வாழ்க்கையில் மனிதனுக்கு மிகவும் வேண்டிய ஒரு குணம், சகிப்புத் தன்மை. அது ஒன்றும் மட்டும் இல்லாவிட்டால், நீங்கள் போட்டியிருக்கும், கால் சட்டையின் நிறம் எனக்குப் பிடிக்கவில்லை என்று உங்களை நான் அடிக்க நேரிடும். இதை ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஆனால் சகிப்புத்தன்மை அற்றவர்களின் செயல்பாடுகள் இதனன ஒத்தே இருக்கும்.
சகிப்புத் தன்மை ஏன் அவசியமாகிறது என்பதை முதலில் நாம் பார்ப்போம். நாம் வாழும் உலகம் நமக்காக படைக்கப்பட்டது அல்ல. படைக்கப்பட்ட உலகத்திலே நாம் வாழுகிறோம். அதனாலெ, தான் நமக்குப் பிடிக்காத சில விசயங்களும், நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தே வருகின்றது. அப்படி கூடி வாழும் ஒரு சமுதாயத்தில், உரிமைகளை கட்டிக் காத்துப் பேணுவது என்பது ரொம்பவும் முக்கியமான ஒன்றாகும். அத்தோடு மிகவும் சிரமமான ஒன்றாகும்.
நீங்கள் உலகிலே முக்கியமான காரணத்திற்காக போய்க் கொண்டியிருந்தாலும், தொடர் வண்டி பயணச்சீட்டு வாங்கும் வரிசையில் கடைக் கோடியிலிருந்து நேரடியாக முதல் ஆளாக போக முடியாது. மற்றவர்களின் அவசரத்தை விட, அவர்கள் முன்னால் வந்தவர்கள் என்பதை நீங்கள் சகித்துத் தான் ஆகவேண்டும். முன்னால் வந்தவர் 2 மாதம் கழிச்சு இன்பச்சுற்றலாவிற்குப் பயணச்சீட்டு பெறுபவராகவும், நீங்கள் உயிர் காக்கும் மருத்துவராக இருந்தாலும், பொறுத்தே ஆக வேண்டும்.
நீங்கள் இறைஞ்சிக் கேட்டால், அனைவரின் ஒப்புதல் பெற்றியிருந்தால் முன்னால் போகலாம். அப்போதும், உங்கள் உரிமையில் செல்லவில்லை. அடுத்தவரின், உரிமை விட்டுக் கொத்ததினால் செல்லுகிறீர்கள். அங்கே ஒருவர் எதிர்த்து குரல் எழுப்பினாலும், உங்கள் சலுகைப் பறிக்கப்படலாம் என்று நீங்கள் அறிய வேண்டும்.நம் உரிமை எவ்வளவு முக்கியமோ, அதேப் போல் மற்றவர்கள் உரிமையும் மிகவும் முக்கியம். அப்படி உங்கள் சலுகைப் பறிக்கப்பட்டால், சகிப்புத் தன்மையுடன் அதை ஏற்றுக் கொள்ளும் மணப்பக்குவம் வேண்டும்.
சிறுவர்கள் இருக்கும் வீட்டில், கேலிச் சித்திர அலைவரிசை தொடர்ந்து ஓடும் போது, சகிப்புத் தன்மை சிறிது சிறிதாக குறைவதை நாம் கண்கூடாகப் பார்ப்போம். அதேப் போல் அலுவலகத்தில் பிடிக்காத ஒன்று நிகழ்ந்தால், எவ்வளவு உங்களைத் தூண்டினாலும், நாகரீக எல்லை தாண்ட மாட்டோம். அங்கே சகிப்புத் தன்மை இல்லாவிட்டால், பாதுகாவலரை அழைத்து, தூக்கி வீசப்படுவீர்கள். சட்டமன்றத்தில் நடக்கும் போதும் அதே தான் நடக்கும்.
கருத்துச் சுதந்திரம் என்பது நீங்கள் விரும்பவதைச் சொல்லத் தரும் உரிமை அல்ல. அது தான் சர்வாதிகாரிகள் கடைப்பிடித்தது. உங்களுக்கு ஒப்பில்லாத கருத்து வெளியாகும் போது, அதை வெளிப்படுத்த நீங்கள் அளிக்கும் சுதந்திரம். கருத்துச்சுதந்திரத்தில் ஒன்றிய விசயம் தான் சகிப்புத் தன்மை. உங்களுக்கு அந்த சகிப்புத் தன்மை இல்லாவிடில், எதிர்த்துக் கருத்துச் சொன்னவரை அழிக்கவா, அடிக்கவோ, தாக்கவோ, இழிவாகப் பேசவோ முனைவீர்கள். இங்கே எல்லா சுதந்திரத்தையும் ஆதரிக்கிறேன் என்றுச் சொல்லிவிட்டு, எதிர் கருத்து வரும் போது, அப்பாடி கிடைச்சதுடா வாய்ப்பு என்றுப் போடு கும்முபவர்கள் தான் அதிகம்.
சகிப்புத் தன்மை அற்றவர்களை நாம் எளிதாக அடையாளம் காணலாம். எதிர் கருத்துக்களைக் கண்டால், கருத்தால் எதிர் கொள்ளாமல், நீ ஓட்டை, நீ அப்படி, நீ இப்படி, (அட திட்டுறதையெல்லாம் போட்டா, என் பதிவுக்கு அப்பறம் சென்சார் தேவை என்றுக் குரல் கேட்காதா ) , நாகரீகமற்றவன் என்றுச் சொல்லிக் கொண்டே மெதுவாக நாகரீக எல்லைக்கு வெளியேச் சென்றுவிடுவார்கள். கபடதாரிகள்/ பாசாங்கு செய்பவர்கள் வழக்கமாக சகிப்புத் தன்மைக் கொண்டவர்களாக வெளியேக் காட்டிக் கொண்டு, சமயம் வரும் போது அதி ஆவேசமாகவே வெளியே வருவார்கள்.
சகிப்புத் தன்மை என்பது குடும்பத்திலும், தேவையானது தான், நீங்கள் பார்க்கும் விளையாட்டு நிகழ்ச்சி நேரத்தில் மனைவி தொலைக் காட்சி பார்க்க நினைத்தாலோ/ அல்லது பார்த்தாலோ, அதற்கு இடம் கொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் சகிப்புத்தன்மையின் எல்லையே முடிவு செய்யும்.
சரி, சகிச்சிக்கோ, சகிச்சிக்கோ என்றுச் சொல்லிவிட்டு அதற்காக யார் எதைச் செஞ்சாலும், சகிச்சிக்கிட்டு இருக்க வேண்டியது இல்லை. அதற்கு அவ்வப்போது 6வது அறிவு..ஒன்று இருக்கே, பகுத்தறிவு அதை பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் ஒரு அலுவலகத்தில் பணி புரிகின்றீர்கள். அங்கே கலந்தூரையாடல் நடந்தாலும், அதில் மாற்றூக் கருத்துக்கள் வரும். எப்படி முடிவுக்கு வரும். ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக் கொண்டேப் போனால், எப்படித் தான் முடிவு செய்வது. முடிவுகளை பதிவு செய்யும் போது, ஏகமனதாக என்றுச் சொல்லுவது யாருமே எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்ற பொருள் அல்ல. அனைவருமே ஒப்பக் கொண்ட முடிவு. அதாவது, Consensus, எனக்கு உன் கருத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், பொது நலன் கருதியோ, அல்லது, குழு நலன் கருதியோ, என் கருத்தில் நான் முழு நம்பிக்கையுடன்,நீங்கள் எடுக்கும் முடிவிற்கு உடன்படுகிறேன். இதைச் சொல்ல சகிப்புத் தன்மை வேண்டும். இல்லாட்டி, அடுத்த கலந்துரையாடலில் இவன் ஒரு வழிக்கு வர மாட்டான் என்று முடிவுக் கட்டி விடுவார்கள்.
ஆகவே நண்பர்களே சகிப்புத் தன்மையயை வளர்த்துக் கொள்ளுவோம்....
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இது ஒரு மீள் பதிவு.
சகிப்புத்தன்மை என்பது என்ன..? அது ஏன் நமக்கு தேவையாக இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)




27 Comments:
நிச்சயமாக...
நீங்கள் சொன்ன கருத்து
முற்றிலும் உண்மை, எல்லோரிடமும் சகிப்புதண்மை இருக்க வேண்டும், இருக்குமென்றே நம்புகிறேன். சகிப்புதண்மையற்று சில பேர் கோபப்பட்டோ ஆத்திரப்பட்டோ
ஏதாவது செய்து விட்டு அடுத்த நேரம் வருந்திக் கொண்டிருப்பார்கள்.
இதோடா
இல்லைன்னா தமிழ் நாட்டில இருக்கிறவங்க எல்லோருக்கும் ரொம்ப பிரச்சைனதானே... ;)
நல்ல பதிவு.
சகிச்சிகிட்டு படிச்சிட்டேன்பா
:))))))))))
சகிப்புதன்மை அதிகரிக்க கண்ணாலம் கட்டிக்கொள்ளுங்கள் அப்படின்னு ஒரு பி.கு இல்ல மு.கு இல்ல நடு குறிப்பாவது டிப்ஸா போட்டிருக்கலாம் அண்ணாத்த!
//ஆகவே நண்பர்களே சகிப்புத் தன்மையயை வளர்த்துக் கொள்ளுவோம்//
வேற என்ன சொல்றது.
//இது ஒரு மீள் பதிவு//
நீள் பதிவு.
நல்ல கருத்து :)
/
படத்திலிருப்பவரைப் பற்றிய குறிப்பெழுதியவர், வரதப்பிள்ளை. இவர் அமெரிக்க பள்ளியில் பாடம் பயின்றவராம். அதிகம் படித்துவிட்டாரோ என்னவோ, தமிழ் என்று குறிப்பிடும் போதுக்கூட, தமிள் என்றே குறிப்பிட்டுயிருக்கின்றார்.
/
:))))))))))))))))))
அய்யய்ய......இது ஓட்ட பதிவு.
இவரு இப்படியா? ச்ச,ச்ச.........
அவரு அப்படியாம்.......இவரு சொல்றாரு.
எளிதா கண்டுபுடிச்சுருவாராம்.எங்க கண்டுபுடிங்க.
இந்த பதிவ முழுசா படிச்சிருக்கமாக்கும்.
டிபிசிடி அய்யர்,
என்னது சுடார் பதிவுக்கு அறிவுரை எழுதனும் என்று எதாவது விதி இருக்கிறதா ?
சகிப்புத்தன்மை மிக அவசியம்!!
நிச்சயமாக...
நீங்கள் சொன்ன கருத்து
முற்றிலும் உண்மை, எல்லோரிடமும் சகிப்புதண்மை இருக்க வேண்டும், இருக்குமென்றே நம்புகிறேன். சகிப்புதண்மையற்று சில பேர் கோபப்பட்டோ ஆத்திரப்பட்டோ
ஏதாவது செய்து விட்டு அடுத்த நேரம் வருந்திக் கொண்டிருப்பார்கள்.///
முத்து அருமையா சொல்லிவிட்டார்!!
/////சகிப்புத் தன்மை ஏன் அவசியமாகிறது என்பதை முதலில் நாம் பார்ப்போம். நாம் வாழும் உலகம் நமக்காக படைக்கப்பட்டது அல்ல. படைக்கப்பட்ட உலகத்திலே நாம் வாழுகிறோம்./////
அருமை!
இதை அனைவரும் உணர்ந்தால் உலகில் பிரச்சினையே இருக்காது.
//நாம் வாழும் உலகம் நமக்காக படைக்கப்பட்டது அல்ல. படைக்கப்பட்ட உலகத்திலே நாம் வாழுகிறோம். //
படைக்கப்பட்ட என்று சொல்வது நம்பிக்கையாளர்கள் கூற்று.
நாம் வாழும் உலகம் நமக்காக மட்டுமே இருப்பது அல்ல. இருக்கும் உலகத்திலே நாம் வாழுகிறோம்.
:)
வருகைக்கும் ஆமோதிப்பிற்கும் நன்றி முத்து !
//
ஆ.முத்துராமலிங்கம் said...
நிச்சயமாக...
நீங்கள் சொன்ன கருத்து
முற்றிலும் உண்மை, எல்லோரிடமும் சகிப்புதண்மை இருக்க வேண்டும், இருக்குமென்றே நம்புகிறேன். சகிப்புதண்மையற்று சில பேர் கோபப்பட்டோ ஆத்திரப்பட்டோ
ஏதாவது செய்து விட்டு அடுத்த நேரம் வருந்திக் கொண்டிருப்பார்கள்.
//
தோடா!!
//
அக்னி பார்வை said...
இதோடா
//
நீங்க அரசியல் பேசுறீங்களோ !!
நன்றி தமிழன் கறுப்பி
//
தமிழன்-கறுப்பி... said...
இல்லைன்னா தமிழ் நாட்டில இருக்கிறவங்க எல்லோருக்கும் ரொம்ப பிரச்சைனதானே... ;)
//
நன்றி ராமலக்குமி !
//
ராமலக்ஷ்மி said...
நல்ல பதிவு.
//
நன்றி சிவா !!
//
மங்களூர் சிவா said...
சகிச்சிகிட்டு படிச்சிட்டேன்பா
:))))))))))
//
உண்மையயைச் சொல்லனும் என்றால் வீட்டில் தான் ஆண்களுக்கு சகிப்பத்தன்மை குறைவு என்று நினைக்கிறேன்..உரிமை இருக்கு என்று கொஞ்சம் ஏறி விளையாடுவோம்..அலுவலகத்தில் அது நடக்கும்மா..???
மற்ற பதிவர்களும் இதன் தொடர்பாக கருத்தை பகிறலாமே..
///
மங்களூர் சிவா said...
சகிப்புதன்மை அதிகரிக்க கண்ணாலம் கட்டிக்கொள்ளுங்கள் அப்படின்னு ஒரு பி.கு இல்ல மு.கு இல்ல நடு குறிப்பாவது டிப்ஸா போட்டிருக்கலாம் அண்ணாத்த!
///
பெரூசு நீங்க உ.த பதிவு பக்கம் எல்லாம் போயிறாதீங்க..சரியா!!!
//
பெருசு said...
//ஆகவே நண்பர்களே சகிப்புத் தன்மையயை வளர்த்துக் கொள்ளுவோம்//
வேற என்ன சொல்றது.
//இது ஒரு மீள் பதிவு//
நீள் பதிவு.
//
நன்றிங்க ஆகாயநதி
//
ஆகாய நதி said...
நல்ல கருத்து :)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
///
psycho said...
அய்யய்ய......இது ஓட்ட பதிவு.
இவரு இப்படியா? ச்ச,ச்ச.........
அவரு அப்படியாம்.......இவரு சொல்றாரு.
எளிதா கண்டுபுடிச்சுருவாராம்.எங்க கண்டுபுடிங்க.
இந்த பதிவ முழுசா படிச்சிருக்கமாக்கும்.
///
அறிவுரை பதிவு நீங்க மட்டும் தான் எழுதவேண்டும் என்ற விதி இருக்கின்றதா..???
:P
மீள் பதிவுக்கு தேடி எடுத்த பதிவு அண்ணாச்சி..வேற எதை மீள் பதியலாம் என்று கொஞ்சம் சொல்லுறது..!!
//
கோவி.கண்ணன் said...
டிபிசிடி அய்யர்,
என்னது சுடார் பதிவுக்கு அறிவுரை எழுதனும் என்று எதாவது விதி இருக்கிறதா ?
//
வருகைக்கும் ஆமோதிப்பிற்கும் நன்றி இனியா!!
//////// iniya said...
சகிப்புத்தன்மை மிக அவசியம்!!
April 23, 2009 9:41 AM
Delete
Blogger iniya said...
நிச்சயமாக...
நீங்கள் சொன்ன கருத்து
முற்றிலும் உண்மை, எல்லோரிடமும் சகிப்புதண்மை இருக்க வேண்டும், இருக்குமென்றே நம்புகிறேன். சகிப்புதண்மையற்று சில பேர் கோபப்பட்டோ ஆத்திரப்பட்டோ
ஏதாவது செய்து விட்டு அடுத்த நேரம் வருந்திக் கொண்டிருப்பார்கள்.///
முத்து அருமையா சொல்லிவிட்டார்!!
/////////
ஏற்கனவே உங்கள் பதிவை படித்திருந்தாலும் மீண்டும் ரசிக்க வைத்த பதிவு :).
Post a Comment