங்க.

நேத்து டீவியில விஜய் பேட்டியையும், குருவி ப்ரிவியூவும் போட்டிருந்தான். அவங்க கேககற கேள்வியும், அதுக்கு இளைய தளபதியோட பதிலும்.... கொடுமையே. நடிகர்களை மகானுபாவர்களாக பார்க்க வைப்பதற்கு இது போன்ற டீவி ஷோக்களும் ஒரு காரணம்தான்.

யாரைச் சொல்லி என்ன சொல்ல. இந்த படத்தையும் "எங்க ஆளு கலக்கி எடுத்திருக்கான் பாரு"ன்னு சொல்லிட்டு திரிய ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யுது..

http://blog.nandhaonline.com

கருப்பன்/Karuppan said...

இந்த படத்தையும் நாங்க 1000 நாள் ஓட்டுவம்ல!!

எலய தலவிதி படம்னா சொம்மாவா???

இப்படிக்கு,
விசிலடிச்சான் குஞ்சு.

உஸ்ஸ்.... படம் ஊத்திக்கிச்சா, இன்னிக்கு நைட் நல்லா தூக்கம் வரும்!!

இப்பக்கு,
கருப்பன்.

siva said...

TBCD sir this is not loss for Producer Uthaiya Neithi stalin they making money all the way more than 10 times for other out side producer gain.

you see He put is company Name "Red jain" movies...
they are fucture letter in our tamilnadu pavam TN people..

And I dont understand why Trisha is line?? please give your suggession.

Sen22 said...

//Labels: TBCD, குருவி, கேவலம், தரணி, திரைப்படம், படுகேவலம், மகா குப்பை, மோசம், விஜய்

லேபில் போடுவதில் கூட இப்படி ஒரு கொலைவெறியா ?///

Repeattuuuuuuuuu...

பினாத்தல் சுரேஷ் said...

இப்படி வாய்விட்டுச் சிரிக்கற மாதிரி விமர்சனம் வரும்னா, அவங்க இப்படி படம் எடுக்கறதிலயும் தப்பு இல்லை.

யாத்திரீகன் said...

>> திரிஷா ஏன் ஒல்லியாக இருக்கிறார் என்பதன் ரகசியம் தெரிந்தது. விஜய் கூட இன்னும் இரண்டு படங்கள் நடித்தால், எலும்பு மட்டுமே மிஞ்சும் <<<

hahahahahahahahahaha...

TBCD said...

சேம் பிளட் தமிழ்நெஞ்சம்... :)

///
தமிழ்நெஞ்சம் said...
என் மனசுல இருந்ததை அப்படியே கொட்டித் தீர்த்துட்டீங்க.. என்னால இவ்வளவு சீரான நடையில எழுத முடியாது.. ஆனால் உங்கள் பதிவைப் படித்ததும் புரிந்துகொண்டேன்.

இரத்தம் வர வர எவ்வளவு அறுத்தாலும் 'இந்தப்படத்தைப் பற்றி அறுத்தால்' தகும் எனத்தெரிந்துகொண்டேன்.

ஏன்யா இப்படிப் படம் எடுக்கிறீங்க.. டிவி. விளம்பரம் கொடுக்கிறாங்க. அதிலே 'சுளுக்கெடுக்கனும்னா குப்புறப் படுக்கணும்னு' சொல்லிக்கிறாங்க. உடனே '50+ வயது ஆயா - குப்புறப்படுக்குது' - இதுவாய்யா காமெடி.

இதைக் காமெடின்னு சொல்லிக்கிட்டு சிரிச்சா.. சிரிச்சவன் கண்டிப்பா 'நிம்ஹான்ஸ்' க்குதான் போகனும்.
///

TBCD said...

புதசெவி

///
தமிழ்நெஞ்சம் said...
(:-
-:)

(:-:)

(::--::)

(::::----::::)

குருவி படத்தை யார் யார் பார்த்தாங்களோ..அவங்களுக்காக இந்த 'ஸ்மைலீஸ்' ஐச் சமப்பிக்கிறேன்.
///

TBCD said...

குறிச்சொற்களில் இன்னும் சில சேர்க்க இருந்தேன். ஆனால், 200 எழுத்துக்கள் மட்டுமே என்றதால், இவ்வளவு தான் முடிந்தது.

அவன் அவன் அங்க வேட்டியே போடுறான்..நான் ஏதோ சின்னதா ஒரு கைத்துண்டு போட்டா உடனே சொல்லிடுவீங்களே.. :P

வருகைக்கு நன்றி..டெக்னோ..

///
Techno said...
Labels: TBCD, குருவி, கேவலம், தரணி, திரைப்படம், படுகேவலம், மகா குப்பை, மோசம், விஜய்

லேபில் போடுவதில் கூட இப்படி ஒரு கொலைவெறியா ?

சரி...இன்றைய சூடான இடுகைக்கு துண்டு போட்டுடீங்க...
///

TBCD said...

ஒரு வார்த்தைச் சொன்னாலும் திரு வார்த்தையாகச் சொன்னீங்க அண்ணாச்சி..

///
கோவி.கண்ணன் said...
இந்த படத்தைப் பார்த்ததுமே உங்களிடம் சொல்லிவிட்டேன், "கு"-வில் ஆரம்பித்து மூன்றெழுத்தில் பெயர் வைக்க விரும்பி இருப்பார்கள் போல் இருக்கு, பேசாமல் "குப்பை" என்று வைத்திருக்கலாம்.

///

இதைத் தான் பார்முலா படம் என்பார்கள். நானும் அதைச் சொல்லத் தான்..(அ+ஆ)^2 என்று போட்டேன்..ஒருத்தரும் கண்டுக்கவில்லை.. :P

///
"விஜய் டிரேட் மார்க் படம்" என்ற வட்டத்துக்குள் சிக்கிவிட்டார் விஜய். இனி(யும்) இது போன்ற குப்பைகளை மட்டும் தான் அவரால் கொடுக்க முடியும்.
///

TBCD said...

நன்றி சுந்தர்...குறிச்சொற்களின் மகிமை இப்போது தான் எனக்கும் புரியுது..இனிமே உள் குத்து அங்கேயும் வைப்போம்... ஈ ஈ....

///
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நல்லா ரசிச்சுப் படிச்சேன். labels டாப்.!
///

TBCD said...

கொடுமை யாரை விட்டது.

இதுலே..ஒருத்தர் என்னிடம் போகலாமா என்றுக் கேட்டார்..

தாராளமா போய் பாருங்க என்றுச் சொல்லிவிட்டேன்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்... :))))))

///
ஜே கே | J K said...
நீங்களும் பாத்துட்டீங்களா??

அடக்கொடுமையே.

இங்கயும் வந்துட்டு போங்க.

http://saralil.blogspot.com/2008/05/blog-post.html

///

TBCD said...

குறிச்சொற்கள் இவ்வளவு ரசிக்கப்படும் என்று நான் எதிர்ப்பார்க்கவே இல்லை..

இது படத்தின் வெற்றியயைக் "குறீ"க்கின்றதோ.. :P
///
நந்தா said...
டிபிசிடி. லேபிள்ஸ் இன்னும் டாப்பு...
///

இதெல்லாம் ஒப்பாரி மாதிரி, என்ன தான் அடுத்தவங்க அழுதாலும், நாமளும் கொஞ்சம் அழுகனும். அப்பத் தான் நல்லா இருக்கும். வெகு விரைவில், ஒப்பாரியில் இனைய வேண்டுகோள் வைக்கிறேன்... :)

///
நல்ல வேளை எனக்கும் சேர்த்து நீங்களே குமுறிட்டீங்க.

///

அந்தக் கொடுமையயை நான் இன்னும் பார்க்கவில்லை. யாரையாச்சும் அடிக்கனுமின்னா, அதைப் பார்த்துட்டு வேனா போய் அடிக்கிறேன்..

///

நேத்து டீவியில விஜய் பேட்டியையும், குருவி ப்ரிவியூவும் போட்டிருந்தான். அவங்க கேககற கேள்வியும், அதுக்கு இளைய தளபதியோட பதிலும்.... கொடுமையே. நடிகர்களை மகானுபாவர்களாக பார்க்க வைப்பதற்கு இது போன்ற டீவி ஷோக்களும் ஒரு காரணம்தான்.
////

எங்க ஆளு வாயிலே வண்டியோட்டினார் பாரு..என்று ஏற்கனவே சொல்ல ஆரம்பிச்சிட்டானுங்களாமே..

///
யாரைச் சொல்லி என்ன சொல்ல. இந்த படத்தையும் "எங்க ஆளு கலக்கி எடுத்திருக்கான் பாரு"ன்னு சொல்லிட்டு திரிய ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யுது..
///

TBCD said...

விஜய் படம் ஊத்திக்கனும் என்றுச் சொல்ல, நான் ஒன்றும் அஜித் ரசிகன் அல்ல.

நல்ல படம் ஓடட்டும், ஊத்தல் படம், ஊத்திக்கட்டும் என்பதே நம்ம கொளுகை...
///
கருப்பன்/Karuppan said...
இந்த படத்தையும் நாங்க 1000 நாள் ஓட்டுவம்ல!!

எலய தலவிதி படம்னா சொம்மாவா???

இப்படிக்கு,
விசிலடிச்சான் குஞ்சு.

உஸ்ஸ்.... படம் ஊத்திக்கிச்சா, இன்னிக்கு நைட் நல்லா தூக்கம் வரும்!!

இப்பக்கு,
கருப்பன்.
////

TBCD said...

அய்யா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..என்ன சொல்லுறீங்கன்னே புரியல்லை...புதசெவி..

///
siva said...
TBCD sir this is not loss for Producer Uthaiya Neithi stalin they making money all the way more than 10 times for other out side producer gain.

you see He put is company Name "Red jain" movies...
they are fucture letter in our tamilnadu pavam TN people..

And I dont understand why Trisha is line?? please give your suggession.
///

TBCD said...

எத்தனை தடவை சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்று விஜய் மாதிரியே அடம் பிடிக்கக்கூடாது..

தமிழில் எப்படி சொல்லுவது என்று என் பதிவில் முகப்பில் இருக்கு பாருங்க...

///
Sen22 said...
//Labels: TBCD, குருவி, கேவலம், தரணி, திரைப்படம், படுகேவலம், மகா குப்பை, மோசம், விஜய்

லேபில் போடுவதில் கூட இப்படி ஒரு கொலைவெறியா ?///

Repeattuuuuuuuuu...
///

TBCD said...

படம் சிரிப்பா சிரிச்சா, நாம இப்படித் தானே எழுத முடியும்...

வருகைக்கு நன்றி..சுரேஷ்

///
பினாத்தல் சுரேஷ் said...
இப்படி வாய்விட்டுச் சிரிக்கற மாதிரி விமர்சனம் வரும்னா, அவங்க இப்படி படம் எடுக்கறதிலயும் தப்பு இல்லை.
///

கப்பி பய said...

:)))

Keyven said...

லேபில் லேயே படத்தோட விமரிசனம் அடங்கி போச்சு.. அப்புறம் எதுக்கு மேல எழுதணும்... ஏத்தி விட்டு அழிக்கிரதுல எஸ். எ. சந்திர சேகர் No. 1 போலிருக்கு... இப்படியே போனா.. விஜய் சீக்கிரம் ரிடையர் ஆகவேண்டியது தான் ? த்ரிஷா சும்மா Guest ரோல் பண்ணியிருக்காபோல ... நல்ல விமரிசனம்..

SanJai said...

கோவி.க விடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேளுங்க :P

TBCD said...

முதல் பின்னுட்டத்திற்கு நன்றி.. :))))

சேம் பிள்ட்டா..?

///
கப்பி பய said...
:)))
///

TBCD said...

நன்றி கீவென்..

///
Keyven said...
லேபில் லேயே படத்தோட விமரிசனம் அடங்கி போச்சு.. அப்புறம் எதுக்கு மேல எழுதணும்... ஏத்தி விட்டு அழிக்கிரதுல எஸ். எ. சந்திர சேகர் No. 1 போலிருக்கு... இப்படியே போனா.. விஜய் சீக்கிரம் ரிடையர் ஆகவேண்டியது தான் ? த்ரிஷா சும்மா Guest ரோல் பண்ணியிருக்காபோல ... நல்ல விமரிசனம்..
///

TBCD said...

அதை விட காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்..இனிமே இப்படி படம் கொடுக்காதீங்க என்று குருவி அணியிடம் சொல்லலாமா என்று இருக்கிறேன்..

///
SanJai said...
கோவி.க விடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேளுங்க :P
///

சந்தோஷ் = Santhosh said...

விமர்சனம் சூப்பரு டிபிசிடி... நீங்க ஒண்ணை புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க.. இந்த மாதிரி முன்பின்நவீனத்துவ படங்களை எல்லாம் ஒரு நாலு அஞ்சி தபா பாத்தா தான் தல என்னா சொல்ல வராருன்னு பிரியும்.. நீங்க ஒரே தபா பாத்துட்டு விமர்சனம் எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறேன்..எனவே இன்னும் ஒரு நாலு தபா பாத்துட்டு கருத்து சொல்லவும்..:))

TBCD said...

யாரவது மரண தண்டனைக் கைதி இருந்தால் கூட்டியாங்க..நிறைவேற்றிவிடுவோம், 5 தடவை பார்க்க வைத்து..

நன்றி..சந்தோஷ்

///
சந்தோஷ் = Santhosh said...
விமர்சனம் சூப்பரு டிபிசிடி... நீங்க ஒண்ணை புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க.. இந்த மாதிரி முன்பின்நவீனத்துவ படங்களை எல்லாம் ஒரு நாலு அஞ்சி தபா பாத்தா தான் தல என்னா சொல்ல வராருன்னு பிரியும்.. நீங்க ஒரே தபா பாத்துட்டு விமர்சனம் எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறேன்..எனவே இன்னும் ஒரு நாலு தபா பாத்துட்டு கருத்து சொல்லவும்..:))
///

Keyven said...

கேப்டனோட "நரசிம்மா" வை எல்லாம் மீறிட்டுது ... "குருவி".. பேசாம "கொரங்கு மூஞ்சி" ன்னு பேரு வெச்சிருக்கலாமா ?

ஊரே காறி துப்புது.. (வலை பதிவு எல்லாம்.. !!) அப்படி என்ன காண்டு விஜய் மேல ??

Shahul Hameed Adanoorar said...

"குருவி"யை பார்த்து நொந்தவர்களில் நானும் ஒருவன். என்னாதான் விஜய் முத்திரை படம், என்றாலும் இப்படியா??!!. தரணி கதையை சுதப்பினாலும், எனக்குத் தெரிந்தவரை, சில ஆங்கிலப் படங்களிருந்தும் காட்சிகளை சுட்டிருக்கிறார் (கேவலம்). தரணி செய்யும் வேலையா இது?? மின்தூக்கி (lift) காட்சி Casino Royale படம், மாடியிலிருந்து புகைவண்டிக்கு தாவும் காட்சி Wesley Snipes நடித்த ஒரு படத்தின் சிறு தழுவல். நமது தமிழ் திரைப்பட உலகம் எப்போது மாறும் அல்லது எப்படி மாறும்?

எம்.ரிஷான் ஷெரீப் said...

கையைக் கொடுங்க TBCD,
(இப்போதைக்கு கை மட்டும்தான் மிச்சம்,மத்ததெல்லாம் படம் பார்த்ததுல மொக்கை போட்டே அறுத்துட்டாங்க).

என்னமா கும்மியிருக்கீங்க,என்னோட குமுறலையும் சேர்த்து... :P

இனிமே விஜய்யும்,த்ரிஷாவும் திருந்தணும்னா "அஞ்சாதே" மிஸ்கீன் டைரக்டர் படத்துல தான் நடிக்கனும்னு கண்டிஷன் போடனும்.

நல்லவேளை,இதுல முன்னாடி பாவனா நடிக்க இருந்துச்சு.அந்த டவல் சீனைச் சொன்னதுமே பொண்ணு எஸ்கேப்..
பாவம் த்ரிஷா மாட்டிக்குச்சு..அதோட கெட்ட நேரம்தான்..

Keyven said...

இந்த கருமாந்தரத்தை காசு கொடுத்து பாக்கணுமா ?
கீழே இருக்குற லிங்க் ல போயி ப்ரீயா பாருங்க..

http://www.tubetamil.com/view_video.php?viewkey=200b21cc7f752979132d

TBCD said...

என்ன பேர் வைச்சியிருந்தாலும் இந்தப் படம் டப்பா தான்.

படம் ஓடினால் அது என்னால், ஓடவில்லை என்றால் இயக்குனரால் என்று விஜய் கற்பனை செய்வதை நிறுத்தினால், விமோசனம்.

//Keyven said...
கேப்டனோட "நரசிம்மா" வை எல்லாம் மீறிட்டுது ... "குருவி".. பேசாம "கொரங்கு மூஞ்சி" ன்னு பேரு வெச்சிருக்கலாமா ?

ஊரே காறி துப்புது.. (வலை பதிவு எல்லாம்.. !!) அப்படி என்ன காண்டு விஜய் மேல ??
//

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்