விஷாலி, மிதாலி, தக்காளி,*க்காலி,நட்டுவாக்காலி...
இது எல்லாம் என்னவென்று பார்க்கின்றீர்களா...வேற ஒண்ணுமில்லையா..இதெல்லாம் தான் வானூர்தியில் பணிப்புரியும் பெண்களின் பெயர்கள். இதில் ஒரு தென்னிந்திய பெண்ணையாவது பார்க்க முடிகின்றதா என்றுப் பார்த்துக் கொண்டே வருகிறேன்...
இது நாள் வரை பார்க்க முடியவில்லை..
வெளிர்(றிப்போன்) முகத்துடன் இருந்தால் தான் வானூர்தி பணிப்பெண்ணாக வர முடியும்மா...
அட தமிழ்நாட்டுப் பெண் தான் வேண்டும் என்றுக் கூட கேட்கவில்லைய்யா..ஒரு ஆந்திரா, ஒரு கர்னாடகா...
அட அதுக்கூட வேண்டாம் ஒரு கேரளத்து பெண் குட்டி...
ஏன்..இந்த ஓரவஞ்சனை
அட ஒரு மணிப்பூரி பெண், ஒரு அசாம் மாநிலத்துப் பெண்..
அவர்கள் எல்லாம் எந்த அளவுகளில் அளந்து இப்படி சரியாக வடமாநில இந்தி பேசும் பெண்களாக எடுக்கிறார்கள் என்றே புரியவில்லை..
பெங்களூர் வளர்ப்பு மல்லையா கூட அவரே பார்த்து பார்த்து தேர்வு செய்தவர்களில் கூட கர்னாடக மக்கள் ஏன் இல்லை..
பேசாமல் இதிலும் இடஒதுக்கீடு மாநிலத்திற்கு மாநிலம் ஒதுக்கச் சொல்லி ஒரு உத்தரவு போட்டால் என்ன நடக்கும்..
புதசெவி....
ஃஃஃஃஃஃஃஃ
வானூர்தி என்றாலே ஏர் இந்தியா/இந்தியன் ஏர்லைன்ஸ் என்று இருந்து வந்த காலத்தில், அத்தைகள் போன்ற பணிப்பெண்கள் நம்மை அன்புடன் அரவனைத்து கவனித்துக்கொளவார்கள்...
ஜெட் ஏர்வேஸ், இளம் சிட்டுக்களை இறக்கி, மிகப்பெரிய கவனச்சிதறலை ஏற்படுத்தியது.
அதன் பின் கிங்பிஷர் வந்தது...
ஜெட் ஏர்வேஸ் கிளப்பியதுப் போலவே பெரிய அளவில் மக்களை கவர்ந்தது..
அப்போது ஜெட்டில,் வானூர்தியில் சிரித்த பணிப்பெண்கள் பலர் இப்போது, தரையில், வானூர்தி நிலையத்தில் பணி புரிகிறார்கள்..
திருமணம் ஆகியிருக்க வேண்டும், அல்லது உடல் மாற்றத்தினை கட்டுப்படுத்தாமல் இருந்திருக்க வேண்டும்... அதனால் வானூர்தியிலிருந்து தரை இறக்கி விடப்பட்டியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்..
பயணச்சீட்டு வாங்கும் இடத்தில் பார்த்தால் இளமை ஒரு காலத்தில் பொங்கிய இடத்தில் கொஞ்சம் அசமந்தம் வழிகிறது..
சிட்டென்று நடக்கும் புதிய பணிப்பெண்களை ஒரு ஏக்கத்துடன் பார்த்ததாகவே தோன்றியது..
ஆடை நிறம், வடிவமைப்பு போன்றவற்றை மாற்றிய ஜெட் அப்படியே புது பணிப்பெண்களையும் சேர்த்திருக்க வேண்டும்.
கிங் பிஷர் எப்போதும் இதேப் போல் வைக்க வேண்டும் (எல்லா இடங்களிலும் சிட்டுக்கள் )என்றால் 4~5 வருடங்களில் பலரை வெளியேற்ற வேண்டும்..
இல்லாவிட்டால், ஜெட் போல் வேலையயை தரைக்கு மாற்றியாக வேண்டும்...
இளமையான பெண்களை மட்டுமே பயணிகள் பார்க்க வேண்டும் என்று நினைப்பது சரியா...?
இதெல்லாம் நான் கவனித்து யோசித்துக் கொண்டியிருந்தப் போது, ஒரு காவி உடை அணிந்த அத்தையம்மா, 3 மணி நேரம் தாமதம் என்று ஏர் இந்தியா பயணிகளிடம் சொல்லி திட்டு வாங்கிக்கொண்டியிருந்தார்.
ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர் பிரச்சனை ஏர் இந்தியாவிற்கு வரவே வராது...
விஷாலி, மிதாலி, தக்காளி,*க்காலி,நட்டுவாக்காலி...
lables
age,
air hostess,
jet airways,
king fisher,
TBCD
Subscribe to:
Post Comments (Atom)




12 Comments:
:)
என்ன சொல்றீங்கன்னே பிரியல..
புதசெவி
அழகான இளம் பெண்கள் மட்டுமே பணிபுரிய வேண்டுமா? ஏன் முதிர்ந்த பெண்கள் பணிபுரிந்தால் ஆகாதா? அழகு என்பது சிவந்த தோலும் குறுகிய இடையும் தானா? கருப்பாய் தடியாய் இருக்கும் பெண்கள் அழகற்றவர்களா? பெண்கள் மட்டும் தான் பணிபுரிய வேண்டுமா? ஆண்கள் பணி புரிந்தால் ஆகாதா?
நமக்கெல்லாம் ( நமக்கெல்லாம்!) அழகு என்றதும் சிவந்த தோலும் மெலிந்த இடையும் தான் நினைவுக்கு வருகிறதே அது ஏன்?
புதசெவி
அடிக்கடி இப்பவெல்லாம் அறுக்கரது இல்லையோ? ஆணியா?
கன்னங்கரேல்னு நம்ம ஊர் பொண்ணுகளா போட்டா, அச்சச்சோ, செவ செவன்னு ஒருத்தியும் காணோமேன்னு பொலம்புவீங்க.
இதே பொழப்பய்யா ;)
அத்த வுடுங்க, ஒரு ஈஜீ பதிவெழுத அழைப்பு இருக்கு இங்கே.
கோதால எறங்குங்க. நன்றி!
நீங்க கேட்கிறதைத் தான் என் பதிவும் கேட்கிறது..
பதில் சொல்லுங்கய்யா என்றால் கேள்வியயை திருப்பிச் சொல்லுறாங்க..
என்ன கொடுமை அனானி ஐயா இது..
/// Anonymous said...
என்ன சொல்றீங்கன்னே பிரியல..
புதசெவி
அழகான இளம் பெண்கள் மட்டுமே பணிபுரிய வேண்டுமா? ஏன் முதிர்ந்த பெண்கள் பணிபுரிந்தால் ஆகாதா? அழகு என்பது சிவந்த தோலும் குறுகிய இடையும் தானா? கருப்பாய் தடியாய் இருக்கும் பெண்கள் அழகற்றவர்களா? பெண்கள் மட்டும் தான் பணிபுரிய வேண்டுமா? ஆண்கள் பணி புரிந்தால் ஆகாதா?
நமக்கெல்லாம் ( நமக்கெல்லாம்!) அழகு என்றதும் சிவந்த தோலும் மெலிந்த இடையும் தான் நினைவுக்கு வருகிறதே அது ஏன்?
புதசெவி///
ஆமாம் ..கொஞ்சம் ஆணி அதிகம்..தான்..
இந்த கன்னங்கரேல் என்ற சொல் பிரயோகம் உங்கள் பார்வையயை விளக்குகிறது என்று நான் சொன்னால் நுண்ணரசியல் சொல்லுறேன்..என்று சொல்லிருவீங்க..
கருப்பும் ஒரு நிறமே..அதை ஒதுக்காதீர் என்று தான் சொல்லுகிறேன்..
உங்க பதிவு போடுகிறேன்..கொஞ்சம் நாள் எடுத்துக்கிறேன்..
///
SurveySan said...
அடிக்கடி இப்பவெல்லாம் அறுக்கரது இல்லையோ? ஆணியா?
கன்னங்கரேல்னு நம்ம ஊர் பொண்ணுகளா போட்டா, அச்சச்சோ, செவ செவன்னு ஒருத்தியும் காணோமேன்னு பொலம்புவீங்க.
இதே பொழப்பய்யா ;)
அத்த வுடுங்க, ஒரு ஈஜீ பதிவெழுத அழைப்பு இருக்கு இங்கே.
கோதால எறங்குங்க. நன்றி!
///
விஷாலி,மிதாலி போன்றவர்களை விட்டு விட்டு,மலர்விழி,கனிமொழி,பனித்துளி,வெண்பனி போன்ற சொறி மூஞ்சிகளையா ஹோஸ்டெஸ்களாக போட முடியும்.அப்படியென்றால் அது டி பி சி டி ஏர் லைன்ஸ்ல மட்டும் தான் பண்ண முடியும்.
உங்க அனுபவம் அப்படியா, நான் மூணு நாலு வருஷம் முந்தி நாலஞ்சு தடவை கல்கத்தா, மிசோரம் இங்கயெல்லாம் போனப்போ நெறைய வட கிழக்கு மாநில பணிப்பெண்களை பார்த்திருக்கேன். அதோட நீங்க மேலே சொல்லிருக்க விஷாலி, மிதாலி ரகப் பெயர்கள் எல்லாம் எப்பவோ தமிழ் பெயர்கள் ஆகிடுச்சி. காலேஜ்ல, என் க்ளாஸ்ல என் ஒருத்தி பேர் மட்டும்தான் தமிழ்பெயர்(இராப் என் கணவர் குடும்பத்துப் பெயர்), மத்தவங்க எல்லார் பெயரும் நீங்க குறிப்பிட்ட ரகப் பெயர்கள் தான். அதுமட்டுமில்லாம நெறைய பெண்கள் இந்த பயிற்சியின் போதே தங்களை மும்பை பெண்களைப் போல் வலிந்து மாற்றிக்கொள்வார்கள். இதில் எல்லாருக்கும் நல்லா ஹிந்தி தெரிந்திருக்காது. தெரிந்ததை வைத்து(ஹிந்தி சினிமா, பிரண்ட்ஸ், கூட வேலை செய்பவர்கள் இப்படி) அதென்னமோ பெரிய பெருமையான விஷயம் போல சீன் போடுவார்கள்.அதுமட்டுமில்லாம தென்னிந்தியாவில் நம் மாநிலத்தை தவிர மற்ற எல்லா மாநிலத்தவற்கும் ஹிந்தி பெரும்பான்மையாக தெரிந்திருக்கும். இன்றையத் தேதியில் யாரும் எந்த பிராந்திய மொழியையும் முழுமையாக தெளிவாக பேச வேண்டிய அவசியமில்லாததால இவங்க இங்க்லீஷ வெச்சு பொழச்சிப்பாங்க. பொதுவா நம்ம பெண்களும் இந்த ஜோதில தான் ஐக்கியமாகப் பார்ப்பாங்க
//அட ஒரு மணிப்பூரி பெண், ஒரு அசாம் மாநிலத்துப் பெண்..
//
I've seen in Deccan.
சொறிங்கண்ணே...நீங்க சொன்னா சொறி..
///
Anonymous said...
விஷாலி,மிதாலி போன்றவர்களை விட்டு விட்டு,மலர்விழி,கனிமொழி,பனித்துளி,வெண்பனி போன்ற சொறி மூஞ்சிகளையா ஹோஸ்டெஸ்களாக போட முடியும்.அப்படியென்றால் அது டி பி சி டி ஏர் லைன்ஸ்ல மட்டும் தான் பண்ண முடியும்.
//
என்னங்க நம்ம பொண்ணுங்க பார்த்தால் நமக்குத் தெரியாதா..
அது வடநாட்டுப் பொண்ணுங்க என்பதில் ஐயமே இல்லை..
/// rapp said...
அதோட நீங்க மேலே சொல்லிருக்க விஷாலி, மிதாலி ரகப் பெயர்கள் எல்லாம் எப்பவோ தமிழ் பெயர்கள் ஆகிடுச்சி.
///
கவனிக்கிறேன்...
///
அதுமட்டுமில்லாம நெறைய பெண்கள் இந்த பயிற்சியின் போதே தங்களை மும்பை பெண்களைப் போல் வலிந்து மாற்றிக்கொள்வார்கள். ///
வருகைக்கு நன்றி...இராப் (வேற ஏதாச்சும் சேர்த்துக்கோங்க...வேற அடைமொழி மாதிரி இருக்கு.. :P )
//விஷாலி,மிதாலி போன்றவர்களை விட்டு விட்டு,மலர்விழி,கனிமொழி,பனித்துளி,வெண்பனி போன்ற சொறி மூஞ்சிகளையா ஹோஸ்டெஸ்களாக போட முடியும்.//
தமிழில் எழுதி இருக்கிறீர்கள், எனவே நீங்கள் அந்த சொறி மூஞ்சுகளில் ஒருவராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
ஒரு சொறி மூஞ்சுக்கு மற்றொரு சொறி மூஞ்சு சேவை செய்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
ராப் சொல்வது மாதிரி தமிழ்நாட்டுப்பெண்கள் கூட மும்பை பெண்கள் போல மாற்றிக்கொள்வார்கள் என்பது உண்மை தான். ஆனால் இதில் ஒன்று, தமிழ்நாட்டுப்பெண்ணாக இருந்தாலும் சிவந்த நிறமுடைய பெண்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். இந்தியாவை சிகப்பு மோகம் பிடித்திருப்பதால் இது மக்களின் தவறே தவிர ஏர்லைன்ஸில் தவறில்லை. பிஸ்னஸுக்கு எது நல்லதோ அதை தான் ஏர்லைன்கள் செய்ய முடியும்.
Post a Comment