மக்களவை தேர்தலில் மக்களுடன் தான் கூட்டனி, கடவுளுடன் தான் கூட்டனி, முக்கு சந்து பிள்ளையாருடன் தான் கூட்டனி, என்று பேசி வந்த விசய காந்தர், திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டனி அமைக்க இப்போது தயார் என்றூ சொல்லியுள்ளார்.
இதன் தொடர்பில் விசயகாந்தர் கூறியதாவது...
‘’இலங்கைப் பிரச்சனையை உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன்.
இப்போதுகூட திமுக, அதிமுக கூட்டணிகள் தேர்தலைப் புறக்கணிக்க முன்வந்தால் நானும் தேர்தலைப் புறக்கணிக்கத் தயாராக உள்ளேன்’’
நல்லா சுத்துறாங்கய்யா காதுல பூவை..!!
இன்னும் என்னவெல்லாம் விசயகாந்தர் கூறுவார் தெரியும்மா..
ஈழத்தமிழர்களுக்காக நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தயார்...ஆனால் திமுக, அதிமுகவினரும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
இதுவாவது பரவாயில்லை..
தமிழக மக்களுக்கு ஊழலற்ற ஆட்சியயை வழங்க தேமுதிக தயார், ஆனால், அதற்கு முன், அதிமுகவும், திமுகவும் ஊழலற்ற ஆட்சியயை வழங்க வேண்டும்.
நடக்கின்ற செயலா இது...!!
சொல்லப் போனால், கடந்த அதிமுக ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்றும் சொல்லலாம்..இதுவரை எந்த ஊழல் புகாரும் செயலலிதா மீது சுமத்தப்படவில்லை....
திருடர்களுக்குளுக்கான நேர்மை என்று ஒன்று இருக்கு..என்று பேசி முடிவு செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை...
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
தேர்தலுக்கு முன் இவைப் போன்ற அறிக்கைகளை நாம் படிக்க வேண்டி வரும்.
புவியியல் உங்களை மன்னிக்காது !!
அறிவியல் உங்களை மன்னிக்காது !!
சமூகவியல் உங்களை மன்னிகாது !!
கணிதவியல் உங்களை மன்னிக்காது !!
மொழியியல் உங்களை மன்னிக்காது !!
புரியாதவர்கள்...இங்கே போகவும்.
வரலாறு யாரை எல்லாம் மன்னிக்காது என்று பின்னுட்டத்தில் சரியாக சொல்பவர்களுக்கு, தேர்தல் முடிந்தப் பின் காதில் பூ வைக்கப்படும்.
விசயகாந்தர் திமுக, அதிமுகவுடன் கூட்டனிக்குத் தயார்
lables
அரசியல்,
எல்லாருமே கெட்டவங்க
Subscribe to:
Post Comments (Atom)




13 Comments:
மாப்பு,
இதுல பெரிய கொடும என்னன்னா...
புருசோத்தமன் தமிழ் ராசான்னு போறபோக்குல அடிச்சி விட்டிருக்கு டைம்ஸ்.
ஸ்ஸ்.... அப்பா.. அடிச்சிவுடு அடிச்சிவுடு...நம்ம காங்கிரஸ் பாணியில்... புருசோத்தமின் ஆன்மா இவர்களை மன்னிக்காது... ஹஹஹ..
தோத்தவங்களயெல்லாம் தமிழனாக்கிடுவாய்ங்களோ?? :)
இருக்கலாம். இருந்துட்டு போவோம். பிரபாவ புடிச்சிருவாங்கன்ற கேவலமான சிந்தனை முக’விடம் இருந்து வருவது தாங்க முடியா ஆத்திரத்தை கிளப்புகிறது.
தமிழன் தோற்பதற்கான காரணங்கள் தெரிகிறதா??... துரோகிகள். உடல்கூசுகிறது, தமிழன் என்று சொல்லிக்கொள்வதற்கே. பேரமாத்திட்டு பசவப்பா, நஞ்சுண்டான்னு பெங்களூர்லயே செட்டில் ஆயிரலாம்னு முடிவு பண்ணிட்டேன். :(
I hate this(vijayakanth) type of bleddys.
//சொல்லப் போனால், கடந்த அதிமுக ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்றும் சொல்லலாம்..இதுவரை எந்த ஊழல் புகாரும் செயலலிதா மீது சுமத்தப்படவில்லை....//
உங்ககிட்ட இருந்து இப்படி ஓர் அப்பாவி வாக்கியமா? கிண்டல் தானே! முந்தைய முறை அம்மாவோட ஊழல்களில் கைவைத்து அரெஸ்ட் பண்ணினதுக்குப் பதிலாக கலைஞருக்கு "நள்ளிரவு ஒத்தடம்" கொடுத்திருக்காங்க நம்ம தலைவி; புது வழக்கு போட யாருக்கு தைரியம் வரும்?
வரலாறு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் யாரையும் மன்னிக்காது, இதுலே எதுக்கு வீண் சந்தேகம்.
TBCD உங்கள் வருகைக்கு நன்றி. அப்படியே நம்ம பதிவையும் கொஞ்சம் படிங்க.
நீங்க சொல்லுறதுல ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்யுது.
ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்........
இதே செய்தியயை இந்து நாளிதழ் வேற மாதிரியாக இருக்கு. தமிழ் மன்னன் தான் என்று கலைஞர் சொல்லியிருப்பாரோ என்று சந்தேகத்தில் அதை நோண்டவில்லை...அப்படி சொல்லியிருந்தால்...
இஃகி இஃகி :))
///
இசை said...
மாப்பு,
இதுல பெரிய கொடும என்னன்னா...
புருசோத்தமன் தமிழ் ராசான்னு போறபோக்குல அடிச்சி விட்டிருக்கு டைம்ஸ்.///
இது கலக்கல்....
///
புருசோத்தமின் ஆன்மா இவர்களை மன்னிக்காது... ஹஹஹ..
///
ஆளைக் காணோமோ கொஞ்ச நாளா...
தெரியலையே அவ்வ்வ்வ்வ்
///
இசை said...
தோத்தவங்களயெல்லாம் தமிழனாக்கிடுவாய்ங்களோ?? :)
///
நம்ம புருனோ வந்து உண்மை, நம்பிக்கை, கருத்து என்று விளக்க ஆரம்பிப்பார்...கவணம் சொல்லிட்டேன்.
கலைஞர் அது தான் நடக்கப்போகின்றது என்று நம்புகிறார் போலிருக்கு.
சில சமயங்களில் இதுப் போன்ற பேசுவதற்கு பேசாமல் இருந்துவிடலாம்...
///
பிரபாவ புடிச்சிருவாங்கன்ற கேவலமான சிந்தனை முக’விடம் இருந்து வருவது தாங்க முடியா ஆத்திரத்தை கிளப்புகிறது.
///
:((((
///
தமிழன் தோற்பதற்கான காரணங்கள் தெரிகிறதா??... துரோகிகள். உடல்கூசுகிறது, தமிழன் என்று சொல்லிக்கொள்வதற்கே.
///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
///
பேரமாத்திட்டு பசவப்பா, நஞ்சுண்டான்னு பெங்களூர்லயே செட்டில் ஆயிரலாம்னு முடிவு பண்ணிட்டேன். :(
///
//தேர்தலுக்கு முன் இவைப் போன்ற அறிக்கைகளை நாம் படிக்க வேண்டி வரும்.
புவியியல் உங்களை மன்னிக்காது !!
அறிவியல் உங்களை மன்னிக்காது !!
சமூகவியல் உங்களை மன்னிகாது !!
கணிதவியல் உங்களை மன்னிக்காது !!
மொழியியல் உங்களை மன்னிக்காது !!//
முக்கியமாக இதெல்லாம் விட்டுப் போச்சு
அவியல் மன்னிக்காது
பொறியல் மன்னிதாது
ஏதோ சொல்ல வந்திருக்கீங்க..முழுசா சொல்லியிருக்காமே..வேலவன்
///
latchoumanan velavan said...
I hate this(vijayakanth) type of bleddys.
///
ஆகா..
/புவியியல் உங்களை மன்னிக்காது !!
அறிவியல் உங்களை மன்னிக்காது !!
சமூகவியல் உங்களை மன்னிக்காது !!
கணிதவியல் உங்களை மன்னிக்காது !!
மொழியியல் உங்களை மன்னிக்காது !!
அட்டா , எனக்கு இன்னும் சிரிப்ப அடக்க முடியல.
தெளிவா டைம்ஸ்லே போரஸ் என்கிற தமிழ் மன்னன் னு போட்டிருக்காங்களே.
இவுக சொல்ற சேதியத் தானே மக்கள் படிக்காக....
நல்லாப் பாருங்கப்பு - ஆங்கிலேயே முதலமைச்சர் வருணாநிதின்னு அண்டார்டிகா எடிசன்ல அடுத்த நியூஸ் வருதான்னு................!!
நல்ல பதிவு நண்பரே.
வருகைக்கு நன்றி அண்ணாத்தே :P,
அந்த வரிக்கு அடுத்து இப்படி ஒரு வாக்கியம் இருக்கே...பார்க்கலீங்களா..
"திருடர்களுக்குளுக்கான நேர்மை என்று ஒன்று இருக்கு..என்று பேசி முடிவு செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை..."
///
Blogger RATHNESH said...
//சொல்லப் போனால், கடந்த அதிமுக ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்றும் சொல்லலாம்..இதுவரை எந்த ஊழல் புகாரும் செயலலிதா மீது சுமத்தப்படவில்லை....//
உங்ககிட்ட இருந்து இப்படி ஓர் அப்பாவி வாக்கியமா? கிண்டல் தானே! முந்தைய முறை அம்மாவோட ஊழல்களில் கைவைத்து அரெஸ்ட் பண்ணினதுக்குப் பதிலாக கலைஞருக்கு "நள்ளிரவு ஒத்தடம்" கொடுத்திருக்காங்க நம்ம தலைவி; புது வழக்கு போட யாருக்கு தைரியம் வரும்?
///
Post a Comment