அலுவலக நிமித்தம் தில்லிக்க பயணப்படவேண்டிய தேவை திடிரென்று வந்தது. முன்னெப்போதும் இல்லாத கெடுபிடிகள் இப்போதெல்லாம் பயணத்திற்கு அலுவலகத்தில் நடப்பதால், பயணம் என்றாலே காத தூரம் ஓடிக்கொண்டியிருந்தேன். ஆனால், இந்த பயணத்திற்கு எந்த சாக்கு போக்கும் சொல்ல முடியாததால், பயணச்சீட்டை வாங்கிவிட்டேன்.
எங்கள் அலுவலகத்தில் பயணச்சீட்டு பதிந்து, வழங்க தனியார் நிறுவனம் ஒன்று இருக்கின்றது. அவர் கொடுத்த தேர்வுகளில், கிங்பிசர் மிகவும் அதிகமான விலையில் வந்தபடியால், எனக்கு பிடிக்கவே பிடிக்காத செட் ஏர்வேசின் தேர்வை தேர்வு செய்தேன். (ஏன் பிடிக்கின்றது என்று சொல்ல, 1000 காரணம் தேவை..ஏன் பிடிக்கவில்லை என்று சொல்ல ஒரு காரணமும் தேவை இல்லை என்று எங்கயோ கேட்ட நினைவு :) )
நமக்கு விமாண பயணம் என்றாலே ஒரு பதட்டம் வந்துவிடும். குறிப்பிட்ட நேரத்திற்கு 1 மணி நேரம் முன்னதாகவே போய் சேர்ந்துவிடுவேன். அதுவும் விமான நிலையத்தில் ஓசியில் இணைய வசதி வேறு வந்துவிட்டதா, போனோமா, ஒரு தேநீரும் சாண்டுவிச்சும் வாங்கினோமா, தமிழ்மணத்தைப் பார்த்தோமா என்று ஆழ்ந்துவிடுவேன்.
இந்த முறை உணவு உண்ட உடனே கிளம்பிவிட்டேன் என்றபடியால், வந்தவுடன் எதுவும் வாங்கத் தோன்றவில்லை. கிடைத்த நேரத்தில் கோவியாருடன் மொக்கைப் போட்டு, மடிக்கணிணியில் இருந்த மின்சாரத்தையும் கரைத்து முடித்தேன்.
விமானத்தில் அமர அழைப்பு வந்தவுடன் கடைசி ஆளாக சென்றால், மீண்டும் ஒரு பேருந்து பயணம். ஒரு வழியாக உள்ளே இடத்தைக் கண்டு, இடித்து, மிதித்து, போய் சேர்ந்தேன்.
அதென்னவோ, விமானத்தில் ஏறியவுடன் பசிக்க ஆரம்பித்தது. ஒரு வேளை அறிவுப்பசியோ என்றெண்ணி, இன்றைய செய்திதாள் கிடைக்கும்மா என்று சிப்பந்தியிடம் கேட்டேன். அவர் இல்லை என்று சொன்னார். கொஞ்சமாக இருந்த செட் ஏர்வேச் மீதான வெறுப்பு கொழுந்துவிட்டெரிந்தது. வரும் போது வணக்கம் சொன்ன, அழகுப்பெண் இல்லாமல், அப்பாசு போற இந்த சாக்லேட் பேபி வந்தப்பொழுது இன்னும் திகு திகு என்று எரிந்தது.
சரி, போனா போகுது என்று சொல்லிவிட்டு, அருகில் அமர்ந்தவர்களை மீண்டும் இடித்து, மிதித்து, எம்பிதிரி பிளேயரை எடுத்து காதில் சொருகினேன். வந்தவர்களுக்கெல்லாம் ஏதோ முதலில் கொடுத்தார்கள். பார்த்துக்கொண்டியிருக்கும் போதே, அது என்னைக் கடந்து சென்றது. வேண்டுமா என்றுக் கூட கேட்காமல்.
சரி, நீர் தானே..போனாப் போகுது என்று விட்டுவிட்டேன்.
சாப்பாட்டு தள்ளுவண்டிகளை தள்ளிக்கொண்டு மீண்டும் இரண்டு அப்பாசுகள் முன்னே சென்றார்கள். 2.45 மணி நேர பயணத்தில் அதற்குள் ஒரு மணி நேரம் கழிந்துவிட்டியிருந்தது. இசையயை வைத்து எவ்வளவு நேரம் தான் பசியாற்றுவது. கொண்டு வாங்கடா அந்த சாப்பாட்டு கூடையயை என்று கூவத் தயாரானப் பொழுது தான் பார்த்தேன். ஏதோ அட்டையயை கையில் கொடுத்துக் கொண்டு வந்தார்கள்.
அடடே..இப்ப எல்லாம் தேர்வு செய்துக்கொள்ளலாம் போலிருக்கே..செட் ஏர்வேச் இப்படி எல்லாம் அதிசயப்படுத்துதே என்று ஆவலாகப் பார்த்தால். விலையோட அந்த அட்டையில் தின்பண்டங்களின் பெயர்கள் தெரிந்தது.
அடப்பாவிகளா...இது செட் லைட் விமாணமா (டெக்கான் நினைவிருக்கா..)...சொல்லவே இல்லை...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று கொஞ்சம் அழுதுவிட்டு...சரி அப்படி என்னதாண்டா வைச்சியிருக்கீங்க என்று பார்த்தால்...
கொலை வெறி வருமளவிற்கு விலைகள் இருந்ததன..சரி போனா போகுது என்று 150ரூ, ஒரு அசைவ உணவு கொத்தை வாங்கினால், உள்ளே இருந்தது, ஒரு கோழிக்கறி ரொட்டி, ஒரு கேக், ஒரு பழச்சாறு...இதற்கு ரூ.150/-. இதற்கு ரசீதும் கொடுக்கவில்லை.
(இதுக்கு 150 ரூ./- எ.கொ.ச)
சரி, சாப்பிடுவோம் என்று ஆரம்பிக்கும் பொழுது, என் அருகில் அமர்ந்திருந்தவர், சட்டென்று குணித்து, சரசரக்க ஒரு பையயைத் திறந்தார்..உள்ளே மணக்க மணக்க உப்புமா. ஆற, அமர சாப்பிட்டுக்கொண்டே, என்னை ஒரு கேனையயைப் பார்ப்பதுப் போல் பார்த்தார். அவ்வ்வ்வ்வ்வ்வ். தில்லியில் வேறு தரையிறங்கி சுமார் முக்கால் மணி நேரம் தரையிலே பேருந்தை ஓட்டுவதுப் போல் விமானத்தை ஓட்டுவார்கள். பசி வயிற்றைக் கிள்ளியது. இன்னோரு 150 ரூ செலவழிக்க மனமும் இல்லை. பொட்டலம் கட்டிக்கொண்டு வருபவர்களைக் கண்டால், தோன்றும் இளக்காரம் இன்று காணமல் போய், மவனே உனக்கு வேண்டுமடா என்ற எண்ணம் தான் வந்தது. அடுத்த முறை, இலை வைத்து, செய்தித் தாளில் கட்டி, புளியோதரை கொண்டு வந்து (தாளில் எண்ணெய் வெளியே தெரியனும் ) சாப்பிடுவேன் என்று சூளுரைத்தேன் :P
( பசி வந்தால் பத்தும் பறந்துவிடும்..உப்புமா..கசக்குமா..?? )
குறைவான பணத்தில் வாணூர்தியில் பயணம் என்று டெக்கான் ஆரம்பத்தப் பொழுதும், இதுப் போன்ற உணவு வகைகள் விற்பனை உண்டு. ஆனால், அந்த பயணத்திற்குன் நாம் கொடுத்த தொகை 1: 10, ஆனால்,இன்று சராசரி தொகைக்கு சற்றும் குறையாமல், தொகையயை வாங்கிக்கொண்டு, இப்படி விண்ணில் கையேந்தி பவன் நடத்துவது அநியாயமப்பா.
ஒன்று விலையயைக் குறைக்க வேண்டும்..இல்லையேல் அனைத்து வசதிகளையும் கொடுக்க வேண்டும்..இரண்டும் இல்லாமல் இப்படி சாகடிப்பது கொடுமை !
யாரும் செட்டில் போகாதீங்க..அதுவும் விலைகுறைந்த சேவை எனப்படும் சேவைகளில் போகாதீங்க. அம்புட்டுத் தான் சொல்ல முடியும் !
ஃஃஃஃ
ஒரு மாத காலமாக பதிவேயெழுதாமல் இருக்கிறாயே..ஒரு உப்புமா பதிவாவது போடக்கூடாதா என்று யாரும் கேட்காமலே எழுதப்பட்ட உப்புமா பதிவு !
வானத்திலே ஒரு உப்புமா !
lables
air hostess,
jet airways,
அனுபவம்,
தில்லி
Subscribe to:
Post Comments (Atom)



5 Comments:
:-))))
கூச்சப்படாம பக்கத்துல இருந்தவர்கிட்ட உப்புமா கொஞ்சம் வாங்கியிருகலாமே!
நானாக இருந்தால் வாங்கியிருப்பேன்!
தல,
"புரியல தயவு செய்து விளக்கவும்" தான் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வருது :) :).............
Anyways Welcome Back......
அடச்சே.. சாப்பாட்டு விலை கூட பரவாயில்லே.. அதையும் இந்த அப்பாசுங்க கைல வாங்கி தின்ன வேண்டியதாப் போச்சே.. ஸோ பேட். நானாயிருந்தா சாப்பாட்டுக்கு பதிலா ரெண்டு பாராசூட் கேட்டிருப்பேன்!
/ஒரு மாத காலமாக பதிவேயெழுதாமல் இருக்கிறாயே..ஒரு உப்புமா பதிவாவது போடக்கூடாதா என்று யாரும் கேட்காமலே எழுதப்பட்ட உப்புமா பதிவு !
posted by TBCD at 5:35 PM on Jun 22, 2009
//
தம்பி ப்ளைட் எதும் குலுங்கியதா ? ஐ மீன் டர்புலன்ஸ்.
:)
Post a Comment