சமீபத்தில் பஞ்சாபில் உள்ள லூதியானா என்ற நகரத்திற்கு அலுவல் காரணமாக போக வேண்டியிருந்தது. போவது தான் போகின்றோம், அப்படியே தங்கக்கோவிலையும் பார்த்துவிடுவோம் என்று என்னுடன் பயணித்த இரு வடநாட்டு நண்பர்களும் சொன்னதால், பயணத்திட்டத்தை அதன்படியே மாற்றியமைத்தோம். தில்லிக்கு முன் தினம் இரவு சென்று, அடுத்த நாள் காலையில் தில்லியிருந்து அமிர்தசரச் நகருக்கு பயணப்பட்டோம்.
அமிர்சதரச் வானூர்தி நிலையம் அகில உலகத்திற்கும் தொடர்புடையது என்றார்கள். அதன் காரணம், பஞ்சாபில் உள்ளதை விட பஞ்சாபிகள் வெளிநாட்டில் தான் அதிகம் வசிக்கின்றார்களாம்(மிகைப்படுத்தப்பட்ட தகவல்...ஆனால், விகிதாச்சாரம் பார்த்தால் அவர்கள் அதிகமாகவே இருப்பார்கள்). வானூர்தி நிலையத்தை விட்டு வெளியே வந்த மறுநிமிடமே, பஞ்சாபிகள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்ற ஒற்றை பரிமானம் மாறத்தொடங்கியது.
அதன் முதல் நிலை பெங்களூரிலேயே தொடங்கிவிட்டியிருந்தது. என்னுடன் பயணித்தவர்களில் ஒருவர் சிங். ஆனால், தலையில் முண்டாசு இருக்காது. ஆள் ஐந்து அடி 7 அங். தான் இருப்பார். சிங் என்றாலே, திரைப்படங்களைப் பார்த்தால் முண்டாசு, மற்றும் ஓங்குதாங்கான உருவம் என்று உருவத்தை கற்பனை செய்து வைத்து இருந்தேன். இவர் அதற்கு கொஞ்சம் எதிராக இருந்தார். அமிர்தசரசில் நான் கண்டவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதுப் போலவே, பல வடிவான வண்ணக்கற்களை ஒரு குவளையில் இட்டு குலுக்கியதுப் போலவே இருந்தார்கள்.
தங்கக்கோவிலுக்கு பயணித்தோம். தங்கக்கோவிலுக்கு வரும் பாக்கியம் கிடைத்ததே என்று என்னுடன் வந்த மற்றொரு வடநாட்டு நண்பர் புளகாங்கிதமடைந்த வண்ணமே வந்தார். சிங்குகள் போலவே தலையில் ஒரு துணியயை வாங்கிக்கட்டிக்கொண்டு, கோவிலினுள் வந்தோம். சில பல புகைப்படங்களை சுட்டுக்கொண்டு, சுற்றி வந்து, தங்கக்கோவிலுக்குள்ளும் சென்று வந்தோம். (அதைப் பற்றி இடுகை நேரம் கிடைத்தால்.இப்போதைக்கு படம் மட்டுமே :))

பின்னர் அமிர்தசரச்சிலிருந்து லூதியானாவிற்கு ஒரு இன்னோவாவை பிடித்துக்கோண்டு கிளம்பிப்போனோம். வேலையயை முடித்துக்கொண்டு பின்னர், சண்டிகருக்கு ஒரு நண்பரின் வண்டியில் பயணப்பட்டோம். அப்பொழுது தான் வாகா பற்றி பேச்சு மீண்டும் வந்தது.
பயணம் ஆரம்பித்த நாள் முதலாக வாகாவும் அருகேயே உள்ளது அங்கே நீங்கள் காணவேண்டிய காட்சி ஒன்று இருக்கின்றது. அது உங்கள் மேனி சிலிர்க்க வைக்கக்கூடியளவில் இருக்கும். என்று சிங் சொல்லிக்கொண்டே இருந்தார். அது வாகா என்றழைக்கப்படும் ஒரு எல்லை நகரத்தில் நடக்கும் கொடியேற்றும், கொடியிறக்கும் அணிவகுப்பு. இந்த நகரம் வழியாகத்தான் தில்லியிலிருந்து லாகூரிற்கு போகும் பேருந்துகள் பயணிக்கும். பெரும்பாலான இந்திய பாகிசுதான் பயணத்தொடர்புகள் இதன் வழியாகவே நடக்கும். இங்கியிருக்கும் எல்லைக்கதவு அருகே இருக்கும் இரு நாட்டுக்கொடிகளுமே காலை வேளையில் ஆரவாரத்துடன் ஏற்றப்பட்டு, மாலையில் அதே ஆரவாரத்துடன் இறக்கப்படும். இதில் இரு நாட்டு இராணுவத்தினரும், சேவல் சண்டையில் உசுப்பேற்றிவிடப்பட்டவர்கள் போல், மிகுதியான உணர்ச்சியுடன், மிகைப்படுத்தப்பட்ட உணர்வுடன், கால்களை தரையில் ஓங்கியடித்து, முறைத்தும் வெறுப்பை வெளிக்காட்டிக்கொள்வர். இதில் எல்லையின் இருமரங்கிலும் இருக்கும் மக்கள் தத்தமது நாட்டு இராணுவத்தினரை கைத்தட்டி ஆரவாரப்படுத்துவார்கள்.
யூடியூபில் இருக்கும் இதன் ஒரு பதிப்பு.
நாங்கள் சென்ற நேரம் நன்பகல் என்பதால், அங்கும் போகவில்லை. நேரடியாக பயணத்தை லூதியானவிற்கு பயணப்பட்டியிருந்தோம். நண்பர் நீங்கள் காண வேண்டும் என்பதற்காக, நான் ஒரு குறுந்தகட்டில் அந்தக்காட்சியயை அமிர்தசரச்சில் வாங்கினேன் என்று மகிழ்ச்சிப் பொங்க கூறினார். கண்டிப்பாக அதை நாங்கள் கண்டுக்களிப்போம் என்று உறுதியளித்தோம். ஆனாலும் நண்பருக்கோ, அடக்க முடியாத பெருமை. அது பஞ்சாபில் நடப்பதுக்குறித்தும், அதில் தெறிக்கும் நாட்டுப்பற்று குறித்தும்.
நீங்கள் அதை நேரடியாக கண்டியிருக்க வேண்டும். அதில் ஒருக்கும் அனைவரும், குறைந்தப்பட்சம் 6 அடி 4 அங். இருப்பார்கள். அவர்கள் முறைக்கும் பொழுது கண்ணில் தீப்பொறி பறக்கும் என்றார். பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா என்று என் திருவாயயைத் திறந்தேன்.
"ஏன் நெருப்பு பொறி பறக்கும்" என்று அப்பாவியாக கேட்டேன்.
"என்ன இப்படி கேட்கின்றீர்கள். பாக். ஆட்கள் அனைவருமே கடைந்தெடுத்த அயோக்கியர்கள். நம் நாட்டிற்கு எவ்வளவு தயரம் விளைவித்து இருக்கின்றார்கள். சமீபத்தில் கூட மும்பாயில் அவர்கள் கலவரம் விளைவித்தார்களே" என்று ஆதங்கத்தைக்கொட்டினார்.
"ஆமாம், அவர்கள் அயோக்கியர்கள். நம் நாட்டினர் மட்டும் உத்தமசீலர்கள்" என்று வெறுப்பாக கூறினேன்.
அவரால் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நாட்டுப்பற்று எங்கள் உதிரத்திலேயே வந்தது என்று பெருமைப்பொங்க பேசுபவர் அவர். ஏன் இப்படி சொல்கிறீர்கள். நாம் இதுவரை எந்த கொடுஞ்செயலும் பாக்கில் செய்யவில்லையே என்றார்.
"ஏன் இல்லை ! கிழக்கு பாக்.யை பாக்.லிருந்து பிரித்தெடுக்கவில்லையா. இந்த பிரந்திய வல்லரசாகவேண்டும் என்ற ஆசையில், அண்டை நாடுகளில் குழப்பம் விளைவிக்கவில்லையா. இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கவில்லையா. பாக். ஒரு வகையில் அயோக்கியத்தனம் செய்தால், நாமும் அதற்கு குறைவில்லாமல் அயோக்கியத்தனங்களை செய்திருக்கின்றோம்" என்றேன்
"சரி, தாச்சில் இழந்த உயிர்களை பற்றி இவ்வளவு கவலையோடு சொல்லும் நீங்கள் வருடத்திற்கு 400 மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொண்டு இருக்கின்றது. அதுக்குறித்து இதுவரை நமது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நியயமான செயல் என்று நினைக்கின்றீர்களா. முதலில் குறித்து உங்களுக்கு தெரியும்மா" என்று கேட்டேன்.
இது வரை நான் செய்திகளில் கூட கேட்டதில்லையே என்று ஒருமித்தக்குரலில் கூறினார்கள்.
"தென்னகத்திலேயே சுமார் 6 வருடங்களுக்கு மேலாக இருவருமே இருக்கிருக்கின்றீர்கள். ஆனால், இதை செய்திகளில் கூட கேட்டதில்லை என்றால், இதன் ஆழம் தெரிந்திருக்க வேண்டுமே உங்களுக்கு. செய்தி நிறுவனங்கள் மக்கள் சேவைக்காக நடத்தப்படுவதில்லை. அவைகளுமே பணத்திற்கும் அரசிற்கு வளைந்துக்கொடுத்தே பழக்கப்பட்டுவிட்டன. உதரணமாக, தமிழர்களின் நலனிற்கு எதிராக குரல் கொடுக்கும் இந்து இராம், சோவைத்தவிர நீங்கள் வேறு யாரையாவது நீங்க உங்கள் செய்தி ஊடகங்களில் பார்த்து இருக்கின்றீர்களா" என்றுக் கேட்டேன்.
"பார்த்ததில்லை. ஆனால், இவர்கள் மக்களால் மதிக்கப்படும் தலைவர்கள் இல்லையா" என்று பதில் கேள்வி போட்டார் சிங்.
"இவர்கள் ஒரு பகுதி மக்களால் மதிக்கப்படுபவர்கள் தான், ஆனால், ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரதிநிதிகள் இவர்களல்ல"
"சரி,இதுக்குறித்து உங்கள் மாநில அரசியல் தலைவர்கள் எதுவுமே செய்யவில்லையா" என்றார்.
"எப்போதிருந்து அரசியல் தலைவர்கள் மக்களைக் குறித்து கவலைப்பட ஆரம்பித்தார்கள். எங்க மாநிலத்தலைவர்கள் எந்த மாநிலத்தலைவர்களையும் போலவே, பணத்தின் பின்னால் சென்று விட்டார்கள்"
"மத்திய அரசு உங்கள் மாநிலத்தை மட்டுமே கவணிக்கவில்லை என்று சொல்லுகிறீர்களா. நம்பமுடியவில்லையே" என்றுக் கேட்டார்
"மத்திய அரசு பிரான்சில் பஞ்சாபியர்களின் மதவுரிமைக்கு குரல் கொடுக்குமளவிற்கோ, பாகில், தூக்கிலிடப்படப்போகும் இராணுவர் வீரருக்கு குரல் கொடுக்குமளவிற்கோ, தமிழகம் சார்ந்த விவகாரங்களில் குரல் கொடுத்ததில்லை. உதாரணமாக, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான நிலை. இந்தியாவிலிருந்து இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்ட தமிழர்களுக்கு இன்று வரை எந்தவொரு உதவியோ, குரலோ கொடுக்காமலிருப்பது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத எந்த மாநிலத்தையும் தட்டிக்கேட்காமல், தமிழகத்திற்கெதிரான மட்டுமே முழங்குவது என்று அனைத்து நடவடிக்கைகளும் தமிழகத்திற்கெதிரான செயல்களாகவே இருக்கின்றன" என்றேன்.
இல்லை ! இல்லை ! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறிக்கொண்டியிருந்தவர்களை
மிகவும் அமைதியாக வண்டியோட்டிக்கொண்டியிருந்த மற்றொரு நண்பர் "மீனவர்கள் உயிரிழப்பு இதுவரை நான் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால், தாச் நிகழ்வு நாம் அனைவரும் அறிவோம். இவர் சொல்வதில் உண்மையிருப்பதாகத்தான் தோன்றுகிறது". என்று ஆமோதித்தார். அதற்குள் நாங்கள் தங்கும் விடுதியும் வந்துவிட்டியிருந்தது.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் வாகா போல் ஒரு எல்லை இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வைத்தால் வேண்டுமானால், எங்கள் கண்ணில் பொறி பறந்தாலும் பறக்கும் என்று சொல்லி விட்டு, விடுதிக்குள் நுழைந்தேன்.
ஃஃஃஃஃஃஃ
பீறிட்டு வந்த நாட்டுப்பற்றும் வாகாவும்
lables
அடப்போங்கப்பா,
அனுபவம்,
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)



26 Comments:
ம்ம்ம்!
மறுமொழியிடு ! அஞ்சாதே !//
அஞ்சாமல் அடுத்த மொழி!
அத்திவெட்டி சோதிபாரதி,
உங்கள் கடமையுணர்வு மெய்சிலிர்க்க வைக்கின்றது.
வாக்கும் கள்ளவாக்கும் போடவும் என்று எழுதாமல் போனேனே என்று நொந்துக்கொல்கிறேன்:P
நல்ல பதிவு சாமி.
ஓட்டும் போட்டுட்டேன்.
வாக்கும் கள்ளவாக்கும் போடவும் என்று எழுதாமல் போனேனே என்று நொந்துக்கொல்கிறேன்:P//
மறைமுகமா கேட்டா நான் என்ன பண்ணுவேன். :P :)
//இவர்கள் மக்களால் மதிக்கப்படும் தலைவர்கள் இல்லையா" என்று பதில் கேள்வி போட்டார் சிங்.//
:) அந்தக் கேள்விக்கு..!
//***பாக். ஒரு வகையில் அயோக்கியத்தனம் செய்தால், நாமும் அதற்கு குறைவில்லாமல் அயோக்கியத்தனங்களை செய்திருக்கின்றோம்" ***/
மிக சரியாக சொன்னிங்க
தமிழர்களாகிய நாம்தான் இந்தியா மிது மிக பாசமாக இருக்கிறோம் நானும் இருந்தேன் ஆனால் இந்தியா தமிழகம் மிது மிக அலட்சியாமாக இருப்பதை பார்த்தவுடன் இந்தியா மிது இருந்த நம்பிக்கை போய்விட்டது,
காலம் வரும் இந்தியாவின் போலி உறவு பாலம் உடையும்
நீறு பூத்த நெருப்பு போல .....நீண்ட நாள் சென்று பதிவில் அனல் பறக்குது !
( மறுமொழியிடு ! அஞ்சாதே !)
வந்துட்டோம்ல
பீறிட்டு வந்த நாட்டுப்பற்றும் வாகாவும் //
கொஞ்சம் வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களிடம் காபி ரைட் வாங்கி பீறிகிட்டு அப்படின்னு போட்டா கொறஞ்சா போறிய...!
//தற்போதைய நிலையில் தமிழகத்தில் வாகா போல் ஒரு எல்லை இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வைத்தால் வேண்டுமானால், எங்கள் கண்ணில் பொறி பறந்தாலும் பறக்கும் என்று சொல்லி விட்டு, விடுதிக்குள் நுழைந்தேன்.//
உண்மைதான்
உண்மைதான் நேரில் பாத்தநானும் உணர்ந்தேன். வாகாவில் நாட்டுப்பற்றை விட அடுத்த நாட்டின் மேலான கோவம் தான் அதிகம்.. உன்னை விட நான் அதிகம் குரல் கொடுக்கிறேன் தான் அங்கே இருக்கிறது.. ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் மேல் எல்லார்க்கும் கோவம்..இங்கே அப்படி இல்லையே.. :(
அனல் பதிவு.
அடபோங்கப்பா!
//இவ்வளவு கவலையோடு சொல்லும் நீங்கள் வருடத்திற்கு 400 மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொண்டு இருக்கின்றது. //
திருட்டு ராஸ்கல்ஸ் என்ன தைரியம் இருந்தா, நம்ம நாட்டு எல்லையை தாண்டி உள்ள வந்து, நம்ம மீனவர்களை சுட்டு கொல்வான், சும்மா விட கூடாது அவங்களை
//தாமிரபரணி said... காலம் வரும் இந்தியாவின் போலி உறவு பாலம் உடையும்//
கணவு கானும் உரிமை இங்கே எல்லொருக்கும் இருக்கு. நீங்கள் கானும் பகல் கணவில் அந்த உறவு பாலம் உடைந்த பின், குடி தண்ணீருக்கு எந்த நாட்டிடம் பிச்சை எடுப்பதாக உத்தேசம்
///
சென்ஷி said...
//இவர்கள் மக்களால் மதிக்கப்படும் தலைவர்கள் இல்லையா" என்று பதில் கேள்வி போட்டார் சிங்.//
:) அந்தக் கேள்விக்கு..
///
அவங்க நிசமாவே ரொம்ப அப்பாவியா கேட்டாங்க !
வருகைக்கு நன்றி சென்சி !
எல்லா மாநிலத்திலேயும் நாட்டின் மேல் பற்றோடு தான் இருக்காங்க. ஆளுபவர்கள் தான் பாரபட்சம் பார்க்கிறார்கள்.
வருகைக்கு நன்றி தாமிரபரணி
///
Blogger தாமிரபரணி said...
மிக சரியாக சொன்னிங்க
தமிழர்களாகிய நாம்தான் இந்தியா மிது மிக பாசமாக இருக்கிறோம் நானும் இருந்தேன் ஆனால் இந்தியா தமிழகம் மிது மிக அலட்சியாமாக இருப்பதை பார்த்தவுடன் இந்தியா மிது இருந்த நம்பிக்கை போய்விட்டது,
காலம் வரும் இந்தியாவின் போலி உறவு பாலம் உடையும்
///
///
கோவி.கண்ணன் said...
நீறு பூத்த நெருப்பு போல .....நீண்ட நாள் சென்று பதிவில் அனல் பறக்குது !
///
அண்ணாச்சி ,
கொஞ்சம் தோசைக்கல்லில் போட்டு எடுத்தேன் அது தான் சூடா இருக்கு :P
///
வினையூக்கி said...
( மறுமொழியிடு ! அஞ்சாதே !)
வந்துட்டோம்ல
///
தம்பிரி,
நீ வர வேண்டிய இடத்திற்கு இன்னும் வரலை :P
///
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
பீறிட்டு வந்த நாட்டுப்பற்றும் வாகாவும் //
கொஞ்சம் வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களிடம் காபி ரைட் வாங்கி பீறிகிட்டு அப்படின்னு போட்டா கொறஞ்சா போறிய...!
///
பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !
போதும்மா..அவர் சொன்னது வேற எதுவும் அச்சில் ஏற்றம் வண்ணம் இல்லையே !
///
ஆ.ஞானசேகரன் said...
//தற்போதைய நிலையில் தமிழகத்தில் வாகா போல் ஒரு எல்லை இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வைத்தால் வேண்டுமானால், எங்கள் கண்ணில் பொறி பறந்தாலும் பறக்கும் என்று சொல்லி விட்டு, விடுதிக்குள் நுழைந்தேன்.//
உண்மைதான்
///
பறந்தாலும் பறக்கும் (??!!) என்பது உண்மை தான் என்று சொல்லுறீங்களோ
வருகைக்கு நன்றி ஞானசேகரன் !
///
முத்துலெட்சுமி/muthuletchumi said...
உண்மைதான் நேரில் பாத்தநானும் உணர்ந்தேன். வாகாவில் நாட்டுப்பற்றை விட அடுத்த நாட்டின் மேலான கோவம் தான் அதிகம்.. உன்னை விட நான் அதிகம் குரல் கொடுக்கிறேன் தான் அங்கே இருக்கிறது.. ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் மேல் எல்லார்க்கும் கோவம்..இங்கே அப்படி இல்லையே.. :(
///
முத்துலெட்சுமி,
அதைத் தான் நானும் பறந்தாலும் பறக்கும் என்று சொல்லியிருக்கின்றேன்.
கண்டிப்பாக பறக்கும் என்று சொல்ல வைக்கின்ற நிலையில் நம்முடைய மக்களின் நிலை இல்லையே :(
///
நர்சிம் said...
அனல் பதிவு.
///
நெஞ்சத்தில் இருப்பது பதிவில் வருது !
வருகைக்கு நன்றி நர்சிம் !
///
மங்களூர் சிவா said...
அடபோங்கப்பா!
///
லேபிளை மட்டும் படித்துவிட்டு இதைப் போடவில்லை என்று நம்புகிறேன் :)
வருகைக்கு நன்றி சிவா !
///
Bleachingpowder said...
திருட்டு ராஸ்கல்ஸ் என்ன தைரியம் இருந்தா, நம்ம நாட்டு எல்லையை தாண்டி உள்ள வந்து, நம்ம மீனவர்களை சுட்டு கொல்வான், சும்மா விட கூடாது அவங்களை
///
இப்ப உங்க பிரச்சனை அவர்கள் எல்லை கடந்தார்களா என்பதா..அல்லது எதுவுமே பிரச்சனை இல்லை என்று சொல்லுறீங்களா..
மனிதாபிமானம் என்ற ஒன்று இருக்கே அதற்கு எல்லைகளே கிடையாது என்பது எனது தாழ்மையான கருத்து.
சரி, அரசாங்கம் தலையிட்டு நெறிப்படுத்தட்டுமே. கண்டும் காணாமல் இருப்பது சரியா !
///
கணவு கானும் உரிமை இங்கே எல்லொருக்கும் இருக்கு. நீங்கள் கானும் பகல் கணவில் அந்த உறவு பாலம் உடைந்த பின், குடி தண்ணீருக்கு எந்த நாட்டிடம் பிச்சை எடுப்பதாக உத்தேசம்
///
அடடே உலகின் அனைத்து சிறு நாடுகளும் பிச்சையா எடுகின்றன.
அனைத்து நாடுகளுமே நீர்வளத்தை தன்னகத்தே கொண்டியிருக்கவில்லை.
தனிநாடாக பிரிந்து தான் அனைத்தையும் அடையவேண்டும் என்பதில்லை என்பது உங்கள் கருத்தாக இருந்தால் ஆமோதிக்கின்றேன்.
தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கின்றேன் -பதிவையும் அழைப்பையும் இங்கே காண்க - http://nkashokbharan.blogspot.com/2009/09/blog-post_25.html
Post a Comment