விண்மீன் வாரம் என்றால் போட்டி ஒன்றை நடத்தனுமாமே..
பெரிய கேள்வி பதில் நிகழ்ச்சி எல்லாம் நடத்தி உங்களுக்கு அலுப்பைத் தர மனமில்லை..
இரண்டே கேள்வி தான் !
கீழே இருக்கும் படங்களில் இருக்கும் இரண்டு சட்டைகளுக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் இருக்கின்றது..? 

அந்த வித்தியாசம் எதனால் வந்தது..??
சரியான பதில் அளிப்பவர்களுக்கு சென்னையில் அதிசாவும், துபாயில் குசும்பனும், பெங்களூரில் சீவ்சும், கைதராபாத்தில் கார்க்கியும் விருந்துக் கொடுத்து அசத்துவார்கள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மேலே இருப்பதில் ஒன்று ஆண்கள் அணியும் ஆடை, மற்றொன்று பெண்கள் அணியும் ஆடை. இந்த இரண்டிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு, ஆண்கள் ஆடையில் வலப்பக்கம் பொத்தானும், பெண்கள் ஆடையில் இடப்பக்கம் பொத்தானும் இருக்கின்றது.
இதன் பின்னனியயைப் பார்ப்போமா..
பொத்தான வைத்து உடையணியும் வழக்கம் முதலில் ஐரோப்பியர்களிடம் வந்ததாம்.
ஆண்களுக்கு இடதுக்கையில் சட்டையயை கழட்டும் வண்ணம் பொத்தான் வைக்கப்பெற்றதாம். (உடனடியாக உங்க சட்டை பொத்தானை கழட்டி பார்த்தீங்களா...??? )
ஏன்..இடதுகையில் கழற்ற வேண்டும் என்றால், வலது கையில் வாளை உருவ தயாராகவோ, அல்லது வாளை கையில் பிடித்தோ இருப்பார்களாம்.
இப்பொழுது பெண்களுக்கு வருவோம். லார்டு லபக்குதாசர்களின் மனைவிகள்,பெண்டுகள், பிள்ளைகள் எல்லாம் தங்கள் கையால் ஆடை அணிய மாட்டார்களாம். சேடிப்பெண்கள் தான் அணிவித்துவிடுவார்களாம். அப்பொழுது வலப்பக்கம் பொத்தான் இருந்தால், அது அணிவிப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்குமென்பதால், வலப்பக்கம் வைப்பார்களாம்.
அம்புட்டு தான் !
போட்டி : ஏன் ? எதற்கு?...கண்டு்பிடி !!
Subscribe to:
Post Comments (Atom)




27 Comments:
முதல் படம் வழக்கத்திற்கு மாறானது !!
நான் குசும்பனிடம் வாங்கி கட்டி கொள்ள்கிறேன் :)
புதசெவி!
அப்டீன்னா இத்தாலி ல யார் குடுப்பா?:(
குழப்பத்திற்கு மன்னிக்கவும்.
புருனோ, சரவணன், அறிவே தெய்வம், விடையயை வெளியிடும் போது என் பெயரிலே அதை வெளியிடுகிறேன்.
முதலிது பெண்கள் அணிவது, இரண்டாமிடத்தில் இருப்பது ஆண்களுக்கான சட்டை.
ஒன்னு பொண்ணுங்க சட்டை. இன்னொன்று பசங்க சட்டை
First - Ladies Shirt (Buttons on the right Side)
Second - Gents Shirt (Buttons on the Left Side)
Correctaa boss?
முதலில் உள்ளது பெண்ணின் சட்டை. இரண்டாவது ஆணுடையது.
அவ்வ்வ்வ்வ்
குசும்பன் உரையாடியில் பகிரவும் !!
///
மின்னுது மின்னல் said...
முதல் படம் வழக்கத்திற்கு மாறானது !!
நான் குசும்பனிடம் வாங்கி கட்டி கொள்ள்கிறேன் :)
////
அறிவே தெய்வம் has left a new comment on your post "போட்டி : ஏன் ? எதற்கு?...கண்டு்பிடி !!":
முதல் சட்டை பெண்சட்டை
இரண்டாவது ஆண் சட்டை
அவ்வளவுதான் அடிப்படை விஷயம்.
சரவணன் has left a new comment on your post "போட்டி : ஏன் ? எதற்கு?...கண்டு்பிடி !!":
முதல் சட்டை முழுக்கை சட்டை.
இரண்டாவது அரைக்கை சட்டை.
அவ்வளவுதான் வித்தியாசம்.
சரியான பதில் சொல்லீருக்கேனா.
புருனோ Bruno has left a new comment on your post "போட்டி : ஏன் ? எதற்கு?...கண்டு்பிடி !!":
முதல் சட்டை பெண்சட்டை
இரண்டாவது ஆண் சட்டை
--
பெண்களின் சட்டையில் பொத்தான் இடது கை பக்கம் இருக்கும்.
முதலில் பொத்தான் அறிமுகப்படுத்தப்பட்டபோது அவை இரத்தினங்களினால் செய்யப்பட்டிருந்தன.
பெரும்பாலும் ராஜ / பணக்கார குடும்பத்தினரே பயன்படுத்தினர்
அப்படி பட்ட் குடும்பங்களின் பெண்களுக்கு உடை அணிவிப்பதற்கென்றே தனியாக பணிப்பெண்கள் இருந்ததால் அந்த பணிபெண்ணிற்கு வசதியாக பொத்தான் மாற்றப்பட்டது
//
வால்பையன் said...
புதசெவி!
//
தருமி ஐயாவின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தப் பின்னுட்டம் முதல் மேற்கோளை மேலேயும், எனது பதிலை அதற்கடுத்தும் போடுவதாக இருக்கின்றேன்.. :P
பதிவிலே விளக்கியிருக்கேனுங்கண்ணா..
//
Sasirekha Ramachandran said...
அப்டீன்னா இத்தாலி ல யார் குடுப்பா?:(
//
சோனியா காந்தியயைக் கேட்போமா..???
///
நையாண்டி நைனா said...
முதலிது பெண்கள் அணிவது, இரண்டாமிடத்தில் இருப்பது ஆண்களுக்கான சட்டை.
///
உங்களிடம் இதற்கு மேலும் எதிர்ப்பார்த்தேன்.
விடை பதிவில் சேர்த்து இருக்கேன் பார்த்துக்கோங்க நைனா !!
///
ரொம்ப நல்லவன் said...
ஒன்னு பொண்ணுங்க சட்டை. இன்னொன்று பசங்க சட்டை
///
வருகைக்கு நன்றி ரொம்ப நல்லவன்.
இன்னும் கொஞ்சம் விவரம் கேட்டியிருந்தேனே..
//
வெட்டிப்பயல் said...
First - Ladies Shirt (Buttons on the right Side)
Second - Gents Shirt (Buttons on the Left Side)
Correctaa boss?
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெட்டி.
பதிவில் பதில் இருக்கு நண்பரே !
///
சீனு said...
முதலில் உள்ளது பெண்ணின் சட்டை. இரண்டாவது ஆணுடையது.
///
ஏனுங்கண்ணா..இம்புட்டு சின்ன விடைக்கா..ஒரு பதிவு போட்டு இருப்பேன்.. :P
ஒரு சட்டைக்கும் பொத்தானுக்கும் உள்ள இத்தனை மேட்டரு இருக்கா?!!
அடி ஆத்தீ, இது இம்புட்டு நாளா தெரியாம போச்சே!
//அடி ஆத்தீ, இது இம்புட்டு நாளா தெரியாம போச்சே!//
அதானே, எனக்கும் இத்தன நாளா தெரியாமத்தானுங்க இருந்துச்சு
இரண்டு சட்டைக்கும் வேறுபாடு சர்!!
பேண்ட்டுக்கு வித்தியாசம் உண்டா?
25 :))
me the 26th.
அய்யோ.. இப்பவே கண்ணைக்க் கட்டுதே..
லேட்டா வந்ததால பதிவிலேயே பதில் படிச்சிட்டேன்.
:)
Post a Comment