1837ல், வரதப்பிள்ளை என்பவரால், பாதிரி.வில்லியம் டிவைனிங்க்காக தொகுப்பட்ட படங்கள் இவை.









இந்தப் படங்களின் மொத்த தொகுப்பை யேல் பல்கலைகழகத்தின் இணைய நூலகத்தில் நீங்கள் காணலாம்.
இவைகள் மெல்லிய மைக்காவினால், வரையப்பட்டு, பின்னார், தாளின் மீது ஒட்டப்பட்டு, ஒவ்வொரு படத்தின் மீதும், ஆங்கிலத்திலும், தமிழிலும் அந்தப் படத்திலிருப்பவரைப் பற்றிய குறிப்பும் எழுதப்பட்டு இருக்கின்றது. தென்னிந்தாவியில், மதுரை பகுதியில் துலங்கிய மக்களைப் பற்றிய ஆவணம் என்று கொள்ளலாம். மொத்தம் 72 படங்கள் இருக்கின்றது. பெருவாரியான படங்கள் சோடியாக (கணவன்/மனைவி) இருக்கின்றது.
அந்தக் கால மக்கள் எப்படி இருந்திருப்பார்கள்..திரைப்படங்களில் வருபவை சரியான சித்தரிப்புகளா என்று பலமுறை யோசித்திருப்போம். ஆனால், அதிகம் எதிர்பாராதவகையிலே தான் இந்த படதொகுப்புகள் இருக்கின்றன.
இந்த தொகுப்பினை வரைந்தவர் யார் என்ற குறிப்பில்லை, ஆனால், இந்த படங்கள் மீது, படத்திலிருப்பவரைப் பற்றிய குறிப்பெழுதியவர், வரதப்பிள்ளை. இவர் அமெரிக்க பள்ளியில் பாடம் பயின்றவராம். அதிகம் படித்துவிட்டாரோ என்னவோ, தமிழ் என்று குறிப்பிடும் போதுக்கூட, தமிள் என்றே குறிப்பிட்டுயிருக்கின்றார். ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.
மேலும், பல இடங்களில் தமிழில் இருக்கும் குறிப்புக்கும், ஆங்கிலத்தில் இருக்கும் குறிப்பிற்கும் தொடர்பில்லாமலோ, அல்லது எளிமைப்படுத்தப்பட்ட/பொதுமைப்படுத்தப்பட்ட சொற்கள் உபயோகப்பட்டியிருக்கின்றது. இந்த படங்கள் வழங்கிய காலம் 1837. இந்தக் காலம் ஆங்கிலேயர்கள் இந்தியாவை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற ஒன்றைப் பயன்படுத்தி ஆய்வு செய்யாத காலம். இந்த மக்கள் தொகைக்கணக்கெடுப்பின் போதே, இந்த பொதுப்படுத்துதல், பெருவாரியாக நிகழ்ந்து, இசுலாமியர் அல்லாதோர், கிறித்துவர் அல்லாதோர், அனைவரும் இந்துக்கள் என்று இறுக எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்க.
மேலும், பல இடங்களில் தமிழர்களை மலபார் என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள். உதா. பழநிக்கு காவடி எடுக்கும் பண்டாரம் என்று எழுதப்பட்ட தமிழ் குறிப்பிற்கு மேலே மலபார் பிலிகிரிம் என்று எழுதப்பட்டு இருக்கின்றது. மலபார் என்றால், சேரத்து தமிழர்களை குறிப்பதாகவே நாம் நினைத்து வந்திருப்போம். ஆனால், தமிழகத்து தமிழர்களையும் மலபார் என்று குறிப்பிடுவது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.
1838ல் இந்தியாவிற்கு வந்த கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதி, தேவ பாடை என்ற மாயயை உடைத்தவர்.தமிழை மீட்டு எடுத்ததில் இவரின் பங்கு அளப்பரியது), இந்த மலபார் என்ற சொல்லை அலசி ஆராய்ந்து எழுதியிருக்கின்றார். அவற்றில், பல இடங்களில் இது முற்றிலும், மலையாளப்பகுதி என்று இன்று அறியப்படும் பகுதியயை சுட்டுவதாகவே கூறுகிறார். மலபார் என்ற சொல்லின் முன்பகுதி, மலை சூழ்ந்த இடத்தைச் சுட்டும் விதமான சொல்லை மலே/மலை என்றும், பார் என்ற விகுதி பர்சிய கடலோடிகளால் வழங்கப்பட்டியிருக்கலாம் என்று கூறுகிறார்.
இப்படியிருக்கையில், தமிழர்களை குறிக்குமிடத்தில் மலபார் என்று குறிப்பிட்டுயிருப்பது குழப்பத்தையே வழங்குகிறது. அந்தப் படத்திலிருப்பவர்கள் தமிழர்கள் தான் உறுதி செய்ய, அவர்களின் உடல்நிறத்தை கருப்பாக தீட்டியிருப்பதையும் கணக்கில் கொள்ளலாம்.
மற்றொரு குறிப்பிடத்தக்க விவரம் என்று சொல்லுவதென்றால், தமிழகத்தின் போர்குடிகளாக கருதப்பட்டவர்களான கள்ளர் படை அணிகலன்களின்றி குறித்திருப்பதும் கேள்விக்குரியதே. வடுகர் என்று சொல்லப்படும், திருப்பதியயைச் சார்ந்த போர்குடிகளை அதற்குரிய அடையளங்களுடன் குறித்திருப்பதும் கவணிக்கத்தக்கதே. இந்த வடுகர்கள் தமிழர்களா, தெலுங்கர்களா, கன்னடர்களா, மராட்டியர்களா என்று பல்வேறு குழப்பங்கள் விளங்கி வருகின்றன. வடுகர்கள் பல காலம் முன்பே ஒரியர்களாகவும், தெலுங்கர்களாகவும், மராட்டியர்களாகவும் பிரிந்துப்போயினர் என்று சொல்லும் போது, 1837ல் மக்களை வடுகர் என்றே அடையாளப்படுத்திருப்பதும் கவணிக்கத்தக்கதே. கிறித்துவர்களைப் பற்றிய குறிப்பில்லாமல் போனதன் காரணமும் தெளிவில்லை.



சாதிகள் ஆங்கிலேயரின் ஆளுகைக்குப் பிறகே வந்தது என்று சிலர் கூறிவருகிறார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் அரசளவில் வருமுன்னரே, அம்படன், கொசவன், சக்கிலி என்று தொழிலைக் குறித்து, சாதிப்பெயர்கள் வழக்கிலிருந்ததை அறியலாம். உப்பு விக்கிற கொறவன் சொல்வதும் சற்றே குழப்புகின்றது. கொறவன், குறத்தி என்பவர்கள் பாசி மணி, ஊசி மணி விற்பவர்களாகவே சொல்லப்பட்டு வருகின்றது. உப்பு விற்றவர்கள் எங்கணம் இப்படி ஊசி மணி விற்பவர்களாக ஆனார்களென்றும் தெரியவில்லை.
இன்று கொச்சை சொற்களாக கருதப்படும், பொம்பளே, பொஞ்சாதி போன்றவை சராமரியாக பயன்படுத்தப்பட்டியிருப்பது, குறிப்பெழுதிவரின் கைங்கரியமா, அல்லது, அந்தக் காலத்தில் அவை தான் வழங்கிவந்தவையா என்பதும் தெளிவில்லை..தெரிந்தவர்கள் யாராவது கூறினால் நலம்.
இதுப் போன்ற எண்ணற்ற ஆவணங்கள் ஆங்கிலேயர்களின் பயணக்குறிப்புகளாகவும், தனிக்குறிப்புகளாகவும் புதைந்து இருக்கக்கூடும். இவற்றை தேடியெடுத்து, ஆய்வு செய்தால், புனையப்பட்ட வரலாறுகள் போய் சரியான வரலாறு வர ஏதுவாக இருக்கும்.
கைக்கு கிடைத்த புகைப்படங்களைக் கொண்டும், கேட்டும், பார்த்தும், அறிந்த தகவல்களையும் கோர்க்க முயற்சித்திருக்கின்றேன். குற்றம் குறை இருப்பின், அதற்குத்தகுந்தாற்போல் பின்னுட்டங்களை குறைத்துவிட வேண்டாமென்று கேட்டுக்கொல்லுகிறேன்
நன்றி :-
1. தென்னிந்திய சாதிகள்
2. ஏல் பல்கலைகழகம்
தமிழீசு தளத்தில் வாக்களிக்க இங்கே அமுத்துங்க
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நேற்று என்னை தட்டியெழுப்பி வாழ்த்துக்கள் சொல்லி, சரியான நேரத்தில் பதிவு போடவுதவிய இனிமை, எளிமைக்கு சொந்தக்காரரான நர்சிம் அவர்களுக்கு நன்றிகள்.
நம்ம பாட்டன், பூட்டன், முப்பாட்டான் படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)




29 Comments:
நடமாடும் விக்கிப்பீடியாவா இருப்பீங்க போல. நல்ல நெடிய நீண்டதொரு தமிள் பதிவைத் தொகுத்து அளித்திருக்கிறீர்கள்.
(வரதப்பிள்ளை நிறையப் படிச்சவர்னு சொன்னீங்க. அவரே தமிள்னு எழுதும்போது. நான் அவரைவிட குறைச்சுதானே படிச்சுருக்கேன். தமிழ்னு எழுதனுமா)
எம்பில் ஆராய்ச்சிக்கு உதவும் - காப்புரிமை டிபிசிடின்னு போட்டுக்கொள்ளவும்.
ஆகா அருமையான கட்டுரை !
:)
உப்பு விற்பவர்களை உப்புக் குறவர்கள் என்று சொல்வதும் வழக்காக இருந்தது.
மலைசாதியினரை பிற்காலத்தில் குறவர் என்று குறிக்கலாயினர்
நிறைய விஷயங்கள் சேகரிச்சு எழுதி இருக்கீங்க.. நல்லா இருக்கு நண்பா.. தமிழ்மண நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்..
வரலாற்று செய்திகளாக புகைப்படங்களுடன் முதன் முதலாய் அறிய வைத்த பதிவு
நல்லா இருக்கு !
மிகவும் அருமையான பதிவு...
நான் ஒவ்வொரு முறை பழைய படம் பார்க்கும் போதெல்லாம் நம் முன்னோர்கள் இது போல்தான் உடையனிந்தார்களா என்று என்னுவதுன்டு.
இந்த பதிவு தேடலுக்கு தீனி...
ம். வரதப்பிள்ளை ழ, ள வித்தியாசம் மட்டுமில்லை. ற ர வித்தியாசமும் தெரியாது போல இருக்கு. மாறியம்மன், பண்டாறம் னு எழுதியிருக்கார்.
(பெண்கள்ல பல பேர் ரவிக்கை போடமுடியாத சாதிப்பிரிவுகள் போல இருக்கு.)
மொகல் பொஞ்சாதி வில்,அம்பு, ஈட்டியோடு மீசையும் வைத்திருக்கிறார். வரதப்பிள்ளை படத்தைப் பார்த்து பெயர் எழுதவில்லை போலிருக்கிறது.
நன்றி. ஆராய்ந்து அறிமுகப்படுத்தியதற்க்காக.
அருமையான பதிவு...
ஆஹா - அருமையான தகவல்கள் உள்ள பதிவு.
புதசெவி பீடியா ன்னு ஒண்ணப்போட்டு கல்லாக் கட்டிருவமா ?
ஓ பதிவு எழுதாதப்பல்லாம் தமிள் முனைவர் பட்டத்துக்கு இப்படி ஏற்பாடு நடக்குதா ? :)
அட நம்ம டிபிசிடியா நட்சத்திரம்?
வாழ்த்துக்கள்.
நன்றி தமிழ் !
தமிழ்ப்பீடியா என்றால் ரவிசங்கர் என்று ஒருவர் இருக்கின்றார் !!
நான் விக்கிப்பீடியா என்பதெல்லாம் கொஞ்சம் அதி்கப்படியானது !!
///
தமிழ்நெஞ்சம் said...
நடமாடும் விக்கிப்பீடியாவா இருப்பீங்க போல. நல்ல நெடிய நீண்டதொரு தமிள் பதிவைத் தொகுத்து அளித்திருக்கிறீர்கள்.
(வரதப்பிள்ளை நிறையப் படிச்சவர்னு சொன்னீங்க. அவரே தமிள்னு எழுதும்போது. நான் அவரைவிட குறைச்சுதானே படிச்சுருக்கேன். தமிழ்னு எழுதனுமா)
எம்பில் ஆராய்ச்சிக்கு உதவும் - காப்புரிமை டிபிசிடின்னு போட்டுக்கொள்ளவும்.
///
ஓகோ குறவர்களில் இத்தனை வகையா..
சமயக்குறவர்கள் என்றும் சொல்லுவாங்களே..அதுப் பற்றி ஏதாவது தெரியும்மா...??
அது குறவர்களா..?? குரவர்களா..??
///
கோவி.கண்ணன் said...
ஆகா அருமையான கட்டுரை !
:)
உப்பு விற்பவர்களை உப்புக் குறவர்கள் என்று சொல்வதும் வழக்காக இருந்தது.
மலைசாதியினரை பிற்காலத்தில் குறவர் என்று குறிக்கலாயினர்
///
நன்றி பாண்டியரே !!
//
கார்த்திகைப் பாண்டியன் said...
நிறைய விஷயங்கள் சேகரிச்சு எழுதி இருக்கீங்க.. நல்லா இருக்கு நண்பா.. தமிழ்மண நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்..
//
நன்றி ஆயில்யன்..முதலில் என்று எல்லாம் சொல்லப்படாது தம்பி விக்கி கோவிப்பார் !!
//
ஆயில்யன் said...
வரலாற்று செய்திகளாக புகைப்படங்களுடன் முதன் முதலாய் அறிய வைத்த பதிவு
நல்லா இருக்கு !
//
அதே அதே !!
நன்றி பிடிகே+
///
pdkplus said...
மிகவும் அருமையான பதிவு...
நான் ஒவ்வொரு முறை பழைய படம் பார்க்கும் போதெல்லாம் நம் முன்னோர்கள் இது போல்தான் உடையனிந்தார்களா என்று என்னுவதுன்டு.
இந்த பதிவு தேடலுக்கு தீனி...
///
நிறைய இருக்குங்க..இதுப் போன்ற, யாரோ சாமியாரை ராசப்புத்திரர் என்றும் சொல்லியிருக்கின்றார்..!!
நமக்கு தேவையானதை நாம் இதில் எடுத்துக்கொள்ள வேண்டியது தான் !!
//
சின்ன அம்மிணி said...
ம். வரதப்பிள்ளை ழ, ள வித்தியாசம் மட்டுமில்லை. ற ர வித்தியாசமும் தெரியாது போல இருக்கு. மாறியம்மன், பண்டாறம் னு எழுதியிருக்கார்.
(பெண்கள்ல பல பேர் ரவிக்கை போடமுடியாத சாதிப்பிரிவுகள் போல இருக்கு.)
//
ரவிக்கை அணியும் பழக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம்...மறுக்கப்பட்டது ரொம்ப காலம் கழித்து தான் என்று நினைக்கின்றேன்.
ஏன் என்றால் பிராமன பெண்களும் அணியவில்லை என்பதைக் கவணிக்கவும் !!
///
(பெண்கள்ல பல பேர் ரவிக்கை போடமுடியாத சாதிப்பிரிவுகள் போல இருக்கு.)
///
உங்களுக்கு கூர்மையான பார்வைங்க !!
வரதப்பிள்ளையின் பிழைகள் என்று போட்டி வைத்திருக்கலாமோ.. ??
நன்றி சைக்கோ ( என்ன பேருங்க இது அவ்வ்வ்வ்வ்வ்)
//
psycho said...
மொகல் பொஞ்சாதி வில்,அம்பு, ஈட்டியோடு மீசையும் வைத்திருக்கிறார். வரதப்பிள்ளை படத்தைப் பார்த்து பெயர் எழுதவில்லை போலிருக்கிறது.
நன்றி. ஆராய்ந்து அறிமுகப்படுத்தியதற்க்காக.
//
நன்றி ஐயா !!
//
T.V.Radhakrishnan said...
அருமையான பதிவு...
//
நன்றி மதிபாலா !!
ஆவிப்பீடியா ஆரம்பிக்கப்போவதாக அல்லவா கேள்விப்பட்டேன் !!
//
மதிபாலா said...
ஆஹா - அருமையான தகவல்கள் உள்ள பதிவு.
புதசெவி பீடியா ன்னு ஒண்ணப்போட்டு கல்லாக் கட்டிருவமா ?
//
யக்கோவ், நம்ம முனைவர்கள் பட்டம் அம்புட்டு மலிஞ்சிப் போச்சா..
//
முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஓ பதிவு எழுதாதப்பல்லாம் தமிள் முனைவர் பட்டத்துக்கு இப்படி ஏற்பாடு நடக்குதா ? :)
//
நன்றி வெயிலான்...
வாழ்த்துக்களுக்கும் நம்ம என்ற அழுத்ததிற்கும் !!
//
வெயிலான் said...
அட நம்ம டிபிசிடியா நட்சத்திரம்?
வாழ்த்துக்கள்.
//
பாட்டன்களையும், பாட்டிகளையும் (பாட்டியா, பூட்டியா) கண்முன் கொண்டுவரச் செய்த நல்ல பதிவு.
பொஞ்சாதி என்று இன்னமும் எங்கள் கிராமங்களில் உள்ள தாத்தாக்கள் சொல்வதுண்டு.
பகிர்வுக்கு நன்றி...!
/
படத்திலிருப்பவரைப் பற்றிய குறிப்பெழுதியவர், வரதப்பிள்ளை. இவர் அமெரிக்க பள்ளியில் பாடம் பயின்றவராம். அதிகம் படித்துவிட்டாரோ என்னவோ, தமிழ் என்று குறிப்பிடும் போதுக்கூட, தமிள் என்றே குறிப்பிட்டுயிருக்கின்றார்.
/
:))))))))))))))))))
/
ஏன் என்றால் பிராமன பெண்களும் அணியவில்லை என்பதைக் கவணிக்கவும் !!/
எங்க? எங்க??
:)))
நட்சத்திர வாழ்த்துக்கள்!
அருமையான செய்திகள் மற்றும் படங்கள்.
இந்த படங்களை பொது உரிமத்துடன் பயன்படுத்தலாமா?
Post a Comment