சமீபத்திய புதசெவி

சதுர்த்தி யாமே...சதுர்த்தி

சதுர்த்தி யாமே...சதுர்த்தி
குறைகள் நிவர்த்தி செய்பவர்க்கு
பல கோடி ருபாய்களில் சதுர்த்தியாம்

கேடிகளும் மோடிகளும்
கொண்டாடும் சதுர்த்தியாம்

மூலைக்கொரு பிள்ளையாராம்
அவர் பெயரைச் சொல்லி கட்டாய வசூலாம்

வாடி வதங்கும் மக்களுக்கு கிடைக்காத
பிர"சாதம்" துதிக்கைக் கடவுளுக்காம்

பல நூறு ஆண்டுகள் போற்றியும்
தோன்றாத கடவுள் இனிமேலும்
தோன்றுவாரோ என்று கிஞ்சித்தும்
கவலைப்படாத மக்களே
இன்று
சதுர்த்தி யாமே...சதுர்த்தி

41 Comments:

ஜெகதீசன் said...

:)))

TBCD said...

பின்னுட்டத்திற்கு நன்றி ஜெகதீசன்...கயமைத்தனத்தை தடுத்ததற்கும் தான்.... :P

// ஜெகதீசன் said...

:)))
//

SurveySan said...

நல்லால்ல.

ரம்ஜானுக்கு ஏன் கவுஜ எழுதல?

கோவி.கண்ணன் said...

பிள்ளையாருக்கு பக்தர்கள் சதுர்த்தி கொண்டாடலாம், பிள்ளையாரே கொண்டாடிக் கொள்வது நல்லா இல்லே.

Anonymous said...

Dont you people have decency ?. Is this 'rationalism' to talk indecently about Hindus and their beliefs ?. That too on their religious festival.

If you have sense and decency why dont you talk about christians/Islamists/Marxists and their wrongdoings ?. Why dont you criticise mass murderers like Lenin, polygamists like Mu Ka ?.

TBCD said...

எனக்கு இரண்டு கண் போனால், அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போகனும் என்னும் உங்க பெருந்தன்மைக்கு ஒரு வணக்கம்...

ஏன் இந்து மதத்தை சொல்கிறேன் என்பதை ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கேன்..அதைப் படிச்சிப் பாருங்க சர்வேசர்..

TBCD said...

சர்வேசருக்கு கொடுத்த பதிலே உங்களுக்கும்...

///Anonymous said...

Dont you people have decency ?. Is this 'rationalism' to talk indecently about Hindus and their beliefs ?. That too on their religious festival.

If you have sense and decency why dont you talk about christians/Islamists/Marxists and their wrongdoings ?. Why dont you criticise mass murderers like Lenin, polygamists like Mu Ka ?.///

TBCD said...

குமார்,

என்னை என்னுடைய மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் velaiilley at gmail.com

நன்றி..

நிமல்/NiMaL said...

கூகிளாண்டவரே இந்து மதத்தின் சிறப்பை உணர்ந்து விநாயகர் சதுர்த்தி தினத்தில் Chrome, Picasa 3 ஆகியவற்றை வெளியிட்டு 80 கோடி இந்துக்களையும் பெருமைப்படுத்தி இருப்பதை கவனத்தில் கொள்க.
!
:)
?!

SurveySan said...

tbcd, படிச்சு பாத்தேன். ஏற்புடையதாய் இல்லை.

எல்லாத்தியும் இப்படி அத்தோட முடிச்சுப் போட்டா, நெம்ப கஷ்டம்.

ஒரு தீர்வும் கிட்டாது.

TBCD said...

சர்வேசர்,

இந்த பிள்ளையார் வழிப்பாட்டு முறை என்று எப்போது யாரால் ஆரம்பிக்கப் பட்டது..??

ஏன் கடவுளர்கள் எல்லாரும் வடநாட்டிலே அமர்ந்திருக்கிறார்கள்...???

ஏன் வடமொழியிலே பேசிக்கொள்கிறார்கள்...???

என்பதை எல்லாம் மீறி...

பிள்ளையார்யாருக்கு வயசு என்னப்பா..??? என்று ஒரு சிறுவன் கேட்டானாம்..பதிவில் படிச்சேன்...

அதுக்காவது உண்மையான பதிலைக் கொடுக்க முடியும்மா...

///
SurveySan said...

tbcd, படிச்சு பாத்தேன். ஏற்புடையதாய் இல்லை.

எல்லாத்தியும் இப்படி அத்தோட முடிச்சுப் போட்டா, நெம்ப கஷ்டம்.

ஒரு தீர்வும் கிட்டாது.
///

Anonymous said...

As SurveySan already mentioned, your reply is not acceptable.

BTW, it is quite possible that Google launched Chrome on Pillayar Chaturthi day knowingly.

The Product development VP is a Thamizh. One of the leading shareholders, the angel investor of Google and also the person who was responsible for that name (instead of original googol) is a Thamizh belonging to your hated community.

வெட்டிப்பயல் said...

TBCD,
ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் உடையார் 5 ஆம் பாகத்துல விநாயகர் பத்தி படிச்சேன்... ரொம்ப அருமையா பாலகுமாரன் சொல்லியிருக்காரு.

என் ஞாபகத்துல இருந்து இப்ப சொல்றேன். புக் வீட்ல இருக்கு.

சிவன் - உடல்
சக்தி - உயிர்

உடலும் உயிரும் சேரும் போது முதலில் கிடைப்பது அறிவு (ஞானம்/ஞாபக சக்தி). அது தான் முதல் குழந்தை பிள்ளையார்.

அது ஏன் யானை தலை? யானைக்கு தான் நினைவாற்றல் அதிகம். பத்து வருஷத்துக்கு முன்னாடி உணவு கொடுத்தவனையும் நியாபகம் வைத்து கொள்ளுமாம்.

ஞாபக சக்தியுனுடைய பலன்களில் முதல் புத்தி. அந்த புத்தியை கொண்டு காரியமாற்றுகிறோம். அது சித்தி. அது தான் சித்தி புத்தினு விநாயகருக்கு இரு மனைவிகள்.

அடுத்து விநாயகர் பிரம்மச்சாரியாக காட்டுவது ஞானத்தின் மூலம் பிரம்மத்தை அடைய முடியும் என்பதன் குறியீடாம்.

இரு மனைவிகளுடன் காட்டுவது ஞாபகசக்தியின் மூலம் புத்திசாலியாகவும், காரிய சித்தியும் பெற முடியும் என்பதன் குறியீடாம்.

அடுத்து முருகன். அவன் அழகு, உடல் வலிமைக்கு. அவர் காலுக்கு கீழ இருக்கற பாம்பு அகங்காரம், மயில் அழகு, சேவல் கம்பீரம். சேவல் கம்பீரமா நடக்கும். நல்லா நிமிர்ந்து பார்த்து...

இப்படி நிறைய சொல்லியிருந்தாரு. எல்லாம் குறியீடு. நம்ம கதையை மட்டும் பிடிச்சிக்கிட்டு குறியீடை உணராம இருக்கோம்னு பேசிக்குவாங்க.

நல்ல புத்தகம். சான்ஸ் கிடைச்சா படிங்க. நம்ம தமிழ்மணத்துல இருக்கற சாதி சண்டைகளை விட அப்ப அதிகம். பிராமணர்கள் எப்படி அரசியலில் வந்தார்கள்னும் அதுல இருக்கு. ஆனா எந்த அளவு உண்மைனு நிச்சயம் சொல்ல முடியாது. But that will invoke our thought Process for sure :)

ஆறாவது பாகம் பாதில இருக்கு :)

SurveySan said...

tbcd,

///இந்த பிள்ளையார் வழிப்பாட்டு முறை என்று எப்போது யாரால் ஆரம்பிக்கப் பட்டது..??

ஏன் கடவுளர்கள் எல்லாரும் வடநாட்டிலே அமர்ந்திருக்கிறார்கள்...???
////

thats where the problem is.
it doesnt matter who 'created god'.

the concept of GOD is a good one.
The ups and down in the name of religion is not a good thing.

but, to protest and make fun of once belief is unacceptable.

Life revolves around belief - some believe in GOD, respect that.
some believe in Nature, respect that.
some believe in science, some believe in themselves.
respect that.

;)

SurveySan said...

////பிள்ளையார்யாருக்கு வயசு என்னப்பா..??? என்று ஒரு சிறுவன் கேட்டானாம்..பதிவில் படிச்சேன்...//////

pasanga naakkap pudingakkara maadhiri pala kelvigal kekkaththaan seivaanga.

yenpaa pipela thanni varala, yenpaa current cut aagudhunnum kekkaraangale.

edhukku padhil thedavendiyadhu mudhal avasiyam? ingadhaan verupadugirom :)

TBCD said...

ஐயா,

சர்வேசரும்/நீரும் முன் முடிவோட இருந்தால், நான் சொல்வது அப்படித் தான் தெரியும்.

ஏன் இசுலாத்தை சொல்லவில்லை என்றால், எனக்கு அதுப்பற்றி முதற்கண் தெரியாது..

என்னை நேரடியாக பாதிக்கின்ற விடயங்களை வைத்தே நான் எழுத முடியும்...

தமிழர்கள் எல்லா நிலையிலும் வெற்றி பெறட்டும்...அதில் எனக்கு மகிழ்ச்சியே, கூகிள் குரோம் வெற்றிக்கு பிள்ளையார் தான் காரணம் என்று முட்டாளாக்கினால் தான் வருத்தம்..

///
As SurveySan already mentioned, your reply is not acceptable.

BTW, it is quite possible that Google launched Chrome on Pillayar Chaturthi day knowingly.

The Product development VP is a Thamizh. One of the leading shareholders, the angel investor of Google and also the person who was responsible for that name (instead of original googol) is a Thamizh belonging to your hated community.
///

TBCD said...

வெட்டி,

எனக்கென்னவோ, கடவுள் பெயரைச் சொல்லி, நம்ம மக்கள் விணாகப் போகிறார்களே என்ற வருத்தம் தான் மேலிடுகிறது.

அதை இன்னும் சிக்கலாக்கும் வித்தையாகத் தான் இந்த குறியீடு, பிரம்மம், இத்யாதிகள் என்று நினைக்கிறேன்.

நேரத்திற்கும், நீண்ட பின்னுட்டத்திற்கும் நன்றிங்கோ..

///
வெட்டிப்பயல் said...

இப்படி நிறைய சொல்லியிருந்தாரு. எல்லாம் குறியீடு. நம்ம கதையை மட்டும் பிடிச்சிக்கிட்டு குறியீடை உணராம இருக்கோம்னு பேசிக்குவாங்க.

நல்ல புத்தகம். சான்ஸ் கிடைச்சா படிங்க. நம்ம தமிழ்மணத்துல இருக்கற சாதி சண்டைகளை விட அப்ப அதிகம். பிராமணர்கள் எப்படி அரசியலில் வந்தார்கள்னும் அதுல இருக்கு. ஆனா எந்த அளவு உண்மைனு நிச்சயம் சொல்ல முடியாது. But that will invoke our thought Process for sure :)
///

TBCD said...

கடவுள் நம்மை உருவாக்கவில்லை, நாம் தான் கடவுளை உருவாக்கினோம் என்றளவில் உங்கள் பார்வை மாறுப்பட்டியிருப்பதில் மகிழ்ச்சி..

/// SurveySan said...

tbcd,
thats where the problem is.
it doesnt matter who 'created god'.///

யாருக்கு நல்லது என்று சொன்னா புரியும்...

சாதிப்பிரிவினையயை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இழுத்துச் செல்லும் வலிமை இந்த மதத்திற்கு இருக்கின்றதே...அதுவும் நல்லது தானோ..

மக்களை மூடர்களாக்கி வைத்திருப்பதும் நல்லது தானோ..புதசெவி

/// the concept of GOD is a good one.

The ups and down in the name of religion is not a good thing.
///

மதத்தில் நம்பிக்கையில்லாதவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இந்த மதச்சடங்ககுகள் இருக்கின்றன என்று நான் சொன்னால் நீங்க என்ன சொல்லுவீங்க..

///
but, to protest and make fun of once belief is unacceptable.
///

உங்கள் தனிப்பட்ட நம்பிக்கையயை சாடவில்லையே..குழுவாக இயங்கி மக்களை மூடர்களாக்கும் நிகழ்வையே சாடுகிறேன். மதத்தை மக்களை அடிமைப்படுத்தும் ஆயுதமாக மாற்றுவதை பார்த்துக்கொண்டே, கொழுக்கட்டை சாப்பிடவது என்பது எனக்குக் கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கின்றது..

/// Life revolves around belief - some believe in GOD, respect that.
some believe in Nature, respect that.
some believe in science, some believe in themselves.
respect that.

;)
///

இறுதியாக, மாற்றுக் கருத்தையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!

TBCD said...

கூடுமானவரைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலைக்கொடுப்பது தான் சரி என்பது என் அணி...

///SurveySan said...

pasanga naakkap pudingakkara maadhiri pala kelvigal kekkaththaan seivaanga.

yenpaa pipela thanni varala, yenpaa current cut aagudhunnum kekkaraangale.

edhukku padhil thedavendiyadhu mudhal avasiyam? ingadhaan verupadugirom :)
///

Anonymous said...

/////

இறுதியாக, மாற்றுக் கருத்தையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!//

did you do that ? if yes, this post would have come at all :)

Anonymous said...

மூட நம்பிக்கை ரம்ழானில் இல்லையா ? அதெப்படி ?

இந்து கடவுள்கள் மட்டும் மூட நம்பிக்கைக்காகவா ? ( பார்ப்பு என்று கூறும் ஜல்லிகளைப் புறந்தள்ளுகிறேன் ). கடவுள் நம்பிக்கை என்று பார்த்தால் எந்த மதத்திற்கும் பொது ? "இந்து" கடவுளர்களைத் தொழுதல் மூட நம்பிக்கை, கொழுக்கட்டை, சுண்டல் படைத்தால் மூட நம்பிக்கை ? பிரியாணி நல்ல நம்பிக்கை :)

நல்லாருக்குங்க உங்க வாதம்.

anyways :) அங்க திட்டுனா அரிவாள் வரும். இங்க என்ன திட்டுனாலும் எல்லாம் விளக்கம் சொல்லிட்டு சும்மா இருப்பானுங்க :) நல்லா இருக்ங்க சாமிகளே

Anonymous said...

//பல நூறு ஆண்டுகள் போற்றியும்
தோன்றாத கடவுள் இனிமேலும்
தோன்றுவாரோ என்று கிஞ்சித்தும்
கவலைப்படாத மக்களே
இன்று
சதுர்த்தி யாமே...சதுர்த்தி//

இந்தியர்களைப் பற்றி நேசிப்பதானால் இது எல்லா மதத்தினற்கும் சேர்த்தும் அல்லவா சொல்லவேண்டும் ? ஒரு மதத்தை மற்றும் குறிவைத்து சொல்லுதல் ? என்ன காரணம் ?

anyways - not sure this comment also would sunk like other two :) good luck. check with your மனசாட்சி

SurveySan said...

////..குழுவாக இயங்கி மக்களை மூடர்களாக்கும் நிகழ்வையே சாடுகிறேன். மதத்தை மக்களை அடிமைப்படுத்தும் ஆயுதமாக மாற்றுவதை////

கடவுளுக்கு பர்த்டே கொண்டாடுவதால், மக்கள் எப்படி அடிமைப்படுத்தப்படராங்க?

நம்மை விட பல மடங்கு, தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் கிருத்தவர்கள்.
அமெரிக்கால முக்கால் வாசி அவிகதான்.
அவிக மக்கள் எந்த அளவுக்கு அடிமையாகியிருக்காங்க? அவங்க வாழ்க்கைல ஏன் பின் தங்கி போகலை?

ப்ரச்சனை கடவுளிடம் இல்லீங்கண்ணா.
கடவுள்தான் ப்ரச்சனைன்னு ப்ரச்சாரம் பண்ணி எல்லார் கண்ணுலயும் லாடம் கட்டி வக்கிரவங்கதான் ப்ரச்சனையின் மூலம்.
நாளைக்கே கோயில்கள் எல்லாம் இடிச்சு, எல்லாரும் கடவுள் இல்லைன்னு முடிவு பண்ணிட்டா, ஊர் சுபிட்சுமாயிடுமா?
பைப்ல தண்ணி வந்திருமா? கரெண்டு கம்பீல பிச்சுக்கிட்டு வருமா?

இஸ்லாத்தைப் பத்தி தெரியாததால், அவங்களின் பண்டிகைகளை விமர்சனம் செய்வதில்லை என்பது சப்பைக்கட்டு.

விநாயகருக்கு இவ்ளோ மேக்ரவுண்டு இருக்குன்னு பாலகுமாரன் அழகா எடுத்து சொல்லியிருக்காரு.
அதெல்லாம் தெரியாமதான, சதுர்த்திய நையாண்டி செஞ்சீங்க?
இந்து மதத்தை கரைச்சு குடிச்சுட்டா நையாண்டி பண்ணீங்க? ;)

/////நாம் தான் கடவுளை உருவாக்கினோம் என்றளவில் உங்கள் பார்வை மாறுப்பட்டியிருப்பதில் மகிழ்ச்சி/////

பாலகுமாரனும் அதத்தான் சொல்லியிருக்காரு; ஓரளவுக்கு சுயபுத்தி உள்ளவர்கள் எல்லோரும் இதையேதான் சொல்லுவாங்க. எல்லார் பார்வையும் பல வருஷமா இப்படிதான் இருக்கு. யாரும், கண்மூடித்தனமா விநாயகப் பெருமான் தான் பெரீரீரீய கடவுள்னு சொல்லல சார்.
நீங்க தான் கண்ணாடி போட்டூகிட்டு, குறை கண்டு பிடிச்சு, இல்லாத ஊருக்கு வழி தேடிக்கிட்டு இருக்கீங்க என்பது அடியேன் கருத்ஸ் :)

விநாயகரும், ஏசுவும், அல்லாவும், மக்களை ஓரளவுக்கு நெறிமுறைகளுடன் வாழ வழிவகுப்பவர்கள்.
அவிக இல்லன்னு நம்பரவங்க, நம்பிட்டுப் போங்க, மதிக்கறோம். நீங்க்க கோயிலுக்குள்ள வரவேணாம், ச்ண்டல் தின்னவேணாம், பிரியாணி துண்ணவேணாம் - எல்லாம் நாங்க பாத்துக்கரோம்.

நீங்க நாலும் தெரிஞ்சவங்க, சுனாமி வந்தா எதிர்நீச்சல் போடுங்க, கூட இருக்கரவங்களையும் காப்பாத்துங்க.

நாங்க பெரும் துயர் வந்தா, ஆட்ரா ராமா ஆட்ரா ராமான்னு பாடிட்டு நீம்மதியத் தேடிக்கறோம்.

ஆயிரமாயிரம் காலமாய் இருக்கும் கடவுள் பக்தி, மனுஷனின் உயர்வுக்கு எப்படி பாதகமா அமையுதுன்னு பிரீல, விளக்கவும்.

btw, 'history of god'னு ஒரு அருமையான documentary irukku கெடைச்சா பாருங்க.

SurveySan said...

////இறுதியாக, மாற்றுக் கருத்தையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!////

ofcourse, as always.

நீங்க தான், 'மதிக்காமல்' மிதிப்பவர் என்பதையும் நினைவில் கொள்க ;)

TBCD said...

மாற்றுக் கருத்து என்பது பதிவெழுதாமல் இருப்பதில்லிங்கண்ணா...

உங்களைப் போன்ற அனானிகள் சொன்னாலும், என்னா சொல்லுறாங்க என்று கவனித்து, நியாயம் இருந்தால் ஏத்துக்கிறது தான்..

என் முதுகிலே அழுக்கு இருந்தா இருக்கட்டும்,அவன் முதுகிலே இருக்கிறதை ஏன் சொல்லவில்லை என்று அழுகுணி ஆட்டம் ஆடுவதூ மதிப்புக்கொடுப்பதில்லை என்பது மட்டும் திண்ணம்.

உங்கள் யாரின் விமர்சனங்களிலும், அந்த பதிவில் இருக்கும் வரிகளின் விமர்சனம் இல்லை..

மொக்கையாக என்னை மட்டுமே ஏன் சொல்கிறாய் என்ற தொனியே இருக்குது...

///
Anonymous Anonymous said...

/////

இறுதியாக, மாற்றுக் கருத்தையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!//

did you do that ? if yes, this post would have come at all :)
///

TBCD said...

எல்லா மதங்களிலும் மூடநம்பிக்கைகள் இருக்கு...

நம்ம நாட்டில் பெரும்பான்மையான 80% சதிவிகித மக்களை பாதிப்பது இந்து மதத்தின் ஆணி வேர் என்பதால், அதற்கு முன்னுரிமை.

நீங்க அப்படியே அந்தப் பக்கம் கையயைக் காட்டி தப்பிச்சிக்கப் பார்க்காதீங்க..

///
Anonymous Anonymous said...

மூட நம்பிக்கை ரம்ழானில் இல்லையா ? அதெப்படி ?

இந்து கடவுள்கள் மட்டும் மூட நம்பிக்கைக்காகவா ? ( பார்ப்பு என்று கூறும் ஜல்லிகளைப் புறந்தள்ளுகிறேன் ). கடவுள் நம்பிக்கை என்று பார்த்தால் எந்த மதத்திற்கும் பொது ? "இந்து" கடவுளர்களைத் தொழுதல் மூட நம்பிக்கை, கொழுக்கட்டை, சுண்டல் படைத்தால் மூட நம்பிக்கை ? பிரியாணி நல்ல நம்பிக்கை :)

நல்லாருக்குங்க உங்க வாதம்.

anyways :) அங்க திட்டுனா அரிவாள் வரும். இங்க என்ன திட்டுனாலும் எல்லாம் விளக்கம் சொல்லிட்டு சும்மா இருப்பானுங்க :) நல்லா இருக்ங்க சாமிகளே

TBCD said...

கவலை வேண்டாம் மனசாட்சி (அல்லது "புதிய" பதிவர்)

வெளியிட்டுவிடுவோம்..

ஆபாசம் இருந்தால் தான் தடா...

//
Anonymous said...

இந்தியர்களைப் பற்றி நேசிப்பதானால் இது எல்லா மதத்தினற்கும் சேர்த்தும் அல்லவா சொல்லவேண்டும் ? ஒரு மதத்தை மற்றும் குறிவைத்து சொல்லுதல் ? என்ன காரணம் ?

anyways - not sure this comment also would sunk like other two :) good luck. check with your மனசாட்சி
//

குரங்கு said...

எல்லரும் சொல்லுறத பாத்தா, என்ன மட்டும் அடிக்கிறையே, மத்தவங்களை ஏன் விடுறே அப்படின்னு இருக்கு.

நமக்கு தப்புன்னு தெரிந்சததானே சொல்லமுடியும்.

ஆமா, கணபதின்னா யாரு? எதுக்கு கடைசிலே அவரை கண்ட துண்டமா, வெட்டி தண்னில கரைக்கனும்?

உங்களைலாம் திருதத எத்துன பெரியார் வந்தாலும் கஷ்டம்பா..

கடவுள் வேனும்தான், அதுக்கு எத்தனா??? கடவுள பத்தி சொன்ன ஷிரிடி சாய்பாபாவயே கடவுளாக்குனே கும்பலாச்யே நீங்கள்லாம். ஒரு குரங்கு சொல்லியா கேட்க போரீங்க?

சும்மா சூப்ப்ர் பதிவு tbcd

யாத்ரீகன் said...

>>> அங்க திட்டுனா அரிவாள் வரும். இங்க என்ன திட்டுனாலும் எல்லாம் விளக்கம் சொல்லிட்டு சும்மா இருப்பானுங்க <<<

so whats this called ? sick mentality of genaralizations.... ayudham yendhuvor yendraal ivargal dhaan.. ivargal amaidhiyin porumaiyin sigarangal yendrelaam oru image vachirukeenga.. velangirum...

TBCD said...

பிறப்பு இறப்பு இல்லா கடவுள் என்றுச் சொல்லிவிட்டு, கடவுளுக்கு பிறந்தநாள் என்றால் சிரிக்கத் தான் முடிகிறது என்னால்..

///
SurveySan said...

கடவுளுக்கு பர்த்டே கொண்டாடுவதால், மக்கள் எப்படி அடிமைப்படுத்தப்படராங்க?
///

அப்படியா...எதை வைச்சி சொல்லுறீங்க..

20% சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே கோவிலுக்கு செல்லுகிறார்களாம்..அமேரிக்காவில்..தெரியும்மா..

///
நம்மை விட பல மடங்கு, தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் கிருத்தவர்கள்.
அமெரிக்கால முக்கால் வாசி அவிகதான்.
///

அங்கேயும் கறுப்பின மக்களுக்கு சமமான உரிமைகள் இல்லைங்கானும்..ஒரு வெள்ளையனும், கறுப்பரும், கொலை இடத்தில் இருந்ததாக சந்தேகப்பட்டால், கறுப்பர் மீது தான் சந்தேகம் பாயும்..

பணம் இருந்துட்டா, எல்லாமே சரியாகிவிடுமா..

செவ்விந்தியர்களை அழித்து வளர்ந்த சமூகமுங்க...என்னமோ போங்க.
/// அவிக மக்கள் எந்த அளவுக்கு அடிமையாகியிருக்காங்க? அவங்க வாழ்க்கைல ஏன் பின் தங்கி போகலை?
///

கடவுளிடம் இல்லை..ஒருவேளை அவர் இருந்திருந்தால், இருந்திருக்கும்மோ..

///
ப்ரச்சனை கடவுளிடம் இல்லீங்கண்ணா.

///

கடவுள் தான் எல்லாம்..உம்மாச்சி கண்ணைக்குத்தும் என்று சொல்லி, முங்காம் போடு கூட்டம் தான் பிரச்சனை...ஆதிக்கத்தை நிலைநாட்ட மதமும் கடவுளும் துணை செய்கிறார்கள்...

/// கடவுள்தான் ப்ரச்சனைன்னு ப்ரச்சாரம் பண்ணி எல்லார் கண்ணுலயும் லாடம் கட்டி வக்கிரவங்கதான் ப்ரச்சனையின் மூலம்.
///

நாடு முழுக்க கோவில் கட்டிட்டீங்க..விளங்கிடுச்சாக்கும்..

நாடு முழுக்க இருக்கும் கோவில் சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்தி, மக்களுக்கு செலவழிக்கலாம்..

///
நாளைக்கே கோயில்கள் எல்லாம் இடிச்சு, எல்லாரும் கடவுள் இல்லைன்னு முடிவு பண்ணிட்டா, ஊர் சுபிட்சுமாயிடுமா?
பைப்ல தண்ணி வந்திருமா? கரெண்டு கம்பீல பிச்சுக்கிட்டு வருமா?
////

ஒரு கடவுளுக்கு ஒரு கதை சொன்னா தப்பிக்கலாம்..ஒன்னுன்னுக்கும் 9 கதை சொன்னா...உங்க கதை ஊத்தல் என்று தான் உலகத்திற்குமே தெரிந்துவிடுகிறதே..

அவர் பிரம்மச்சாரி என்று ஒரு கதை, அவருக்கு இரண்டு மனைவி என்று ஒரு கதை..இப்போ தொ.காவில், பால விநாயகர் என்று அல்டாப்பு கதைகள் வருது..இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, அதுவும் உண்மை கதைகள் வரிசையில் சேரும்...

இதையெல்லாம், ஆரயனுமின்னா, ரத்தப்பரிசோதனையில் ஒரு சிரிஞ் எடுத்து தானே முடிவு சொல்லுறாங்க..

மொத்த ரத்தத்தையும் உறிஞ்சிட்டா பதில் சொல்லுறாங்க...

என்னாதிது சிறுபிள்ளைத்தனமா... :))

////
இஸ்லாத்தைப் பத்தி தெரியாததால், அவங்களின் பண்டிகைகளை விமர்சனம் செய்வதில்லை என்பது சப்பைக்கட்டு.

விநாயகருக்கு இவ்ளோ மேக்ரவுண்டு இருக்குன்னு பாலகுமாரன் அழகா எடுத்து சொல்லியிருக்காரு.
அதெல்லாம் தெரியாமதான, சதுர்த்திய நையாண்டி செஞ்சீங்க?
இந்து மதத்தை கரைச்சு குடிச்சுட்டா நையாண்டி பண்ணீங்க? ;)

பாலகுமாரனும் அதத்தான் சொல்லியிருக்காரு; ஓரளவுக்கு சுயபுத்தி உள்ளவர்கள் எல்லோரும் இதையேதான் சொல்லுவாங்க. எல்லார் பார்வையும் பல வருஷமா இப்படிதான் இருக்கு. யாரும், கண்மூடித்தனமா விநாயகப் பெருமான் தான் பெரீரீரீய கடவுள்னு சொல்லல சார்.
நீங்க தான் கண்ணாடி போட்டூகிட்டு, குறை கண்டு பிடிச்சு, இல்லாத ஊருக்கு வழி தேடிக்கிட்டு இருக்கீங்க என்பது அடியேன் கருத்ஸ் :)
////

ஆமாம், தப்பு செஞ்சிட்டு, எல்லாருமே மன்னிப்புக் கொடுக்கத் தயாரா இருக்காங்க...நெறி முறைகளாம்...செம சிரிப்பு தான் போங்க..

நெறி முறை கடவுளால் வருவதில்லை..தனிமனித ஒழுக்கம் பேன கடவுள் அவசியமில்லை..

உங்களுக்கு வேண்டுமென்றால் வைச்சிக்கோங்க..கூட்டம் கூட்டமா சேர்ந்து, ஹிட்டன் அஜெண்டா வைச்சி மக்களை மந்தைகளாக்காதீங்க..

அம்புட்டுத் தான்..

////
விநாயகரும், ஏசுவும், அல்லாவும், மக்களை ஓரளவுக்கு நெறிமுறைகளுடன் வாழ வழிவகுப்பவர்கள்.
////

கோவி.கண்ணன் said...

// TBCD said...
பிறப்பு இறப்பு இல்லா கடவுள் என்றுச் சொல்லிவிட்டு, கடவுளுக்கு பிறந்தநாள் என்றால் சிரிக்கத் தான் முடிகிறது என்னால்..

//

சூப்பர்,

ஐயர் தம்பி நீ நன்னா தேறிவிட்டாய் !

:)

சந்தர் said...

விநாயகர் சதுர்த்தி பற்றிய என்னுடைய இடுகையை இங்கு http://baksa.blogspot.com/2008/09/blog-post.html பார்க்கவும்

வெட்டிப்பயல் said...

// TBCD said...

வெட்டி,

எனக்கென்னவோ, கடவுள் பெயரைச் சொல்லி, நம்ம மக்கள் விணாகப் போகிறார்களே என்ற வருத்தம் தான் மேலிடுகிறது.
//

நியாயமான வருத்தம் தான்... ஆனா ஒரு சிலருக்கு கடவுள் நம்பிக்கை வாழ்வின் மேல் ஒரு வித பிடிப்பை தருகிறது. விரக்தியிலிருந்து வெளிப்படவும் உதவுகிறது...

// அதை இன்னும் சிக்கலாக்கும் வித்தையாகத் தான் இந்த குறியீடு, பிரம்மம், இத்யாதிகள் என்று நினைக்கிறேன்.//

:))

ஏன் நிறைய மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்குனு கொஞ்சம் யோசிச்சி பாருங்களேன்... நம்மள மாதிரி இல்லாம ஆப்பிரிக்கா மாதிரி காட்டுல வாழற ஆதிவாசி மக்களுக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கவே செய்கிறதாம். அங்க எல்லாம் கடவுளை யார் கொண்டு போயிருப்பாங்க. அது அவுங்க வாழ்க்கை முறைக்கு எப்படி உதவுதுனு கொஞ்சம் யோசிங்களேன்?

வெட்டிப்பயல் said...

// SurveySan said...

நல்லால்ல.

ரம்ஜானுக்கு ஏன் கவுஜ எழுதல?//

Too bad :(

நம்ம விசேஷம் பத்தி தப்பா எழுதினா நமக்கு கஷ்டமா இருக்கில்ல. அவுங்களுக்கு அப்படி தானே இருக்கும்.

அப்படி எழுதுங்கனு நாமலே சொல்லாமா?

SurveySan said...

///நம்ம விசேஷம் பத்தி தப்பா எழுதினா நமக்கு கஷ்டமா இருக்கில்ல. அவுங்களுக்கு அப்படி தானே இருக்கும்.

அப்படி எழுதுங்கனு நாமலே சொல்லாமா?///

யூ.டூ வெட்டி? :)

நான் அவர எழுத சொல்லலை. ஏன் எழுதலன்னு காரணம் கேட்டேன். ரெண்டுக்கும் வித்யாசம் இருக்குன்னுதான் எனக்கு பட்டுது ;)

ரம்ஜான கிண்டல் பண்ணி இவரு பதிவு போட்டிரூந்தாலும், என் பின்னூட்டம், 'நல்லால்ல'ன்னு தான் இருந்திருக்கும்.

I dont wear sunglasses ;)

tbcd, கடவுள் ஆதிவாசிகள் காலத்துலேருந்து இருக்காரு. அமெரிக்காலையும் இருக்காரு ஆப்ரிக்காலயும் இருக்காரு ஆர்டிக்லையும் அந்டார்டீகாவிலும் கூட வழிபடப் படறாரு. யாரும் கடவுளால கெட்டுப் போனதில்லை. விஷயம் புரியாமல் உங்கள மாதிரி கயிறு திரிச்சு விடறவங்களாலதான் மக்கள்ஸுக்குப் பிரச்சனை ;)

திருப்பதி மாதிரி கோயில்கள்ள வர உண்டியல் கலெக்ஷனால் பலப் பல நல்ல விஷயங்கள் செய்யறாங்களாம். இழுத்து மூடிட்டு அந்த எடத்துல என்னா பண்ணச் சொல்றீங்க அரசாங்கத்த? டாஸ்மார்க் கடையா?

TBCD said...

கு.ரங்கய்யா,

வருகைக்கு நன்றி..

///
குரங்கு said...

எல்லரும் சொல்லுறத பாத்தா, என்ன மட்டும் அடிக்கிறையே, மத்தவங்களை ஏன் விடுறே அப்படின்னு இருக்கு.

நமக்கு தப்புன்னு தெரிந்சததானே சொல்லமுடியும்.

ஆமா, கணபதின்னா யாரு? எதுக்கு கடைசிலே அவரை கண்ட துண்டமா, வெட்டி தண்னில கரைக்கனும்?

உங்களைலாம் திருதத எத்துன பெரியார் வந்தாலும் கஷ்டம்பா..

கடவுள் வேனும்தான், அதுக்கு எத்தனா??? கடவுள பத்தி சொன்ன ஷிரிடி சாய்பாபாவயே கடவுளாக்குனே கும்பலாச்யே நீங்கள்லாம். ஒரு குரங்கு சொல்லியா கேட்க போரீங்க?

சும்மா சூப்ப்ர் பதிவு tbcd
///

TBCD said...

ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் முயற்சி..
-இசுலாமியரை கட்டம்/பட்டம் கட்டுவது
-டிபிசிடி பயந்தாங்கொள்ளி என்று எள்ளி நகையாடுவது
-இந்துத்துவா மக்கள் அப்பிரானிகள்
-இப்படி ஏதாவது சொன்னால்,சினந்து, மற்றாவர்கள் குறித்து ஏதாவது சொல்ல வைக்க முடியும்மோ

என்று பல காய்களை குறிவைத்து, இப்படி, இந்தப் பதிவிலும், சர்வேசர் பதிவிலும் சொல்லியிருக்கிறார்கள்..

நிர்வான ஊரில் கோவனம் கட்டுங்கய்யா என்றால், இப்படித் தான் ஏதாவது வரும்.. :P

///
யாத்ரீகன் said...

>>> அங்க திட்டுனா அரிவாள் வரும். இங்க என்ன திட்டுனாலும் எல்லாம் விளக்கம் சொல்லிட்டு சும்மா இருப்பானுங்க <<<

so whats this called ? sick mentality of genaralizations.... ayudham yendhuvor yendraal ivargal dhaan.. ivargal amaidhiyin porumaiyin sigarangal yendrelaam oru image vachirukeenga.. velangirum...
///

TBCD said...

ஆமாம்...மீண்டும் உடல் தேறிவிட்டேன்..குறைக்கனும்.. :P

///

கோவி.கண்ணன் said...

சூப்பர்,

ஐயர் தம்பி நீ நன்னா தேறிவிட்டாய் !

:)
///

TBCD said...

சந்தர் உங்கள் விநாயக பெருமைகளில் ஒப்புதல் இல்லையென்றாலும், அந்த சிலைக்கு நேர்ந்த கொடுமைகளில் எனக்கு ஒப்புதல் இல்லை.. (இயற்கை காரணங்களுக்காக)

///
சந்தர் said...

விநாயகர் சதுர்த்தி பற்றிய என்னுடைய இடுகையை இங்கு http://baksa.blogspot.com/2008/09/blog-post.html பார்க்கவும்
///

TBCD said...

ஸ்டீராய்ட்ஸ் உபயோகிப்பதுப் போல் தான் இதுவும்..

முடவனுக்கு கோல் கொடுக்கலாம்..பிறக்கும் போதே, குழந்தைக்கு எதுக்குங்க ஊன்று கோல்..

ஃஃஃஃ

சிறுவயது முதலே, நாம் கடவுள் குறித்து கேள்வி எழுப்ப தடை செய்யப்பட்டு, கேள்விக்கப்பாற்பட்டவர்கள் என்று போதிக்கப்படுகிறோம்..

அதன் விழைவுகள், யார் என்ன சொன்னாலும், அதை பின்பற்ற ஆரம்பிக்கின்றோம்.

25 ஆண்டுகளுக்கு முன், நம் சமூகத்தில் இல்லாத வழிபாடுகள், நம்பிக்கைகள் இன்று நம் தலைமுறையிடமிருந்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.

இதில் பல மூடபழக்கவழக்கங்களும், சில ஆதிக்கவாதிகளின் விருப்பங்களும், நம்மையறியாமலே, நமக்குள் ஏற்றப்பட்டு, திணிக்கப்படுகின்றன.

ஃஃஃஃ

ஆப்பரிக்காவில் காட்டு வாழ்க்கை வாழும் மனிதனின் கடவுளுக்கும் நம்மை ஆட்டி வைக்கும் மதத்திற்கு நிறைய வித்தியாசம் இருக்கு வெட்டி.

நமக்கு தெரியாத வரைக்கும் நாம் மதத்தின் பின்னாலோ, கடவுளின் பின்னால் போகலாம். பகுத்தறிவு என்ற ஒன்றை நாம் பலவற்றிற்கும் பயன்படுத்தும் போது, இந்த விடயத்தில் மட்டும், கட்டுப்பெட்டியாக ஏன் போகனும்.

உலகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே தன்னிச்சையாக நடக்கின்றது. அதை நாம் ஓரள்விற்கு அனுமானிக்கலாம். அது யாரோ ஒருவரால் கட்டுப்படுத்தப்படுகிறது, வேண்டினால் எனக்கு சாதகமாக நடக்கும் என்ற நப்பாசை மனிதனை கடவுளின் பின்னால் ஓடவைக்கின்றது.

ஆக, இறுதியாக ஒப்புக்கு கடவுளை நம்பிக்கொண்டு, முயற்சிகளையும் செய்வதற்கு, முயற்சிகளை மட்டுமே தொடரலாமே...(பரிட்சைக்கு கடவுள் காப்பாற்றுவார் என்று படிக்காமல் போக மாட்டீங்க என்று நினைக்கிறேன்..)

///
வெட்டிப்பயல் said...
நியாயமான வருத்தம் தான்... ஆனா ஒரு சிலருக்கு கடவுள் நம்பிக்கை வாழ்வின் மேல் ஒரு வித பிடிப்பை தருகிறது. விரக்தியிலிருந்து வெளிப்படவும் உதவுகிறது...

:))

ஏன் நிறைய மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்குனு கொஞ்சம் யோசிச்சி பாருங்களேன்... நம்மள மாதிரி இல்லாம ஆப்பிரிக்கா மாதிரி காட்டுல வாழற ஆதிவாசி மக்களுக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கவே செய்கிறதாம். அங்க எல்லாம் கடவுளை யார் கொண்டு போயிருப்பாங்க. அது அவுங்க வாழ்க்கை முறைக்கு எப்படி உதவுதுனு கொஞ்சம் யோசிங்களேன்?
///

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/கடவுள் நம்மை உருவாக்கவில்லை, நாம் தான் கடவுளை உருவாக்கினோம் /

மண்ணைப் பிடித்தான் கடவுள்
மனிதனாயிற்று
ஆகி
மூலக்கிரகத்தில் அது என்ன
உளிச்சத்தம்
கடவுளைப் பிடித்துக் கொண்டிருக்கிறது
மண்

(பிரமிள்)

இதே மாதிரி குஞ்ஞுண்ணியும் ஒரு கவிதை எழுதியிருப்பாரு.

அப்புறம், கோவியாரின் முதல் பின்னூட்டத்திற்கு ஒரு ரிப்பீட்டே :))

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்