சமீபத்திய புதசெவி

அண்ணல் செந்தழல் ரவி வாய்க ! வாய்க !

மிக மிக மொக்கையான மட்டுமல்ல தொல்லையான விவகாரமிது. இருந்தாலும் சில விசமிகள் இகலப்பை கையில் இருப்பதால் போகின்ற இடங்களில் எல்லாம் வாந்தி எடுத்து வைப்பதால் ஒரு தன்னிலை விளக்கமாகவும், இந்த பதிவு வழியாக நான் கடந்து வந்த சில முக்கிய (அந்த முக்கிய இல்லீங்கோ ) நிகழ்வுகளையும் தொகுத்து வைக்கின்றேன். நேரமில்லாதவர்கள் நேரடியாக இரண்டாம் பாகத்திற்கும், நேரம் இருப்பவர்கள் முதல் பாகத்திலிருந்தும் படிக்கலாம்

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பாகம் - ஒன்று

சூலை 20, 2007ல் முதல் பதிவு.

இந்த முதல் பதிவு வருவதற்குள்ளாகவே ஒரு முறை பெயர் மாற்றமும் நிகழ்ந்தது. (பழைய பெயரில் இடப்பட்ட பின்னுட்டம் இங்கே பார்க்கலாம்.)

நான் பதிவெழுத வரும் முன்னே அடிக்கடி படித்த ஒரு தளம் விடாது கருப்பு ( அந்த தளத்தில் இப்போதைக்கு அனைத்து இடுகைகளும் நீக்கப்பட்டவிட்டதாக தெரிகின்றது). பெரியார் குறித்தான் பதிவுகள் அந்த தளத்தில் தொடர்ந்து வந்தது என்பதே அதை நான் தொடர்ந்து படிக்க காரணம். அந்த தளத்தில் சில நேரங்களில் பதிவுலக சண்டைகள் வரும், (இப்பதிவைப் படிக்கும் புதிய பதிவர்கள் போலவே) குழப்பத்துடன் படித்துவிட்டு, அன்னம் போல தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றவைகளை விட்டுவிடுவது என் வழக்கம்.

ஆக்ச் 7, 2007 - பதிவுலகில் பலர் கொடுத்துள்ளதைப் போலவே என் தளத்தில் விடாது கருப்புவுக்கு சுட்டி கொடுத்தேன். அதை நீக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார் செந்தழல் ரவி. சுட்டி கொடுப்பது என் உரிமை என்றாலும், வலையுலகில் முதலில் உரையாடியவர், நண்பர், கேட்டுக்கொண்டதால் அந்த சுட்டி நீக்கப்பட்டது.

ஆக்ச் 12,2007 - செ.ரவியின் நண்பர்களில் ஒருவரான ஓசை செல்லா விடாது கருப்புவிடமிருந்து வந்த மின்னஞ்சல் என்று ஒரு பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவை டோண்டுவும் வெளியிட்டார் என்பதாகவே நினைவு. (சுட்டியில்லை, நீக்கிவிட்டார் போலும்). அந்தக் காலக்கட்டத்தில் ஓசையார் விடாது கருப்புவின் தளத்திற்கும் சுட்டிக் கொடுத்திருந்தார்.

அக்ட் 16,2007-உரையாடியில் மட்டுமே தொடர்பிலிருந்த நண்பர் கோவி.கண்ணனை சிங்கையில் வைத்து சந்தித்தேன். அதை அவர் பதிவாகவும் வெளியிட்டார்.( இதிலிருந்த படத்தை வம்பர்கள் வம்பளக்க பயன்படுத்தியதால், இந்தப் பதிவும் நீக்கப்பட்டுவிட்டது). அதைக் கண்டதும் செ.ரவி (அது நாள் வரை உரையாடியில் நண்பராக பழகிய அதே ரவி) இப்படி ஒருஏகாடியப் பதிவு போட்டார். அதில் தனக்குத் தானே திட்டத்தின்படி, அவதூறாக பின்னுட்டமிட்டு கொண்டாடினார். அதற்கான நாகரீகமான எனது எதிர்வினை இங்கே.

கோவி.கண்ணன் மூர்த்தியுடனான நட்பை முறிக்கவில்லை என்பதால், கோவி.கண்ணன் கைத் தொட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்று குதறுவது செந்தழலின் வழக்கமாக ஆகிவிட்டியிருந்தது. (இன்று போலியின் அல்லக்கை என்று விளிக்கப்படும் பதிவருடன் செந்தழல் ரவியின் தொடர்பு இன்றும் தொடர்வது உங்களுக்கு ஆச்சரியமளிக்குக் கூடாது. நட்பு என்றால், அவர் வைத்தால் மட்டுமே நட்பு. பதிவுலகம் தாண்டி நட்பை பேணுவது அவருக்கு மட்டுமே கள்ள மன்னிக்கவும் உள்ள உரிமை. )

அதன் பின்னர் பல முறை என்னைச் சீண்டியபடியே விசத்தனமாக பதிவுகள் போட்ட வண்ணமே இருந்தார் என் முன்னாள் நண்பர் செந்தழல் ரவி. அந்த பதிவுகள் பலவற்றை ஏனோ நீக்கிவிட்டார். (மீண்டும் படித்தால் தன் மீதே அவருக்கு வெறுப்பு வந்திருக்கும் என்பதால் இருக்குமோ)

பிப். 22,2008-இதற்கிடையில் பிரச்சனைக்குரிய விடாது கருப்பு தளம் கைமாறுவதாகவும், பொறுப்பிலிருந்தவர்கள் விலகுவதாகவும் ஒரு பதிவு வந்தது. விடாது கருப்பு தளத்தினை படித்தவர் என்ற முறையில் அங்கே என்னுடைய பின்னுட்டத்தை பதிந்தேன். விடாது கருப்புவின் மின்னஞ்சலை வெளியிட்டு, மகிழ்ந்த செல்லா, இடையில் விடாது கருப்புவின் தீவிர எதிர்ப்பாளராக மாறிவிட்டியிருந்தார். தானும் இதே தளத்திற்கு ஆதரவு வழங்கினோம் என்பதை மறந்து, பொங்கிய ஓசை செல்லா தன்னுடைய பதிவில் ஒரு கசட்டு பதிவை வெளியிட்டார். அதற்கு நான் இட்ட நாகரீகமான எதிர்வினை.

இதற்கிடையில் புதிதாக பதிவர்கள் வரத்தொடங்கினார்கள். தமிழ்மணத்தில் சூடான இடுகைகளில் ஒளிர்ந்துக்கொண்டியிருந்தவர்களை கொஞச்ம் அப்புறம் தள்ளி புதியவர்கள் ஒளிவிடத்தொடங்கினார்கள். அதுப் போன்ற ஒரு பரபரப்பு பதிவர் வசந்தம் ரவி.

காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதுப் போல், வசந்தம் ரவியும் போலி என்று செ.ரவி சதிராடினார்.

போதுமடா சாமி உங்கள் பதிவுலகம் என்று அவர் பதிவை மூடிவிட்டே போய்விட்டார். இன்றும் அத்தளம் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லாமல் இருக்கின்றது. சுவையான பல தரப்பட்ட பதிவுகளை வழங்கி, பதிவுலகில் அலக்சா சுரத்தை உருவாக்கிய வித்தகர். (கணிணித்துறையில் கைத்தேர்ந்தவர் என்பதற்காவே இவரும் போலி என்று சொல்லியதும் நடந்தது )

அடுத்து, யாரைக் கொத்துவது என்று காத்திருந்த செ.ரவி, கோவி.கண்ணன், ரத்னேஷ் பதிவுப் பக்கம் அதிகம் வருவதைக் கண்டு, ரத்னேஷும் போலி என்று பிதற்றினார். பதிவுப் போட்டார். அசாமிலிருந்தவண்ணம் கிடைத்த அரைகுறை வலைத்தொடர்பில் ரத்னேஷ் இதை படித்திருக்க கூட மாட்டார்.ஆனால், அவர் பதிவை விட்டோடினார் என்றும் சொல்லி மகிழ்ந்தார் செ.ரவி. அ

கோவி.கண்ணனை சிங்கையில் பதிவர்கள் சந்தித்தால் ,இங்கே இதற்கென்றே இரண்டு பதிவுகளை வைத்து மேய்க்கும் செந்தழல் ரவி பதிவில் அவதூறு பதிவுகள் அனல் பறக்கும். ஆனால், அது நாகரீகமான பதிவுகளாக இருக்காது. (சுட்டி தேட பொறுமை இல்லை. நண்பர்கள் சுட்டி கிடைத்தால் பின்னுட்டமிடலாம்). கருத்து கந்தசாமி என்று கோவி.கண்ணனுக்கு பெயர் சூட்டி, இவர் இட்ட பதிவுகளின் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. திடுமென்று வரும், திடுமென்று நீக்கப்படும். இடையில் இவர் (செ.ரவி) போதைக்கு ஊறுகாயாக என் மீதும் அனல் வீசும்.

சென்னையில் நான் பதிவர்களை சந்திக்க அழைத்தப் பொழுது, தன்னுடைய அரிப்பை இப்படி வெளிப்படுத்தினார்.

அது கிடக்க ! கோவி.கண்ணனுக்கும் இவருக்கு இருந்த பிரச்சனையில், கோவி.கண்ணனுடன் யார் பேசினாலும் இவருக்கு வயித்தெரிச்சல் வந்து இப்படி பதிவு போடுவார். (இவர் பதிவு, இதற்கு எதிர் பதிவு என்று பல பதிவுகள் இருக்கின்றன. பொழுதிருந்தால் தேடி படித்து பார்க்கலாம் )

இது அப்படியே போலியின் செயல் மாதிரி இருக்கே என்று நீங்க நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனால் அது தான் உண்மை. போலியின் வன்முறைக்கு சற்றும் குறைவில்லாத வன்முறையாளர் செ.ரவி.

நெஞ்சினில் துணிவிருந்தால், மனதினில் உண்மையிருந்தால் செ.ரவி இதை மறுக்கட்டும்.

அன்று வலைபதிந்த மக்கள் இன்றும் இருக்கின்றார்கள். நடப்பதை அமைதியாக பார்த்துக்கொண்டு. அவர்கள் மானசீகமாக காறி உமிழ்வார்கள்.

ஃஃஃஃஃஃஃஃஃ

பாகம் - இரண்டு

இன்று "டிபிசிடி நரகலானான்" என்று இவர் எழுதியவுடன், புதியவர்கள் ஒன்றும் புரியாமல் குழம்பிவிடக்கூடாதே என்று இந்த பதிவு.

சரி, இப்ப நரகல் என்று போகிற போக்கில் செந்தழல் ரவி பின்னுட்டம் போடுவார், உண்மைத் தமிழன் அதை வெளியிடுவார்.

இதற்கு பேரன்ன...?

அவதூறு என்று நீங்கள் சொன்னால் அது தவறு !

உண்மைத்தமிழனுக்கெதிராகவோ, அல்லது செந்தழல் ரவிக்கெதிராகவோ, ஏதேனும் நீங்கள் எழுதினால் அது தான் அவதூறு.

என்ன நியாயமோ! என்ன அறமோ !

அது கிடக்க !

அண்ணல் செந்தழல் ரவி பெங்களூருவில் ஒரு பதிவர் சந்திப்பை நடத்தினார். எப்போது. ஆக்ச் 2008ல்.

எதேச்சையாக கிழுமத்தூர் மகேந்திரன் இந்தியா வந்திருப்பதாக தகவல் தெரிந்தது. பதிவர்கள் யாரேனும் தொடர்பு கொள்ள விரும்பினால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளட்டும் என்று என் பதிவில் வெளியிட சொன்னார்.

அந்த எண்ணைக் கொண்டு கிழுமத்தூர் மகேந்திரனை அண்ணல் செந்தழல் தொடர்பு கொண்டு பெங்களூருவிற்கு அழைத்தார். அவரிடம் என்னுடைய தொலைப்பேசி எண்ணும் கேட்டுள்ளார். நல்ல வேளை அவர் கொடுக்கவில்லை.

வேறு சில பெங்களூரு நண்பர்களிடத்தும் என்னுடைய அலைப்பேசி எண்ணை இவர் கேட்டுள்ளார். நல்ல வேளை அவர்களும் கொடுக்கவில்லை.

அட நரகல் என்று சொல்லப்பட்டவர் கிழுமத்தூரும் நானும்...இவர் ஏன் பேச வேண்டும். பின்னர் என் அலைப்பேசி எண் கேட்க வேண்டும்.

அட இத்தனைக்கும் என் மின்னஞ்சல் முகவரி தெரியும்..அப்படி தேவையிருந்தால் என்னிடமே கேட்டியிருக்கலாம்.

இந்த பெரிய மனது உங்களுக்கு வருமா...நரகல் என்று சொல்லப்பட்டவரிடம் நீங்கள் மீண்டும் தொடர்பு கொள்வீர்களா...அதனால் தான் அவருக்கு அண்ணல் பட்டம். (அட ! பட்டம் கொடுத்தால் கூட நல்ல பட்டம் தான் கொடுக்க வருது நமக்கு..)

பதிவர் சந்திப்பின் முயற்சிக்குப்பின், பெப் 2009ல்,அண்ணல் செந்தழல் ரவி அவர்கள் என்னை டிவிட்டரில் தொடர அனுமதி கோரினார்.

துச்டனைக் கண்டால் தூர விலகு என்று தான் நமக்கு போகத் தெரியும்.....கை கோர்க்க நாம் என்ன அவர் போல அண்ணலா..?? பின் தொடர்ந்து அவரை என்னை போட்டு ஆபாசமாக கும்முவதை ரசிக்க நாம் என்ன மாசோகிச்டா...? தடை செய்துவிட்டேன். (அதற்காக அவர் அத்துடன் நின்றுவிட்டார் என்று நான் நினைக்கவில்லை. வேறு பெயரில் வந்து எப்போதோ அவர் நினைத்ததை சாதித்திருப்பார் )

எத்தனை பெரிய மனசு அண்ணலுக்கு ! எத்தனை சிறிய மனசு எனக்கு !

சரி, நீங்கள் இப்படி நரகல் என்று ஒருவரை சொல்வதாக வைத்துக்கொள்வோம்.

அந்த நபரை நீங்கள் மீண்டும் சந்திக்க விரும்புவீர்களா..? மாட்டீர்கள்..?

டிவிட்டரில் பிந்தொடருவீர்களா...? மாட்டீர்கள்..?

அலைப்பேசி எண் கேட்பீர்களா...? மாட்டீர்கள்..?

ஆனால் அண்ணல் செ.ரவி அனைத்தையும் செய்தார். செய்வார்.

ஏன் இப்படி செய்கிறார்...புதசெவி என்று நீங்கள் கேட்க முடியாது..கூடாது...

அவர் எதற்காக இதையெல்லாம் செய்தார், என்று ஒரு சிலரிடம் மட்டும் கூறியிருப்பார்.

அந்த விவரங்கள் அடுத்த 2010ல் போலி விவகாரத்தை மீண்டும் இளாவோ, சிறில் அலெக்சோ, அல்லது டோண்டுவோ, அல்லது உண்மைத்தமிழனோ பதிவிடும் போது கூறுவார்.

போலி விவகாரத்தில் என்னுடைய நிலை தெள்ளத் தெளிவாக ஏற்கனவே, விம்பார், சபீனா, நிர்மா போன்றவைகளால் பள பளவென்று விளக்கியாயிற்று.

போலிப் பதிவுகளுக்கும் எனக்கும் நேரடித்தொடர்போ, அல்லது மறைமுகத் தொடர்போ இருந்ததில்லை. அப்படி இருந்ததாகவும் இவர்கள் என் மீதுக் குற்றம் சுமத்தவில்லை.

இருந்தும் ஏன் இந்த "நரகல்" பட்டம்...??

ஏன் என்றால் பதிவு என்ற ஒன்றில் எழுதும் உரிமை இந்த "போலி போராளிகளுக்கு" மட்டுமே இருக்கின்றது. மற்றவர்கள் வாய் மூடி, கைக்கட்டி, இவர்கள் சொல்வதற்கு ஆமாம் சாமி போட வேண்டும்.

இன்று இவன் போலி, நீ அல்லக்கை என்று யாரை சொல்லுகிறார்களோ....அவர்களை விட்டு நாம் விலக வேண்டும்.

நாளை வேறொருவரை அல்லக்கை என்பார்கள்..அவரையும் விட்டு விலக வேண்டும்..

ஏன் என்று கேள்விக் கேட்டால்...தொலைந்தீர்கள். இனையவம்பர்களின் ஒட்டுமொத்த கூட்டமும் உங்கள் மீது பாயும்...

இவர்களை அவதானித்தது வரை நான் கண்டது..நேற்றைய எதிரி, இன்றைய நண்பன்..இன்றைய எதிரி, நாளைய நண்பன், நேற்றைய நண்பன், இன்றைய எதிரி...என்று மாறிக்கொண்டேயிருக்கும்.

பதிவுலகில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் வரத்தயங்க போலிகள் மட்டுமே காரணமல்ல, இதுப் போன்ற வம்பர்களும் காரணமே.

இந்த வம்பர்கள் போக்கை மாற்றாத வரை 2015லிம் போலியின் அல்லக்கை என்று யாருடைய கால் சட்டையயைவது உருவிக்கொண்டேயிருப்பார்கள்.

போலியிடமிருந்து பதிவுலகத்தை இவர்கள் காப்பாற்றிவிட்டார்கள். !

இவர்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார்கள் என்பது தான் புரியவில்லை ! புதசெவி !


வாழ்க கருத்துரிமை ! வாழ்க தமிழ் பதிவுலகம் !

உரிமைத்துறப்பு :- இந்த பதிவில் வருவன அனைத்தும் நடந்த நிகழ்வுகளைக் கொண்டே எழுதப்பட்டது. இது உங்களை நேரடியாகவோ, உள்குத்தாகவோ தாக்கினால், அதற்கு முழுக்க முழுக்க நீங்களே பொறுப்பு.

49 Comments:

மங்களூர் சிவா said...

வாழ்க கருத்துரிமை ! வாழ்க தமிழ் பதிவுலகம் !

மங்களூர் சிவா said...

பின்னூட்டம் பெறுவதற்க்காக!

☀நான் ஆதவன்☀ said...

//மங்களூர் சிவா said...
பின்னூட்டம் பெறுவதற்க்காக!//

ரிப்பீட்டு

tamil144 said...

ம் வாழ்க கருத்துரிமை!!!

tamil144 said...

ம் வாழ்க கருத்துரிமை!!!

நாமக்கல் சிபி said...

:(

அடப் பாவமே! இதுல நீங்க எங்க இருந்து விழுந்தீங்க!

யுவகிருஷ்ணா said...

:-)

TBCD said...

ஆளே இல்லாத கடையில் யாருக்கய்யா தேயிலை ஆத்துறீங்க...

இதுவரைக்கும் பதிவுக்குறித்தான பின்னுட்டங்களே வரவில்லை...

அதுக்குள்ளே பின்னுட்டத்தை மின்னஞ்சலில் பெற இந்த பின்னுட்டம்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜெகதீசன் said...

:)
நானும் தேயிலை ஆத்துகிறேன்.....
;)

ஜெகதீசன் said...

டெஸ்ட்... தேயிலை ஆத்த...

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

SanjaiGandhi said...

திரும்பவும் பழைய நிலை வராமலிருக்கனும்.

சென்ஷி said...

//இதுவரைக்கும் பதிவுக்குறித்தான பின்னுட்டங்களே வரவில்லை...//

நீங்க இன்னும் ஈ கலப்பையிலயா டைப் செஞ்சுட்டு இருக்கீங்க.. :)

OSAI Chella said...

யாருக்காக... டொண்டொண்டொய்ங் இது யாருக்காக?
இந்த கட்டுரை...
மிக நல்ல கட்டுரை...
கருத்து உரிமையை.. காக்கும் கட்டுரை

உரிமையே... வா .. வா..
பதிவுலகே போ போ..

போலியென்னும் கருப்பு வந்தது ..
அது அனைவரையும் ஏறி மிதித்தது!
உரிமையாக நான் நினைத்தது ...
நரகலாக மாறிவிட்டது!

TBCD said...

சிவா,

ஆனா உங்க நேர்மை எனக்குப் பிடிச்சியிருக்கு !

///
மங்களூர் சிவா said...

பின்னூட்டம் பெறுவதற்க்காக!
///

TBCD said...

///
☀நான் ஆதவன்☀ said...

//மங்களூர் சிவா said...
பின்னூட்டம் பெறுவதற்க்காக!//

ரிப்பீட்டு

////

உங்க நேர்மையும் பிடிச்சியிருக்கு,

ஆனால், அந்த சொல் தான் பிடிக்கலை. நல்ல அயகு தமிழ் சொல் சொல்லி வைச்சியிருக்கோம்ல..அதை பயன்படுத்தினால் என்னவாம்.. :)

TBCD said...

//
tamil144 said...

ம் வாழ்க கருத்துரிமை!!!

//

ஐயா,

நீங்க யாரு, உங்களைப் பார்த்தால் கொஞ்சம் சந்தேகமா இருக்கே.

அனானியாக நடத்தும் தனி மனித தாக்குதல்களை தடுக்கவும், உள்ளே பூந்து ஆட்டையயை கலைக்கும் அனானிகளை தவிர்க்கும் பொருட்டும், முக்காடு போட்டவங்களை உள்ளே விடக்கூடாது என்று தான், அனானி வசதியே நீக்கி வைச்சேன். நீங்க இப்படி முக்காடு போட்டு பின்னுட்டத்தை படிச்சிக்கிறீங்களே... இது அறமா ? தகுமா ?

TBCD said...

///
நாமக்கல் சிபி said...

:(

அடப் பாவமே! இதுல நீங்க எங்க இருந்து விழுந்தீங்க!
///

அட, இதெல்லாம் கேட்டா இழுத்து விடுறாய்ங்க..

மாநக்கலாரே எல்லாம் தெரிந்தவர் நீர்.

நீரே இப்படி கேட்கலாமோ..??

ஆமா உம்மை எப்படி விட்டாய்ங்க..

(இதெப்படி இருக்கு..ஏதோ நம்மால ஆன சேவை )

TBCD said...

///
யுவகிருஷ்ணா said...

:-)

///

தேயிலை நல்லாயிருந்ததுங்களா...??

:-)

TBCD said...

///
ஜெகதீசன் said...

:)
நானும் தேயிலை ஆத்துகிறேன்.....
;)
///

ஏன் ஒரு மாறுதலுக்கு, கொட்டை வடி நீர் ஆத்துங்களேன் செகதீசன் !

TBCD said...

///
உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

///

ஐயா உலவு.காம்,

எப்படி இப்படி எல்லாம்...!!

என்னவோ போங்க...!

TBCD said...

///
அறிவிலி said...

எனக்கும் ஒரு டீ

///

ஏ..ஐயாவுக்கு ஒரு டீ சொல்லப்பா !

TBCD said...

///
SanjaiGandhi said...

திரும்பவும் பழைய நிலை வராமலிருக்கனும்.
///

என்ன ஒரு கெட்ட எண்ணம், எல்லாரும் அமைதியா நிம்மதியா இருந்த நிலை வரவேக்கூடாது என்று சொல்லுகிறீரா..

காங்கிரசுக்காரன் வாயில் வேற என்னத்தை எதிர்ப்பார்க்க முடியும்..:)

(எப்படி நுண்ணரசியல்)

TBCD said...

///
சென்ஷி said...

//இதுவரைக்கும் பதிவுக்குறித்தான பின்னுட்டங்களே வரவில்லை...//

நீங்க இன்னும் ஈ கலப்பையிலயா டைப் செஞ்சுட்டு இருக்கீங்க.. :)

///

இருந்தாலும், உங்க வீரத்தை பாராட்டுறேன்.

பேர் வெளியே தெரியாத தமிழ்மணத்தில் தைரியமாக வாக்களித்துவிட்டு, பேர் வெளியே தெரியும் தமிலீசில் வாக்களிக்க அனைவரும் தயங்கும் போது, நீர் வீரனாக வாக்களித்து உங்க ஆதரவை நல்கியதற்கு நன்றிங்கண்ணோவ் !

(எப்படி உங்களையும் கோர்த்தாச்சி..!!

2011 வருட அல்லக்கை நீர் தான் என்று இப்பவே பட்சி சொல்லுது )

TBCD said...

////
OSAI Chella said...

யாருக்காக... டொண்டொண்டொய்ங் இது யாருக்காக?
இந்த கட்டுரை...
மிக நல்ல கட்டுரை...
கருத்து உரிமையை.. காக்கும் கட்டுரை

உரிமையே... வா .. வா..
பதிவுலகே போ போ..

போலியென்னும் கருப்பு வந்தது ..
அது அனைவரையும் ஏறி மிதித்தது!
உரிமையாக நான் நினைத்தது ...
நரகலாக மாறிவிட்டது!

////


ஆணையிட்டு சொல்லுகிறேன், இந்தக் கட்டுரை எனக்காக மட்டுமே.

வருகைக்கு நன்றி !

மதிபாலா said...

இதுக்கு என்ன சொல்றதுண்ணே தெரியலயே...

இருந்தாலும் ஒரு ப்ரசண்ட் சார் போட்டுக்கிடுறேன்.

நாமக்கல் சிபி said...

//அறிவிலி said...

எனக்கும் ஒரு டீ

///


வாடீ! உனக்கும் இருக்கு டீ!

(போதுமாடீ?)

நாமக்கல் சிபி said...

தலைப்பு அருமை!

(இது ஒரு பதிவு குறித்த பின்னூட்டம்)

நாமக்கல் சிபி said...

நான் இன்னும் பதிவை படிக்கவில்லை!

(இதுவும் சத்தியமா பதிவு குறித்த பின்னூட்டமேதான் என்பதை நிரூபிக்க துண்டை போட்டு தாண்டுகிறேன்)

கோவி.கண்ணன் said...

என்னுடன் நெருக்கமாக பழகிய காரணங்களுக்காக உங்கள் மீதும் சாக்கடை தெறித்ததற்கு வருத்தப்படுகிறேன்.
அவதூறு ஆசாமிகள் என்றுமே அடங்க மாட்டார்கள்.

இதுக்கும் மேல் சொல்ல விரும்பல.

மதிபாலா said...

(இதுவும் சத்தியமா பதிவு குறித்த பின்னூட்டமேதான் என்பதை நிரூபிக்க துண்டை போட்டு தாண்டுகிறேன்)/

துண்ட போட்டு தாண்டுனதுக்கு நான் சாட்சியா இருந்துக்கிடுறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நீங்க இப்படி முக்காடு போட்டு பின்னுட்டத்தை படிச்சிக்கிறீங்களே... இது அறமா ? தகுமா ?//



athivetti
டிபிசிடி(புதசெவி ஓனர்)யின் பதிவுலக சோகக்கதையைப் படித்துக் கொண்டிருக்கிறேன்//

வெளிப்படையா படிக்கிறேன் கவலை வேண்டாம்?

நாமக்கல் சிபி said...

//ஆமா உம்மை எப்படி விட்டாய்ங்க..//

ஹெஹெ! எல்லாம் ஒரு அன்புதான்!

நாமக்கல் சிபி said...

//துண்ட போட்டு தாண்டுனதுக்கு நான் சாட்சியா இருந்துக்கிடுறேன்.//

நீங்க சாட்சியா இருந்ததுக்கு ஏதாச்சும் சாட்சி இருக்கா?

unmaivilambi said...

இளைய பதிவர் பத்திரிகைகளில் பிரபலம் ஆனதை பொறுக்க மாட்டாமல் பொய்தமிழன் பொழுது போகாமல் கிறுக்கியது இவ்வளவு பிரச்சினை ஆகிவிட்டதா?

வெட்டி வீராப்பு பேசாமல் தைரியம் இருந்தால் இந்த வெண்ணை வெட்டிகள் போலீசுக்கு போகவேண்டும்.

அதற்கு முன் மூர்த்தி மேல் ஏன் கேஸ் பதிவாக இல்லை என்பதை சொல்லவேண்டும்.

செந்தழல் ரவி எவ்வளவு செலவு செய்தார் என்பதும் பதிவானால் உத்தமம்.

பார்ப்பனர்கள் பதவிசாக பதுங்கி கொண்டனர் வழக்கம் போல.

TBCD said...

காவல்துறையில் என்னை பிடித்துக்கொடுப்பதாக செந்தழல் ரவி மிரட்டல் விட்டியிருப்பதால், நான் இன்றோடு இந்த வலைப்பதிவை மூடிவிட்டு ஓடிவிடுகிறேன்.

நீங்களும் எல்லாரும் ஓடிப் போய் கட்டிலுக்கு கீழே ஒளிந்துக்கொள்ளுங்க. மடிக்கணிணியயை கையோடு எடுத்துச் செல்ல மறவாதீர் !


இந்த சேம்சு பாண்டுகளோட தொல்லை தாங்க முடியலையப்பா...!!

ILA said...

சம்பந்தமே இல்லாம என்னை ஏன்யா இழுக்குறீங்க. நானெல்லாம் பதிவு போடுறதும், படிக்கிறதுமே ஏதோ ஒரு அமாவசை பெளர்ணமி அன்னிக்கு. அதுவும் உங்களுக்குப் பொருக்காதா?

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே இந்த பிரச்சனை சம்மந்தமா கலைஞர் இன்னும் உடன்பிறப்புக்குக் கடிதம் எழுதல. ஜெயலலிதா இன்னும் கொடநாட்டுலேந்து அறிக்கை விடல. அதைக் கண்டிச்சு நான் டீ குடிக்கலாம்னு இருக்கேன்.

:)

அறிவிலி said...
This post has been removed by the author.
வால்பையன் said...

இந்த சிறுவன் ஓரமாக எட்டிப்பார்கலாமா!?

செந்தழல் ரவி said...
This post has been removed by a blog administrator.
TBCD said...

செந்தழல் ரவி,

உங்கள் பின்னுட்டம் எனக்குப் பிடிக்காததால் நீக்கப்பட்டுவிட்டது.

நீங்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வதால், நீங்கள் சொல்வது சரி என்று ஆகப்போவதில்லை.

நான் சொன்னால் கேட்கும் மனநிலையில் நீங்களும் இல்லை.

கீழே இறங்கி உங்களிடம் வாதாடும் நேரமும் எனக்கு இல்லை.

என் கருத்து எனக்கு. உங்கள் கருத்து உங்களுக்கு.

எனவே, Let us agree to disagree !

செந்தழல் ரவி said...

என்னுடைய பெயரை என்னுடைய அனுமதியில்லாமல் பயன்படுத்தும் இந்த இடுகையும் கூடத்தான் எனக்கு பிடிக்கவில்லை. அதற்காக நீக்கச்சொல்லமுடியுமா என்ன ?

நீக்குவீர்கள் என்று தெரியும். அதனால்தான் http://truetamilans.blogspot.com/2009/09/blog-post.html என்ற முகவரியிலும் போட்டுள்ளேன்.

பைதவே சில தேவையற்ற பதிவுகளை காணவில்லை என்று தேடியிருக்கிறீர்கள், அவற்றை மீண்டும் ட்ராப்டில் இருந்து போட்டுவிடுதல் நன்று. நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு என்றைக்குமே வரவேற்பு இருந்ததில்லை.

நன்றி.

TBCD said...

///
Blogger செந்தழல் ரவி said...

என்னுடைய பெயரை என்னுடைய அனுமதியில்லாமல் பயன்படுத்தும் இந்த இடுகையும் கூடத்தான் எனக்கு பிடிக்கவில்லை. அதற்காக நீக்கச்சொல்லமுடியுமா என்ன ?
//

அதை கேட்பதற்கு, தார்மீக உரிமை உமக்கில்லை. உண்மைத்தமிழன் பதிவில் விவகாரத்தை என் பெயரை இழுத்து பின்னுட்டம் போட்டவர் நீர்.

முதலில் அதை நீக்கிவிட்டு, இங்கே வந்து பேசும்.

உம்மிடம் அறம், தார்மீகம் பேசுவது வீண் !


///
நீக்குவீர்கள் என்று தெரியும். அதனால்தான் http://truetamilans.blogspot.com/2009/09/blog-post.html என்ற முகவரியிலும் போட்டுள்ளேன்.
///

ஈனம், மானம் , சூடு, சுரணை இருந்தால், என் பெயரை உபயோகித்து எங்கும் பின்னுட்டம் போடாதே.

உன்னைப் பற்றிய மதிப்பீடு, இதற்கு மேல் கீழே போகப்போவதில்லை. அப்படி மீண்டும் போட்டு, இதற்கும் கீழே அதள பாதளத்திற்கு போகும் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் !

///
பைதவே சில தேவையற்ற பதிவுகளை காணவில்லை என்று தேடியிருக்கிறீர்கள், அவற்றை மீண்டும் ட்ராப்டில் இருந்து போட்டுவிடுதல் நன்று. நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு என்றைக்குமே வரவேற்பு இருந்ததில்லை.

///


நல்லெண்ணம் என்று நீங்களே சொல்லிக்கொண்டால் தான் ஆயிற்று.

இதுவே நான் உம்மிடம் உரையாட போடும் கடைசி பின்னுட்டம் !

நன்றி ! மீண்டும் எக்காரணத்தை முன்னிட்டும், இங்கே வர வேண்டாம்.

மதிபாலா said...

நீங்க சாட்சியா இருந்ததுக்கு ஏதாச்சும் சாட்சி இருக்கா?//


நான் சாட்சியா இருந்ததை பாத்த நீங்கதான் சாட்சி.!

:)

டிபிசிடி அண்ணன் கொலைவெறில இருப்பார்......

கலவர பூமில வந்து மொக்கை போடறாங்காளே இவுங்கன்னு..

சோ , மீ...த...எஸ்கேப்பு.!

TBCD said...

மதிபாலா,

ஆனந்தக்கும்மிக்கு அனுமதி உண்டு.

ஆபாசக்கும்மிக்குத் தான் தடை.

இந்த கலவர பூமி, இரத்த பூமி என்பதெல்லாம், சிலர் இந்த விவகாரத்தை வைத்து, உதார் விட சொல்லுகின்ற வாசகம்.

இந்த விவகாரத்தில் சுமை எட்டணா சுமைக்கூலி பத்தணா என்பது தான் சரி !

கோவி.கண்ணன் said...

தம்பி,

டிராயரைக் கழட்டினோம், முகர்ந்து பார்த்தோம் போலியின் அல்லக்கைன்னு கண்டு பிடிச்சோம்னு சொல்லுவாங்க, அவங்க டிராயரையெல்லாம் துவைச்சு காயப்போட்டுவிட்டு, சுத்தமாக கழுவிட்டாங்களாம் அதனால் மற்றவர்களுடையது நாறுவதாக சொல்றாங்க

விட்டுடு தம்பி, உன் நண்பர்கள் உன்னைப் பற்றி அவதூறு சொன்னால் அதற்கு பதில் சொல்லலாம். மற்றவர்களுக்கு அப்படிப் பட்ட மரியாதையெல்லாம் கொடுக்காதே.

என் விவகாரத்தில் கூட நான் யாரையெல்லாம் நண்பர்களாக நினைத்தேனோ அவர்களுக்கு மட்டுமே பதில் சொன்னேன்.

உனக்கு நண்பராக இருப்பவரின் தகுதியை தீர்மாணிப்பதும், நிராகரிப்பதும் உன்னுடைய உரிமை. அதை சரியாகப் புரிந்து கொண்டால், இந்தப் பதிவு தேவையற்றதாக ஆகி இருக்கும். தயவு செய்து குழம்பவேண்டாம்.

உன்னை மதிக்காதவர்களுக்கு பதில் சொல்லி அவர்களுக்கு மரியாதை செய்யாதே.

மதிபாலா said...

இந்த விவகாரத்தில் சுமை எட்டணா சுமைக்கூலி பத்தணா என்பது தான் சரி !//

ஒக்கே ரைட்டு அண்ணே...புரிஞ்சிடுச்சி!.

செந்தழல் ரவி said...
This post has been removed by a blog administrator.

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்