திமுக கூட்டணியில் இருந்தவரை, 2011ல் தமிழகத்தில் ஆட்சியயைப் பிடிப்போம் என்று நெஞ்சுயர்த்தி இராமதாசர் பேசியதை இந்த நாடறியும்.நாமும் அறிவோம்.
இதுவரை ஆட்சிக்கு வந்தவர்களால், ஒரு பயனும் இல்லை, நாங்கள் வந்தால் தேனாறும் பாலாறும் முதலில் வடமாவட்டங்களில் ஓடும். பின்னர் மெதுவாக தென்மாநில மாவட்டங்களில் ஓடும் என்று ஆசை காட்டியதையும் நாம் எளிதில் மறக்க இயலாது.
விடிவு காலம் என்று ஒன்று இருந்தால், அது பா.ம.க ஆட்சிக்கட்டிலில் ஏறும் நாளிலேயே அது தொடங்கும் என்று, நம்புங்கள் நாராயணன் சொல்லாமலே நம்பி வந்தோம்.
ஈழத்தில் தமிழர்களுக்கு பா.ம.க ஆட்சியில் ( 2011 வரை மிச்சம் மீதி இருந்தால்) விடிவு காலம் ஏற்படும் என்றெல்லாம் ஆசை காட்டிய இராமதாசர், செயலலிதாவின் அணிக்கு சனநாயக முறைப்படி பொதுக்குழுவில் பா.ம.கவினர் வேண்டுக்கோளுக்கினங்க போய் சேர்ந்தார்.
நேற்றைய சீ தமிழ் தொலைக்காட்சி செய்தியில் இராமதாசர் கூறியதாக கூறப்பட்ட செய்தி 2011 தேனாற்றின் கனவிலே நஞ்சைக் கலப்பதுப் போல் அமைந்துவிட்டது. பின்னே இராமதாசர்," அதிமுக-பா.ம.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெறும். அதுமட்டுமல்லாது, அடுத்து வருகின்ற சட்டசபை தேர்தலில், இதே கூட்டணி வெற்றி பெற்று செயலலிதா தலைமையில் ஆட்சியமைக்கப்படும்" என்று கூறினாராம்.
நிமிர்ந்த நெஞ்சு எங்கே !!
ஆட்சிக்கான அறைகூவல் எங்கே !!
இடித்துரைக்கும் பாங்கு எங்கே எங்கே !!
2011ல் ஆட்சிக்கு பா.ம.க வரும், தேனாறும் பாலாறும் ஓடும் என்று குடம் வாங்கி வைத்த மக்கள் அனைவரும், அந்தக் குடத்தை என்ன செய்வது என்றறியாமல் குழம்பி போவார்களே என்று கிஞ்சித்தும் யோசியாது, இப்படி ஒரு அறிக்கையயை விட இராமதாசருக்கு எப்படித் தான் தோன்றியதோ.
கூட்டணி அமைத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. சொல்லமல் கொள்ளாமல்,
அம்மையார், இராமதாசரின் கனவுரிமையயைக் கூட கவர்ந்துவிட்டாரோ. அன்பு தங்கையின் மனம் பாடுபடும் என்று தனது கனவை கலைத்துவிட்டாரோ..? புதசெவி !!
2011ல் நாங்கள் ஆட்சியமைப்போம் என்று நான் இப்போது கனவு கண்டேன் என்று சொன்னாலே, அம்மையார் சாட்டையயை சுழற்றியடிப்பார் என்பது உனக்குத் தெரியாதா, என்று இராமதாசரின் மனசாட்சி நினைத்துக்கொண்டியிருக்கும்மோ.
முன்னோர்கள் எதை உருப்படியாக செய்தார்களோ இல்லையோ, பழமொழிகளை மட்டும் நயம்பட, பொருள்பட, இன்னும் பல பட சொல்லிவிட்டு சென்றியிருக்கின்றார்கள்.
இராமதாசருக்கான இன்றைய கிழமொழி "அழுத்தக்காரனுக்கு புழுத்தக் கத்திரிக்காய்"
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நடிகரும் அரசியல்வியாதியுமான மருத்துவர்.ராச சேகர் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்படுவாராம்.
தேர்தல் நேரத்தில் எந்த விதிமுறைகள் மீறப்படுவதில்லை என்று வேண்டுமானால் நாம் கேட்கலாம் என்பதாக அனைத்துக் கட்சியினரும், அனைத்து விதிமுறைகளையும் மீறியே செயல்படுவது கண்கூடு.
இதில், ராசசேகர் செய்த தவறு என்று சொல்லப்படுவது, தனது மனைவியின் சாதியயைச் சொல்லி வாக்கு சேகரித்தாராம்.
தமிழகத்து சாதிக்கட்சிகள் எங்கணம் தப்பி பிழைக்கின்றன. புதசெவி !!
இராமதாசரின் பேச்சுரிமை பறிக்கப்பட்டுவிட்டதா : அந்தோ பரிதாபம் !!
Subscribe to:
Post Comments (Atom)




15 Comments:
//நிமிர்ந்த நெஞ்சு எங்கே !!
ஆட்சிக்கான அறைகூவல் எங்கே !!//
ஆட்சியை விட மகனின் அமைச்சர் பதவி பெரியதாகிவிட்டதோ
//2011ல் ஆட்சிக்கு பா.ம.க வரும், தேனாறும் பாலாறும் ஓடும் என்று குடம் வாங்கி வைத்த மக்கள் அனைவரும், அந்தக் குடத்தை என்ன செய்வது என்றறியாமல் குழம்பி போவார்களே என்று கிஞ்சித்தும் யோசியாது, இப்படி ஒரு அறிக்கையயை விட இராமதாசருக்கு எப்படித் தான் தோன்றியதோ.
//
:) கலக்கல் நகைச்சுவை.
தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
//ஆட்சியை விட மகனின் அமைச்சர் பதவி பெரியதாகிவிட்டதோ
//
LoL. இதை 'உடன்பொறப்பு' சொல்றாரு பாருங்க. செம்ம ஜோக்.
உங்களை நினைச்சா எனக்கு சிப்பு சிப்பா வருது...
///
Blogger உடன்பிறப்பு said...
//நிமிர்ந்த நெஞ்சு எங்கே !!
ஆட்சிக்கான அறைகூவல் எங்கே !!//
ஆட்சியை விட மகனின் அமைச்சர் பதவி பெரியதாகிவிட்டதோ
///
//"இராமதாசரின் பேச்சுரிமை பறிக்கப்பட்டுவிட்டதா : அந்தோ பரிதாபம் !!"//
ஆமாம் அதனால் தான் காங்கிரசு அமைச்சரவையில் இடம்பெற்றாலும் பேச முடியாமல் இருந்தோம் என்று மருத்துவர் ஐயா சொன்னாலும் சொல்லுவார்.
கேட்பவன் கேனையனாக இருந்தால் ... மாம்பலம் பலா மரத்தில் பழுப்பதாக ஐயா சொல்லுவார்
மரத்தை வெட்டுவது மாதிரி குழலி உங்களை வெட்டி தள்ளபோகிறார்
great comments on ramadoss
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கோவியாரே !!
// கோவி.கண்ணன் said...
//2011ல் ஆட்சிக்கு பா.ம.க வரும், தேனாறும் பாலாறும் ஓடும் என்று குடம் வாங்கி வைத்த மக்கள் அனைவரும், அந்தக் குடத்தை என்ன செய்வது என்றறியாமல் குழம்பி போவார்களே என்று கிஞ்சித்தும் யோசியாது, இப்படி ஒரு அறிக்கையயை விட இராமதாசருக்கு எப்படித் தான் தோன்றியதோ.
//
:) கலக்கல் நகைச்சுவை.
//
குழலியயை தாக்கி வரும் தனிமனித தாக்குதல்களை தவிர்க்குமாறு கண்டிப்புடன் வேண்டிக்"கொல்கிறென்"
உங்களுக்கு கொல்லம் புத்தாண்டு வாழ்த்துக்கள் ராசாராமன்
தமிழ் புத்தாண்டு தை மாதமே வந்து போயிடுச்சிங்க.
நாங்க எல்லாம் தைக்கு மாறிட்டோம்..அப்ப நீங்க..??
// Rajaraman said...
தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.//
அட சோமாதிரிகளுக்கே ஆமாஞ்சாமி போடுறவக இருக்கும் பொழுது கலைஞருக்கு இருக்க மாட்டாங்களா..
///
Anonymous said...
//ஆட்சியை விட மகனின் அமைச்சர் பதவி பெரியதாகிவிட்டதோ
//
LoL. இதை 'உடன்பொறப்பு' சொல்றாரு பாருங்க. செம்ம ஜோக்.
///
அண்ணாச்சி நான் சொல்லுறது, அம்மாவின் அறுவைசிகிச்சையின் மகிமையயைப் பற்றி..
///
Blogger கோவி.கண்ணன் said...
//"இராமதாசரின் பேச்சுரிமை பறிக்கப்பட்டுவிட்டதா : அந்தோ பரிதாபம் !!"//
ஆமாம் அதனால் தான் காங்கிரசு அமைச்சரவையில் இடம்பெற்றாலும் பேச முடியாமல் இருந்தோம் என்று மருத்துவர் ஐயா சொன்னாலும் சொல்லுவார்.
///
இதை நான் வேற மாதிரி கேள்விப்பட்டியிருக்கேனே..
///
கேட்பவன் கேனையனாக இருந்தால் ... மாம்பலம் பலா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி செந்தில்
///
Senthil said...
great comments on ramadoss
///
சொக்கத்தங்கம் சோனிஅயாவின் அன்புத் தம்பி,திருமாகாந்தி!
யாரும் திருமாவளவன் என்று அழைக்கவேண்டாம்!
Post a Comment