சமீபத்திய புதசெவி

காலம் மாறிப் போச்சு...கலி முத்திப் போச்சு..

கலைஞர் தொலைக்காட்சி பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், மானாட மார்பாட (நன்றி : அஞ்"ஞாநி") பற்றியே குறிப்பிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கும் ஒன்று..காரணம் மக்கள் தொலைக்காட்சியில் தமிழாசிரியர் நன்னன், தமிழ்ப் பண்ணை நிகழ்ச்சி வழியாக பல ஆரிய புரட்டுக்களை போட்டு உடைத்தும், திராவிட (தமிழர்) கருத்துக்களை அள்ளித் தெளித்தும் செம்மையாக பணியாற்றும் போது, திராவிடர் கழகத்தின் வழித்தோன்றல்களால் (அல்லது வழித்தோன்றல்களுக்காக) ஆரம்பிக்கப்பட்ட அலைவரிசையில், பொழுதுப் போக்கு நிகழ்ச்சி மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது, என்னை சங்கடப்படுத்தும் ஒன்று.

இத்தகைய சூழ்நிலையில் காலையில் திடிரென்று சுமார் 8.00 மணிக்கு ரமேஷ் பிராபா ஒரு நேர் காணல் நடத்தினார். நேர் காணலில் கலந்துக் கொண்ட பெரியவர் யார் என்று கவணியாதப் போனேனே என்று மிகவும் வருந்துகிறேன். எப்படி படிப்படியாக தமிழ் ஒதுக்கப்பட்டு, வடமொழி ஆதிக்கத்தில் வந்தது என்று மிகவும் அருமையாக விளக்கிக் கொண்டியிருந்தார்.

வந்தவர், நாத்திகர் அல்ல. பழுத்த சிவயோகிப் போல், கையின் முட்டியில் கூட பட்டையிட்டுயிருந்தார். ரமேஷ் பிரபா கேட்ட கேள்விகளும், தமிழை வடமொழியிடமிருந்துக் காப்பாற்றிய/ அல்லது காப்பாற்ற முனைந்த தலைவர்கள் குறித்தெல்லாம் சுற்றி வந்து, தெளிவான விளக்கத்துடன் எளிதாகவும் , மக்களுக்கு உண்மையயைச் சொன்னது.

ரமேஷ் பிரபாவின் கேள்விகளில் மிக முக்கியமான கேள்வி "வடமொழி எதிர்ப்பு, பெரிதும் பரப்பாட்டாலும், ஏன் இன்னும் அதிகாரம் செலுத்துகிறது" என்று பொருள் வருமாறு கேட்டார். அதற்கு அந்த பெரியவர் " ஆண்கள் வடமொழி வேண்டாம் என்றாலும், வீட்டின் பெண்கள் ஐயர் வைத்து மந்திரம் சொன்னாலே ஆச்சு என்று அடம் பிடிப்பது தான் காரணம்" என்றார்.

மறைமலையடிகள் பற்றி எல்லாம் சிலேகித்துக் கூறியவர், ஆத்திகர் என்பதால், பெரியாரைப் பற்றி, மறந்தும் குறிப்பிடவில்லை. மக்கள் தொலைக்காட்சியில் நன்னன் அவர்களின் தமிழ் தொடர், விஜய் தொலைக்காட்சியில் தமிழ் எங்க மூச்சு தொடர் என்று சிறிது சிறிதாக தமிழர்களுக்கு உகந்த நிகழ்ச்சிகள் வருவது எதனால்...கலி முத்திப் போனதால் தானோ..??? :)))))


ஃஃஃஃ

ஆடைகள் வாங்க கடைகளுக்குச் சென்றால், அங்கேயிருக்கும், கன்னாடிக்க்கூண்டுக்குள், ஏன் வெளிநாட்டு ஆடவர், பெண்டிர் போன்ற பொம்மைகள் இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் கடைகள் வெளிநாட்டை பார்த்து அப்படியே ஆரம்பித்ததனலா..இல்லை நம்முடைய தாழ்வு மணப்பான்மையலா...? புதசெவி

ஃஃஃஃ

மதுரையில் மொட்டைக் கோபுரத்திற்கு அருகேயுள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு செல்ல வேண்டியதாகியிருந்தது. ஏனோ, வங்கிக்கு பணம் எடுக்கவோ, கொடுக்கவோ, கட்டவோ, வாங்கவோ வந்திருந்த அனைவருமே, ஆண்கள். வங்கி அதிகாரிகள் பெண் இருந்தாலும், பயணாளர்களில் ஒருவர் கூட இல்லாதது எனக்கு ஆச்சரியமளித்தது.

அங்கிருந்த பெண் வங்கி அதிகாரியிடமே கேட்டேன். அப்பொது தான் அவரும் வியந்துப் போய், ஆமாம் சார், இப்ப தான் நானும் கவனிக்கிறேன், பெரும்பாலும் ஆண்கள் தான் வங்கிக்கு வருகிறார்கள். பெண்கள் வருவது மிகவும் குறைவு என்றார். பொதுவாக மென்பொருள் துறை வளர்ச்சிக்கு முன் பெருநகரங்களிலும் சிறுநகரங்களிலும் இதேப் போன்றே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழ்ப் பெண்கள்் வங்கி,பண விவகாரங்களில் மூக்கை நுழைப்பதில்லையே..ஏன்...புதசெவி..

22 Comments:

கோவி.கண்ணன் said...

//அதற்கு அந்த பெரியவர் " ஆண்கள் வடமொழி வேண்டாம் என்றாலும், வீட்டின் பெண்கள் ஐயர் வைத்து மந்திரம் சொன்னாலே ஆச்சு என்று அடம் பிடிப்பது தான் காரணம்" என்றார்.
//

டிபிசிடி ஐயர்,

உண்மைதான்.

பெண்களுக்கு இருக்கும் பயம் தான். வடமொழியில் செய்தால் தான் எல்லாம் நல்லபடியாக நடக்கும் இல்லை என்றால் அபசகுணமாக எதும் நடந்துவிடும் என்ற பயம்.

தமிழன்... said...

சொல்லுங்க சொல்லுங்க...

முகவை மைந்தன் said...

//பெண்களுக்கு இருக்கும் பயம் தான்.//

யார்மேல? என்னன்னே தெரியாம மரப காப்பாத்துறாங்களாம்... வேற ஒரு புண்ணாக்கும் இல்ல.

இன்னமும் வீட்டுல பூசெய்யறது நடக்குது. நிறைய சண்டைக்கப்புறம் பகுத்தறிவால் கடவுளை மறந்து வயிற்றைத் துதித்தேன்;-)

மோகன் கந்தசாமி said...

////மறைமலையடிகள் பற்றி எல்லாம் சிலேகித்துக் கூறியவர், ஆத்திகர் என்பதால், பெரியாரைப் பற்றி, மறந்தும் குறிப்பிடவில்லை.//////
ஆத்திகர்களால் அரங்கேறாத தமிழ் நாத்திகர்களால் தான் சிதம்பரத்தில் அரங்கேறியது.

கோவை சிபி said...

அந்த பெரியவர் பெயர் மு.பெ சத்தியவேல் முருகனார்.தமிழ் வழிபாட்டுப் போராளி.அடிப்படையில் பொறியாளர் என்ற போதிலும் தமிழ்மேல் கொண்ட பற்றால் பல நல்ல நூல்களை எழுதியவர்.தமிழக அரசின் அனைத்துசாதி அர்ச்சகர் மேலாண்மைக்குழுவில் உறுப்பினர்.மேலும் பெரியார் பற்றி அந்த நேர்காணலில் உயர்வாகவே குறிப்பிட்டார்.

தமிழன்... said...

"புதசெவி"

எனக்கும்...:)

கோவி.கண்ணன் said...

//சத்தியவேல் முருகனார்//

அண்மையில் எனது அக்கா மகள் திருமணத்தை தமிழ்முறைப்படி நடத்திக் கொடுத்தார். புகைப்படங்கள் இருக்கின்றன. பிறகு தனிப்பதிவாக எழுதுகிறேன்

கூடுதுறை said...

பெண்கள் கூட்டம் atmல் தான் உள்ளது...

இல்லையென்றால் டெபிட்கார்டு பர்ச்செஸ்தான்

SP.VR. SUBBIAH said...

////" ஆண்கள் வடமொழி வேண்டாம் என்றாலும், வீட்டின் பெண்கள் ஐயர் வைத்து மந்திரம் சொன்னாலே ஆச்சு என்று அடம் பிடிப்பது தான் காரணம்" என்றார்.////

ஆண்களுடைய ஆட்சி வேலை பார்க்கும் இடங்களிலும், டாஸ்மாக்கிலும், ரெஸ்டாரெண்ட்டுகளில் மட்டும்தான். வீடுகளில் பெண்களின் ஆட்சிதான். அவர்கள் வைத்ததுதான் சட்டம், எந்தக் கோர்ட்டிலும் பெட்டிஷன் கொடுக்க முடியாது. காரணம் மகளிர் காவல் நிலையங்கள்:-))))

VIKNESHWARAN said...

//ஆண்கள் தான் வங்கிக்கு வருகிறார்கள். பெண்கள் வருவது மிகவும் குறைவு //

வங்கிக்கு பணம் போட போனிங்கலா இல்ல பொண்ணு பாக்க போனிங்கலா :)))

திருட்டு பயத்தால் பணம் எடுக்கவோ பணம் போடவோ பெண்கள் வங்கிக்கு போவதை தவிர்க்கிறார்கள் என நினைக்கிறேன்...

TBCD said...

இது அந்த பயம் மட்டுமல்ல..என்பது என் கருத்து..

பக்கத்து விட்டில் ஏதாவது வாங்கினால், எப்படி நம்ம வீட்டிற்கும் அது தேவை என்று வருதே..அதேப் போல், இந்த விவகாரங்களும் உள்ளே நுழைக்கின்றன இன்னும்...

வகிடு எடுக்குமிடத்தில் தமிழகப் பெண்கள் பொட்டு வைக்கும் வழக்கம் 10 ஆண்டுகள் முன் வரை இல்லை..இன்று பெரும்பாலான பெண்கள் வடநாட்டவரைப் பார்த்து வைத்துக்கொள்கிறார்கள்..இன்னும் சில காலத்தில் அப்படி வைக்கவில்லை என்றால், மாமியாரிடம் திட்ட வாங்க வேண்டி வரும்...
// கோவி.கண்ணன் said...
டிபிசிடி ஐயர்,

உண்மைதான்.

பெண்களுக்கு இருக்கும் பயம் தான். வடமொழியில் செய்தால் தான் எல்லாம் நல்லபடியாக நடக்கும் இல்லை என்றால் அபசகுணமாக எதும் நடந்துவிடும் என்ற பயம்.

//

Anonymous said...

திரு மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் மறைந்த கிருபானந்த வாரியார் அவர்களின் உறவினர்.
வே.நடனசபாபதி

TBCD said...

சொல்லுறோம்..தமிழன் ஐயா..
///
தமிழன்... said...
சொல்லுங்க சொல்லுங்க...
///

TBCD said...

:))) வாங்க முகவை...
///
முகவை மைந்தன் said...
//பெண்களுக்கு இருக்கும் பயம் தான்.//

யார்மேல? என்னன்னே தெரியாம மரப காப்பாத்துறாங்களாம்... வேற ஒரு புண்ணாக்கும் இல்ல.

இன்னமும் வீட்டுல பூசெய்யறது நடக்குது. நிறைய சண்டைக்கப்புறம் பகுத்தறிவால் கடவுளை மறந்து வயிற்றைத் துதித்தேன்;-)
///

TBCD said...

இனிமே எல்லாவற்றையும் ஆத்திகரா..நாத்திகரா என்று பார்க்கனும் போல இருக்கே...

///
மோகன் கந்தசாமி said...
////மறைமலையடிகள் பற்றி எல்லாம் சிலேகித்துக் கூறியவர், ஆத்திகர் என்பதால், பெரியாரைப் பற்றி, மறந்தும் குறிப்பிடவில்லை.//////
ஆத்திகர்களால் அரங்கேறாத தமிழ் நாத்திகர்களால் தான் சிதம்பரத்தில் அரங்கேறியது.
///

TBCD said...

நன்றி சிபி...நான் சரியாமல் கவனிக்காமல் விட்டுவிட்டேனோ..என்னவோ...

தவறான தகவலுக்கு வருந்துகிறேன்..

///
கோவை சிபி said...
அந்த பெரியவர் பெயர் மு.பெ சத்தியவேல் முருகனார்.தமிழ் வழிபாட்டுப் போராளி.அடிப்படையில் பொறியாளர் என்ற போதிலும் தமிழ்மேல் கொண்ட பற்றால் பல நல்ல நூல்களை எழுதியவர்.தமிழக அரசின் அனைத்துசாதி அர்ச்சகர் மேலாண்மைக்குழுவில் உறுப்பினர்.மேலும் பெரியார் பற்றி அந்த நேர்காணலில் உயர்வாகவே குறிப்பிட்டார்.
///

அறிவன்#11802717200764379909 said...

//வந்தவர், நாத்திகர் அல்ல. பழுத்த சிவயோகிப் போல், கையின் முட்டியில் கூட பட்டையிட்டுயிருந்தார்.//

தமிழைப் பற்றிப் பேச அடிப்படைத்தகுதி நாத்திகம் பேசுவது என்று நினைத்துக் கொண்டிருப்பதுதான் (பகுத்த)றியாமையில் முதன்மையானது !

உடன்பிறப்பு said...

சென்னை தி.நகரில் ஒரு பிரபல வங்கியின் கிளையில் பணி செய்பவர்கள் முழுவதும் பெண்கள். அங்கும் கூட நான் ஆண் வாடிக்கையாளர்களை பார்த்தது கிடையாது

TBCD said...

புதசெவிக்கே புதசெவியா....

///
தமிழன்... said...
"புதசெவி"

எனக்கும்...:)
///

TBCD said...

அறியத் தாருங்கள் கோவியாரே...


///
கோவி.கண்ணன் said...
//சத்தியவேல் முருகனார்//

அண்மையில் எனது அக்கா மகள் திருமணத்தை தமிழ்முறைப்படி நடத்திக் கொடுத்தார். புகைப்படங்கள் இருக்கின்றன. பிறகு தனிப்பதிவாக எழுதுகிறேன்
///

TBCD said...

இதெல்லாம்...பெரு நகரங்களில் மென்பொருளார்களால் வரும் கூட்டம்...

வெகு சனத்தல் நான் காண்பது குறைவு என்றூ நினைக்கிறேன்..
//
கூடுதுறை said...
பெண்கள் கூட்டம் atmல் தான் உள்ளது...

இல்லையென்றால் டெபிட்கார்டு பர்ச்செஸ்தான்
//

TBCD said...

பயமுறுத்தாதீர்கள் ஐயா, வாசகர்களில் திருமணமாகாதவர்களும் இருப்பார்கள்... :))))
///
SP.VR. SUBBIAH said...
ஆண்களுடைய ஆட்சி வேலை பார்க்கும் இடங்களிலும், டாஸ்மாக்கிலும், ரெஸ்டாரெண்ட்டுகளில் மட்டும்தான். வீடுகளில் பெண்களின் ஆட்சிதான். அவர்கள் வைத்ததுதான் சட்டம், எந்தக் கோர்ட்டிலும் பெட்டிஷன் கொடுக்க முடியாது. காரணம் மகளிர் காவல் நிலையங்கள்:-))))
///

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்