சமீபத்திய புதசெவி

ஆழகிரியின் தியாகம் மற்றும் ஒரு வேண்டுகோளும்

நம்ம கலைஞர் தொல்லைக்காட்சியில், தயாநிதிக்கு எப்படி சூரிய தொலைக்காட்சி நிறுவனம் முட்டுக்கொடுத்ததோ, அதேப் போல் அழகிரிக்கு செய்யலாம் என்று நினைக்கின்றார்கள் போலிருக்கு.

நேற்று ஏழை எளிய மக்களுக்காக மத்திய அமைச்சர் அழகிரி தன்னுடைய முதல் மாத ஊதியத்தை அளித்தார் என்று செய்தி போட்டாங்க.

செயலலிதா அம்மையாரும் முதலில் இதேப் போல் 1ரூ சம்பளம் மட்டும் முதலில் வாங்கிக்கொள்வதாக அறிவித்தார்.

அதைக் கண்டு எந்த சாமனியன் வீழ்ந்தான் என்று தெரியவில்லை...அப்படியே அவருடைய அடியொற்றி இப்போது அழகிரி.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. சமூக சேவையாற்ற(!!) வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு மட்டும் ஏன் ஊற்றாக பொங்குகிறது.

இம்முறை நாடாளுமன்றத்தில் 50% மேலானவர்கள் தங்களுடைய தொழிலாக கொடுத்திருப்பது என்ன தெரியும்மா...சமூக சேவை

இவர்களில் ராகுல், சோனியா ஆகியோரும் அடக்கம்.

என்ன ஒரு நாடகத்தனம்...!

என்ன ஒரு போலித்தனம்...!

இவர்கள் எல்லாம் நாட்டிற்கு சேவை செய்ய வந்தவர்களாம் !

போலவே அழகிரி அவர்களும் ஏழை எளிய மக்களுக்காக ஊதியத்தை தியாகம் செய்கிறாராம்..

ஒரு மாறுதலுக்கு..

எல்லா அரசியவியாதிகளும் உங்களுடைய கிம்பளத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுங்களேன்...!!

9 Comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஊதியத்தைக் கொடுத்து உயர்ந்து நிற்கும்
தலைவரின் வாரிசு வாழ்க!

மங்களூர் சிவா said...

me the 2nd

மங்களூர் சிவா said...

பதிவ படிச்சிட்டு வரேன்
:))

நந்தவனத்தான் said...

எல்லா அரசியவியாதிகளும் உங்களுடைய கிம்பளத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுங்களேன்...!!//

நச்!

பீர் | Peer said...

முதல் சம்பளத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுப்பதில் என்ன தவறு இருந்துவிடப்போகிறது?

TBCD said...

// பீர் | Peer said...

முதல் சம்பளத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுப்பதில் என்ன தவறு இருந்துவிடப்போகிறது?
//

அண்ணே,

உங்க மனசு வெள்ளை மனசு !

அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைச்சிடுங்க..இல்லாட்டி கெட்டுப் போய்விடும் !

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் said...

//எல்லா அரசியவியாதிகளும் உங்களுடைய கிம்பளத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுங்களேன்...!!//

:)

RATHNESH said...

ஜெ ஒரு ரூபாய் சம்பளமாகப் பெற்றார். அழகிரி தன் சம்பளத்தை ஏழைகளுக்கு உதவுவதற்காக சொல்லி மாவட்டக் கலெக்டரிடம் தந்திருக்கிறார். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

//ஒரு மாறுதலுக்கு..

எல்லா அரசியவியாதிகளும் உங்களுடைய கிம்பளத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுங்களேன்...!!//

அழகிரி அதனைச் செய்து தானே ஓட்டுப் பெற்றிருக்கிறார்? அதனையும் திட்டுகிறார்களே!

ஜோ/Joe said...

//அழகிரி அதனைச் செய்து தானே ஓட்டுப் பெற்றிருக்கிறார்? அதனையும் திட்டுகிறார்களே!//

:))))))))

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்