என்னை பதிவெழுத வைக்கும் சாருவிற்கு நன்றிகள் !
பின்னே, ஏற்கனவே ஒருமுறை அவர் கமினே திரைப்படம் குறித்து எழுதி, அதில் உள்ள நிறை, குறைகளை சுட்டி ஒரு பதிவெழுதியாயிற்று. அதுக்குறித்து, அவர் வாயயைத் திறக்கவே இல்லை என்பது வேறு விவகாரம். நேரம் வாய்த்திருக்காது, என் மின்னஞ்சலை திறக்கவும் :P . சரி, அத்தோடு விட்டாரா, என்றால் விட மாட்டேங்கின்றார். அவருக்கு அந்தப் படத்தை உயர்த்தி சொல்லியே ஆக வேண்டும் என்ற ஆசை. சொல்லட்டும், ஆனால் சொல்வதை சரியாக சொல்லட்டும். யாருமே பார்க்காத சுபானிய மொழிப் படங்களையோ, அல்லது வேற்று மொழிப்படங்களையோ அவர் இப்படி எழுதினால், நாம் பேசவா போகின்றோம். ஆனால், அவர் பார்த்து லயித்து எழுதுவது நாம் அனைவரும் பார்க்க வாயக்கக்கூடிய இந்தி திரைப்படம். அதை அவர் முழுமையாக பார்த்து, உள்ளது உள்ளபடி எழுதினால், சுவாரசியம் என்று படித்துவிட்டு போகலாம். ஆனால், அவரோ, தன்னிலையில் இல்லாதவர் படம் பார்த்ததுப் போல் பார்த்து, அதை ரசித்து, அதைக் குறித்து எழுதவும் செய்கின்றார்.
அடைப்புகுறிக்குள் வருவது சாரு எழுதியது. அடைப்புகுறிக்கு வெளியே இருப்பது நான் எழுதிக்கிழித்தது. இங்கே கிழித்தது என்பது என் எழுத்துக்குறித்தான என் கருத்து என்று மட்டுமே கொள்ள வேண்டும்.
<கமீனேவில் சார்லியும் , குட்டுவும் கடைசி வரை ஒருவரை ஒருவர் அழிப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். ஒருவர் அழிந்தால்தான் மற்றவருக்கு வாழ்வு என்ற நிலை. கடைசி வரை அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை>
படம் பார்த்த எவரும், இதை ஒப்பக்கொள்ள மாட்டார்கள். கடைசியில் குட்டு, அந்த போதைப் பொருளை எடுத்துக்கொண்டு காதலியின் அண்ணன் வீட்டிற்கு போக வழி விட்டு ஒதுங்குபவன் சார்லி. விட்டுக்கொடுத்தல், உறவு இருக்கின்றது. ஆனால் ஏனைய திரைப்படம் போல, நாடகத்தனமானதாக இல்லை என்று சொல்லலாம்.
<கமீனேவில் சார்லி , குட்டு இருவருக்குமே திக்கு வாய்ப் பழக்கம் இருக்கிறது. இந்தக் குறையை குட்டு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். அதாவது , ’ எஸ் ’ என்ற எழுத்து வரும் இடங்களிலெல்லாம் ‘ எஃப் ’ என்ற எழுத்தை விளையாட விடுகிறான். உ-ம்: நீ ரொம்ப செக்ஸியா இருக்கே. நீ ரொம்ப ஃபெக்ஸியா இருக்கே.>
இரண்டு இடுகை என்பதால், இரண்டு முறை பார்த்தாரா என்று தெரியவில்லை. படத்தில், குட்டூ என்று வரும் பாத்திரத்திற்கு திக்கு வாய்(Stammering) என்ற குறைபாடு. சார்லி என்ற கதாபாத்திரத்திற்கு "S" என்ற எழுத்தை "F" என்று உச்சரிக்கும் குறைபாடு(Lisp). இருவருக்கும் பேசுவதில் குறையிருந்தாலும், இரண்டும் ஒன்றல்ல. குதிரை பந்தயம் மூலம் சம்பாதிக்க நினைப்பவன் சார்லி. பிங்கியின் காதலன் குட்டூ. சாரு இந்த இரண்டு பேரையும் குழப்பி ஒரு புது உருவம் கொடுக்கின்றார் போல.
<பொதுவாக வாழ்க்கையைப் பற்றி குட்டு அடிக்கடி உதிர்க்கும் வாக்கியம் ’ ஐஃபே ஐஃபே ; கெஃபே கெஃபே ’ என்பது. இதன் உண்மையான பிரயோகம் என்னவென்றால் ’ ஐஸே ஐஸே ; கெ(ய்)ஸே கெ(ய்)ஸே ’ என்பதாகும். ” எது எது எப்படியோ அது அது அது அப்படித்தான் ” என்று பொருள்.>
இது சார்லி சொல்லும் வாக்கியம்.
<ஆனால் குட்டு உணர்ச்சிவசப்பட்டிருக்கும் ஒரு தருணத்தில் அவனால் அப்படி எஃப் எழுத்தைப் பயன்படுத்த முடியாமல் எஸ்ஸையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஸ்வீட்டி அவனுடன் உடலுறவு கொள்ளும் போது அந்த உச்சக்கட்ட தருணத்திலும் அவளை சடாரென்று உதறி விட்டு எழுந்து “ கிளம்பும் போது எடுத்து வைத்தேனே ; நன்றாக ஞாபகம் இருக்கிறதே ” என்று முனகிக் கொண்டே அவசர அவசரமாகத் தன் பையில் தேடுகிறான். அப்போது “ அதெல்லாம் தேவையில்லை ; நான் ஹோம் சயின்ஸில் எக்ஸ்பர்ட். இப்போது சேஃப் பீரியட்தான் ; பயப்படாமல் வா ” என்று சொல்லி ஸ்வீட்டி அவனைப் பிடித்து இழுத்துத் தன் மேல் போட்டுக் கொள்கிறாள்.>
இங்கே மீண்டும் குழப்பம். குட்டுவிற்கு உச்சரிப்பில் குறை இல்லை, ஆனால் திக்குவாய்.
< கரு உருவாகி விடுகிறது. குட்டு தன் எதிர்காலமே பாழாகி விட்டது போல் நிலை குலைந்து போகிறான். அப்போது அவன் அவளிடம் அந்த முக்கியமான கேள்வியை கேட்க நினைக்கிறான். வழக்கம் போல் திக்குகிறது. “ ஸ்... ஸ்... ஸ்... “ என்று தடுமாறுகிறான். ஸ்வீட்டி எஸ்ஸில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்கிறாள். அது இல்லை , அது இல்லை என்று தலையை ஆட்டி மறுக்கும் குட்டு கடைசியில் “ ஸயன்ஸ்... ஹோம் ஸயன்ஸில் எக்ஸ்பர்ட் என்று சொன்னாயே ?” என்று கேட்கிறான். கமீனேவில் இப்படிப்பட்ட அற்புதமான தருணங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. >
இதிலும் குழப்பம். குட்டுவிற்கு தான் "S" சொல்வதில் பிரச்சனை இல்லையே. இங்கே அதை குழப்பி மீண்டும் சொல்கின்றார். இது அற்புதமான தருணம் என்ற அடைமொழி வேறு தருகின்றார். அற்புதமான தருணத்தைப் பற்றி எழுதும் முன் கொஞ்சம் படத்தை மீண்டும் பார்த்துவிட்டு எழுதியிருக்கலாம்.
<இவ்வளவையும் தமிழ் சினிமா பற்றி அக்கறை கொண்டவர்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன்.>
இந்த இடுகையயையும் இந்திய திரைத்துறை மீதும்,தமிழ் திரைத்துறை மீதும் மீளாக் காதல் கொண்டவருமான சாருவின் பார்வைக்கு முன் வைக்கின்றேன். அடுத்தடுத்து பல படங்கள் பார்த்து இதுப் போன்ற இடுகைகள் எழுத வாய்ப்பளிக்குமாறும் வேண்டுகோள் வைக்கின்றேன்.
<நன்றி: உயிர்மை>
உயிர்மைக்கு இதை எப்படி அனுப்புவது..? தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா...?
சாருவும் , கமீனேவும் - பாகம் இரண்டு
lables
Charu,
Charuniveditha,
இந்தி,
சாரு,
தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)



4 Comments:
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
எத்தனை தரம் சொல்றது.... அவர் எழுதுறது தான் சரியா இருக்கும்ன்னு...
திருந்தவே மாட்டீங்களா?
// ஜெகதீசன் said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
எத்தனை தரம் சொல்றது.... அவர் எழுதுறது தான் சரியா இருக்கும்ன்னு...
திருந்தவே மாட்டீங்களா?//
LOL சூப்பரூ :)))))
where does charu nivetha write?
///
Dr.Dheep said...
where does charu nivetha write?
///
www.charuonline.com
Post a Comment