சமீபத்திய புதசெவி

சாருவும், கமினேவும், நம்ம இசைப்புயல்களும்

எழுத்தாளர் சாரு, தன்னுடைய கண்ணதாசன் : வைரமுத்து : மனுஷ்ய புத்திரன் : என்.ஸி.வசந்த கோகிலம் : ஷ்ருதி ஹாசன் என்று பதிவில் இன்றைய வாழ்க்கை, இன்றைய காதல் எல்லாமே மாறிப் போய் விட்டது. என்று அதற்கு உதாரணமாக கமினே படத்தில் ஒரு காட்சியயை சுட்டுகிறார்.

*********************
கமீனே படத்திலிருந்து ஒரு உதாரணம். காதலனும் காதலியும் கல்லூரி மாணவர்கள். காதலி கர்ப்பமாகி விடுகிறாள். காதலன் அதிர்ச்சி அடைகிறான். “உன்னிடம் எத்தனை முறை சொன்னேன்; காண்டம் பயன்படுத்துகிறேன் என்று. நீதானே

நான் ’ ஹோம் சயின்ஸில் ’ கில்லாடி என்று சொல்லி என்னை ஏமாற்றினாய்? ” என்று கத்துகிறான். ஏனென்றால், அவனுக்கு எதிர்காலம் பற்றிய ஏராளமான கனவுகள் இருக்கின்றன. இவள்தான் ‘இது சேஃப் பீரியட்; நாம் செக்ஸ் வைத்துக் கொண்டால் ஒன்றும் ஆகாது ’ என்று சொல்லி இந்த நிலைக்குக் கொண்டு வந்தவள்.

” சரி, இப்போது அபார்ஷன் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை ” என்கிறான் அவன்.

“அப்படியானால் இது மூன்றாவது அபார்ஷனாக இருக்குமே; பண்ணலாமா? அது சாத்தியப்படுமா? ” இது காதலி.

“அய்யய்யோ... மூன்றாவது அபார்ஷனா? அப்படியானால் மற்ற இரண்டு? ”

“அதையெல்லாம் கிளறாதே. அதெல்லாம் பழைய கதை... ”

இதுதான் இன்றைய காதல். என்றாலும் மனித உணர்வுகள் ஆயிரம் ஆண்டுகளானாலும் மாறுவதில்லை; ஒரே விதமாகத்தான் இருக்கும் என்பதற்கு அவர்கள் பாடும் ’ பெஹ்லி பார் மொஹ்பத் கீ ஹை; ஆக்ரி பார் மொஹ்பத் கீ ஹை ’ (இதுதான் என் முதல் காதல்; இதுதான் என் கடைசிக் காதல்) என்ற பாடல் உதாரணம்.

********************

கமீனே படத்தை இந்தக் கட்டுரை படித்து பல நாள் ஆனப்பின்பு படம் பார்த்தேன். இவர் கூறிய இந்த கருத்து உறுத்திக்கொண்டேயிருந்தப்படியால், கொஞ்சம் உண்ணிப்பாகவும் பார்த்தேன். ஆனால், சாரு சொன்னபடி படத்தில் காட்சிகள் இல்லை, அல்லது அவர் சொல்லிய வண்ணமே இல்லை. ஆனால், வேறு மாதிரியாக வருகின்றது.

காதலன் ஒரு அரசு சார்பற்ற நிறுவனத்தில் பணி புரிகிறான். பெண் வேலையில் இல்லை. (சாரு இருவரும் கல்லூரி மாணவ,மாணவியர் என்று சொல்லுகிறார்)

தான் கர்பம் என்று நாயகி சொல்லுகிறாள். வேண்டுமென்றால் இன்னோரு முறை சோதித்துப் பார்க்கலாம் என்று சொல்லுகிறான் நாயகன்.
இது மூன்றாவது முறை என்று நாயகி சொல்லுகிறாள்.

ஏன் முதல் தடவையே என்னிடம் சொல்லவில்லை என்று கேட்கிறான். நீ வருத்தப்படுவாய் என்று தான் சொல்லவில்லை என்று சொல்லுகிறாள் நாயகி.

எங்கே போனது உன்னுடைய அறிவியல். எல்லாம் எனக்குத் தெரியும், பாதுகாப்பான காலம் என்று கூறினாயே என்று அவளை திட்டுகிறான்.

இதனைத் தொடர்ந்து 8 வாரங்களுக்கு முன் என்று அவர்கள் கலவி நடந்த தினம் காட்டப்படுகின்றது.

அதன் பின்னர், நாயகி நான் பேசிவிட்டேன், 4 மணி நேரம் தானாம். அன்றே வீடு திரும்பிவிடலாமாம் என்று கருக்கலைப்புக் குறித்து பேசுகிறாள். நாயகன் என்னை இந்த கொலைக்கு துணைக்கழைகாதே என்கிறான்.

அப்படியென்றால், கருக்கலைப்பில் உனக்கு விருப்பம் இல்லை என்று நாயகி மகிழ்கிறாள். இதற்குப் பின் நடக்கின்ற உரையாடல்களில் நாயகன் தன்னுடைய வருங்கால திட்டத்தினை விவரிக்கின்றான்.

பின்னர், அந்தப் பெண், கெஞ்சி, கொஞ்சி,மிஞ்சி, கடைசியில் தன்னுடைய அண்ணன் பெயரை வைத்து மிரட்டி சம்மதிக்க வைக்கின்றாள். அடுத்த நாளே திருமணம் என்கிறாள். அவன் வேண்டா வெறுப்பாக என்னிடம் புதிய ஆடைகள் கூட இல்லை என்கிறான். பரவாயில்லை என்று கூறி கட்டியனைத்து, பின்னால் நிற்கும் நண்பர்களிடம் சாதித்து விட்டதாக கையயை கை கட்டை விரலை உயர்த்துகிறாள். திருமணம் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. நாயகன் வேண்டா வெறுப்பாகவும், நாயகி உற்சாகமாகவும். அப்போது பாடல் துவங்குகின்றது.

*******************

சாரு, அந்தப் பெண்ணுக்கு அது மூன்றாவது கரு என்று புரிந்துக்கொண்டுள்ளார். அப்படி இல்லை என்று மேலே சொன்ன உரையாடல்களில் தெரியும். அந்த திரைப்படத்தில் அந்தப் பெண்ணின் கதாப்பாத்திரத்தை உற்று நோக்கினால், அவள் அத்தகைய நிலையில் இருக்க வாய்புக்கள் குறைவு என்று கொள்ளலாம்.

அந்தப் படத்தின் நாயகியின் கதாப்பாத்திரத்தை இயக்குனர் சொல்லிய விதத்திலும், அவள் குடும்பத்தினர் குறித்து சொல்லிய விதத்திலும், இதற்கு முன்னர் அவளுக்கு காதல் ஏற்பட்டதில்லை என்பது தெரியவரும். மேலும் , அவளுடைய அண்ணன், ஒரு பெரிய புள்ளியின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றது பின்னால் தெரியவரும். அதனால், நாயகனை திருமணம் நோக்கி நகர்த்த நாயகி வலுக்கட்டாயமாக பாதுக்காப்பற்ற உடலுறவில் நாயகனை ஆழ்ந்துவதாகவும் புரிந்துக்கொள்ளலாம்.

பெண் கர்பம் என்பதை குறைந்தப்பட்சம் 20 நாட்களிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம். ஆனால், உடலுறவு கொண்ட 8 வாரங்கள் கழித்து தான் நாயகனுக்கு அவள் சொல்லுகிறால். ஆனால் அதற்கு முன்னர் இரண்டு முறை சோதித்து உறுதி செய்துகொள்கிறாள். இதை நான் படத்தை ஊன்றிப் பார்த்தால் நாயகியின் குணாதியத்தோடு ஒன்றிப் போகும். நாயகனை கவர்வதற்காக தனக்கும் திக்குவாய் என்று சொல்லியிருப்பாள். தன்னுடைய அரசியல்வாதி அண்ணன் பற்றி உண்மையயை மறைத்திருப்பாள். இவையனைத்தும் நாயகனை மணந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே செய்திருப்பாள்.

சரி, சாரு அப்படி கூறியதால் என்ன நடந்துவிட்டது. அவர் கூறியதில் என்ன தவறு என்று கேட்கலாம். இதில் சரி, தவறு என்று சொல்ல ஒன்றுமில்லை. அவருக்கு இந்த காட்சி புரியவே இல்லை. அதை வைத்து அருமையான உணர்வு என்று சொல்லுகிறாரே என்ற ஆதங்கம் மடுமே. ஒரு காட்சியயை எடுத்துக்காட்டாக காட்டுபவர், அந்தக் காட்சி எதற்காக வந்தது, அதில் நடத்தவர்களின் மனநிலை என்ன, அவர்களின் பின்புலம் என்ன என்று சரிவர புரிந்துக்கொள்ளாமல், மூன்று என்றவுடன் ,மூன்று முறை கருக்கலைப்பு. இன்றைய காதல் எல்லாம் மாறிப்போய்விட்டது என்று சொல்லுகிறார். (திரைப்படம் நம் வாழ்வை எப்படி பிரதிபலிக்கின்றது என்பது ஒரு புறம் இருக்கும்பொழுது, திரைப்படத்தைப் பார்த்து தான் நாம் காதல் மாறிவிட்டது என்று புரிந்துக்கொள்ளனும் போல )

ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்னால் உறவு கொள்வது என்று விசால் பரத்வாச் தான் முதன் முதலில் வைத்தாரா என்ன, காதல் மாறிவிட்டது என்று சொல்ல. களத்தூர் கண்ணமாவிலிருந்து எத்தனை எத்தனை படங்கள். திருமணத்திற்கு முன் உறவு என்பதில் புதிய விவரம் ஒன்றுமில்லை. அந்த பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட காதலர்கள் (சாருவின் கனவில்/கற்பனையில்) என்பது தான் சாரு காதல் மாறிவிட்டது என்று சொல்லக் காரணம் என்று சொல்லலாமா. அப்படி சொல்ல அந்தக் காட்சியில் முகாந்திரம் இல்லை. எனவே சாரு சொன்னதுப் போல், காதல் தலைகீழாக ஒன்றும் மாறிவிடவில்லை. (மாறக்கூடாது என்றோ, மாறினால், சமூகம் கெட்டுவிடும் என்றோ நான் இங்கே விவாதிக்க வரவில்லை.)

இந்த நிகழ்ச்சியின் முடிவில் அந்த மிக அழகான பாடல் வருகின்றது. பாடல் என்பது படத்தோடு ஒட்டி வந்தால் ரசிக்கலாம். நல்ல பாடல் வரிகள், நல்ல இசை இருந்தாலும்,படத்துடன் ஒட்டி வரவில்லை என்றால் கொஞ்சம் இடக்கரக்கல் தான். படத்தில் அந்தப் பாடல் ஒரு ஆண் குரலில் வருகின்றது. ஆனால், என் பார்வையில், அந்தப் பாடல் பெண் பாடுவதாகத் தான் இருக்க வேண்டும். ஏன் என்றால், அந்த திருமணத்தில் ஒரு ஆல்பா பெண்ணாக எல்லாவற்றையும் அவளே செய்கிறாள். ஆனால், இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளமா என்ற குழப்பம் வந்ததோ, அல்லது நாயகன் தான் பாட வேண்டும் என்ற ஈகோ குழப்பமோ தெரியவில்லை, அந்தப் பாடல் ஒரு ஆண் குரலில் பாடுகின்றது.

இந்தப் பாடல் நல்ல பாடல் செவிக்கினிய பாடலாக இருப்பதால் மட்டுமே, இது படத்திற்கு இயந்த வந்த பாடல் என்று கொள்ளவே முடியாது. என்னைக் கேட்டால், அந்தப் படத்தில் அந்த இடத்தில் பாடலே தேவையில்லை. பாடல் பாடும் மனநிலையில் அந்த நாயகன் இல்லை. பின்னர் எங்கே உருகி உருகி பாடல் வரும். அது நிற்க !

காதல் மாறிவிட்டதா....? காதல் உணர்வுகள் மாறிவிட்டதா...? ஆமாம், மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது. நேற்றைய காதலுக்கும் இன்றைய காதலுக்கும் நிச்சயம் பல மாறுதல்கள் உண்டு. ஆனால் நிச்சயமாக அது கருக்கலைப்பின் எண்ணிக்கையில் இல்லை !

***************************

20 Comments:

சென்ஷி said...

அய்யோ கொல்லுறாங்களே.. அய்யோ கொல்லுறாங்களே!!

SurveySan said...

ஸ்ஸ்ஸ்ஸ்.

படத்தை 'ஆராயும்' பதிவு வாரமா இது?

கமேனே நல்ல படம். நானும் போய் பாத்தேன்.

சென்ஷி said...

/“அப்படியானால் இது மூன்றாவது அபார்ஷனாக இருக்குமே; பண்ணலாமா? அது சாத்தியப்படுமா? ” இது காதலி.//

பல பின்னவீனத்துவ குறியீடுகள் மிதக்குற படத்தோட விமர்சனத்தை ரொம்ப மொக்கையா இப்படி குறிப்பெடுத்து கொடுத்த டிபிசிடி ஒழிக!

ஜெகதீசன் said...

:)

ஜெகதீசன் said...

ம்ம்ம்....
இருக்காதே... சாரு பெரிய எழுத்தாளராச்சே... அவரு சொன்னா சரியா இருக்குமே..
நீங்க இன்னுமொரு 20 தரம் படத்தைப் பார்த்து சரிபார்த்துக் கொள்ளுங்க...

அதுக்கப்புறமும் உங்களுக்கு அப்படியே தோனினால், அது இயக்குனர், கதாசிரியர் செய்த தவறு.. சாரு சொன்னது தான் சரியாக இருக்கமுடியும்.. எனவே படத்தின் கதை மாற்றப்படவேண்டியது அவசியம்...

:)

சென்ஷி said...

@ ஜெகதீசன்..

LOL :-))

ஜெகதீசன் said...

இன்னொரு பின்னூட்டம் போடனுமின்னு ஆசை. ஆனால் என்ன போடன்னு தெரியலை. எனவே
"இது பின்னூட்டங்களை மின்னஞ்சலில் பெற...."

☀நான் ஆதவன்☀ said...

ஆகா!!! ரொம்ப நாளாச்சே சாருவோட எதிர்பதிவ பார்த்து :)

சரி இதுக்கு விளக்கம் கொடுக்க சாரு வரமாட்டாரு. பதிவர்கள் பலபேர் லைன்கட்டி நிப்பாங்க விளக்கம் கொடுக்க. ரெடியா இருங்கப்பு

SanjaiGandhi said...

இந்த லட்சணத்துல தான் சாரு விமர்சனம் எழுதறாரா?IMDBல தப்பா விமர்சனம் எழுதி இருப்பாங்க. அதைப் பார்த்து இவர் எதுனா அடிச்சி விட்டிருப்பார்.

ஆக, ஒரு படத்தை ஈடூபாட்டோட பார்க்கனும்னா சாரும் மாதிரி ஆளுங்க தப்பா விமர்சனம் எழுத வேண்டி இருக்கு.. :)

zorbathebuddha said...

சாரு சொல்லும் கருத்துக்களை எல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவரின் தரம் அறிந்ததே. பரபரப்பாக எதாவது எழுத வேண்டும் என்பதே அவரின் குறி. “கந்தனுக்கு புத்தி கவட்டுல” என்று ஒரு சொலவடை உண்டு கேள்விபட்டிருப்பீர்கள்.

பரபர என்று சொறிந்து விடுவதில் கில்லாடி. வாசகர்கள் எல்லாம் சொறி பிடித்தவர்கள் என்கிற நினைப்பு.

Jeeves said...

சரி இதையாராவது அவருக்கு அனுப்பிருக்காங்களா ?

தமிழன்-கறுப்பி... said...

:)

TBCD said...

//Blogger Jeeves said...

சரி இதையாராவது அவருக்கு அனுப்பிருக்காங்களா ? //

நானே இந்த பதிவின் சுட்டியுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

r.selvakkumar said...

கமீனே விவாதத்திற்குரிய படம்தான். ஆனால் இந்த விவாதம் முற்றிலும் எதிர்பாராதது.

TBCD said...

//
சென்ஷி said...

அய்யோ கொல்லுறாங்களே.. அய்யோ கொல்லுறாங்களே!!
//

நுண்ண்ரசியலில் பின்னுறீங்களே !

TBCD said...

//
SurveySan said...

ஸ்ஸ்ஸ்ஸ்.

படத்தை 'ஆராயும்' பதிவு வாரமா இது?

கமேனே நல்ல படம். நானும் போய் பாத்தேன்.
//

படத்தை ஆரயலீங்க. சாரு சொன்னது படத்திலே வந்ததா இல்லையா என்று தான் பார்த்தேன், எழுதினேன்.

கார்க்கி said...

இன்னுமா அவரை படிக்கறீங்க?

ரைட்டு...

கும்க்கி said...

ஜெகதீசன் said...

ம்ம்ம்....
இருக்காதே... சாரு பெரிய எழுத்தாளராச்சே... அவரு சொன்னா சரியா இருக்குமே..
நீங்க இன்னுமொரு 20 தரம் படத்தைப் பார்த்து சரிபார்த்துக் கொள்ளுங்க...

அதுக்கப்புறமும் உங்களுக்கு அப்படியே தோனினால், அது இயக்குனர், கதாசிரியர் செய்த தவறு.. சாரு சொன்னது தான் சரியாக இருக்கமுடியும்.. எனவே படத்தின் கதை மாற்றப்படவேண்டியது அவசியம்...

இதுக்கு மேல கீழ நடுவுல கடேசில ஒன்னியும் சொல்லிக்கமுடியாததனால....ரிப்பீட்டே...

கும்க்கி said...

ஆபாச/த.ம.தா. பின்னுட்டம் அனுமதிக்கப்படும். வெளியிடப்படும். பதிவு முகப்பில் வந்தப்பின், நீக்கப்படும். :)

இந்த ஆபத்து வேற இருக்கா...அம்மாடியோவ்.

குசும்பன் said...

ஹி ஹி சூப்பரு:)

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்