சமீபத்திய புதசெவி

சமூக நீதியைக் கட்டிக் காக்கும் அனுசா ஐயர்

"தமிழகத்தில் இன்றைக்கு சாதாரண மனிதன்கூட தன் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்ள கூச்சப்படுகிறான். சுயமரியாதை உணர்வும், பகுத்தறியும் மனப் பான்மையும் பாமரனிடம்கூட பட்டொளி வீசுகிறது. அதுவே தமிழகத்தை `தாண்டினால் அரசியல் தலைவர்கள் முதல் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் வரை இன்றைக்கும் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்தே அமைத்துக் கொள்கின்றனர்" இது சமீபத்தில் தா.பாண்டியன் பேசியது.

1944ல் அறிஞர் அண்ணா முன்மொழிந்தது தான் இந்த பெயருக்கு பின்னால் இந்த சாதிப்பெயரை நீக்குதல் என்று நினைவு. நம் தாத்தா பெயரில் சாதி இருந்திருக்கும் , நம் தந்தையார் பெயரில் சாதி நீங்கி பெயர் மட்டுமே. இப்பொழுது நம்முடைய பெயரிலும் சாதி கிடையாது. சாதியை பெருமையாக பேசித்திரிபவர்களுக்கும் கூட, அனைத்து மக்களும் ஒன்று என்று நினைப்பு வருவதற்கும் ஏதுவான, இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப் பெயரை நீக்குதல் என்ற தீர்மானத்தை 1944ல் அறிஞர் அண்ணா அவர்களால் முன்மொழியப்பட்டு, பெரியாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அறிவிக்கவும் பட்டது என்ற நினைவு. (தவறிருந்தால் சுட்டுங்கப்பா )

மும்பை போன்ற நகரங்களில் பல காலம் முன்பு தமிழகத்திலிருந்து குடியேறிய தமிழர்கள் சிலர் இந்த சாதிப் பெயரை இன்னும் தங்கள் பெயரின் பின்னால் போட்டுக்கொண்டு தான் வருகின்றார்கள். அவர்கள் தமிழர்கள் தான், ஆனாலும், வெளிமாநிலத்தில் இருப்பதால், தெரிந்தோ தெரியாமலோ இதனை வழக்கமாக்கிக் கொண்டியிருக்கலாம். ஆனால், இதனை அங்கிருக்கும் தமிழர்கள் அனைவரும் செய்வதில்லை. குறிப்பாக நான் கேள்விப்பட்டது வரை பிள்ளை, ஐயர், ஐயங்கார் இந்து மூன்று சாதிப்பெயர்களே மிகுந்து, பெருவாரியாக இருக்கின்றது. அது கிடக்க !

ஆனால், தமிழகத்தில் சட்டதிட்டம் போல் இருக்கின்ற இந்த ஒழுங்கு, இன்று திரைப்படத்தில் தோன்றும் ஒரு நடிகையால் பொதுவில் வைத்து மீறப்படுகின்றது. தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்த, உன்னை போல் ஒருவன் படத்தில் நிருபராக நடித்த அனுசாவின் பெயர் ஐயர் என்று முடிகின்றது.

இந்த ஒரு பெண் தான் பெயர் வைப்பதால் சமூக நீதியே அடிப்பட்டுவிடப்போகின்றதா என்று கேட்டால், எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பம் உண்டு. அது இதுவாக இருந்துவிடக்கூடாது என்பது என் கவலை. சாதிப்பெயரை பின்னால் வைத்து திரியும் எந்த சாதி மனிதர்களாக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே. சினிமாவில் பெரும் புகழ் சம்பாதித்த ஏ.வி.மெய்யப்பட்ட செட்டியாரின் மகன்கள் இன்றும் ஏ.வி.எம்.சரவணன், ஏ.வி.எம்.குகன் மட்டுமே.

அனுசா என்பது உங்க பெயர், ஐயர் என்பது நீங்க படிச்சி வாங்கின பட்டமா என்று ஆற்றங்கரையில் வைத்து அவர் கன்னத்தில் சப்பென்று அறைந்து கேட்கும் வண்ணம், யாராவது ஒரு படம் சீக்கிரம் எடுத்தால் தேவலை !

காலம் காலமாக அடிமைத்தனத்தினை பேன முடிகின்றது. ஆனால் ஒரு ஒரு நூற்றாண்டு கூட ஒரு முற்போக்குத் சிந்தனையை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

இதற்கு அரசு ஆணை ஏதேனும் இருக்கின்றதா..??

அப்படி இல்லையென்றால், அண்ணாவின் நூற்றாண்டில் அரசு ஏன் ஒரு ஆணை பிறப்பிக்க கூடாது..?

அண்ணாவின் நூற்றாண்டில் இதனை விட ஏற்ற மரியாதை வேற ஒன்றும் இருக்க முடியாது என்று நினைக்கின்றேன்.

நம்ம குணக்குன்று வினையூக்கியின் சிறுகதை. அவரும் பாரதிராசாவின் பாலுவைத் தான் துணைக்கு அழைக்கிறார். அதையும் ஒரு பார்வை பாருங்க.

70 Comments:

கோவி.கண்ணன் said...

:)

தமிழ் நாட்டில் ஐயர், ஐயங்கார் என்பவர்களை பார்பனர்கள் அல்லது பாப்பான் என்று பாப்பாத்தி என்று அழைப்பார்கள்.

அந்த அம்மா தன் பெயருக்குப் பின்னால் 'அனுசா பாப்பாத்தி' என்று போட்டுக் கொள்ளுமா ?

ராம்ஜி.யாஹூ said...

ஒரு முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதியின் பெயர் ரத்னவேல் பாண்டியன், முன்னால் அமைச்சர் மாவட்ட செயலாளர் பெயர் தங்கப் பாண்டியன், பத்திரிக்கை அதிபர் பெயர் பாலச்சந்திர ஆதித்தன், இப்படி பல பெயர்கள், கருப்பையா மூப்பனார், கரிகொல்ராஜ் நாடார், மாயத் தேவர், கிருஷ்ணா பரயனார்.பசுபதி பாண்டியன், கராத்தே செலவின் நாடார்,

TBCD said...

///ஒரு முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதியின் பெயர் ரத்னவேல் பாண்டியன், முன்னால் அமைச்சர் மாவட்ட செயலாளர் பெயர் தங்கப் பாண்டியன் பத்திரிக்கை அதிபர் பெயர் பாலச்சந்திர ஆதித்தன், இப்படி பல பெயர்கள், கருப்பையா மூப்பனார், கரிகொல்ராஜ் நாடார், மாயத் தேவர், கிருஷ்ணா பரயனார்.பசுபதி பாண்டியன், கராத்தே செலவின் நாடார்///

கொஞ்சம் குழப்பிடீங்க.

பாண்டியன்,ஆதித்தன் சாதிப்பெயரா...?

கராத்தே செல்வின் என்பது தான் பெயர்.

மூப்பனார் என்பது சாதிப் பெயரா தெரியவில்லை. ஆனால்,அவர் மகன் சீ.கே.வாசன் என்று தான் அழைக்கப்படுகிறார்.

இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவதென்னவோ. தொடர் புள்ளி போட்டு நிறுத்தியிருக்கீங்க, மீண்டும் வருவீங்க என்று நினைக்கின்றேன்.

Vijayan said...

thiru.Annadorai avargal thannudaiya peyarudan MUDALIYAR enra vaal serthu kancheepurathil MLA election-il pottiyittar. VIZZY.

TBCD said...

//Vijayan said...

thiru.Annadorai avargal thannudaiya peyarudan MUDALIYAR enra vaal serthu kancheepurathil MLA election-il pottiyittar. VIZZY.
///

இது மலினப்படுத்தும் முயற்சி போல் தோன்றுகிறது.

சி.என்.அண்ணாதுரை என்றே இதுவரை வெளியிடப்பட்ட அஞ்சல் தலை வரை இருக்கின்றது.

வினையூக்கி said...

வடநாட்டில் Second Name ற்கு வட இந்தியர்களைப்போல சாதிப் பெயரைக் கொடுத்து இருந்து இருக்கலாம். நம்ம ஊரில் அப்பா பெயரைக் கொடுப்பார்கள். அனுஷா என்பதை விட அனுஷா ஐயர் எனும்பொழுது it sounds good . :)

தங்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள தெரிந்த தெரியாமாலோ எடுக்கும் முயற்சியாக இருக்கும். :)

ஐயர் , ஐயங்கார் அல்லது பிள்ளை என எங்கேயாவது டைட்டில்களில் வரும் பொழுது ஒரு குட்டி சந்தோசம், அட இந்த ஆண்/பெண்ணிற்கு தமிழ் தெரிந்திருக்குமோ என்று.

இங்கே சுவீடனில் முற்போக்கு சிந்தனையுடைய தெலுங்கு சக மாணவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர் தமிழர்களைப் பற்றி பெருமையாக சொன்ன ஒரு விடயம், இந்த சாதிப் பெயர்களை தன் பெயரின் பின்னுக்குச் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது. நிதர்சனம் என்னவெனில் அடிமனதிற்குள் பெரும்பான்மையோருக்கு மற்றவர்களின் சாதி தெரிந்து கொள்வதில் அலாதியான பிரியம் உண்டு. சொந்த ஊரைக் கேட்பார்கள், கிராமம் கேட்பார்கள், அதிலும் தெரியவில்லை எனில் குல தெய்வம் முப்பாட்டனார் பெயர், மூத்தோர் பெயர்கள் மூலம் எப்படியாவது கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் இப்படிக் கண்டுபிடிப்பது ஒரு ‘ஆர்வம்'(Curiosity) என்ற அளவில் மட்டுமே நின்றுவிடுகிறது. வெறி என்ற அளவில் போவதில்லை. அதுவரை மகிழ்ச்சியே!! தமிழநாட்டை விட்டு வெளியே வந்த பின்னர் 'மொழியை' தன்னுடைய அடையாளமாக்கிக் கொள்வதில் பெரும்பான்மையோர்கள் விரும்புகின்றனர். கடந்த சில வருடங்களில் ஓர்குட்/ஃபேஸ்புக் காலங்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவெனில், மற்றவர்களின் சாதியைத் தெரிந்து கொள்ள அவர்களின் Profile Communities யை ஒரு பார்வை பார்த்தால் போதும். (மையத்தை விட்டு விலகினாலும் , இப்பதிவின் நீட்சியாக எடுத்துக் கொள்ளுங்கள் )

வினையூக்கி said...

”குணக்குன்று” வினையூக்கி வாழ்க, இனி வினையூக்கி சந்ததியினர் குணக்குன்று எனப் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளலாம். :)

TBCD said...

//
ஐயர் , ஐயங்கார் அல்லது பிள்ளை என எங்கேயாவது டைட்டில்களில் வரும் பொழுது ஒரு குட்டி சந்தோசம், அட இந்த ஆண்/பெண்ணிற்கு தமிழ் தெரிந்திருக்குமோ என்று.///

இவைகளை தான் உங்களுக்கு தமிழ் பெயர்களாக தெரிகின்றதா...எ.கொ.வினையூக்கி இது !

தமிழ் பெயர்கள் வைத்தால் தன்னால அது படிக்கும் பொழுது தமிழர் என்று புரியும்.

அனுசா,தினுசா, திரிசா என்று வைத்தால் தான் அது தமிழா,லத்தீனா என்று குழப்பம் வந்து பின்னால் என்ன இருக்கு என்று பார்க்கச் சொல்லும்.

தேன்மொழி ஐயர் என்று எங்காவது பார்த்திருக்கீங்களா..

தேன்மொழி என்று பெயர் படித்தவுடனே தெரிந்துவிடுமே தமிழ்ர் என்று....

வினையூக்கி said...

”நம்ம ஆட்கள்” வலுவாக இருக்கும் இடத்தில் நானும் ”உன் ஆள்” என காட்டிக்கொள்ள எடுக்கும் வழிகளில் இதுவும் ஒன்று. முதல் படத்தில் கௌதம் ஆக இருந்தவர் மின்னலே யை இந்தியில் எடுத்த பொழுது மலையாளிகள் ஆதிக்கம் செலுத்தும் ஊடகத்துறையினரின் ஆதரவுக்க்காக கௌதம் மேனன் என மாறிப்போனார். பின்னர் தமிழிலும் கௌதம் மேனன் பின்னர் கௌதம் வாசுதேவமேனன் என மாற்றிக்கொண்டார். (சென்னையில் இருந்து வரும் ஆங்கில தினசரிகளின் நிருபர்கள் பெரும்பாலோனோர் மலையாளிகள்) தமிழில் பெயரை வைத்து பாடல்களை மட்டும் தமிழில் வைத்து ஆங்கிலப்படங்கள் எடுக்கும் இவரையும் இந்த நேரத்தில் கடிந்து கொள்வது சரியானதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

TBCD said...

வினையூக்கி,

உங்க பூனைக்குட்டி மிகவும் அழகாகவே இருக்கின்றது.

அதை உள்ளேயே வைத்திருக்காமல், விடுதலையுணர்வோடு வெளியே சுற்ற விடுங்களேன்.

வினையூக்கி said...

இது பூனைக்குட்டி இல்லை, புலிக்குட்டி.
பூனைகளுக்கு இருக்கும் திருட்டுத்தனம் புலிகளுக்கு கிடையாது. :).

வேட்டைக்கு மிகவிரைவில் தயாராகும்.

TBCD said...

///
வினையூக்கி said...

இது பூனைக்குட்டி இல்லை, புலிக்குட்டி.
பூனைகளுக்கு இருக்கும் திருட்டுத்தனம் புலிகளுக்கு கிடையாது. :).

வேட்டைக்கு மிகவிரைவில் தயாராகும்.
///

புலி உறுமுது ! புலி உறுமுது !

அ. நம்பி said...

//thiru.Annadorai avargal thannudaiya peyarudan MUDALIYAR enra vaal serthu kancheepurathil MLA election-il pottiyittar. VIZZY.- Vijayan//

//இது மலினப்படுத்தும் முயற்சி போல் தோன்றுகிறது.

சி.என்.அண்ணாதுரை என்றே இதுவரை வெளியிடப்பட்ட அஞ்சல் தலை வரை இருக்கின்றது.- TPCD//

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கை:

Statistical Report on General Election,1957 to The Legislative Assembly of Madras

Election Commission Of India

http://eci.nic.in/StatisticalReports/SE_1957/StatRep_Madras_1957.pdf

Prabhu Rajadurai said...

those who refer themselves with 'pillai' surname in north india are not our saiva..ithyathi ithyathi pillai. They are malayalee pillai for example Rajan Pillai of Brittania Biscuit.

TBCD said...

தகவலுக்கு நன்றி !

அண்ணாதுரை முதலியார் என்றே நீங்கள் சுட்டிய அறிக்கையில்.

பெரியாரும் அதை திடிரென்று முளைத்த வால் என்று கண்டித்துள்ளாராம்.

யானைக்கும் அடி சறுக்கியுள்ளதே !

இருந்தாலும், அண்ணாதுரையின் பதிவு செய்யப்பட்ட பெயர் என்னவென்று அறிய ஆவல்.

/// அ. நம்பி said...
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கை:

Statistical Report on General Election,1957 to The Legislative Assembly of Madras

Election Commission Of India

http://eci.nic.in/StatisticalReports/SE_1957/StatRep_Madras_1957.pdf
///

கணேஷ் சந்திரா said...

Kovi Kannan

Choosing lastname is person / parents right.

If you want name your kid with your colloquial lastname you can do it.

Why spit your venom over nothing ?

T.V.Radhakrishnan said...

ஸ்ரேயா ரெட்டி,லக்ஷ்மி ராய்,நவ்யா நாயர்,சோனியா அகர்வால்..???

SanjaiGandhi said...

//1944ல் அறிஞர் அண்ணா முன்மொழிந்தது தான் இந்த பெயருக்கு பின்னால் இந்த சாதிப்பெயரை நீக்குதல் என்று நினைவு.//

அட, நீங்க பெரியார் படம் பார்க்கலையா? அதுல சாதிப் பெயர் ”இனி” வேண்டாம் என்று தன் பெயரில் உள்ள நாயக்கரை நீக்கிவிட்டு வெறும் ராமசாமி என்று வைத்துக் கொள்வது போல் ஒரு காட்சி வந்ததே. அண்ணா அதற்கு முன் முன்னெடுத்திருக்க வாய்ப்புண்டா அல்லது சினிமாவுக்காக அந்த காட்சி வைத்துக் கொண்டார்களா? புதசெவி.

SanjaiGandhi said...

//குறிப்பாக நான் கேள்விப்பட்டது வரை பிள்ளை, ஐயர், ஐயங்கார் இந்து மூன்று சாதிப்பெயர்களே மிகுந்து, பெருவாரியாக இருக்கின்றது.//

கவுண்டர், முதலியார், செட்டியார் என சாதிப் பெயர் வைத்துள்ள ஆயிரக் கணக்கானவர்களை எனக்குத் தெரியும். எனக்குத் தெரிந்தவரை சாதி வெறி(அனைவரையும் இல்லை) பார்ப்பனர்களை விட சாதி வெறி பிடித்த , தங்களை மேல் சாதிக்காரர்களாக நினைத்து நடந்து கொள்பவர்கள் ஆபத்தானவர்கள். அவர்களை விட்டு ஏந்தான் இந்த ஐயருங்களை மட்டும் பிடிச்சித் தொங்கறிங்களோ?
குறிப்பு : ஞான் பார்ப்பனன் அல்ல. :)

SanjaiGandhi said...

//அனுசா என்பது உங்க பெயர், ஐயர் என்பது நீங்க படிச்சி வாங்கின பட்டமா என்று ஆற்றங்கரையில் வைத்து அவர் கன்னத்தில் சப்பென்று அறைந்து கேட்கும் வண்ணம், யாராவது ஒரு படம் சீக்கிரம் எடுத்தால் தேவலை !//

தாங்கள் நிதி உதவி செய்யும் பட்சத்தில் நான் தயார்.. ஐயர்களை மட்டுமில்லாமல் மற்ற சாதி வெறியர்களையும் அறையலாம்.. நீங்க ரெடியா? :)

மங்களூர் சிவா said...

repeat for sanjai comment

TBCD said...

கணேஷ் சந்திரா said...
///
Kovi Kannan

Choosing lastname is person / parents right.

If you want name your kid with your colloquial lastname you can do it.

Why spit your venom over nothing ?
///

அண்ணாச்சியே பதில் சொல்லுவார். வருகைக்கு நன்றி சந்திரா !

TBCD said...

//
T.V.Radhakrishnan said...

ஸ்ரேயா ரெட்டி,லக்ஷ்மி ராய்,நவ்யா நாயர்,சோனியா அகர்வால்..???
//

இவர்கள் யார் தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களாக இருப்பவர்கள்..???

TBCD said...

///
SanjaiGandhi said...

//1944ல் அறிஞர் அண்ணா முன்மொழிந்தது தான் இந்த பெயருக்கு பின்னால் இந்த சாதிப்பெயரை நீக்குதல் என்று நினைவு.//

அட, நீங்க பெரியார் படம் பார்க்கலையா? அதுல சாதிப் பெயர் ”இனி” வேண்டாம் என்று தன் பெயரில் உள்ள நாயக்கரை நீக்கிவிட்டு வெறும் ராமசாமி என்று வைத்துக் கொள்வது போல் ஒரு காட்சி வந்ததே. அண்ணா அதற்கு முன் முன்னெடுத்திருக்க வாய்ப்புண்டா அல்லது சினிமாவுக்காக அந்த காட்சி வைத்துக் கொண்டார்களா? புதசெவி.

///

நான் படித்த வரை அண்ணா முன்மொழிந்த தீர்மானம். அதற்கு முன்னரே பெரியார் தன் வாழ்வில் செயல்படுத்தியிருக்கலாம். ஆனால் அண்ணா சொன்னது தமிழ்நாட்டின் மக்களுக்கு,கழகத்தினருக்கு.

இறுதியாக, யார் சொன்னால்,எப்போது சொன்னால் என்ன, நல்ல விடயத்தை எடுத்துக்கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து

SanjaiGandhi said...

நேக்கு ஒரு சந்தேகம்ணா. சாதியை பேருக்கு பின்னாடி சேர்த்துக்கிறது சாதி வெறி அல்லது பற்று தான் என்பதில் ஐயமில்லை.. அதே போல் மத ரீதியான பெயர்களை மட்டுமே வச்சிக்கிறவங்களையும் மத வெறியர்கள்னு சொல்லலாம் இல்லையா? இந்து மதத்தில் பிறந்தவர் குரானிலோ, பைபிளிலோ வரும் கதாப் பாத்திரங்களின் பெயரை வைத்துக் கொள்வதில்லை. முஸ்லிம், கிருஸ்துவர்கள் யாரும் கீதை அல்லது ராமாயணம் , மகாபாரதத்தில் வரும் கற்பனைப் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. இதெல்லாம் கூட ஒருவித வெறி மாதிரி தானுங்களே.. அதையும் சாடலாமே..

(கோவி)கண்ணன் அல்லது அபுபக்கர் அல்லது பீட்டர்சன் தங்கள் மகனுக்கு முகமது வில்லியம் ராமசாமின்னு பேர் வைப்பார்களா? அல்லது சஞ்சய்காந்தி என்று எந்த மத புருடா காவியங்களிலும் இல்லாத, புது காவியம் படைக்கப் போகும் தகடூர் நாயகன்(ஹிஹி) பெயர் வைப்பார்களா?: ))

TBCD said...

/// SanjaiGandhi said...

//குறிப்பாக நான் கேள்விப்பட்டது வரை பிள்ளை, ஐயர், ஐயங்கார் இந்து மூன்று சாதிப்பெயர்களே மிகுந்து, பெருவாரியாக இருக்கின்றது.//

கவுண்டர், முதலியார், செட்டியார் என சாதிப் பெயர் வைத்துள்ள ஆயிரக் கணக்கானவர்களை எனக்குத் தெரியும். எனக்குத் தெரிந்தவரை சாதி வெறி(அனைவரையும் இல்லை) பார்ப்பனர்களை விட சாதி வெறி பிடித்த , தங்களை மேல் சாதிக்காரர்களாக நினைத்து நடந்து கொள்பவர்கள் ஆபத்தானவர்கள். அவர்களை விட்டு ஏந்தான் இந்த ஐயருங்களை மட்டும் பிடிச்சித் தொங்கறிங்களோ?
குறிப்பு : ஞான் பார்ப்பனன் அல்ல. :)

///

100% சதவிகிதம் பெயருக்குப் பின்னால் சாதி ஒட்டிக்கொண்டியிருந்தது 50~60 ஆண்டுகளுக்கு முன்னால். அதுவும் இடைநிலை சாதிகளுக்கும், மேல் சாதிகளுக்கும், ஆதிக்க சாதிகளுக்கும்மே இந்த உரிமை.

அதனை நீக்கி, அனைவருக்கும் பெயர் மட்டும் போது என்று முன்மொழிந்தது.

நான் படித்த பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி, இந்த சாதிப்பெயரை பின்னால் வைத்தவரை நான் கண்டதில்லை.

படித்த தலைமுறையினர் அவற்றை 1970களில் விட்டுவிட்டார்கள், அவர்களுது பிள்ளைகளும் அப்படியே தொடர்ந்திருக்க வேண்டும்.

பிற்போக்குத்தனமாக சாதியயை பேருக்குப் பின்னால், வைத்துக்கொண்டியிருப்பவர்கள், தங்களுக்கு நிறைய தெரியும் என்றால், தயவு செய்து அவர்கள் செய்யும் தப்பை எடுத்துக்கூறுங்கள்.

ஆதிக்க சாதிக்காரர்களைப் பார்த்து செல்லம் ஐ லவ் யூ என்றா இந்த பதிவில் சொல்லியிருக்கேன். சொல்ல வந்ததை விட்டுவிட்டு, இதை ஒரு பகுதியினருக்கு மட்டும் எதிரானதாக திரிக்க வேண்டாம். வலிந்து இந்தக் கட்டுப்பாட்டை சிதைக்க பார்க்கும் இந்த மண்ணின் புதல்வி நோக்கி தான் என் கேள்வி.

தமிழ்திரையுலகில் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் இப்படி சாதிப்பெயருடன் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியும்மா...?

நீர் பார்ப்பனர் இல்லை என்று எதை வைத்து சொன்னீர்கள். நீங்கள் பார்ப்பனீயத்தை கடைப்பிடித்தார் நீரும் பார்ப்பனரே !

TBCD said...

///
SanjaiGandhi said...

//அனுசா என்பது உங்க பெயர், ஐயர் என்பது நீங்க படிச்சி வாங்கின பட்டமா என்று ஆற்றங்கரையில் வைத்து அவர் கன்னத்தில் சப்பென்று அறைந்து கேட்கும் வண்ணம், யாராவது ஒரு படம் சீக்கிரம் எடுத்தால் தேவலை !//

தாங்கள் நிதி உதவி செய்யும் பட்சத்தில் நான் தயார்.. ஐயர்களை மட்டுமில்லாமல் மற்ற சாதி வெறியர்களையும் அறையலாம்.. நீங்க ரெடியா? :
////

சஞ்செய் பதிவில் என்ன சொல்ல வருகிறேன் என்று எந்தக் காலத்தில் புரிந்து பின்னுட்டமிடுவீர்கள் என்று தெரிந்துக்கொள்ள ஆசையாக இருக்கின்றேன்.

TBCD said...

///SanjaiGandhi said...

நேக்கு ஒரு சந்தேகம்ணா. சாதியை பேருக்கு பின்னாடி சேர்த்துக்கிறது சாதி வெறி அல்லது பற்று தான் என்பதில் ஐயமில்லை.. அதே போல் மத ரீதியான பெயர்களை மட்டுமே வச்சிக்கிறவங்களையும் மத வெறியர்கள்னு சொல்லலாம் இல்லையா? இந்து மதத்தில் பிறந்தவர் குரானிலோ, பைபிளிலோ வரும் கதாப் பாத்திரங்களின் பெயரை வைத்துக் கொள்வதில்லை. முஸ்லிம், கிருஸ்துவர்கள் யாரும் கீதை அல்லது ராமாயணம் , மகாபாரதத்தில் வரும் கற்பனைப் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. இதெல்லாம் கூட ஒருவித வெறி மாதிரி தானுங்களே.. அதையும் சாடலாமே..
///

லாமே..மதச்சார்பற்ற கட்சி நடத்தும் ராகுலிடம் சொல்லி தீர்மானம் இயற்ற்ச் சொல்லுங்கள். நான் இங்கியிருந்தே கைத் தட்டுகிறேன்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்.........

SanjaiGandhi said...

பதிவுக்குத் தொடர்பான பின்னூட்டம் மட்டும் தான் அனுமதிப்பீர்கள் என்றால் என்னுடைய பின்னூட்டங்களை அழிச்சிடுங்க. பதிவு மற்றும் பின்னூட்டங்கள் சார்ந்து தான் நான் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். மிகச் சரியாக பதிவை பற்றி மட்டுமில்லை. மேலும் இதை சாதி/மத ரீதியிலான சில சந்தேகங்கள் தீர்க்கும் விவாத களமாகவும் மாற்ற நினைத்தேன். உங்கள் பதிவுல் என்ன இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை உங்களுக்கு மட்டுமே என்பதால், என் பின்னூட்டங்கள் தேவை இல்லாதவைகளாக இருப்பின் அழித்து விடவும். நன்றி. வணக்கம்,

ILA(@)இளா said...

பேருனாலதான் உங்க ஊர்ல குண்டு வெடிச்சதுன்னு சொல்றத புரிஞ்சிக்க முடியுதுங்க. அவசியமான பதிவு.. அவுங்க பேர மாத்தினவுடனே நம்ம நாட்டுல மும்மாறி மழை பெய்யும்னு சொல்ற உங்க ஐதீகத்துக்கு வாழ்த்துக்கள்!

SanjaiGandhi said...

//லாமே..மதச்சார்பற்ற கட்சி நடத்தும் ராகுலிடம் சொல்லி தீர்மானம் இயற்ற்ச் சொல்லுங்கள். நான் இங்கியிருந்தே கைத் தட்டுகிறேன்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்......... //

நமக்குள் நடக்கும் உரையாடலுக்கு நீங்க ராகுலை( நம் உரையாடலுக்கு தொடர்பில்லாத) இழுப்பது மட்டும் நியாயமோ..

நீங்க சொன்ன பழமொழியை படிக்கவும்....

ILA(@)இளா said...

பேரு மேட்டருக்கே வருவோம்.. கிரிஸ்துவர்கள் இனிமே கிரிஸ்துவ பேர் வெச்சிக்க கூடாது, முஸ்லிம்கள் முஸ்லிம் பேர வெச்சுக்க கூடாது. இந்துக்களும்தான். பரவாயில்லீங்களா? இது செட் ஆவுமா.அப்படி வெச்சிகிட்டா மதம் சார்ந்த பேர் இருக்காதே.. ராமசாமி(ராமன் பேர் வருவதால) இந்துத்துவா கட்டுவீங்களா? SMகிருஷ்ணா இவுங்களுக்கு எல்லாம் உங்க பதிவு பதில் சொல்லுமா?

TBCD said...

///
SanjaiGandhi said...

பதிவுக்குத் தொடர்பான பின்னூட்டம் மட்டும் தான் அனுமதிப்பீர்கள் என்றால் என்னுடைய பின்னூட்டங்களை அழிச்சிடுங்க.
///
யோவ் நான் சொல்ல வர்றதையெ நீ புரிஞ்சக்கலை என்று சொன்னால், மீண்டும் மீண்டும் அதே மாதிரி புரியாமலே பேசுறியே.

///பதிவு மற்றும் பின்னூட்டங்கள் சார்ந்து தான் நான் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். மிகச் சரியாக பதிவை பற்றி மட்டுமில்லை. மேலும் இதை சாதி/மத ரீதியிலான சில சந்தேகங்கள் தீர்க்கும் விவாத களமாகவும் மாற்ற நினைத்தேன். ////

ஆரோக்கியமான விவாதத்திற்கு நான் எதிரி இல்லீங்க.

TBCD said...

////ILA(@)இளா said...

பேருனாலதான் உங்க ஊர்ல குண்டு வெடிச்சதுன்னு சொல்றத புரிஞ்சிக்க முடியுதுங்க.
/////
உங்க உன்னை போல் ஒருவன் கட்டுடைத்தலின் விளைவு. பதிவில் இல்லாததை எல்லாம் சொல்ல வைக்கின்றதோ.

/// அவசியமான பதிவு.. ////

நன்றி

////அவுங்க பேர மாத்தினவுடனே நம்ம நாட்டுல மும்மாறி மழை பெய்யும்னு சொல்ற உங்க ஐதீகத்துக்கு வாழ்த்துக்கள்!///

அவங்க பேரை அப்படியே வைத்ததனால், தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுதுங்களா..?

சாலையின் ஓரத்தில் நடந்தால் விபத்து நடக்காது என்பது விதி. அதை மீறி நடந்தால் ஆபத்து என்று தெரிந்தே மீறி நடப்பவர்களைக் கண்டு, அதைப் போல் யாரும் செய்யாதீர்கள், என்று தெளிவுப்படுத்தும் நோக்கில் தான் இந்தப் பதிவு !

அடுத்த தலைமுறைகளும் பெயருடன் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஆசையில், டிபிசிடி

TBCD said...

///
ILA(@)இளா said...

பேரு மேட்டருக்கே வருவோம்.. கிரிஸ்துவர்கள் இனிமே கிரிஸ்துவ பேர் வெச்சிக்க கூடாது, முஸ்லிம்கள் முஸ்லிம் பேர வெச்சுக்க கூடாது. இந்துக்களும்தான். பரவாயில்லீங்களா? இது செட் ஆவுமா.அப்படி வெச்சிகிட்டா மதம் சார்ந்த பேர் இருக்காதே.. ராமசாமி(ராமன் பேர் வருவதால) இந்துத்துவா கட்டுவீங்களா? SMகிருஷ்ணா இவுங்களுக்கு எல்லாம் உங்க பதிவு பதில் சொல்லுமா?
///

1.இந்த சாதி தாழ்ந்தது, இந்த சாதி உயர்ந்தது என்ற எண்ணம் மக்களிடையெ இன்னும் இருக்கின்றது.
2.ஒருவரை அவருடைய சாதியயை வைத்து மதிப்பீடு செய்வதற்கு இந்த பெயரின் பின்னால் இருக்கும் சாதி வழி செய்துக்கொடுக்கும்.
3.சிலர் ஆதிக்க சாதியில் பிறந்ததால் பெருமையாக அதனை சொல்ல விளைவார்கள் (சாதி தட்டில் இடைநிலையில் இருந்தாலும்). அந்த சாதிப் பெருமையுணர்ச்சி குறைய இது உதவும்
4.தாழ்த்தப்பட்டவர்களின் சாதி ஆதிக்க சாதி, உயர் சாதி மக்கள் போல் அல்லாமல், சாதிப் பெயரே ஒரு இழிவுச்சொல் போல் பயன்படுத்தப்பட்டது. ஒருவருக்கு உயர்வாகவும், மற்றொருவர்களுக்கு இகழ்வாகவும் இருப்பதனால்,சமத்தவும் நிலைக்க, இந்த சாதிப்பெயர் நீக்குதல் நடைப்பெற்றது.

இன்றைய நிலையில் ஒரு மதம் மற்றொரு மதத்தை கீழான மதமாக நினைத்து வன்முறை செய்ய ஆரம்பித்தால், மக்களின் மனதில் நல்ல எண்ணம் வளர நீங்கள் சொல்வதுப் போல், ஐடியா விளம்பரத்தில் வருமே, அதுப் போல் கூட முயற்சிக்கலாம்.

ஜோ/Joe said...

மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் முன்பு வரை யுகேந்திரன் -ன்னு மட்டும் தான் சொல்லிடிருந்தான் ..விஜய் டீவி-ல ஒரு நிகழ்ச்சியில வந்தவுடன அவன் சொல்லுறான் ..யுகேந்திரன் வாசுதேவன் நாயர் .அவனுக்கு ஏன் இந்த கொலைவெறி?

ILA(@)இளா said...

//மதத்தை கீழான/ ஆதிக்க சக்தி//

நான் மதங்களை எதிர்கிறேன்.. நீங்க ஐயருங்கள மட்டும் எதிர்கிறீங்கன்னு வெச்சுக்கலாமா? No more comments

TBCD said...

///
ILA(@)இளா said...

//மதத்தை கீழான/ ஆதிக்க சக்தி//

நான் மதங்களை எதிர்கிறேன்.. நீங்க ஐயருங்கள மட்டும் எதிர்கிறீங்கன்னு வெச்சுக்கலாமா? No more comments
///

நீங்கள் சார்ந்திருக்கும் மதம் தவிர அனைத்து மதத்தையும் எதிர்க்கின்றீர்களோ..?

என் பதிவின் நோக்கம் என்னவென்று பின்னுட்டத்திலும் சொல்லியாச்சு.

உங்கள் பேரின் பின்னால் சர்நேமாக சாதி இன்று இல்லாதிருந்தால், அதற்கு காரணம் யார் என்னவென்று யோசியுங்கள்.

சாதி தான் இருக்கின்றது என்றால், அதை ஏன் இன்னும் கட்டி சுமக்கின்றீர்கள் என்று யோசியுங்கள்.

மதங்கள் மீது எனக்கு தனிப்பட்ட விமர்சனங்கள் உண்டு. அவைகளும் இந்த பதிவுலேயே இருக்கின்றது.

நான் ஐயரை மட்டுமே எதிர்க்கிறேன் என்று அவசரப்பட்டு சொல்லிட்டீங்களே. ஐயங்காரை விட்டுட்டீங்களே இளா. தாங்கிப்பிடிக்க நீங்க இருக்கும் போது எதிர்க்க டிபிசிடி இருக்ககூடாதா..??

வேறந்தப் படத்திற்கும் இசை திறனாய்வு செய்யாத நீங்கள் விசய் படத்திற்கு மட்டுமே செய்தீர்கள் (அந்த டேக்கில் வேற இல்லை) எனவே விசயின் மீது உங்களுக்கு வெறுப்பு என்று சொல்லலாமா..???

No more comments ! only Judgements ! என்று சொல்ல வந்தீங்க போலிருக்கு. இந்த Judgement வியாதி எல்லாருக்கும் இருக்கு. எனவே/எனிவே நன்றி !

ILA(@)இளா said...

//தாங்கிப்பிடிக்க//
கொட்டய புடிச்சிகிட்டே இருக்கேன் சொல்றீங்க போல.அதுக்குமேல கூட வெச்சுக்கலாம். உங்க இஷ்டம். உங்க நாகரிகம் பிடிச்சிருக்கு. Non Sense

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

TBCD said...
//
T.V.Radhakrishnan said...

ஸ்ரேயா ரெட்டி,லக்ஷ்மி ராய்,நவ்யா நாயர்,சோனியா அகர்வால்..???
//

இவர்கள் யார் தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களாக இருப்பவர்கள்..???
//

பிரியாணியை நிறைவாகப் போட்டு குடம், மூக்குத்தி வேட்டி சேலை, கொஞ்சம் பணம், தண்ணி இதெல்லாம் கொடுத்தா இவங்கல்லாம் அடுத்த தமிழக முதல்வர், இனமானத் தலைவிகள்! தன்மானத் தமிழர்கள்!

விவரம் தெரியாம பேஸூறேள்!

:)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோவி.கண்ணன் said...
:)

தமிழ் நாட்டில் ஐயர், ஐயங்கார் என்பவர்களை பார்பனர்கள் அல்லது பாப்பான் என்று பாப்பாத்தி என்று அழைப்பார்கள்.

அந்த அம்மா தன் பெயருக்குப் பின்னால் 'அனுசா பாப்பாத்தி' என்று போட்டுக் கொள்ளுமா ?//

அதானே!

இது என்னா அனியாயமா இருக்கு!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

Prabhu Rajadurai said...
those who refer themselves with 'pillai' surname in north india are not our saiva..ithyathi ithyathi pillai. They are malayalee pillai for example Rajan Pillai of Brittania Biscuit.
//
இது சரி!

பாலகிருஷ்ணன் பிள்ளை கூட மலயாளிதான்! :)

TBCD said...

///
ILA(@)இளா said...

//தாங்கிப்பிடிக்க//
கொட்டய புடிச்சிகிட்டே இருக்கேன் சொல்றீங்க போல.
///

எனக்குப் புரியலை ! தாங்கிப்பிடிக்கிறீங்க என்பதில் என்ன ஆபாசம் கண்டீங்க.

/// உங்க நாகரிகம் பிடிச்சிருக்கு. Non Sense
///

வருத்தப்படத் தான் முடியும் !

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

SanjaiGandhi said...
//குறிப்பாக நான் கேள்விப்பட்டது வரை பிள்ளை, ஐயர், ஐயங்கார் இந்து மூன்று சாதிப்பெயர்களே மிகுந்து, பெருவாரியாக இருக்கின்றது.//

கவுண்டர், முதலியார், செட்டியார் என சாதிப் பெயர் வைத்துள்ள ஆயிரக் கணக்கானவர்களை எனக்குத் தெரியும். எனக்குத் தெரிந்தவரை சாதி வெறி(அனைவரையும் இல்லை) பார்ப்பனர்களை விட சாதி வெறி பிடித்த , தங்களை மேல் சாதிக்காரர்களாக நினைத்து நடந்து கொள்பவர்கள் ஆபத்தானவர்கள். அவர்களை விட்டு ஏந்தான் இந்த ஐயருங்களை மட்டும் பிடிச்சித் தொங்கறிங்களோ?
குறிப்பு : ஞான் பார்ப்பனன் அல்ல. :)//

ரசிக்கத் தக்க சுய உருதி மொழி!

இதில் என்ன கொடுமை என்றால் பலர் தங்களது சாதியை சாடுவது, இப்போதெல்லாம் பாஷனாக இருக்கிறது.

:)

இதை ஒரு தீய பதிவாக வகைப்படுத்துகிறேன்! :P

ஆம்! சாதீய பதிவாக! :)

கோவி.கண்ணன் said...

//கணேஷ் சந்திரா said...
///
Kovi Kannan

Choosing lastname is person / parents right.

If you want name your kid with your colloquial lastname you can do it.

Why spit your venom over nothing ?
//

பாப்பாத்தி என்று நான் குறிப்பிட்டு இங்கே சொல்லி இருப்பது கேவலாமாகத் தெரிந்திருந்தால் ஐயர் என்பது கேவலாமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

பார்பன விதவைகளை முக்காடு போட்டு, சாமியாரிணியாக காவி உடையுடன் மொட்டையடித்து மூலையில் உட்கார வைத்த பார்பன சமூகம் எந்த காலத்தில் தன் குலப் பெண்டீருக்கு ஐயங்கார், ஐயர் பட்டமெல்லாம் கொடுத்து இருந்தது. எதாவது உதாரணம் இருந்தால் தந்துவிட்டு பேசவும்.

படித்த பார்பனப் பெண்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட்டு பார்பன ஆண்களின் சாதி வெறித் தீ அணையாமல் இருப்பதற்கு துணைப் போவது தவறு என்பது கூட விளங்கவில்லையா ?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஜோ/Joe said...
மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் முன்பு வரை யுகேந்திரன் -ன்னு மட்டும் தான் சொல்லிடிருந்தான் ..விஜய் டீவி-ல ஒரு நிகழ்ச்சியில வந்தவுடன அவன் சொல்லுறான் ..யுகேந்திரன் வாசுதேவன் நாயர் .அவனுக்கு ஏன் இந்த கொலைவெறி?
//

அடப்பாவியளா!?

அவன் அப்பனே நாயர்ன்னு இதுவரை யாருக்கும் தெரியாது!

அவர் பெயருக்குப் பின்னால் இதுவரை போட்டுக் கொண்டதில்லை.

ஒரு வேளை தமிழ் திரைப்படங்களில் இவனுக்கு வாய்ப்பு கிட்டாமல் இருந்திருக்கலாம்.

அதனால் தன்னை ஒரு மலயாளி என்று காண்பித்துக் கொள்ள முயன்றிருக்கலாம்!

அவருக்கு கண்டிப்பாக தமிழ் திரையுலகில் நிறைய வாய்ப்புகள் கிட்டும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

SanjaiGandhi said...

//ரசிக்கத் தக்க சுய உருதி மொழி!

இதில் என்ன கொடுமை என்றால் பலர் தங்களது சாதியை சாடுவது, இப்போதெல்லாம் பாஷனாக இருக்கிறது.

:)

இதை ஒரு தீய பதிவாக வகைப்படுத்துகிறேன்! :P

ஆம்! சாதீய பதிவாக! :) //

கண்டுபிடிச்சிட்டாருய்யா கொலம்பசு..:))

ஜோதிசார், நல்லா படியும். அதுல 3 சாதியை குறிப்பிட்டிருக்கிறேன். ஆகவே நீங்கள் சொன்ன பலரில் நான் இருக்க வாய்ப்பில்லை என கருதுகிறேன்.

உங்கள் மதமான இந்து மதத்தை எதிர்ப்பதை மட்டுமே நீங்க பாஷனாக கொண்டிருப்பதால், எல்லோரையும் உங்களைப் போலே எண்ணிக் கொண்டிருக்கும் வியாதிக்கு நல்ல மருந்து எடுத்துக்கோங்கோ.. முதலில் உங்கள் மனதில் உள்ள.....

ஏன் ஐயா, கொலம்பசை இங்க இழுக்கிரியள்!?

அந்தாள் பாவம் அலையாய் அலைந்து நாடுகளைக் கண்டு பிடித்துக் கொடுத்தான்.

ஆனா, நாம என்ன பண்றோம்.

சாதிகளை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் அட்டவனை போட்டு கோடு நம்பர் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மை தாணுங்ளே ஐயா!

நன்றிங்கோ, நகைச்சுவையைக் கூட மிகவும் கடினமானதாக எடுத்துக் கொண்டதற்கு!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் மதமான இந்து மதத்தை எதிர்ப்பதை மட்டுமே நீங்க பாஷனாக கொண்டிருப்பதால், எல்லோரையும் உங்களைப் போலே எண்ணிக் கொண்டிருக்கும் வியாதிக்கு நல்ல மருந்து எடுத்துக்கோங்கோ.. முதலில் உங்கள் மனதில் உள்ள.....
//

எனக்கு எந்த மதத்தின் மீதும் விருப்போ அல்லது வெறுப்போ கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாமல் எழுதியதாக எடுத்துக்கொண்டேன்!

SanjaiGandhi said...

//எனக்கு எந்த மதத்தின் மீதும் விருப்போ அல்லது வெறுப்போ கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாமல் எழுதியதாக எடுத்துக்கொண்டேன்!//

நிஜமாகவே நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன். :)

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//. சுயமரியாதை உணர்வும், பகுத்தறியும் மனப் பான்மையும் பாமரனிடம்கூட பட்டொளி வீசுகிறது.//

ஹிஹி காமடி...

// அதுவே தமிழகத்தை `தாண்டினால் அரசியல் தலைவர்கள் முதல் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் வரை இன்றைக்கும் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்தே அமைத்துக்
கொள்கின்றனர்"//

இது சர்வ நிச்சய உண்மை. நான் பல முறை நினைத்து பார்த்து உண்டு..

இது பெரியாரின் தாக்கமா? இந்தியாவில் பிற மாநிலங்களில் உள்ள அளவு தான் தமிழகத்தில் ஜாதி வெறி (பீகார், உ.பி போன்றவைகள் விட்டு விடுவோம்) உள்ளதென நினக்கிறேன்.

யாராவது சிறிதளவில் விளக்குங்களேன்..

மணிகண்டன் said...

நல்ல பதிவு TBCD. குமுதம் டைப் தலைப்பு, எழுத்து பிழைகளுடன் :)-

தமிழ்நாட்டில் உள்ள சூழல் போல் அனைத்து இடங்களிலும் வந்தால் பெயரளவில் ஜாதிகள் ஒழியும்.

ராம்ஜி.யாஹூ said...

நான் சொல்ல வருவது அனுஷா அய்யர் போல சாதி பெயர் வைத்துள்ள எல்லாரும் ஆதிக்க வெறியர்கள் தான்,

உதாரணம்: கருப்பையா மூப்பனார், ரத்னவேல் பாண்டியன் (தேவர்), கருப்பசாமி பாண்டியன்(தேவர், நெல்லை மாவட்ட தி மு க செயலர்), மூக்கையா தேவர் (தேனீ மாவட்ட தி மு க செயலர்). ராமசாமி உடையார், , கிருஷ்ணா பரயனார், குருஸ் பெர்னாண்டோ, லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங்க் யாதவ், மன்மோகன் சிங்க், ஹர பஜன் சிங், ஜான் பாண்டியன் (தலித்), பசுபதி பாண்டியன் (தலித்), ஸ்ரீதர் வாண்டையார்,
சிவந்தி ஆதித்தன் (நாடார்), பால சந்திர ஆதித்தன், danushkodi aaditthan, கரிக்கோல் ராஜ் நாடர், எஸ் எஸ் மணி நாடார் (நாங்குநேரி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்).

since you do not live in Tamilnadu I think u may not know the ground level reality.

TBCD said...

///
மணிகண்டன் said...

நல்ல பதிவு TBCD. குமுதம் டைப் தலைப்பு, எழுத்து பிழைகளுடன் :)-
///

நன்றி.
நண்பரொருவர் திருத்தம் சொல்லி திருத்தும் முன் படித்திருந்தால் அடிக்க வந்திருப்பீர்கள். :)

///தமிழ்நாட்டில் உள்ள சூழல் போல் அனைத்து இடங்களிலும் வந்தால் பெயரளவில் ஜாதிகள் ஒழியும்
///

உண்மை தான் !

புருனோ Bruno said...

கருவாடு இடுகை !!!!

TBCD said...

/// ராம்ஜி.யாஹூ said...

நான் சொல்ல வருவது அனுஷா அய்யர் போல சாதி பெயர் வைத்துள்ள எல்லாரும் ஆதிக்க வெறியர்கள் தான்,
///

கருப்பையா மூப்பனார் - மூப்பனார் சாதியா..??/
ரத்னவேல் பாண்டியன்- இந்த பெயரில் சாதி இல்லை..நீங்க கோர்த்துவிடுவதில் தான் அவர் சாதி எனக்கு தெரியும்.
கருப்பசாமி பாண்டியன்- இந்தப் பெயரிலும் சாதி இல்லை.
மூக்கையா தேவர்- இது சாதிப்பெயர் தான்
ராமசாமி உடையார்- இது சாதிப்பெயர் தான்
கிருஷ்ணா பரயனார் - இது சாதிப்பெயரா தெரியவில்லை.

குருஸ் பெர்னாண்டோ- இதில் சாதிப்பெயரில்லை.

லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங்க் யாதவ், மன்மோகன் சிங்க், ஹர பஜன் சிங்- இவர்கள் தமிழர்கள் அல்ல, தமிழ்நாட்டிலும் பிறக்க வில்லை

ஜான் பாண்டியன் - இதில் சாதிப்பெயரில்லை
பசுபதி பாண்டியன் - இதிலும் சாதிப்பெயரில்லை
ஸ்ரீதர் வாண்டையார்- வாண்டையார் சாதிப்பெயரா பட்டப்பெயரா தெரியவில்லை
பால சந்திர ஆதித்தன், danushkodi aaditthan, சிவந்தி ஆதித்தன் - இதில் சாதிப்பெயரில்லை
கரிக்கோல் ராஜ் நாடர், எஸ் எஸ் மணி நாடார் - இதில் சாதிப்பெயர் இருக்கின்றது.

/// since you do not live in Tamilnadu I think u may not know the ground level reality.
///

இருக்கலாம். ஆனால்,நான் கல்வி கற்றதுவரை தமிழ்நாட்டில் தான் இருந்தேன். இந்த தலைமுறையில் சாதிப்பெயரை பின்னால் சேர்த்ததாக தெரியவில்லை.

இதில் பலர் சாதி நீங்கள் சொல்லித் தான் தெரிந்தது..அது அவசியமில்லையென்றாலும்.

அந்த அனாவசிய தகவல் எதற்கு என்று தான் பெயருக்குப் பின்னால் சாதி தேவையில்லை என்று சொல்லுகிறார்கள்.

பெயருக்கு பின்னால் யாரு சாதி வைத்திருந்தாலும், அது நீங்க படிச்சி வாங்கின பட்டமா என்று கேட்கலாம். கேட்கனும்..!

Prabhu Rajadurai said...

"இந்து மதத்தில் பிறந்தவர் குரானிலோ, பைபிளிலோ வரும் கதாப் பாத்திரங்களின் பெயரை வைத்துக் கொள்வதில்லை. முஸ்லிம், கிருஸ்துவர்கள் யாரும் கீதை அல்லது ராமாயணம் , மகாபாரதத்தில் வரும் கற்பனைப் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. இதெல்லாம் கூட ஒருவித வெறி மாதிரி தானுங்களே.. அதையும் சாடலாமே.."

My Senior Advocate, hailing from a staunch Christian locality, baptized his two daughters as Gayathri and Savithri

In Tiruneveli District, the name Sundar Singh or Raja Singh are common among Christians. Sadhu Sundar Singh, Sikh converted to Christianity was preached in Tirunelveli District and was loved by the masses.

Hindu's name their children as Stalin or Kennedy

My father's name is Gandhiraj and I am known as Prabhu Rajadurai and what could be my religion?

Most North Indian Surnames are not caste names...Buta Singh is a Dalit, Narasimha Rao is a brahmin and Bima Rao is a Dalit

TBCD said...

// Prabhu Rajadurai said...

those who refer themselves with 'pillai' surname in north india are not our saiva..ithyathi ithyathi pillai. They are malayalee pillai for example Rajan Pillai of Brittania Biscuit.//

நான் கூட நம்ம எம்.ஆர்.ராதா படத்திலே வருமே அந்த பிள்ளைவாள் என்று நினைத்துவிட்டேன். தகவலுக்கு நன்றி !

TBCD said...

///
ஜோ/Joe said...

மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் முன்பு வரை யுகேந்திரன் -ன்னு மட்டும் தான் சொல்லிடிருந்தான் ..விஜய் டீவி-ல ஒரு நிகழ்ச்சியில வந்தவுடன அவன் சொல்லுறான் ..யுகேந்திரன் வாசுதேவன் நாயர் .அவனுக்கு ஏன் இந்த கொலைவெறி?
///

விசய் தொலைக்காட்சியில் பல்வேறு விதமாக வட இந்திய நிகழ்ச்சிகளை அரங்கேற்ற முயற்சித்தது. அதுப் போல இதுவும் இருக்குமோ...??

யுகேந்திரன் சாதிப்பெயர் வாய்ப்பு பெற்று தருமென்று எண்ணினாரோ என்னவோ..??

கண்டிக்கத்தக்கது !

TBCD said...

///
மங்களூர் சிவா said...

repeat for sanjai comment

///

மங்களூராரே, சஞ்செய் கருத்துக்கு பின்னுட்டம் போட்டாச்சி..!

TBCD said...

///
அத்திவெட்டி ஜோதிபாரதி said...

TBCD said...
//
T.V.Radhakrishnan said...

ஸ்ரேயா ரெட்டி,லக்ஷ்மி ராய்,நவ்யா நாயர்,சோனியா அகர்வால்..???
//

இவர்கள் யார் தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களாக இருப்பவர்கள்..???
//

பிரியாணியை நிறைவாகப் போட்டு குடம், மூக்குத்தி வேட்டி சேலை, கொஞ்சம் பணம், தண்ணி இதெல்லாம் கொடுத்தா இவங்கல்லாம் அடுத்த தமிழக முதல்வர், இனமானத் தலைவிகள்! தன்மானத் தமிழர்கள்!

விவரம் தெரியாம பேஸூறேள்!

:)
///

கொள்ளிமலை குப்பு @ அத்திவெட்டி சோதிபாரதி,

சரவெடி பட்டாசிற்கு நன்றி !

TBCD said...

///
பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//. சுயமரியாதை உணர்வும், பகுத்தறியும் மனப் பான்மையும் பாமரனிடம்கூட பட்டொளி வீசுகிறது.//

ஹிஹி காமடி...

///

காமெடியாகத்தான் இருக்கும். தமிழகத்தையும் வடக்கேயும் கொஞ்சம் ஒப்பிட்டு நோக்குங்கள் உண்மை புரியும் !

/// இது பெரியாரின் தாக்கமா? இந்தியாவில் பிற மாநிலங்களில் உள்ள அளவு தான் தமிழகத்தில் ஜாதி வெறி (பீகார், உ.பி போன்றவைகள் விட்டு விடுவோம்) உள்ளதென நினக்கிறேன்.
///

ஒப்பிட்டு யாரும் எழுதியதாக நினைவில்லை. இதில் அதிகம்,குறைவு என்று ஒன்றுமில்லை. ஒன்று நடந்தாலும் குற்றம் குற்றமே !

/// யாராவது சிறிதளவில் விளக்குங்களேன்..
///

ஆமாம்..விளக்குங்களேன்

TBCD said...

//
புருனோ Bruno said...

கருவாடு இடுகை !!!!
//

மருத்துவரே தங்கள் சிலேடையயை ரசித்தேன் !

TBCD said...

///
Prabhu Rajadurai said...

Most North Indian Surnames are not caste names...Buta Singh is a Dalit, ///

இது ஒரு நகைமுரண் !

சீக்கிய இனமே/மதமே அனைவரும் ஒன்று. சாதிப்பிரிவினை இருக்கலாகது என்று ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால், அதிலும் சாதி இருக்கின்றது. ஆனால்,அது சிங் என்ற பெயரில் தெரியாது.

//Narasimha Rao is a brahmin and Bima Rao is a Dalit //

ராவ் என்பது பிராமன சர் நேம் தான், ஆனால் அம்பேத்கார் பெயரில் வருகின்ற சர் நேம் வேறு, ராவ் என்பது பெயரில் வருகின்றது. நம்ம சிவாசி ராவ் கெய்க்வாட். இதில் கெய்க்வாட் என்பது சர்நேம்.

வடநாட்டில் உள்ள சர்நேம்கள் சாதியின் ஒரு குறியீடே. இதுக்குறித்து விரிவாக படிக்கனும்/எழுதனும்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பிரபு ராசதுரை !

SanjaiGandhi said...

//பெயருக்கு பின்னால் யாரு சாதி வைத்திருந்தாலும், அது நீங்க படிச்சி வாங்கின பட்டமா என்று கேட்கலாம். கேட்கனும்..! //

ரைட்டு.. அப்படி கேட்கும் போது, எல்லாரும் புனைப் பெயர் வைக்கிற மாதிரி தான் நாங்களும் கற்பனையா ஒரு பெயர் சேர்த்திருக்கோம். அந்தப் பெயரில் ஒரு சாதி இருந்தால் நாங்க என்ன செய்ய முடியும்னு கேட்டுட்டாங்கனா என்ன செய்றது? :(

ஆர்க்குட்ல எங்க ஊர் பத்தி தேடும் போது தர்மபுரி என்று முடியும் பெயரைப் பார்த்தேன். நீங்கள் தர்மபுரியா என அவருக்கு செய்தி அனுப்பினேன். அது தன் சர் நேம் என்றார்.

அட அதை விடுங்க.. தமிழ் வலைப்பதிவின் மிகப் பிரபலமான பதிவர் அரவிந்தன் டிபிசிதிராவிடன் எனப் பெயர் வைத்திருக்கிறாரே. அந்த திராவிடன் என்பது அவர் படித்து வாங்கின பட்டமா எனக் கேட்டால் என்ன செய்வது? புதசெவி..

இவண்
ரத்த பூமியில் காத்துவாங்குவோர் சங்கம்.

பித்தன் said...

என்னங்க அண்ணா பண்ணறது, நீங்கவேனா எல்லாருக்கும் குரங்கு, நாய், நரினு பேரை மாத்திவச்சுப் பாருங்க அதுக்கும் நம்ம வேலைவெட்டி இல்லாத பதிவர்கள் சிலர், பக்கம் பக்கமா
பதிவு போட்டு பின்னூட்டம் வாங்குவாங்க. அந்த பெண்ணுக்கு பெயரு எப்பிடி இருந்தா என்ன? அதைப் பத்தி அவ அப்பனே, அல்லது புருசனே கவலைப்படனும், நீங்க எதுக்கு(எதாது பிளாக்ல).
இந்த பதிவு திராவிட பின்னூட்டங்களுக்காக எழுதப்பட்ட ஒன்று.

ஆமாண்ணா ஒரு சந்தொகம், அந்த பெண்ணு கமிசனர் முன்னால தம் அடிக்குது, அது ஏன்ன பார்ப்பன குலத்தின் புரட்ச்சி அல்லது வீரமான பாப்பாத்தினு கமண்ட் பண்ணலை. அவங்க கோஸ்டி திட்டுவாங்க, அடுத்தவன் திட்டறான நீங்க பாராட்டனு இல்லை.

TBCD said...

///
SanjaiGandhi said...
ரைட்டு.. அப்படி கேட்கும் போது, எல்லாரும் புனைப் பெயர் வைக்கிற மாதிரி தான் நாங்களும் கற்பனையா ஒரு பெயர் சேர்த்திருக்கோம். அந்தப் பெயரில் ஒரு சாதி இருந்தால் நாங்க என்ன செய்ய முடியும்னு கேட்டுட்டாங்கனா என்ன செய்றது? :(
///

ராசா, நீ கண்ணை திறந்து வைச்சிக்கிட்டே, தூங்கற மாதிரி நடிக்கிறவன். உன் கிட்டே பேசுறதில் சுவாரசியமே இல்லை.

// ஆர்க்குட்ல எங்க ஊர் பத்தி தேடும் போது தர்மபுரி என்று முடியும் பெயரைப் பார்த்தேன். நீங்கள் தர்மபுரியா என அவருக்கு செய்தி அனுப்பினேன். அது தன் சர் நேம் என்றார்.
//

அதில் என்ன பிரச்சனை..!

////
அட அதை விடுங்க.. தமிழ் வலைப்பதிவின் மிகப் பிரபலமான பதிவர் அரவிந்தன் டிபிசிதிராவிடன் எனப் பெயர் வைத்திருக்கிறாரே. அந்த திராவிடன் என்பது அவர் படித்து வாங்கின பட்டமா எனக் கேட்டால் என்ன செய்வது? புதசெவி..
////

கேட்டால் சொல்லுங்க, திராவிடன் என்பது சாதிப்பெயர் அல்ல, இந்தியன், தமிழன் , போன்ற ஒரு இடம் சார்ந்த பெயர் என்று.

///
இவண்
ரத்த பூமியில் காத்துவாங்குவோர் சங்கம்
///

இரத்த பூமியில் காசு வாங்குவோர் என்றல்லவா நினைத்தேன் :P

TBCD said...

//பித்தன் said...

அந்த பெண்ணுக்கு பெயரு எப்பிடி இருந்தா என்ன? அதைப் பத்தி அவ அப்பனே, அல்லது புருசனே கவலைப்படனும், நீங்க எதுக்கு(எதாது பிளாக்ல).
///

நீங்க எந்த காரணத்தை வைத்து இப்படி அவங்களுக்கு ஆதரவு வழங்கி பின்னுட்டம் போடுறீங்களோ, அதே காரணம் தான் என்னை எழுதவும் வைத்தது.

///
இந்த பதிவு திராவிட பின்னூட்டங்களுக்காக எழுதப்பட்ட ஒன்று.
////

பெரிய கண்டுப்பிடிப்பு. எதுக்கும் பதிஞ்சி வைச்சிக்கோங்க. நோபல் கிடைச்சாலும் கிடைக்கலாம்.

///
ஆமாண்ணா ஒரு சந்தொகம், அந்த பெண்ணு கமிசனர் முன்னால தம் அடிக்குது, அது ஏன்ன பார்ப்பன குலத்தின் புரட்ச்சி அல்லது வீரமான பாப்பாத்தினு கமண்ட் பண்ணலை. அவங்க கோஸ்டி திட்டுவாங்க, அடுத்தவன் திட்டறான நீங்க பாராட்டனு இல்லை.
///

எல்லாவற்றையும் நானே செஞ்சிட்டால் நல்லாயிருக்காது. நீங்க அப்படி ஒரு பதிவு போடுங்க. நான் பின்னுட்டம் வேண்டுமானால் போடுகிறேன்.

Matra said...

//ராவ் என்பது பிராமன சர் நேம் தா//

Not true at all.

I come from a family of non-brahmin Telugu origin and many of us keep the surname as Rao.

I also have many friends from other non brahmin communities in AP/Kar who also have Rao as surname.

Famous examples : NT Rama Rao, Gundu Rao etc.

அருண்சங்கர் said...

அந்தப்பொண்ணு அய்யரோ, பறையரோ என்னவோ போட்டுட்டு போகுது. நீங்களெல்லாம் என்னையா இப்படி குதிக்கிறீங்க.

//அனுசா என்பது உங்க பெயர், ஐயர் என்பது நீங்க படிச்சி வாங்கின பட்டமா என்று ஆற்றங்கரையில் வைத்து அவர் கன்னத்தில் சப்பென்று அறைந்து கேட்கும் வண்ணம், யாராவது ஒரு படம் சீக்கிரம் எடுத்தால் தேவலை//

இப்படியெல்லாம் எழுதினா உமக்கு ஒருவகையான "EGOCENTRIC DISORDER" என்று சொல்லக்கூடிய மனநோய் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. Famous ஆ இருக்கற அழகான பொண்ணுங்கள பார்த்தா சிலருக்கு இதுபோன்ற சில Personality Disorder மனநோய் தலை தூக்கும். ஏதோ ஒரு பத்திரிகையில் திரு. ஆர்னிகா நாசர் அவர்கள் அச்சு அசலாக உமக்கே உமக்காக ஒரு சிறுகதை எழுதியுள்ளார். கதையின் தலைப்பும் பத்திரிக்கையும் கிடைத்தவுடன் சொல்கிறேன். தவறாமல் படிக்கவும்.

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்