சமீபத்திய புதசெவி

இடுகைகளைப் படிக்க தலைப்பின் மீது அழுத்தவும்

”எனக்கும் வேண்டும்”, எனும் நோய் கூறு மனநிலை !!!!!

பிற்படுத்தப்பட்டவர்,மிகவும்.பிற்படுத்தப்பட்டவர்,தாழ்த்தப்பட்டவர், ஆதி திராவிடர், அட்டவை சாதிகள், அட்டவனை பழங்குடிகள் போன்றோருக்கு ஒதுக்கீடு, சலுகைகள் கொடுத்தால் உயர்த்தப்பட்ட சாதிக்கு ஏன் கொடுக்கலை என்று கேட்கிற அறிவு சீவிகளுக்கு,

- இடஒதுக்கீடு, சலுகைகள் பொருளாதார நிலை பொறுத்து வழங்கப்படுவது அல்ல
- இடஒதுக்கீடு, சலுகைகள் சமூக நிலை மேம்படவே கொடுக்கப்படுகின்றது
- சமூக நிலையில் இன்னமும் வருணத்தை பிரகடனப்படுத்தி உச்சாணிக்கொம்பில் இருப்பவர்கள் சமூக நிலை நன்றாகவே உள்ளது.எனவே, சலுகைகள் தரப்படுவதில்லை.

பிராமண சமூகங்கள் எந்த கட்சிக்கு வாங்கு போடனும் என்று கூடி பேசி முடிவு செய்வதை விட, சமத்துவத்திற்கு இன்னமும் சவால் விடும் வருணத்தை தூக்கி எறியலாம்
- பிராமணன் என்று மார்பை நிமிர்த்தி சொல்வதை நிறுத்தி ,நானும் மற்றவர்களப் போல ஒரு சாமனிய மனிதனே என்று எண்ணம் தழைத்தோங்கச் செய்யலாம்
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கலாம்
-அனைத்து சாதி/இன மக்களையும் சகோதரர்களாக நினைக்க வலியுறுத்தலாம்
-பூனூல் சமத்துவத்திற்கு எதிரானது என்பதை உணர்த்தி,பூனூலை அறுத்தெரிச்செய்யலாம் (தாங்களாகவே)


ஏழைகளே இல்லாத சமூகமாக நாம் இன்னமும் மாறவில்லை. ஏழைகள் அனைத்து சமூகத்திலும் உண்டு.

அரசு இலவச அரிசி, வேலைவாய்ப்பு உறுதி போன்ற திட்டங்களில் எந்த இட ஒதுக்கீடும் இல்லாமல் தான் வழங்கப்படுகின்றது.

மேலும் இலவச அரிசி திட்டத்தினால் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்ற ஓசை தான் வெகுவாக கேட்கின்றது. ஏன் முற்பட்டப்பிரிவில் உள்ள ஏழைகள் இது போன்ற புறக்கணிக்கப்பட்ட வேலைக்கு செல்லக்கூடாது. சென்றால் ஏதேனும் தீட்டு ஒட்டிக்கொள்ளுமோ.


பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், ஆதி திராவிடர், அட்டவை சாதிகள், அட்டவனை பழங்குடிகள் போன்றோருக்கு , சமத்துவம் ஓங்க, சமூக நீதி நிலைநாட்ட கொடுக்கப்படும் சலுகைகளை பிச்சை, பிச்சைக்காரர்கள் என்று சொல்வதை வண்மையாக கண்டிக்கிறேன்.

இலவசங்களை வாங்குபவர்களை பிச்சைக்காரர்கள் என்று சொல்லும் சில அறிவுசீவிகளுக்கு என் சில கேள்விகள்.

-அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள்..கடைகளில் தள்ளுபடி விற்பனைக்கு தடை சொல்வார்களா ?

-அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள் , நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் மானியங்களை
தடை செய்வார்களா..?

-அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள் , வரி விலக்கை வேண்டாம் என்பார்களா..?

-அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள் , அம்மா அப்பா சொத்தில் பங்கு வேண்டாம் என்பார்களா..?

-அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள் , தங்கள் படிப்பிற்கு தாங்களே சம்பாதித்து செல்வழிப்பார்களா..?

-அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள், கோவிலில் தட்டில் காசு வாங்குவதை கண்டிப்பார்களா..?

-அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள் , கோவிலில் உண்டியல் வைப்பதை கண்டிப்பார்களா..?

ஏழை மாணாக்கர்களுக்கு எதாவது கொடுக்க திட்டமிடும்போது மட்டும், ஐ,எனக்கும் வேண்டும் என்று அழுதபடி ஓடி வரும் இந்த நோய் கூறு மனநிலையில் இருந்து இவர்கள் மாற வேண்டும் என்பதே என் அவா.

மேலும், வாக்கு வங்கி மேம்படுத்தும் இலவசங்களையும் , சமூக நீதி திட்டங்களையும் வேறுபடுத்த வேண்டுமாய் அத்தனை அறிவுசீவிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

பி.கு:-
1.மொத்தமாக மக்களை மழுங்கடிக்கும் தொ.கா.பெட்டி, மின் கல்லுரல், மின் அம்மி, போன்றவைகளுக்கு நான் ஆதரவாளன் அல்ல.

22 Comments:

நந்தா ஆண்டாள்மகன் said...

நிச்சயமாக மேல்தட்டு என்று சொல்பவர்களின் மனநிலை மற்றும் செயல்பாடுகள் மாறவேண்டும்.அதே சமயம் ///மொத்தமாக மக்களை மழுங்கடிக்கும் தொ.கா.பெட்டி, மின் கல்லுரல், மின் அம்மி, போன்றவைகளுக்கு நான் ஆதரவாளன் அல்ல/// இந்த மக்களிடமும் மாற்றம் வேண்டும்.

புருனோ Bruno said...

நீங்கள் welfare scheme என்றும் கூறும் அனைத்துமே, உன்னை விட பணம் அதிகம் உள்ளவர்களைப்பொருத்தவரையில் freebie என்பதை உணர்ந்து கொண்டீர்களா ?
உதாரணம் : அரசு மருத்துவ கல்லூரி

Have you realised that, All schemes considered as welfare schemes by you, are considered as Freebie by some one richer than you ?
Eg : Government Medical College Hospital

விந்தைமனிதன் said...

சைலண்டா ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துர சொல்லலாம் அவங்களை. திருவண்ணாமலை, சிதம்பரம், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், மீனாட்சியம்மன் கோயில்களில் அவங்க இட ஒதுக்கீடு கொடுத்துடுவாங்க. நாமளும் அதேமாதிரி பண்ணிடலாம்! :))

கல்வெட்டு said...

.

அவர்கள் மட்டும் பீ அள்ளித் திரிந்த காலங்களில் "எனக்கும் வேண்டும் பீ அள்ளும் வேலை" என்று எந்த **********ளும் போராடியதாக வரலாறு இல்லை.

அவர்களுக்கு மட்டும் லேப்புடாப்பு என்று சொன்னால் எனக்கும் லாலிபாப் என்று வந்துவிடுவது ஏன்?

****

நீங்கள் பீ அள்ள 100 சதவீதம் கட்டாய ஒதுக்கீடு கொடுத்தீர்கள்.

அரசியல் கட்சிகள் இப்போது லேப்டாப் பிச்சைக்காரர்களாக ஆக்குகிறார்கள்.
கொஞ்சம் கவுரதை மத்தபடி ஒன்றும் இல்லை. :-(((

.

Pradeesh said...

தனக்கும் வேண்டும்!? 1000 ஆண்டுகளாய் ஏமாற்றி, இன்று தாழ்த்தபட்டவனாய் வாழ்வதற்கும் இந்த "உயர்த்திக்கொண்ட" சமூகம் தானே காரணம். அவன் வறுமையில் பங்கு கேட்க எந்த "உயர்த்திக்கொண்டவரும்" வரவில்லயே?

பிராமணர்கள் உங்கள் கருத்துகளுக்கு உடன்படுவது என்பது குதிரைகொம்பு என்றே நான் நினைக்கிறேன். ஏய்த்து பிழைத்துவந்த கூட்டம் சமதர்மத்தை எப்படி விரும்பும்? தமிழனை பார்ப்பண மீடியாக்கள் மூலம் மூளைசலவை செய்து ஜெ.க்கு ஆதரவாக திருப்புவது மட்டுமே அவர்கள் குறிக்கோள்!

எல்லோரும் எல்லாமும் பெற்றிடும் வரை இலவசங்களும்/இடஒதுக்கீடும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலை. இல்லாதவர்களுக்கு செல்வதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை!குறிப்பாய் "உயர்த்திக்கொண்டவ‌ர்க‌ளுக்கு"

ஜெ. ஆட்சியில் இலவசங்கள் கொடுக்காத போதும் கடன் ஏறியதே? அப்போது இந்த மேட்டிமை அறிவுஜீவிகள் எங்கே இருந்தனர்?உண்மையில் இலவசத்தை எதிர்ப்பவர்களின் அக்கறை அரசு கஜானா பற்றிய கவலை அல்ல.
இலவசத்தால் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்து விட கூடாது என்பதே!

Pradeesh said...

தனக்கும் வேண்டும்!? 1000 ஆண்டுகளாய் ஏமாற்றி, இன்று தாழ்த்தபட்டவனாய் வாழ்வதற்கும் இந்த "உயர்த்திக்கொண்ட" சமூகம் தானே காரணம். அவன் வறுமையில் பங்கு கேட்க எந்த "உயர்த்திக்கொண்டவரும்" வரவில்லயே?

பிராமணர்கள் உங்கள் கருத்துகளுக்கு உடன்படுவது என்பது குதிரைகொம்பு என்றே நான் நினைக்கிறேன். ஏய்த்து பிழைத்துவந்த கூட்டம் சமதர்மத்தை எப்படி விரும்பும்? தமிழனை பார்ப்பண மீடியாக்கள் மூலம் மூளைசலவை செய்து ஜெ.க்கு ஆதரவாக திருப்புவது மட்டுமே அவர்கள் குறிக்கோள்!

எல்லோரும் எல்லாமும் பெற்றிடும் வரை இலவசங்களும்/இடஒதுக்கீடும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலை. இல்லாதவர்களுக்கு செல்வதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை!குறிப்பாய் "உயர்த்திக்கொண்டவ‌ர்க‌ளுக்கு"

ஜெ. ஆட்சியில் இலவசங்கள் கொடுக்காத போதும் கடன் ஏறியதே? அப்போது இந்த மேட்டிமை அறிவுஜீவிகள் எங்கே இருந்தனர்?உண்மையில் இலவசத்தை எதிர்ப்பவர்களின் அக்கறை அரசு கஜானா பற்றிய கவலை அல்ல.
இலவசத்தால் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்து விட கூடாது என்பதே!

அநிருத்தன் said...

எனக்கும் வேணும் என்பவர்கள் ஜெயமோகனின் நூறுநாற்காலிகளை படித்துவிட்டு அப்புறம் கேட்பதில் நியாயம் உள்ளதா என பார்க்கவும் : http://www.jeyamohan.in/?p=12714

JMRChennai said...

நண்பரே, என் கருத்து மற்றும் சில கேள்விகள்...

குறிப்பாக கொடுத்திருக்கும் சுட்டியில் இலவசங்களை பற்றி எழுதியிருக்கிறார். இடஒதுக்கீடு பற்றி அல்ல.

பூனுல் அணிவது ஏன் உங்களுக்கு தவறாக தெரிகிறது? பிராமணர்களை பற்றி பேசும் நீங்கள் ஏன் கிருஸ்த்தவர்கள் அணியும் (வெளிப்படையாகத் தெரியும்) சிலுவையைப் பற்றி எதுவும் கேட்க்கவில்லை?

மேலும், அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள்.. ன்னு பல கேள்விகளை கேட்டிருக்கிறீர்கள். ஒரு 'பி.கு:-' வும் போட்டிருக்கிறீர்கள்.

நீங்க ஆதரவாளரும் அல்ல, கண்டிப்பவரும் அல்ல. அப்போ நீங்க யாரு?

TBCD said...

//JMRChennai said...

பூனுல் அணிவது ஏன் உங்களுக்கு தவறாக தெரிகிறது?//

அனைவரும் இந்துக்கள் என்று சொன்னால் குறிப்பிட்ட சிலர் மட்டும் பூனூல் ஏன் அணிகின்றார்கள் ? பூனூல் என்பது மத சடங்கல்ல. இது குறிப்பிட்ட சாதிகளின் சடங்கு. பிராமணர்களின் இரண்டாம் பிறப்பை குறிக்கும் குறியீடு. இந்த இருபிறப்பு என்பது அனைத்து இந்துக்களுக்கும் பொதுவானதல்ல. இந்த பூனூல் தான் இருபிறப்புடையவன் பிராமணன், மற்றவர்கள் சூத்திரர்கள் என்று சொல்லும் குறியீடு. அதை அணிவது சமத்துவத்திற்கு எதிரான ஒரு செயல்.

சமத்துவம் என்றால் இந்த உலகில் பிறந்த மனிதர்களுக்குள் பிறப்பால் யாரும் உயர்ந்தவர் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. இந்த பிராமண உரிமை பிறப்பால் வழங்கப்படுகின்றது, போலவே சூத்திரப்பட்டமும். அதை மறுக்கிறோம். எனவே பூனூலை எதிர்க்கிறோம்.

வருண ரீதியாக மனிதனை இழிவு செய்வதை அரசே தடை செய்த பொழுதும் (தீண்டாமை), இப்படி செய்வது சரியா... ?

இவர்கள் பிராமணர்கள் என்றால், மற்றவர்களை சூத்திரர்கள் என்று சொல்லும் செயல் தானே இது. பூணூலை மறுக்கும் அதே சமயம் , உங்களது வழிபாடு உரிமைகளை துறக்கச் சொல்லவில்லை என்பதையும் கவனியுங்கள்.

//பிராமணர்களை பற்றி பேசும் நீங்கள் ஏன் கிருஸ்த்தவர்கள் அணியும் (வெளிப்படையாகத் தெரியும்) சிலுவையைப் பற்றி எதுவும் கேட்க்கவில்லை?//

சிலுவை அணிவது கிறித்துவர்களின் தனி உரிமை கூட அல்ல. யாரு வேண்டுமானாலும் அணியலாம். இன்னார் தான் அதற்கு பூசை செய்து அணிவிக்க வேண்டும் என்ற தேவை கூட அல்ல. அது மனிதனை உயர்வு தாழ்வு, சொல்லும் அணிகலன் அல்ல.

//மேலும், அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள்.. ன்னு பல கேள்விகளை கேட்டிருக்கிறீர்கள். ஒரு 'பி.கு:-' வும் போட்டிருக்கிறீர்கள்.

நீங்க ஆதரவாளரும் அல்ல, கண்டிப்பவரும் அல்ல. அப்போ நீங்க யாரு? ///

மழுங்கடிக்கும் இலவசங்களை நான் ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் சமூக நீதிக்காக செய்யப்படும் சலுகைகள்/இலவசங்களை நான் ஆதரிக்கிறேன். இதில் உங்களுக்கு என்ன் குழப்பம் என்று எனக்கு புரியவில்லை.

TBCD said...

// நந்தா ஆண்டாள்மகன் said...

நிச்சயமாக மேல்தட்டு என்று சொல்பவர்களின் மனநிலை மற்றும் செயல்பாடுகள் மாறவேண்டும்.அதே சமயம் ///மொத்தமாக மக்களை மழுங்கடிக்கும் தொ.கா.பெட்டி, மின் கல்லுரல், மின் அம்மி, போன்றவைகளுக்கு நான் ஆதரவாளன் அல்ல/// இந்த மக்களிடமும் மாற்றம் வேண்டும்.
///

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நந்தா.

”அனைத்து” மக்களிடம் மாற்றம் வர வேண்டும் என்பதே என் அவா.

TBCD said...

//Blogger புருனோ Bruno said...

நீங்கள் welfare scheme என்றும் கூறும் அனைத்துமே, உன்னை விட பணம் அதிகம் உள்ளவர்களைப்பொருத்தவரையில் freebie என்பதை உணர்ந்து கொண்டீர்களா ?
உதாரணம் : அரசு மருத்துவ கல்லூரி

Have you realised that, All schemes considered as welfare schemes by you, are considered as Freebie by some one richer than you ?
Eg : Government Medical College Hospital//

மரு.புருனோ,

வருகைக்கும் , கருத்திற்கும், ஆதரவிற்கும் நன்றி !

TBCD said...

//விந்தைமனிதன் said...

சைலண்டா ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துர சொல்லலாம் அவங்களை. திருவண்ணாமலை, சிதம்பரம், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், மீனாட்சியம்மன் கோயில்களில் அவங்க இட ஒதுக்கீடு கொடுத்துடுவாங்க. நாமளும் அதேமாதிரி பண்ணிடலாம்! :))
//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விந்தை மனிதரே ;-))

TBCD said...

//Blogger கல்வெட்டு said...

.

அவர்கள் மட்டும் பீ அள்ளித் திரிந்த காலங்களில் "எனக்கும் வேண்டும் பீ அள்ளும் வேலை" என்று எந்த **********ளும் போராடியதாக வரலாறு இல்லை.

அவர்களுக்கு மட்டும் லேப்புடாப்பு என்று சொன்னால் எனக்கும் லாலிபாப் என்று வந்துவிடுவது ஏன்?

****

நீங்கள் பீ அள்ள 100 சதவீதம் கட்டாய ஒதுக்கீடு கொடுத்தீர்கள்.

அரசியல் கட்சிகள் இப்போது லேப்டாப் பிச்சைக்காரர்களாக ஆக்குகிறார்கள்.
கொஞ்சம் கவுரதை மத்தபடி ஒன்றும் இல்லை. :-(((
//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கல்வெட்டு !

kunthavai said...

எனக்கும் வேண்டும் என்ற நோய் கூறு மனநிலை...என தலைப்பிலேயே தெளிவான விளக்கம் இருக்கிறது.
தனக்கு கிடைக்கவில்லை எனும்போது தான், சீ சீ அந்த பழம் புளிக்கும் போன்ற மனநிலை சில மனிதர்களிடத்தில். காலங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் அடித்தட்டு மக்களின் வாழக்கை தரம் உயர செய்யப்படும் எந்தவொரு செயலிலும், ஏன் எண்ணத்திலும் கூட தவறிருப்பதாக மனசாட்சியுள்ள மனிதர் கூற இயலாது.
ஆதங்கம் எதுவென்றால், சலுகைகள் கிடைக்கப்பெற்று, ஓரளவு தரம் உயர்ந்த குடும்பங்கள், இன்னும் அடிமட்டத்தில் அல்லலுறும் தம் மக்களின் நிலை உயர வேண்டுமென்ற அவா கொள்ளுதல் இன்னும் நிறைவாய் இருக்கும். ...அதைவிடுத்து, தனக்கு தனக்கு என பேராசைப்படும் அல்ப மனநிலை கொள்ளும்போது பிறர் கண்ணில் ரத்தம் வடிகிறது போலும் !
மேலும், இலவசங்களை வெறுக்கும் அறிவுசீவிகளுக்கு விடுக்கும் வேண்டுகோள்கள் இன்றைய வாழ்வின் நிதர்சனத்தை கொண்டு முகத்தில் அறைபவை.
நல்லதொரு முயற்சியில் நல்லதொரு பதிவு.
பாராட்டுக்கள்..!

TBCD said...

சில நுட்ப கோளாறுகளால் நண்பர் JMRChennai நேரடியாக கருத்தை பதியவில்லை. டுவிட்டர் மூலம் அவர் அளித்த பின்னுட்டம் இங்கே பதிகிறேன் !

********************************

நன்றி TBCD.

//பூனூல் மத சடங்கல்ல, சாதிகளின் சடங்கு.// இருக்கட்டுமே, அதனால் என்ன? ஒரு பெண் வயதுக்கு வங்தவுடன் செய்கின்ற சடங்குகள் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு விதமாக செய்கின்றன. அதையும் நிருத்தச் சொல்வீர்களா?


செட்டியார்கள் மற்றும் சில சாதி மக்கள் திருமணத்தின் போது பூனூல் அணிவார்கள். அந்த சடங்கை என்ன சொல்வீர்கள்?


பிராமணர்கள் இந்த சடங்கின் மூலன் ஒரு தத்துவத்தையும், அடையாளத்தையும் கொடுக்கிறார்கள். இதை அணிவதனால் மற்றவர்கள் சூத்திரர்கள் என்று ஒரு போதும் சொல்லிக் கொடுப்பதில்லை.


சிலுவை அணிவது பற்றி நீங்கள் கூறியிருப்பதை ஒத்துக்கொள்கிறேன்.

TBCD, இலவசங்கள் வேறு, சலுகைகள் வேறு. நீங்கள் அந்த இரண்டையும் சேர்த்து கேள்விகளை கேட்டிருக்கிறீர்கள். அதனால் வந்த குழப்பம்!

TBCD said...

//இருக்கட்டுமே, அதனால் என்ன? ஒரு பெண் வயதுக்கு வங்தவுடன் செய்கின்ற சடங்குகள் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு விதமாக செய்கின்றன. அதையும் நிருத்தச் சொல்வீர்களா?
//

இந்த சடங்கு செய்ததால் இந்தப் பெண் மற்ற எல்லாரையும் விட உயர்ந்ததாக கருதப்படுவாள் என்று சொல்வார்களேயாயின், அதுவும் நிறுத்தப்பட வேண்டியதே. அப்படி இருப்பதாக தெரியவில்லை.


//செட்டியார்கள் மற்றும் சில சாதி மக்கள் திருமணத்தின் போது பூனூல் அணிவார்கள். அந்த சடங்கை என்ன சொல்வீர்கள்?
//

அது பூணூல் அணிபவர்களைப் பார்த்து நாங்களும் அவர்கள் போல என்ற சொல்ல துவங்கப்பட்டது. இது போல்ச் செய்தல் தான். பூணூல் அணிந்தால் மட்டும், செட்டியாரோ, ஆசாரியாரோ, கோவில் கருவறைக்குள் நுழைந்துவிட முடியுமா..? பிராமணர்களை போல அணியலாம். ஆனால் அவர்கள் அணிவதை அணிய மறுக்கப்பட்டுள்ளது. பாரதி கூட ஒரு சிலருக்கு பூனூல் அணிவித்தாராம். அவர்களை எல்லாம் பிராமணர்களாக ஏற்றுக்கொண்டார்களா என்ன..?

//பிராமணர்கள் இந்த சடங்கின் மூலன் ஒரு தத்துவத்தையும், அடையாளத்தையும் கொடுக்கிறார்கள்.

இதை அணிவதனால் மற்றவர்கள் சூத்திரர்கள் என்று ஒரு போதும் சொல்லிக் கொடுப்பதில்லை.
///

பூனூல் அணிவது அனைத்து மக்களுக்கும் பொது என்று வேதமோ, மனுதர்மமோ சொல்லுகின்றதா..?

அனைவரும் இந்து என்ற பொழுது ஏன் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பூனூல் அணிகிறார்கள்...கூடுதலாக ஒரு கடவுளையும் விடாமல் அவருக்கும் அணிவிக்கிறார்கள்.

கடவுளுக்கும் தத்துவமும் , அடையாளமும் சிலையான பின்னர் கொடுக்கப்பட வேண்டிய தேவை என்ன..?

பூனூல் அணிந்தவரே பிராமணர். பிறப்பால பிராமணக்குடும்பத்தில் பிறந்தாலும், பூனூல் அணியாவிட்டால் பிராமணராக கருதப்பட மாட்டார்கள் என்று மனுதர்மம் சொல்லுகின்றதாம்.

சரி, இந்த தத்துவமும், அடையாளமும் பிராமண பெண்களுக்கு ஏன் வழங்கப்படுவதில்லை..?

ஏன் என்றால் மனுதர்மம், சூத்திரர்களுக்கு என்ன நிலை தந்ததோ, அதற்கு இணையான நிலை தான் பெண்களுக்கும்.

முடிவாக...மனிதனை நால் வகையாக வகைப்படுத்தி, ஒன்றின் கீழ் ஒன்றாக வைத்து ,மனிதரைப் பிரித்து, சமத்துவத்தை குலைத்த வருணம் ஒழிக்கப்பட வேண்டியது. கிட்டத்தட்ட இன்று ஐயர்,ஐயங்கார்களைத் தவிர்த்து வேறெந்த சாதியும் வருணத்தை முன்னிலைப்படுத்துவதில்லை. ஆனாலும் இன்றும் ஐயர்,ஐயங்கார்கள் தங்களை பிராமணர்கள் என்று அடையாளப்படுத்த தவறுவதேயில்லை. வருணத்தை துறக்க மனமில்லாமையே இதன் காரணம்.

வருணத்தின் அடிப்படையினிலான, பிராமணர் என்ற பட்டமும், அந்த பிராமணர் என்று பறை சாற்ற உதவும் பூனூலும் ஒழிக்கப்பட வேண்டியதே.

///
TBCD, இலவசங்கள் வேறு, சலுகைகள் வேறு. நீங்கள் அந்த இரண்டையும் சேர்த்து கேள்விகளை கேட்டிருக்கிறீர்கள். அதனால் வந்த குழப்பம்!
///

முற்றாக இலவசங்களை வாங்குபவர்கள் அனைவரும் பிச்சைக்காரர்கள் என்று ஒரு பிச்சைக்காரர் எழுதியதை கேட்கவே இலவசங்கள் குறித்தும் எழுதினேன். அதை பிரித்துக் காட்டவே அந்த பின் குறிப்பையும் சேர்த்தேன்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முரளி !

Prabhu Rajadurai said...

பின்னூட்டங்களுக்காக...

jaisankar jaganathan said...

அருமையான விவாதம்

மதுரை சரவணன் said...

இலவசங்கள் அனைத்தும் நலதிட்டங்கள் வாயிலாக கல்வி துறைக்கு மட்டும் வழங்குதல் நல்லது... மக்களும் இலவசங்கள் மீது வெறுப்பை காட்ட வேண்டும். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

இலவசங்கள் அனைத்தும் நலதிட்டங்கள் வாயிலாக கல்வி துறைக்கு மட்டும் வழங்குதல் நல்லது... மக்களும் இலவசங்கள் மீது வெறுப்பை காட்ட வேண்டும். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

balavin said...

//இலவசங்கள் அனைத்தும் நலதிட்டங்கள் வாயிலாக கல்வி துறைக்கு// மற்றும் முதியோர் மேம்பாடுககும் வழங்கலாம்...
மேலும் நேற்று வழங்கப்பட்ட இலவசங்களில் மம்மியின் திருவுருவம் பெரிய அளவில் பொறிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு அரசு சின்னம் இருந்தால் போதாதா?

JAy said...

இட ஒதுக்கிட்டை நானும் ஆதரிக்கிறேன், ஆனால் அது சரியான பயனாளிகளுக்கு சேருவதில்லை. உதாரனதிருக்கு கீழ் தட்டு மாணவன் ஒருவன் இட ஒதுக்கிட்டால் பயன் பெற்ற பிறகு அவரது வாரிசுக்கு ஒதுக்கிடு செல்ல கூடாது.

Related Posts with Thumbnails

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்