மதுரையில் தண்ணீர் என்பது தங்கத்திற்கு இனையானது. ஆனால், மாநகராட்சி/பஞ்சாயத்து குழாய்களோ, ஒரு சில நாட்களிலேயே பல்லை இளித்துவிடும். ஒரு ஓட்டைக் குழாயில் வீணாகும் நீர் என்பது ஒரு நாளைக்கு ஒரு குடும்பம் செலவழிக்கும் மேல். அதை பஞ்சாயத்தில் சொல்லி சரி செய்வது என்பதெல்லாம், சாமனியர்களுக்கு சாத்தியம் இல்லை. தண்ணீரே வரவில்லையென்றால் தான் பஞ்சயாத்து தலைகளின் கதவுகள் தட்டப்படும். சிக்கன் குனியா வந்த நேரத்தில் மாலை (6.00 மணி-8.00 மணி) நேரத்தில் தண்ணீர் வருவதால் கொசுக்கடியால், இந்நோய் பரவுகின்றது, என்று நேரத்தை மாற்ற மன்றாடியும் வேலை நடக்கவில்லை. கொசு மூலம் பரவுவதை தடுக்க ஏற்பாடுகளும் செய்யவில்லை ) இந்நிலையில், எங்கள் வீட்டிருகே இருக்கும் ஒரு குழாயில் நீர் வீணாகுவதை தடுக்க, ஒரு எளிய, ஆனால்,பலன் கொடுத்துக்கொண்டியிருக்கும் ஒரு சின்ன செயலைக் கண்டேன். அது உங்கள் பார்வைக்கு.
மேல் கூறிய மேம்பாட்டிற்கு நீங்கள் அதிகம் செலவழிக்க தேவையில்லை, ஆனால், எந்த மேம்பாட்டிற்காக செய்யப்பட்டதோ, அதை அது எட்டியுள்ளது. சப்பானியர்கள், இதை காராக்குரி கைசன் (Karakuri Kaizen) என்று சொல்லுவார்கள். அந்த சொல்லை விவேகமான மேம்பாடுகள் என்று சொல்லலாம்.
இதுப் போன்ற சின்ன சின்ன எளிய, முன்னேற்றங்களை இந்திய நிறுவனங்களில் செய்ய சப்பானியர்களிடம் பயிற்சி பெறுவது தான் இந்தக் கால பாணி. டோட்டல் புரொடொக்டிவ் மெயிண்டனெசு (TPM - Total Productive Maintenance), டொயோட்டோ புரொடொக்சன் சிசுடம் (TPS- Toyota Production Systems) போன்ற சப்பானிய கருத்தாக்கங்கள் கடந்த 10~15 வருடங்களாக இந்தியாவில் நுழைந்து, பெரும்பணச்செலவுடன், இந்திய நிறுவனங்களுக்கு இத்தகைய மேம்பாடுகளை நோக்கி நகர பயிற்சிகள் தந்தவண்ணமே இருக்கின்றன. ஆனால், இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும், சப்பானிய நிறுவனங்களுக்கினையாக மாறவில்லை.
இதற்கு பல காரணங்கள் சொல்ல முடியுமென்றாலும், தலையாய காரணங்களாக நான் கருதுவது, இரண்டை மட்டுமே.
1.உங்கள் பிரச்சனைகளை நீங்களே உணர்ந்து, நீங்களே அதை உங்கள் கைப்பணத்தை செலவழிப்பதுப் போன்ற ஒரு சூழ்நிலையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளும், வெளியிலிருந்து வரும் ஒரு நிபுனரின் ஆசையயை நிறைவேற்ற செய்யும் செயல்பாடுகளுக்கும் எப்பொழுதும் கடலளவு வித்தியாசம் காண முடியும். மேலே கூறியள்ள மேம்ப்பாடைக் கவனித்தால், எளிய முன்னேற்றத்தை நாம் சிந்திக்க தலைபட மாட்டோம்.
2.இதுப் போன்ற மேம்பாடுகளை நீங்கள் செய்வதாக இருந்தால், அதை கடைப்பிடிக்கம் ஒழுங்கு அனைவரிடமும் இருக்க வேண்டும். சப்பானியர்கள் கடுமையான ஒழுங்கினை பேனுபவர்கள். அவர்களுக்கு இது எளிதில் சாத்தியமாகுகிண்றது (கவனிக்க எளிதில்). சாலை விதிகளை கடைப்பிடிக்க வைக்கவே நாம் சாலையில் நடுவே மதில் எழுப்பி சாதிக்கின்றோம். கடுமையான ஒழுங்கு என்பது சாத்தியமற்றதாக பல சமயங்களில் ஆகிவிடுகின்றது. அது மட்டுமல்லாமல், ஒருவர் செய்யும் மேம்பாட்டை கேள்விக்குள்ளாக்குவது, கேலுக்குள்ளாக்குவது என்பது சாதரண நிகழ்வு. மேலும், ஒரு நிறுவனத்தில் ஒருவர் செய்யும் மேம்பாட்டை மற்றொருவர் மாற்றாமல் இருக்கவும் ஒழுங்கு தேவை. நிறுவனங்களில் மேம்பாட்டு திட்டங்கள் செய்ய குழுவாக செய்யும் போது, திட்டமிடும் போது சிந்திக்கவும், அதை நிறுவியப் பிறகு கடைப்பிடிக்கவும் வேண்டும். ஆனால், நம்மவர்கள், சிந்திக்க வேண்டிய நேரத்தில் தலையாட்டிவிட்டு, நிறுவியப் பின்னர், அதை நிறைவேற்றவிடாமல் இருக்க 1~1000 காரணங்களை அள்ளி வழங்குவார்கள்.
ஒழுங்கற்றவர்கள் என்று நம்மை மட்டம் தட்டவா இந்தப் பதிவு....? இல்லை, அடுத்த முறை மேம்பாட்டை நோக்கி சிந்திக்கும் பொழுது, இந்த எளிய எடுத்துக்காட்டு, எனக்கு ஒரு முன் மாதிரியாக என் மேசையில் இருக்கப் போகின்றது. அதை பதிவில் பகிரும் நோக்கம், இதுப் போன்ற ஒரு முன்னேற்ற வாய்ப்பு இருக்கு என்பதை உங்களுக்கும் சொல்லுவதற்காகவே.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
பதிவு தொடர்ந்து போட்ட காலத்தில் ஏறாக பிந்தொடர்பவர்களின் எண்னிக்கை, எழுதாத காலத்தில் ஏறியிருப்பது ஆச்சர்யமூட்டுகின்றது !
பய புள்ளைக எப்படியெல்லாம் யோசிக்குதுங்க !
Subscribe to:
Post Comments (Atom)



11 Comments:
அருமை......கிரியேட்வ் திங்கிங் என்பார்கள்.
:)
நம்ம ஆட்கள் பவுடர் டப்பா காலியானதும் அதை வடிவு மாற்றி முறம் செய்பவர்களாயிற்றே.
nice.
//கோவி.கண்ணன் said...
அருமை......கிரியேட்வ் திங்கிங் என்பார்கள்.
:)//
கனகச்சிதமான செயல் என்றும் சொல்லலாமோ..??
//SurveySan said...
nice.
//
நறுக் பின்னுட்டத்திற்கு நன்றி !
அருமையான ஐடியா!
நிச்சயம் வரவேற்கப்படவேண்டியது !
//இதை காராக்குரி கைசன் என்று சொல்லுவார்கள்//
அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் தெரிவியுங்களேன் !
//இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும், சப்பானிய நிறுவனங்களுக்கினையாக மாறவில்லை.//
நச்!
//TBCD said...
//கோவி.கண்ணன் said...
அருமை......கிரியேட்வ் திங்கிங் என்பார்கள்.
:)//
கனகச்சிதமான செயல் என்றும் சொல்லலாமோ..??
//
அறிவார்ந்த செயல் அல்லது ஆக்கச் செயல்
அருமையான ஐடியா!
//பதிவு தொடர்ந்து போட்ட காலத்தில் ஏறாக பிந்தொடர்பவர்களின் எண்னிக்கை, எழுதாத காலத்தில் ஏறியிருப்பது ஆச்சர்யமூட்டுகின்றது !//
ஹும்..என்ன செய்வது..இப்படி நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் நீங்க திரும்ப பதிவு போடறத தடுக்க முடியலேயே :)
ஜோக்ஸ் அபார்ட்..நல்ல பதிவு..
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
நல்லது...! :)
சூப்பர்ணே..
//சாலை விதிகளை கடைப்பிடிக்க வைக்கவே நாம் சாலையில் நடுவே மதில் எழுப்பி சாதிக்கின்றோம்//
நாம தான் ரொம்ப நல்லவங்களாச்சே..
//பதிவு தொடர்ந்து போட்ட காலத்தில் ஏறாக பிந்தொடர்பவர்களின் எண்னிக்கை, எழுதாத காலத்தில் ஏறியிருப்பது ஆச்சர்யமூட்டுகின்றது !//
இதிலிருந்து தெரியும் நீதி.. கிகிகி.. :))
//இந்நிலையில், எங்கள் வீட்டிருகே இருக்கும் ஒரு குழாயில் நீர் வீணாகுவதை தடுக்க, ஒரு எளிய, ஆனால்,பலன் கொடுத்துக்கொண்டியிருக்கும் ஒரு சின்ன செயலைக் கண்டேன். அது உங்கள் பார்வைக்கு.//
Good thinking.
Carlos Ghosn called it Frugal Engineering, praising the Indian thinking.
Post a Comment