ஏதோ ஒரு தகவலை தேடப் போகும் பொழுது ஒரு வலைத்தளத்தில் இந்த வாசகம் இருந்தது.
"sujalaam suphalaam malayaja sheethalam, vande mataraam"
எனக்கு அதைப் படித்ததும்மே ஏதோ சங்கத (Sanskrit) வாசகம் என்றுப் புரிந்தது. ஆங்கிலத்திலே அழுத்தமான நிறத்திலே எழுதியிருந்தது...என்னருகே அமர்ந்திருந்த என் அணியயைச் சேர்ந்த பெண்ணிடம் இது என்னவென்று கேட்டேன்...
அவர் இது தெரியலையா...என்று ஆச்சர்யத்தில் வாயயைப் பிளந்தார்..
எனக்கு என்னடா இது கொடுமையாப் போச்சி...இது அப்படி என்ன பெரிய இது என்று பார்த்தப் பொழுது, வந்தே மாதரம் கண்ணில் விழுந்தது....ஓ இது வந்தே மாதரம் பாடலின் ஒரு பகுதி என்றுப் புரிந்தது...
இருந்தாலும், அந்த பெண்ணிடம் கொஞ்சம் வம்பிழுக்கலாம் என்று எண்ணி தெரியவில்லையே...என்றேன்..
என்ன சொல்லுறீங்க...பள்ளியிலே கூட படிச்சியிருப்பீங்களே...தேசியப் பாடல் இது என்றார்...உணர்ச்சிவசப்பட்டவாறே..
என்னருகே அமர்ந்திருந்தவர்களில் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்..அந்த பெண்ணோ, கர்னாடகத்தைச் சேர்ந்தவர்...
நான் தமிழ் நண்பர்களை துணைகழைத்து, நாங்கள் எல்லாம் நீராரும் கடலுடுத்த என்ற தமிழ் தாய் பாட்டு தான் பாடியிருக்கோம்..இந்தப் பாடலைக் கேட்டதில்லை என்றதும்...அவர் அதிசயமாகப் பார்த்தார்...
கூட இருக்கும் நண்பர்...ஓ ஏ.ஆர். ரகுமான் வந்தே மாதரமா...என்று வேறு கேட்டு அவரை இன்னும் ஒரு வழி செய்தார்...
இறுதியாக, நான் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய பாடல் தானே...எனக்கு பொருள் தெரியாது..சில சமயங்களில் தொ.கா.வில் பார்த்திருக்கிறேன்...அதனாலே இந்த வரிகள் அவ்வளவாக தெரியாது என்றேன்...சமாதானம் ஆகாமலே அவர் "உம்" கொட்டினார்..
நிற்க...
உண்மையில் இது தேசியப்பாடலா.....?
இதுப் போன்ற பாடல்களை தேசிய பாடல் என்று எதை வைத்து அறிவிக்கின்றனர் என்று எனக்கு விளங்கவில்லை..பல் வேறூ மொழிகள் பேசுகின்ற நாட்டில் ஒரு மொழிப் பாடலை தேசிய பாடல் என்று சொன்னால் அதன் பொருள் கூட விளங்காமல் நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டுமா...
இருக்கின்ற ஒரு தேசிய கீதத்திற்கே இன்னும் பொருள் கண்டபாடில்லை...(அதில் அது ஜார்ஜ் 5 ஆம் மன்னருக்கு பாடப்பட்ட வாழ்த்து என்ற பிரச்சனை வேறு இருக்கு...)..
இரண்டிற்கும்மே எனக்கு பொருள் தெரியாது என்றுச் சொல்லவும்..., நீ என்னவோ, பொருள் விளங்கவில்லை என்று சொல்லுறே..ஆனா, யுனெஸ்கோவிலெ நம்ம தேசிய கீதத்தைத் தான் மிக அழகான தேசிய கீதம் என்று சொல்லியிருக்காங்க தெரியும்மா என்று வேறு சொல்லி வைச்சாங்க...
அட..அப்படியா...யுனெஸ்கோ இப்படி வேலையத்த வேலை எல்லாம் செய்கிறதா என்று தேடியதில்.....அதுவும் இணையத்தில் இந்தியன் என்பதில் பெருமைப்படு என்று சுற்றி வரும் எண்ணற்ற பொய் தகவல்கள் கொண்ட போன்றதே என்று தெரிய வந்தது...
படித்தவர்களுக்கு வேண்டுமானால், இது தேசிய கீதம், தேசிய பாடல் என்றாவது தெரிந்திருக்கும்...நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒருவரிடம் இந்தப் பாடல்கள் (புரியாத மொழியில்) எடுபடுமா..
சுஜலாம் சுபாலாமும் தேசிய (மனப்பாட) பாடல்களும் !!!
lables
vande mataram,
அரசியல்,
சமூகம்,
வந்தே மாதரம்
Subscribe to:
Post Comments (Atom)




5 Comments:
//த.ம.தா. பின்னுட்டம் அனுமதிக்கப்படும். வெளியிடப்படும். பதிவு முகப்பில் வந்தப்பின், நீக்கப்படும். :)//
அண்ணே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! இதுவும் தனிமனித தாக்குதலில் வருமா?
\\அண்ணே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! இதுவும் தனிமனித தாக்குதலில் வருமா?//
:)
கலக்கல் டிபிசிடி.. எனக்கும் அந்த பாடல் தெரியாது, எதுக்கு அதை மனப்பாடம் பண்ணனும்னும் இதுவரைக்கும் புரியல. தேசிய கீதம் பாடி, கேட்டு பல வருசம் ஆச்சி, டிரை பண்ணிப் பாக்க பயமா இருக்கு (மறந்துடுச்சின்னா நான் இந்தியனான்னு எனக்கே காம்ப்ளக்ஸ் வர அளவுக்கு அது முக்கியம்னு போதிக்கப்பட்டிருக்கிறோம்). ஆனால் 10வது படிக்கிறப்ப மனப்பாட செய்யுளான சிலப்பதிகாரத்தின் "தேரா மன்னா செப்புவ..." பாட்டை இப்போதும் எழுத்து மாறாமல் சொல்ல முடியும். தாய்மொழிண்ணே!!!
என்னை வெகுநாளாக உறுத்திக் கொண்டிருந்த ஒரு விடயத்தை எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
வந்தே மாதரம் தேசிய கீதம் எனும் தமிழர்களை (என்று சொல்லிக் கொள்பவர்களை) ”நீராரும் கடலுடுத்த (தமிழ் தாய் வாழ்த்து)” வை முழுதாக பாடச் சொல்லுங்கள். பாடமாட்டார்கள்.பாடத் தெரியாது ஏனென்றால் தமிழ் தேவபாடை அல்லவே!
அண்ணே,
’யாதும் உரே யவரும் கேளிர்’ என்ர புரநானூறு பாட்டை ஐந எழுதி வச்சிருக்கஙக..எனக்கு தெரிஞ்ச ஒரெ ஒருமைபாடை வலியுருதும் இந்திய பாடல் இதுதான்....
Post a Comment